ஞாயிறு, 31 மார்ச், 2019

வாரணாசி – கரையோரக் கவிதைகள் – நிழற்பட உலா – பகுதி இரண்டு



வாரணாசி – பழமையான நகரம். என்னதான் பழமையின் பிடியில் இருந்தாலும் சமீப காலங்களில் முன்னேற்றத்தினை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. சென்ற முறை சென்ற போது பார்த்த ஊருக்கும், இப்போது பார்த்த ஊருக்கும் வித்தியாசங்கள் இருக்கின்றன. ஊரின் இரயில் நிலையம் சிறப்பாக இருக்கிறது இப்போது. புதிய ஒரு இரயில் நிலையமும் எல்லா வித வசதிகளுடனும் திறந்திருக்கிறார்கள். பல இடங்கள் சுத்தமாக பராமரிக்கப்படுகின்றன என்றாலும், மக்களும் அரசுடன் சேர்ந்து சுத்தமாக வைத்திருக்க தங்கள் பங்காக உழைக்க வேண்டும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இன்னமும் இந்த விஷயத்தில் மக்கள் மெத்தனமாக இருக்கிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும்.


எல்லா இரயில் நிலைய வளாகங்களிலும் மிக அழகான ஓவியங்களை வரைந்து வைத்திருக்கிறார்கள். ஆனால் அதைப் பராமரிப்பது என்பது மக்கள் கையிலும் இருக்கிறது. அதன் மீது பான் கரையாகாமல் வைத்திருக்க வேண்டியது மக்களின் கடமையும் ஆகும். “நான் துப்பிட்டே தான் இருப்பேன், அதைச் சுத்தம் செய்ய வேண்டியது அரசின் கடமை… அதான் வரி கட்டறோம்ல!” என்று துப்பிக் கொண்டே இருந்தால் எப்படிச் சுத்தமாக வைத்திருக்க முடியும்! துப்புவதை நிறுத்தினால், அல்லது அதற்கான இடங்களில் மட்டுமே என்ற கட்டுப்பாடுடன் இருந்தால் நல்லது தானே.  சுத்தம் செய்யும் வேலைகளில் இருப்பதும் நம் சக மனிதன்/சகோதரன் ஒருவன் தானே என்ற எண்ணம் வந்தால் இப்படிச் செய்ய மாட்டார்கள் அல்லவா?

வாருங்கள் நண்பர்களே, வாரணாசி பயணத்தின் போது எடுத்த சில படங்கள் இந்த ஞாயிறில்! முதல் பகுதியில் சொன்னது போல, இந்தப் படங்கள் அனைத்துமே படகில் பயணித்தபடியே எடுத்தவை! கங்கைக்கரையோர படங்கள்!


































என்ன நண்பர்களே, இந்த வாரத்தின் நிழற்பட உலா உங்களுக்குப் பிடித்திருக்கிறதா? உங்கள் கருத்துகளைச் சொல்லுங்களேன். விரைவில் வேறு சில நிழற்படங்களோடு மீண்டும் ச[சி]ந்திப்போம்….
 
நட்புடன்

வெங்கட்
புது தில்லி

72 கருத்துகள்:

  1. குட்மார்னிங்.

    வரும் ஆறாம் தேதி முதல் பதினான்கு தேதிக்குள் ஒருநாள் வாரணாசி செல்லும் திட்டம் உள்ளது. பயணம் அலுவலக ரீதியாகவும், குடும்ப ரீதியாகவும் ஒரு நெருக்கடியான நிலையில் என்னைத் தள்ளியிருக்கிறது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குட்மார்னிங்க் ஸ்ரீராம்!! ஆஹா வெங்கட்ஜி சொல்லியிருக்கும் இடங்கள் எல்லாம் குறிச்சுக்கோங்க...

      முடிஞ்சா எல்லாம் பார்த்துட்டு வந்துருங்க!

      கீதா

      நீக்கு
    2. குட்மார்னிங் கீதா! அதற்கெல்லாம் எங்க நேரம்? மேலும் என் கையில் என்ன இருக்கு?!!!!

      நீக்கு
    3. காலை வணக்கம் ஸ்ரீராம்.

      உங்கள் பயணம் சிறப்புறட்டும். எல்லாம் சரியாக நடந்தேறும்....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
    4. பயணம் அவருக்கு சிறப்பாகவே அமையட்டும்....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

      நீக்கு
    5. பயணம் திட்டமிட்டபடி சிறப்பாக நடக்கட்டும். முடிந்த இடங்களை பாருங்கள்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
    6. பிரயாகை, கயா எல்லாம் உங்க திட்டத்தில் இருக்கா ஸ்ரீராம்? அவசியம் போகணும். நல்லபடிப் பயணம் அமையப் பிரார்த்தனைகள். நீங்க என்னமோ பொதுத்தேர்வுக்குச் செல்லும் மாணவனைப் போல் மிக அதிகமான மன இறுக்கத்துடன் இருப்பதாய்த் தெரிகிறது. அங்கே போய்ச் சுற்றுவட்டாரங்களையும் உற்றுக் கவனியுங்கள். காசி நகர வீதிகளில் இரவு எட்டு மணிக்கு மேல் பால் கடைகளில் கிடைக்கும் மசாலா பால்(இங்கே தமிழ்நாட்டில் சொல்லப்படுவது) வாங்கிக் குடியுங்க! அதிலே மேலே மலாய் போட்டுத் தருவாங்க! உடனே சாப்பிடாமல் கொஞ்சம் கொஞ்சமாய் அனுபவிச்சுச் சாப்பிடணும்! :))))) செட்டியார் கடையில் காசிச்சொம்புகள், அன்னபூரணி விக்ரஹங்கள், மற்ற வெண்கல, பித்தளைப் பாத்திரங்கள் மலிவாய்க் கிடைக்கும். பேரம் பேசணும்!

      நீக்கு
    7. மறந்துட்டேனே! :))))) உங்க பாஸுக்கும் வரப்போகிற மாட்டுப்பெண்ணுக்கும் பனாரசி காட்டன் புடைவைகள் வாங்குங்க! பனாரசி சில்க் வேண்டாம்! விலை இப்போல்லாம் அதிகம் என்பதோடு தரம் முன்னைப் போல் இல்லை. காட்டனே பத்து வருடங்கள் வைச்சுக் கட்டலாம். பனாரசி கிரேப்பும் நன்றாக இருக்கும் மைசூர் கிரேப் போல! :)))))

      நாராயணா, நாராயணா! இதை ஶ்ரீராமோட பாஸ் காதில் யாராவது போடணுமே! :)))))

      நீக்கு
    8. அன்னபூரணி விக்ரகங்கள், காசிச் சொம்புகள் என நிறையவே விஷயங்கள் இங்கே உண்டு. இப்போதெல்லாம் காசிச் சொம்பில் அப்படியே கங்கை நீரை நிரப்புவதில்லை. பிளாஸ்டிக் பைகளில் நிரப்பி சீல் செய்து அதை காசிச் சொம்பில் வைத்து சொம்பை மூடி/சீல் செய்து விடுகிறார்கள். நிறைய விஷயங்கள் பார்க்க, கேட்க முடியும்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா.

      நீக்கு
    9. பனாரசி காட்டன் - வாங்கலாம். நிறைய கடைகளில் பேரம் பேச வேண்டியிருக்கும்.

      நாராயண... நாராயண! :) ஏதோ நம்மால ஆனது!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

      நீக்கு
  2. துப்புவதை நிறுத்துவது என்பதைவிட, ஆரோக்கியத்தின் காரணமாக பான் போடுவதையே நிறுத்த வைத்தால் நல்லது.

    பொது இடங்களில் சிகரெட் பிடித்தால் அபராதம் என்று இங்கே சட்டம் இயற்றியது போல அங்கும் பொது இடங்களில் பான் போடுவோர் மீது, அல்லது அட்லீஸ்ட் துப்புவோர் மீது அபராதம் போடவேண்டும்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சிகரெட், பான் போன்றவற்றை விற்பதையே தடை செய்ய வேண்டும் - ஆனால் அது ஒரு மிகப் பெரிய இண்டஸ்ட்ரி! அதிலும் பணம் கொட்டோ கொட்டு என கொட்டும் வியாபாரம். அவர்கள் அரசியல்வியாதிகளையும் கட்சிகளையும் ”கவனித்து”க் கொள்வதால் இது நடக்க வாய்ப்பில்லை!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  3. படங்கள் எல்லாமே அழகு. மக்கள் இருக்கும், கட்டிடங்கள் இருக்கும் இடம் முதல் கரையோரம் வரை!

    இதில் நான் எந்த இடங்களை பார்க்கப் போகிறேனோ!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முடிந்த வரை பாருங்கள். ஒரு ஊருக்குப் பயணம் செய்யும் போது அங்கேயுள்ள எல்லா இடங்களையும் பார்த்து விட முடிவதில்லையே!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  4. இனிய காலை வணக்கம் வெங்கட்ஜி!

    படங்கள் அனைத்தும் அருமை அதுவும் படகுகள் மட்டும் உள்ள படம் செம அழகு...ஒரு புறம் கட்டிடங்கள். மறுபுறம் கரை மணல் தெரிகிறது அது ரொம்ப அழகாக இருக்கிறதுஜி.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காலை வணக்கம் கீதா ஜி!

      கட்டிடங்கள், கங்கை நதி, ஆங்காங்கே மணல் திட்டுகள் - பார்க்கவே அழகு தானே....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  5. படகுப்பயணம் எனக்கு ஆகாது.. தலை சுற்றும்!

    அப்போ என்னால் இதை எல்லாம் பார்க்க முடியாதோ... படகில் போகிறவர்களுடன் இணைந்து கரையிலேயே நான் ஓடவேண்டுமோ!!!!

    ஹா... ஹா... ஹா...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்னாது????????? படகுப்பயணம் தலை சுத்துமா? சரியாப் போச்சு போங்க! நாங்கல்லாம் ஒரு காலத்தில், இஃகி,இஃகி, ஒரு காலத்தில் தான்! பரிசலிலேயே போயிருக்கோம். இப்போ முடியாது என்பதைச் சொல்லுவோமா என்ன?

      நீக்கு
    2. இங்கே படகுப் பயணம் அத்தனை கஷ்டமில்லாதது. பயம் வேண்டாம்.

      கரையில் ஓட வேண்டுமா? ஹாஹா... அப்படி எல்லாம் ஓடி விட முடியாது இந்தக் கரையில்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
    3. ஒரு சிலருக்கு படகுப் பயணங்கள் கஷ்டமானவை! :) பரிசல் பயணம் எனக்கும் வாய்த்திருக்கிறது. அலையடிக்கும் கடல், நர்மதா, கங்கை, காவிரி என நிறைய இடங்களில் படகுப் பயணங்கள் - அப்படியே போய்க் கொண்டே இருக்கலாம் எனத் தோன்றும் எனக்கு...

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா!

      நீக்கு
    4. //இப்போ முடியாது என்பதைச் சொல்லுவோமா என்ன?// சொல்லவேண்டாம் எங்களுக்கு தெரியும். அவ்வளவு வெயிட்.
      Jayakumar​​

      நீக்கு
    5. ஹாஹா, இப்போ முடியாததற்குக் காரணம் வெயிட்டெல்லாம் இல்லை. என்னை விட அதிக குண்டானவங்க உட்கார்ந்து போகிறார்கள். :))))))

      நீக்கு
    6. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
    7. அதிக குண்டானவங்க பயணிப்பதுண்டு - :)

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா..

      நீக்கு
  6. பான் துப்புவது ...ஓ அதைப் பத்தி என்ன சொல்ல?...இங்கும் பங்களூரிலும் அதிகம். அப்புறம் எல்லோரும் ரோட்டில் சளி துப்பிக் கொண்டே போறாங்க...என்ன மக்களோ? பொது நலம் ஹூம் சுட்டுப் போட்டாலும் இங்கு வராது போல...குறைப்பட்டு சொல்லணும்னா நிறைய இருக்கு. இங்கு இதுவரை புகை பிடிப்பதைப் பார்க்கவில்லை...

    வெங்கட்ஜி படகில் பயணித்துக் கொண்டே எடுத்திருக்கும் படங்கள் எல்லாமே அருமை இப்படிப் பயணித்துக் கொண்டே எடுப்பது ஒரு கலை. எல்லாமே அருமையாக வந்திருக்கு.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சுயநலம் முன்னே இருக்க, பொதுநலம் மறைந்து விடுகிறது பலரிடமும். குறைகள் நிறையவே தான். என்ன செய்ய... நல்லதை மட்டுமே பார்க்க, பேச, எழுத நினைத்தாலும் அவ்வப்போது இப்படி குறைகளையும் சொல்லாமல் இருக்க முடிவதில்லை! மனித இயல்பு தானே!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

      நீக்கு
  7. படங்கள் அனைத்தும் அற்புதம் ஜி

    வரிக்கட்டுவது துப்புவதற்கானது என்பதை அறிந்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

      நீக்கு
  8. வாரணாசிக்கு மறுபடி ஒரு முறை போகணும்னு கடந்த பத்து வருஷங்களாகச் சொல்லிட்டு இருக்கோம். அதுவும் கடந்த ஐந்து வருஷங்களில் இரு முறை செல்ல நினைத்து முடியலை! மாமா இப்போக் கொஞ்சம் தீவிரமா யோசிக்கிறார். பார்க்கலாம். ஆனால் போன முறை போலப் படகில் எல்லாம் என்னால் இப்போது உட்கார முடியுமா? சந்தேகம் தான். அதில் போகாமல் பயணம் முற்றுப் பெற்றதாகவே இருக்காது! பார்க்கணும்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முடிந்தால் சென்று வாருங்கள் மா. பயணம் எல்லோருக்கும் எளிதாக கிடைத்து விடுவதில்லை. எனக்கே நிறைய இடங்கள் சென்று வர ஆசை தான் - எங்கே முடிகிறது! :)

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

      நீக்கு
  9. சமீபத்திய பயணத்தில் ஒரு பிரபலமான ஊரில் உள்ள ரயில்வே தங்கும் விடுதியில் இடம் கேட்டிருந்தோம். எட்டு மணி நேரம் தான் என்பதோடு இரண்டே நபர்கள் என்பதால் அறை கொடுக்க முடியாதுனு சொல்லிட்டு டார்மிடரியில் தனியாக அறை போல இரு படுக்கைகளுடன் கொடுத்தாங்க! தங்கியதில் கண்டது, அந்த அறைக்காப்பாளர் வெற்றிலை போட்டுக் கொண்டு வாயைக் கொப்புளித்துப் பக்கத்தில் உள்ள தூணின் அருகில் துப்பிக் கொண்டே இருந்ததை! மனது வெறுத்துப் போச்சு! போய்ச் சொல்லலாமா என நினைத்து அப்புறமா வேண்டாம்னு விட்டுட்டேன்! தங்கப் போறது ராத்திரி எட்டு மணி வரை! அப்புறமாவும் அவர் துப்பத் தான் போறார். திருந்தப் போவதில்லை! :((((((

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இரயில் நிலையம், பொது மக்கள் அதிகம் புழங்கும் இடம் என எல்லா இடங்களிலும் இப்படிச் சிலர்! நாம் சொன்னால் அவர்கள் திருந்தப் போவதில்லை! சில இடங்களில் சொல்லப் போய், நம்மை வேற்றுகிரகவாசி போல பார்த்து நக்கலாக சிரிப்பதும் நடந்து இருக்கிறது! :(

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா..

      நீக்கு
  10. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  11. //சுத்தம் செய்யும் வேலைகளில் இருப்பதும் நம் சக மனிதன்/சகோதரன் ஒருவன் தானே என்ற எண்ணம் வந்தால் இப்படிச் செய்ய மாட்டார்கள் அல்லவா?//

    ஆமாம், அந்த எண்ணம் இருந்தால் இப்படி அசுத்தம் செய்ய மாட்டார்கள்.


    படங்கள் எல்லாம் அழகு.
    காசி என்றாலே கங்கைகரை குடைகள், அந்த உயர்ந்த கட்டிடம், படித்துறை அதன் அழகு.
    படகு பயணம் மிக நன்றாக இருக்கும். ஆனால் படகிலிருந்து தண்ணீரில் கையை வைத்து அளைய கூடாது என்பார்கள்.

    அழகான படங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சக மனிதன் தான் சுத்தம் செய்யப்போகிறார் என்ற எண்ணம் - அது பலருக்கும் வருவதில்லை....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...

      நீக்கு
  12. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

      நீக்கு
  13. படங்கள் சிறப்பு. காசிக்கு போக வேண்டும் என்று நீ..ண்..ட .. நாட்களாக சொல்லிக்கொண்டிருக்கிறோம். இந்த வருடம் ஜூலையில் செல்லலாம் என்றும் ஒரு அபிப்ராயம். பார்க்கலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முடிந்த போது சென்று வாருங்கள். தில்லி வழியே என்றால் தில்லியில் சந்திக்க முயல்கிறேன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பானுமதிம்மா...

      நீக்கு
    2. தில்லி போகாமலேயே காசிக்குப் போகலாம் பானுமதி! சென்னை வழி ரயில் பயணம் எனில் இருக்கவே இருக்கு கங்கா-காவேரி! இல்லைனா வாரணாசிக்கே விமானம் இருக்கு! சென்னையிலிருந்தோ "பெண்"களூரில் இருந்தோ போக இணைப்பு விமானம் இருக்கானு பார்த்துக் கொண்டு டிக்கெட் மலிவாய்க் கிடைக்கும்போது போகலாம். ஜூலை மாசம் மழை விட்டிருக்காது. கங்கை நிரம்பி வழிவாள்! நீங்க போவதெனில் ஆகஸ்ட் கடைசி அல்லது செப்டெம்பர் முதல்வாரம்போகலாம். பொதுவாக வட மாநிலங்களுக்கே அப்போப் போனால் சீதோஷ்ணமும் நன்றாக இருக்கும். அதிகக் கூட்டம் இருக்காது! மழை முடிந்திருக்கும்.

      நீக்கு
    3. இப்போ வெயில் காலத்தில் போவதால் ஸ்ரீராம் கங்கையைக் கீழே ஆழத்தில் பார்ப்பார். ஆனாலும் தண்ணீர் ஜில்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்!

      நீக்கு
    4. தில்லி போகாமலும் போகலாம் என்றாலும் பலர் தில்லியையும் தங்கள் பயணத்தில் சேர்த்துக் கொள்வதுண்டு. வாரணாசி நேரடி விமானம் தில்லியிலிருந்து இருக்கிறது. இப்போதெல்லாம் ஆகஸ்ட், செப்டம்பர் வரை கோடை தான்! முன்னர் மாதிரி இல்லை. அக்டோபரில் கூட நல்ல வெய்யில்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

      நீக்கு
    5. கங்கையில் தண்ணீர் குறைந்து தான் இருக்கும் இச்சமயத்தில். ஆனாலும் காவிரி போல வறண்டு விடுவதில்லை!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

      நீக்கு
    6. கங்கை ஜீவநதி ஆச்சே! அதனால் எப்போதும் தண்ணீர் நிறைந்து இருக்கும். தமிழ்நாட்டின் ஒரே ஜீவநதி தாமிரபரணி! அதையும் கெடுத்துக் கொண்டு வருகின்றனர்! :(

      நீக்கு
    7. ஜீவ நதி - உண்மை. தாமிரபரணி - சோகம்....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

      நீக்கு
    8. //அதையும் கெடுத்துக் கொண்டு வருகின்றனர்! :(// - அது கெட்டுப்போய் 10 வருடங்களுக்குமேல் ஆகிவிட்டது. நான் தினமும் குளித்த, சிறுவயதிலிருந்து விளையாடிய/கல்லூரிப் படிப்பின்போது அமர்ந்து படித்துக்கொண்டிருந்த மணற்பரப்பு.... எதுவுமே சமீப வருடங்களில் காணோம். 'தண்ணீர் இல்லை' என்று குடத்துடன் போராடும் இந்த மாதிரியான கிராமத்து மக்களைப் பார்த்தால், பளார் என்று அறைவிடத் தோன்றும். வீட்டுச் சொத்தைக் கொள்ளையடிக்கவைத்துவிட்டு அரசாங்கத்தை எதிர்பார்க்கிறார்கள் என்று...

      நீக்கு
    9. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு
  14. காசி நகரில் நாங்கள் தங்கியிருந்தபோது அதிகமான சுத்தமின்மையைக் காணமுடிந்தது. திட்டங்கள் எல்லாம் பெயரளவில்தான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முன்னரை விட இப்போது எவ்வளவோ பரவாயில்லை. ஆனாலும் இன்னும் அதிக சுத்தம் வேண்டுமென்றால் அனைத்து தரப்பினரும் ஒத்துழைக்க வேண்டும்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.

      நீக்கு
  15. வாரணாசி போனால் விஸ்வநாதர் தரிசனம் இருக்குமே பொகும் வழியில் புடவை வாஙகலாம் தமிழ் பேசி புடவை வாங்க வைக்கும் கில்லாடிகளங்குண்டு படகுப்பயணம் என்றால் மிதந்துவரும் பிணங்களையும் காண்லாம் வாரணாசியில் சைக்கிள் ரிகஷ்ஹக்கள் இன்னும் இருக்கிறது இல்லையா பைரவர் சந்னதியில் பண்டா முதுகில் அறைவார் சாக்கிரதை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சைக்கிள் ரிக்‌ஷாக்கள் கொஞ்சம் கொஞ்சமாக விலகி இப்போது பேட்டரி ரிக்‌ஷாக்கள்....

      பண்டா முதுகில் அறைவது வட இந்திய கோவில்கள் பெரும்பாலானவற்றில் உண்டு. காசு கொடுக்கும் வரை “தட்டி”க் கொடுப்பது வழக்கம்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி.எம்.பி. ஐயா.

      நீக்கு
    2. காசியில் விஸ்வநாதர் தானே முக்கியத்துவம் நிறைந்தவர்! ஆனால் இப்போது எல்லாம் பிணங்கள் மிதந்தெல்லாம் வருவதில்லை. நாங்க 99 ஆம் வருடம் போனப்போவே அதெல்லாம் பார்க்கவே இல்லை! இப்போ இன்னமும் கங்கை சுத்தம் செய்யப்பட்டு வீதிகள் அகலப்படுத்தப்பட்டு விஸ்வநாதர் கோயில் போகும் பாதையே நன்றாகச் செப்பனிடப்பட்டு இருக்கிறது. பைரவர் சந்நிதியில் அதே பண்டா இன்னமுமா இருப்பார்? இஃகி, இஃகி! :)))))

      நீக்கு
    3. கங்கையில் பிணங்கள் - அதெல்லாம் முன்னர். இப்போது நிறைய மாற்றங்கள். முன்புற வழிகளில் மாற்றங்கள் நிறைய. இன்னமும் சின்னச் சின்ன சந்துகள் உண்டு என்றாலும், அவற்றையெல்லாம் பெரிது படுத்துவது முடியாத காரியம். நகரம் முழுவதும் இடித்துக் கட்டினால் தான் உண்டு!

      அதே பண்டா - :))))

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

      நீக்கு
  16. அருமையான படங்கள் வழக்கம் போலவே
    நன்று சித்தரே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கஸ்தூரி ரெங்கன்....

      நீக்கு
  17. சுத்தம் பற்றி அழகா சொன்னீங்க. சட்டம் போட்டால் மட்டும் போதாது. மக்களும் ஒத்துழைக்க வேண்டும்,

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி.

      நீக்கு
  18. அழகிய உலா.

    அனைத்துப் படங்களும் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

      நீக்கு
  19. அருமையான படங்கள். மீண்டும் பார்க்கும் ஆவல் ஏற்பட்டிருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முடிந்த போது சென்ற வாருங்கள்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராமசாமி ஜி.

      நீக்கு
  20. நான் இதுவரை அங்கு சென்றதில்லை கண்டிப்பாக செல்ல வேண்டும். அழகான படங்கள் ...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சொக்கன் சுப்ரமணியன்.

      நீக்கு
  21. வெங்கட், உங்க 2012 பதிவுகளையும் பாத்தேன். பிராயாகையில் அந்த கார் டிராவல்ஸ்ஸின் பெயர், போன் நம்பர் கிடைக்குமா? Or Pls let me know your ph number.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அம்பி உங்கள் முதல் வருகையோ - மகிழ்ச்சி.

      நாங்கள் சென்ற ட்ராவல்ஸ் தொடர்பு கொள்ள வாய்ப்பில்லை. அங்கே சென்று அமர்த்திக் கொண்ட வாகனம் தான். என்னுடைய மின்னஞ்சல் - venkatnagaraj@gmail.com மூலம் தொடர்பு கொள்ளுங்கள்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
    2. அம்பி. நல்வரவு, நல்வரவு! என்ன மறுபடி வந்தாச்சா? ஜி+ போனதும்! :)))))))

      நீக்கு
    3. ஓ... இவரை உங்களுக்கு ஏற்கனவே தெரியுமா? மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

      நீக்கு
    4. ஹாஹாஹா, அம்பி டாம் என்றால் நான் ஜெரி! :)))))) Anyway he is incomparable and a best friend for the last 13 years or more! :)))))))))

      நீக்கு
    5. நன்றி வெங்கட். மெயில் போடறேன். முதல் வருகையில்லை. உங்க நெறைய பதிவுகள் படிச்சுருக்கேன் வெங்கட். சின்ன திருத்தம் "கீதா மாமி டாம் என்றால் நான் ஜெரி. :p

      நீக்கு
  22. அழகான படங்கள். இங்கு எங்க உள்ளூர் சானலில் அடிக்கடி வாரணாசி பற்றி டாகுமெண்டரி போடுவாங்க. அப்போ பார்த்திருக்கேன். மக்கள் மனது வைத்தால் இருக்கும் இடமென்ன நாடே சுத்தமாகும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ப்ரியசகி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....