சனி, 25 ஜூலை, 2020

காஃபி வித் கிட்டு - பசித்த காளை - தில்ஜீத் - குடகு - ரகசியம் - மண்டலா ஆர்ட்

காஃபி வித் கிட்டு - 78

அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம்.  இன்றைய நாளை நல்லதோர் வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.

இன்னும் எவ்வளவு தொலைவு இருக்கிறது என பார்ப்பதை விட எப்போதும், எவ்வளவு கடந்து வந்திருக்கிறீர்கள் எனப் பாருங்கள். இந்த வேறுபாடு எத்தனை எளிதானது என்பது உங்களை வியப்பில் ஆழ்த்தும் - ஹெய்டி ஜான்சன்.

இந்த வாரத்தின் தகவல் - பசித்த காளை:



கடந்த சில வருடங்களாகவே நான் தொலைக்காட்சி வைத்துக் கொள்ளவில்லை. எப்போதாவது நண்பர்கள் வீட்டிற்குச் சென்றாலோ அல்லது யூவில் வரும் விளம்பரங்களையோ மட்டுமே பார்க்கிறேன்.  காஃபி வித் கிட்டு பதிவுக்காக, விளம்பரங்களையும், காணொளிகளையும் பார்த்து ரசிப்பது அதிகரித்திருக்கிறது. சில நாட்களாக தில்லியின் உணவுவகைகளைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். உணவு பற்றி Vlog செய்பவர்கள் எத்தனை எத்தனை பேர்கள்!  அதில் சிலருக்கு இதுவே தொழில் போல இருக்கிறது!  அவர்கள் தங்களது Vlog-க்கு வைத்துக் கொள்ளும் பெயர்களும் வித்தியாசமாகவே இருக்கிறது! ஒரு சர்தார்ஜியின் Vlog பெயர் என்ன தெரியுமா? Bhooka Saand! அதாவது பசித்த காளை! இணையத்தில்/யூட்யூபில் தேடினால் இவரது Vlog பார்க்கலாம்! ஹிந்தி மொழியில் தான் என்பதையும் கூடுதல் தகவலாக சொல்லி விடுகிறேன். இவர் இன்ஸ்டாக்ராம் போல பல தளங்களிலும் இருக்கிறார். இவரது இயற்பெயர் பஜ்னீத் சிங்!

இந்த வாரத்தின் ரசித்த பாடல்: 

இந்த வாரத்தின் ரசித்த பாடலாக வருவதும் ஒரு பஞ்சாபி பாடல் தான். அந்தப் பாடலைக் கேட்டுக் கொண்டே காட்சிகளையும் பாருங்கள். குளிர்காலத்தில் மெத்தை/ரஜாய்க்கு பயன்படுத்தும் பஞ்சை எப்படிச் சுத்தம் செய்கிறார்கள் என்று பார்க்க முடியும். வித்தியாசமான கருவி கொண்டு சுத்தம் செய்வார்கள். நமது ஊரில் இப்படியான கருவி பார்க்க முடிவதில்லை இல்லையா! பாடலையும் கேட்கலாம்! தவறில்லை.



இந்த வாரத்தின் மின்புத்தகம்: 

அவ்வப்போது மின்புத்தகங்களைத் தரவிறக்கம் செய்து படிப்பது வழக்கம். பயணக் கட்டுரைகள் என்றாலே பலரும் திரு ஏ.கே. செட்டியார் அவர்களது பயணக் கட்டுரைகளை மேற்கோள் காட்டுவதுண்டு. இதுவரை அவரது நூல்களை படிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. சமீபத்தில் அவரது குடகு என்ற நூல் இலவசமாகத் தரவிறக்கம் செய்து கொள்ள முடிந்தது. அதனைப் படித்து முடித்தேன் - பல விஷயங்களை அந்த நூல் வழி சொல்லி இருக்கிறார்.  குடகு பகுதி மக்களின் வாழ்க்கை விவரங்கள், அங்கே பயிரிடப்படும் காஃபிச் செடிகள், பிரபல இடங்கள் என பல விஷயங்களையும் சொல்லி இருக்கிறார். ஒரே ஒரு விஷயம் - அவர் எழுதிய போது இருந்தவை இன்றைக்கு அப்படியே இருக்க வாய்ப்பில்லை! ஏனெனில் அவர் இந்த நூலை எழுதியது குறைந்தது ஐம்பது, அறுபது வருடங்களுக்கு முன்பாக இருக்கலாம்! ஆனாலும் படிக்க மிகவும் ஸ்வாரஸ்யமாகவே இருந்தது.

பின்னோக்கிப் பார்க்கலாம்: 

எனது வலைப்பூவில் இதே நாளில் 2011-ஆம் வருடம் எழுதிய ஒரு பதிவு - ரகசியம் பரம ரகசியம்.  எதைப் பற்றிய பதிவு அது?  அப்பதிவிலிருந்து சில வரிகள் இங்கே.

பள்ளியில் படித்துக் கொண்டிருந்த போது எனக்கு பிடிக்காத ஒரு பாடம் என்றால் அது வரலாறு தான். அதன் கூடவே ஒட்டிப்பிறந்த இரட்டைக் குழந்தை போல சேர்ந்தே இருக்கும் புவியியலைக் கண்டாலோ அதை விட அலர்ஜி. பொதுவாகவே இந்தப் பாடத்தில் நான் அதிக மதிப்பெண்கள் எடுத்ததில்லை. (”அப்படி என்ன மத்த பாடங்களிலெல்லாம் நூற்றுக்கு நூறா எடுத்து விட்டாய்?” என்ற என்னுடைய உள்மனதின் குரல் உங்களுக்குக் கேட்டால் அதற்கு நான் பொறுப்பல்ல!)

முழுபதிவும் படிக்க ஏதுவாக, சுட்டி கீழே. 


இந்த வாரத்தின் ஓவியம்: 



மகளின் கைவண்ணத்தில் உருவான ஒரு ஓவியம் - மண்டலா ஆர்ட் என அழைக்கப்படும் இந்த ஓவியத்தினை முதன் முறையாக வரைந்திருக்கிறார். பார்த்து ரசிக்கலாமே!

இந்த வாரத்தின் ரசித்த வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ்:


இந்த விஷயம் ஹிந்தியில் வந்தது. அதை தமிழில் இங்கே பகிர்ந்து கொள்கிறேன். “காந்திஜி சொன்ன மூன்று குரங்குகள் விஷயம் உங்களுக்குத் தெரியும் தானே! அந்த மூன்று குரங்குகளையும் ஒன்றாக மாற்றிவிட்டது ஒரு பொருள் - அது தான் உங்கள் கைபேசி/அலைபேசி! இதைக் கையில் எடுத்து விட்டால், யார் பேசுவதையும் கேட்பதில்லை, யாரிடமும் பேசுவதுமில்லை; யாரையும் பார்ப்பதுமில்லை!”

மின்னூல் - இலவசம் - தகவல்:



இன்று மதியம் 12.30 முதல் வியாழன் மதியம் 12.29 வரை எனது ஜெய் மாதா தி மின்னூல் அமேசான் தளத்தில் இலவசமாகத் தரவிறக்கம் செய்து கொள்ள முடியும்.  தரவிறக்கம் செய்ய சுட்டி கீழே...


என்ன நண்பர்களே, இந்த வாரத்தின் காஃபி வித் கிட்டு பதிவு உங்களுக்குப் பிடித்திருந்ததா?  பதிவு பற்றிய உங்கள் கருத்துகளை பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்!

நாளை வேறு ஒரு பதிவுடன் மீண்டும் சந்திக்கும் வரை...

நட்புடன்

வெங்கட் நாகராஜ்
புது தில்லி    

44 கருத்துகள்:

  1. இவ்வளவு தூரத்தை எப்படிக் கடந்தோம்...

    அதுவே வாழ்வின் பிரமிப்பு...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாழ்வின் பிரமிப்பு - உண்மை தான் துரை செல்வராஜூ ஐயா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
    2. இரு நாட்களுக்கு முன் ஜெயமோஹன் அவர்கள் "பெருஞ்செயலாற்றுவது, அதில் வரும் மூன்று தடைகள்" என இரு அருமையான கட்டுறைகள் வெளியிட்டார்.
      அதன் சாரத்தை ஒரே வரியில் வெளிப்படுத்தியது உங்களின் இன்றைய வாசகம், மிக்க நன்றி.
      ஏ. கே. செட்டியார் அவர்களின் நூல்களை சீக்கிரம் வாசிக்கிறேன். திருப்பதி மஹேஷ் உம் அது குறித்து சொன்னான்.
      மூக்கன் சாரின் மூக்குக்கு கீழேயே காப்பி அடித்து கலக்கியிருக்கிறீர்கள்.
      அப்போது வறலாற்றை வெறுத்ததாலோ என்னவோ, ஒவ்வொரு இடம் செல்லும்போதும் அதன் பின்னணி வறலாற்றை கண்டுபிடித்து தங்கள் பதிவிலும் நூல்களிலும் போடுகிறீர்கள்.
      வறலாறு அதன் முக்கியத்துவத்தை புரியவைத்துள்ளது.
      எனக்கு மேப் என்றால் அலர்ஜி, எனவே பள்ளியில் ஒருமுறை காப்பி அடித்து மாட்டாமல் தப்பிவிட்டேன்.
      இப்போதுதான் வெளிநாடு பயனங்களுக்காக நானும் மஹேஷும் விவாதிக்கும்போது அப்போது மேப் படிக்காமல் விட்டதன் தவறு புரிகிறது.
      பதிவு மிக அருமை ஐய்யா.

      நீக்கு
    3. மேப் - இந்தியாவில் அத்தனை பயன்பாடு இல்லாமலேயே இருக்கிறது. இப்போது கூட கூகிள் மேப் பயன்படுத்துகிறார்களே தவிர காகித மேப் பயன்பாடு மிகவும் குறைவு தான் அரவிந்த்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  2. ரோஷ்ணியின் கை வண்ணம் அருமை...

    சும்மாவா சொன்னார்கள் - சித்திரமும் கைப் பழக்கம் - என்று!...

    வாழ்க நலமுடன்!...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மகளின் ஓவியத்தினை பாராட்டியதற்கு நன்றி துரை செல்வராஜூ ஐயா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  3. எதிரே இருக்கும் தொலைவைப் பார்ப்பது மனச் சுணக்கத்தை ஏற்படுத்தலாம்.  கடந்துவந்த பாதை உற்சாகமளிக்கலாம்.  உண்மை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி ஸ்ரீராம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  4. தொலைகாட்சி வைத்துக்கொள்ளவில்லை நீங்கள் என்பது ஆச்சர்யமான தகவல்.  பார்க்கிறேனோ இல்லையோ... (சமீபத்தில் தொலைகாட்சி பக்கமே போவதில்லை) வீட்டில் தொலைகாட்சி இருக்கவேண்டும் எனக்கு!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கிட்டத்தட்ட நான்கு வருடங்கள் ஆகிவிட்டது ஸ்ரீராம். இருந்ததை எங்கள் பகுதி காவலாளியிடம் கொடுத்துவிட்டேன்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  5. பாடலைக் க்ளிக் செய்தால் இரண்டு பெண்கள் பேசிக்கொண்டே இருக்கிறார்கள்!  ஏ கே செட்டியார் புத்தகம் ஒன்று இருக்கிறது இன்னும் படிக்க ஆரம்பிக்கவில்லை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாடல் - ஹாஹா. கணவன் மீது சந்தேகம் கொண்டு புலம்புகிறார் அந்தப் பெண். பாடல் ஒன்றரை நிமிடத்திற்குப் பிறகே தொடங்குகிறது ஸ்ரீராம்!

      நானும் ஏ.கே.சே. புத்தகங்களை சில பக்கங்கள் மட்டுமே படித்திருக்கிறேன். இந்தப் புத்தகம் தான் நான் முழுதாகப் படித்தது

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  6. ரோஷ்ணியின் ஓவியம் அழகு.  பழைய பதிவு இப்போதுதான் படித்தேன்..  முன்னர் பார்த்திருக்கவில்லை.  ஒருவழியாக பாடல் தொடங்கி மைக்கைக் கையில் தூக்கிக்கொண்டு அவர் பாட வந்து விட்டார்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓவியம் - உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி ஸ்ரீராம்.

      பழைய பதிவு - படித்ததற்கு நன்றி.

      பாடல் - ஹாஹா....

      நீக்கு
  7. வாசகம் அருமை ஜி
    பஞ்சாபி பாடல் கேட்டேன். அதில் வரும் நாயகி ஒரு இடத்தில் "கஸ்மாலம்" என்று சொல்கிறாளே... ஆனால் இது தமிழ் வார்த்தை கிடையாது என்பது அறிந்ததே...

    ரோஷ்னியின் ஓவியம் அற்புதம் ஜி வாழ்த்துகள்.

    மின்நூல் தரவிறக்கம் செய்வேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கில்லர்ஜி.

      பஞ்சாபி பாடல் - :)

      ஓவியம் - நன்றி.

      மின்னூல் - வாழ்த்தியமைக்கு நன்றி கில்லர்ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  8. உங்கள் மகளின் கைவண்ணத்தில் உருவான ஒரு ஓவியம் - மண்டலா ஆர்ட் மிகவும் அழகாக உள்ளது. ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓவியம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி ரங்கராஜன் ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  9. அருமையான பதிவு. பஞ்சாபி பாடல் சூப்பர். ரோஷ்ணியின் கைவண்ணம் மிகவும் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி இராமசாமி ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  10. ஓவியம் அசர வைத்தது...

    பாடல் அருமை...

    மின்னூல் தரவிறக்கம் செய்வேன்... நன்றி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓவியம், பாடல் - பிடித்ததில் மகிழ்ச்சி.

      மின்னூல் - நன்றி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தன்பாலன்.

      நீக்கு
  11. இன்றைய ‘காஃபி வித் கிட்டு’ வில் தாங்கள் தந்திருக்கும் ஹெய்டி ஜான்சன் அவர்களின் வாசகம் அருமை. பஞ்சாபி பாடலை இரசித்தேன்.

    நம்மூர்களிலும் இது போன்று பஞ்சு அடிக்கும் வில் வேறு அமைப்பில் உண்டு. இன்றைக்கும் சிற்றூர்களில் வீட்டிற்கு வந்து இலவம் பஞ்சுமைத்தையில் உள்ள பஞ்சுகளை எடுத்து அந்த வில் போன்ற கருவி மூலம் அடித்து தருகிறார்கள்.

    தங்கள் மகளின் கைவண்ணம் அருமை. பாராட்டுகள்! தங்களின் ‘ஜெய் மாதா தி’ மின்நூலை தரவிறக்கம் செய்து படிப்பேன்.

    இந்த வாரத்தின் காஃபி வித் கிட்டு பதிவு அனைத்தும் பிடித்திருந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகம், பாடல் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி வே. நடனசபாபதி ஐயா.

      பஞ்சு அடிக்கும் வில் - நான் தமிழ்நாட்டில்/நெய்வேலியில் இருந்த வரை பார்த்ததில்லை ஐயா. இங்கே தான் பார்த்திருக்கிறேன்.

      மகளின் கைவண்ணம் - நன்றி.

      பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  12. வாசகம், பாடல், ரோஷ்ணியின் ஓவியம் எல்லாம் அருமை.

    ஜெய் மாதா தி’ மின்நூலுக்கு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா!

      மின்னூல் - வாழ்த்துகளுக்கு நன்றிம்மா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  13. வாசகம் அருமை.

    உங்கள் மகளின் ஓவியம் மிக மிக நன்றக இருக்கிறது அவருக்கு வாழ்த்துகள். மின்னூல் தரவிறக்கம் செய்கிறேன்.

    அனைத்தும் ரசித்தேன் வெங்கட்ஜி

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகம், ஓவியம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

      மின்னூல் - நன்றி துளசிதரன் ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  14. ரோஷினி மிக நன்றாக வரைகிறார்! வாவ் போட வைக்கிறது!

    வாட்சப் ஸ்டேட்டஸ் ஹா ஹா

    பஞ்சாபி பாடல் ரொம்ப நல்லாருக்கு ரசித்தேன் ஜி. அதில் வரும் பஞ்சு அடிப்பது எங்கள் ஊரில் வீட்டிற்கு வந்து மெத்தை தைத்துக் கொடுக்க பஞ்சை அப்படி அடிக்கும் கருவி கொஞ்சம் வித்தியாசமானது பார்த்திருக்கிறேன். சுத்தம் செய்வதொடு பஞ்சை இலகுவாக்கும். ஃப்ளஃப்ஃபி என்று சொல்லுவோமே அப்படி.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மகளின் ஓவியம் - பாராட்டிற்கு நன்றி.

      வாட்ஸப் ஸ்டேட்டஸ் - என்னமா யோசிக்கறாங்க! இல்லையா?

      பஞ்சாபி பாடல் - பிடித்ததில் மகிழ்ச்சி. நெய்வேலியில் இருந்தவரை பார்த்ததில்லை. பெரும்பாலும் நீண்ட கழி வைத்து அடிப்பதைத் தான் பார்த்திருக்கிறேன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  15. நான் கஷ்டப்பட்டபாடம் கணக்கு!!!! அப்புறம் சயின்ஸ் க்ரூப் எடுத்த போது (நான் எங்க எடுத்தேன். எல்லாம் வீட்டின் கம்பெல்ஷன்!!) ஃபிசிக்ஸ், கெமிஸ்ட்ரி கஷ்டப்பட்டேன்.

    87 க்குப் பின் இருக்கும் பரம ரகசிய வரலாற்றைப் பார்த்தேன் ஹா ஹா ஹா...ஜி! இதெல்லாம் அப்போது அந்த வயதில் சகஜமப்பா ...அதான் தப்புன்னு தெரிஞ்சு ரிலீஸும் பண்ணியாச்சே..

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கணக்குடன் எனக்குப் பிணக்கில்லை! கீதாஜி. “நான் எங்க எடுத்தேன். எல்லாம் வீட்டின் கம்பெல்ஷன்!” ஹாஹா... அதே கதை தான் இங்கேயும்.

      87-இன் பின் இருக்கும் ரகசியம்! - ஹாஹா. தப்பு என்று உணர்ந்தால் தொடர்வது கடினமாக இருக்கும் இல்லையா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  16. ரோஷ்ணியின் ஓவியம் அழகு வாழ்த்துகள். வீடியோ பார்க்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓவியம் - உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

      காணொளி - முடிந்த போது பாருங்கள் மாதேவி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  17. ஓவியம் அபாரம்
    தங்களின் அன்பு மகளுக்கு வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓவியம் - உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி. வாழ்த்தியமைக்கு நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  18. அன்பு வெங்கட் ,
    இனிய மாலை வணக்கம்.

    பதிவின் வாசகம் மிகப் பெரிய உண்மை.
    நம்மை உற்சாகம் செய்து மேற்கொண்டு செலுத்துவது கடந்து வந்த பாதையெ
    என்பதில் சந்தேகமில்லை.
    பஞ்சாபி காணொளி ரசிக்கும் படி இருந்தது, புலம்பலும் பிறகு பினவரும் காட்சிகளும்
    ரசிக்கும்படி இருக்கின்றன.
    ரோஷ்ணி குட்டியின் மண்டாலா வரைவு மிகக் கஷ்டமானது. சிறப்பாகச் செய்திருக்கிறார்.
    வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் வல்லிம்மா.

      வாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

      பஞ்சாபி - புலம்பலும் பின்வரும் பாடல் காட்சிகளும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

      மண்டலா ஆர்ட் - நன்றிம்மா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  19. அருமையான வாசகம். மகள் ரோஷ்னிக்கு பாராட்டுக்கள். . மின்நூலிற்கு என் வாழ்த்துக்கள் சார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகம், மகள் வரைந்த ஓவியம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி அபிநயா.

      மின்னூல் - வாழ்த்தியமைக்கு நன்றி.

      நீக்கு
  20. ஏ.கே.செட்டியார் அவர்கள் பற்றி நான் சின்ன வயசிலேயே அறிந்திருப்பதால் இன்னமும் சில ஆண்டுகள் முன்னால் எழுதி இருக்க வாய்ப்பு இருக்கிறது. அநேகமாய் நம்மவர் கூடப் பிறந்திருக்க வாய்ப்பில்லை. சில புத்தகங்கள் படித்திருக்கேன் சித்தப்பா வீட்டில் இருந்தப்போ அறுபதுகளில்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இன்னமும் சில ஆண்டுகள் முன்னால் - இருக்கலாம்! மின்னூல் வழி எழுதிய ஆண்டினை தெரிந்து கொள்ள முடியவில்லை கீதாம்மா...

      அறுபதுகளில் படித்த நூல்கள்! ஓ...

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  21. காணொளி வழக்கம் போல் வரலை. இருந்தாலும் இப்போ ராத்திரி பார்க்க முடியாது. நாளை மத்தியானம் பார்க்கணும். ரோஷ்ணியின் கைவண்ணம் முகநூலிலும் பார்த்தேன். மின்னூல்கள் வெளியீட்டிற்கு வாழ்த்துகள். உங்க 2011 ஆம் ஆண்டுப் பதிவையும் அப்புறமாத் தான் பார்க்கணும்.என்னோட நேரம் வந்தாச்சு. குஞ்சுலுவுக்காக உட்கார்ந்திருந்தேன். அது வந்து விட்டுப் போயாச்சு!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காணொளி - மற்றவர்களுக்குப் பார்ப்பதில் பிரச்சனை இல்லை! நாளை முடிந்தால் பாருங்கள்.

      2011-ஆம் ஆண்டின் பதிவு - முடிந்தால் படிக்கலாம்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....