புதன், 12 ஆகஸ்ட், 2020

கதம்பம் – சரியும் தவறும் – ஆன்லைன் வகுப்புகள் – காவிரி – ஓவியம் - மின்நிலா

 


அனைத்து நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம். இன்றைய நாளை, நல்லதொரு வாசகத்துடன் ஆரம்பிக்கலாம். 

நீ எவ்வளவு நன்மைகள் செய்திருந்தாலும் அதை ஒரு நொடியில் இவ்வுலகம் மறந்துவிடும்; நீ தெரியாமல் செய்த ஒரு தவறை காலம் முழுவதும் சொல்லிக் கொண்டே இருக்கும்! 

ஆன்லைன்_அலப்பறைகள் - 7 ஆகஸ்ட் 2020: 

இன்று மகளின் ஆன்லைன் வகுப்பில் கணக்கு பாடம் ஆசிரியரால் நடத்தப்பட்டுக் கொண்டிருந்தது. வழக்கமாக மகள் தன்னுடைய மெயில் ஐடி வழியாக மடிக்கணினி அல்லது அலைபேசியிலோ தான் பார்ப்பாள். இன்றும் அப்படியே தான் வகுப்புக்குள் சென்றாள். 

ஏறக்குறைய வகுப்பு முடியும் தருவாயில் சிக்னல் சரியில்லாமல் கட்டாகி விட, மீண்டும் உள்ளே செல்ல முடியலை. sum மிஸ்ஸாகி விடும்மா. என்ன செய்வது? என்றாள். உடனேயே "அம்மா உன்னோட மொபைல் வழியா போய் பார்க்கிறேன்" என்றாள். முயற்சி செய்ததில் உள்ளே போக முடிந்தது. 

ஒருவழியாக வகுப்பும் நிறைவுற்றது. ஒவ்வொரு நாளும் Host என்பவர் அன்றைக்கு பாடம் நடத்திய ஆசிரியரிடம் ஒவ்வொருவரும் எத்தனை மணிக்கு உள்ளே வந்தார்கள்! வகுப்பு முடிவதற்குள் சென்றவர்கள்! என்பது பற்றியெல்லாம் புகார் சொல்வார்களாம். 

இன்று அதில் Adhi Venkat னு ஒரு பையன் கடைசியா தான் உள்ளே வந்ததாக சொன்னார்களாம் :) உடனே மகள் சிரித்துக் கொண்டே Unmute செய்து, சார்! அது நான் தான்! அம்மாவோட ஐடி வழியா வந்தேன். முதல்ல இருந்தே கிளாஸை கவனித்து வந்ததாகவும் சிக்னல் பிரச்சனையால் கட்டானதாகவும் சொன்னாளாம் :) அவர்களும் சிரித்துக் கொண்டார்களாம். 

மகள் இன்று முழுவதும் இதைச் சொல்லி சிரித்துக் கொண்டிருந்தாள். நானும் விடுடா கண்ணு! இன்னிக்கு ஒருநாள் பையனா இருந்துட்டு போறேன் என்றேன் :) ஆதி என்ற பெயர் பொதுவாக பசங்களுக்குத் தானே வைப்பார்கள்!!! 

காவிரி ஆறும் காவேரியும் – 8 ஆகஸ்ட் 2020: 







இன்று சூப்பர் மார்கெட் ஒன்றிற்கு சென்று விட்டு, அப்படியே அம்மா மண்டபம் படித்துறை சென்று காவிரியில் கால் நனைத்து விட்டு வந்தோம். எப்போதும் இருக்கும் மக்கள் கூட்டம் இல்லாமல் வெறிச்சோடி இருந்தது. ஆங்காங்கே ஒரு சிலர் குளித்துக் கொண்டிருந்தனர். 

காவிரித்தாயிடமும், உச்சி பிள்ளையார் மற்றும் தாயுமானவரிடமும் மனதார பிரார்த்தித்து விட்டு வீடு திரும்பினோம். நோய்தொற்று, இயற்கை அழிவுகள், விபத்துகள் என்று தொடர்ந்து எங்களை கலங்க வைக்கிறாயே இறைவா!! 

மின்நிலா-012 – கிருஷ்ணஜெயந்தி – ஓவியம் – 10 ஆகஸ்ட் 2020: 




இன்றைய இனிய செய்தி!! கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷலாக இன்று மகளின் ஓவியங்கள் இரண்டு எங்கள் ப்ளாகின் "மின்நிலா" இணைய இதழில் பிரசுரமாகியுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்கிறேன். எங்கள் ப்ளாக் ஆசிரியர்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றிகள். 

YouTube channel: கடந்த சில தினங்களாகவே உறவுகளும், நட்புகளும் வாட்ஸப் ஸ்டேட்டஸில் பகிரும் ரெசிபிக்களை பார்த்து விட்டு சேனல் பெயர் என்னவென்று கேட்கிறார்கள் :) இல்லையென்று சொன்னாலும் நம்புவதில்லை :) 



இன்று எங்கள் குடியிருப்பில் டேங்க் கிளீனிங் செய்யும் கம்பெனி எண்ணிலிருந்து மெசேஜ்!! (அசோசியேஷன் கமிட்டியில் இருப்பதால் என்னுடைய எண் அவர்களிடம் இருக்கிறது) நேற்று இரவு சப்பாத்திக்கு தொட்டுக்கையாக ஒரு வட இந்திய சப்ஜி செய்து வாட்ஸப்பில் பகிர்ந்திருந்தேன். அதை பார்த்து விட்டு "உங்க யூட்டியூப் சேனல் பெயர் என்ன மேம்??" என்று கேட்டிருந்தார்கள் :) 

நானும் "சேனல் எல்லாம் இல்லைங்க. நான் சும்மா ஃபேஸ்புக், வாட்ஸப், ப்ளாக், e book-னு எழுதிட்டு இருக்கேன்" என்று பதிலனுப்பினேன் :) 

அவ்வப்போது யாரேனும் ஒருவர் சொல்லும் போது துவங்கலாம் என்று நினைப்பேன். அப்புறம் சில தயக்கங்கள்! எடிட் செய்யணும்! எல்லாவற்றையும் வீடியோவாக மாற்றணும் என்கிற போது இயல்பாக இருக்க முடியாமல் போய்விடுமே என்று விட்டுவிடுவேன் :) பார்க்கலாம்! 

ரோஷ்ணி கார்னர் – ஓவியம் – கோகுலாஷ்டமி – 11 ஆகஸ்ட் 2020: 



இந்த வருட கோகுலாஷ்டமிக்காக மகள் வரைந்த ஓவியம் ஒன்று உங்கள் பார்வைக்கு! அனைவருக்கும் இனிய கோகுலாஷ்டமி வாழ்த்துகள். 

நண்பர்களே, இன்றைய பதிவில் உங்களுடன் பகிர்ந்து கொண்ட விஷயங்கள் பற்றிய உங்கள் கருத்துகளைச் சொல்லுங்களேன். விரைவில் வேறு ஒரு பதிவுடன் மீண்டும் ச[சி]ந்திப்போம்... 

நட்புடன் 


ஆதி வெங்கட்

34 கருத்துகள்:

  1. யூட்டியூப் சேனல் ஆரம்பித்துவிடுங்க... அட்வான்ஸ் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி தீஜ் துரை சகோ..

      நீக்கு
  2. கதம்பம் நன்று.

    இப்போ அனேகமா யூ டியூபில் எல்லாருமே ரெசிப்பி போட ஆரம்பிச்சாச்சு. ஆட்களை வரவைக்க மிஸ்லீடிங் தலைப்பும் போடறாங்க.

    எழுத்தில் உள்ள ரெசிப்பியோ படங்களோ போல யூ டியூப் வராது, unless the recipes are completely unique. இது என் எண்ணம். நீங்க யூடியூப் ஆரம்பிப்பீங்கன்னு (குறைந்தபட்சம் தற்போது) எனக்கு நம்பிக்கை இல்லை. எடிட்டிங் போன்ற வேலை செய்ய வெங்கட்டுக்கு நேரம் இருக்காது. ஹா ஹா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குறைகள் மட்டுமே சொல்லி வந்து தான் பழக்கம் போலிருக்கிறது உங்களுக்கு...எட்டு வருடங்களாக தனித்து தான் எல்லாவற்றையும் சமாளித்து வருகிறேன்..இந்த எடிட்டிங் மட்டும் என்னால் முடியாதா??? சேனல் ஆரம்பிப்பது எங்கள் விருப்பம்..முடிந்தால் வாழ்த்துங்கள்..

      நீக்கு
    2. அவ்வளவு சீரியஸாவா இந்த விஷயத்தை நினைச்சிருக்கீங்க. நல்லா ஆரம்பிங்க. வாழ்த்துகள். நான் நிஜமாகவே எப்படி இதற்கு நேரம் கிடைக்கும் என்று நினைத்தேன். நானே நிறைய தடவை ரெசிப்பி என்ன என்று கேட்டிருக்கிறேன் (வெங்கட்டிடம் அல்லது பின்னூட்டத்தில்)

      நீக்கு
    3. தங்கள் புரிதலுக்கும், வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி நெல்லை சார்..

      நீக்கு
  3. கதம்பம் வழக்கம் போலவே நன்று.
    ஆன்லைன் வகுப்புகளால் இப்படி குழறுபடிகளும் உண்டுதான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி சார்..

      நீக்கு
  4. ஆன்லைன் அலப்பறைகள் நேற்று முன்தினம் இங்கும்...!

    ஓவியங்கள் மிகவும் காலம்...

    யூ-டியூப் காலம் இது...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓஹோ!அங்கும் இதே நிலை தானா! தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி தனபாலன் சகோ..

      நீக்கு
  5. பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  6. வாசகம் உண்மை சொல்கிறது!  எல்லோருக்கும் அந்த அனுபவம் இருக்கும்.

    சப்பாத்தி மிக அழகாய் வந்திருக்கிறது.  சீக்கிரமே யு  டியூப் சேனல் ஆரம்பிக்க வாழ்த்துகள்.  ஆனால் வேலை வாங்கும்தான்.  ரோஷ்ணிக்குப் பாராட்டுகள்.  மின்நிலா பகிர்வுக்கு நன்றி.  உங்கள் ஆதரவுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நிச்சயம் கூடுதல் வேலையாகத் தான் இருக்கும்..முடிந்த அளவு பார்க்கலாம்..வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி ஸ்ரீராம் சார்.

      நீக்கு
  7. ஓவியம் அருமை..ரோஷ்ணியோடு ஓவியத் திறமையும் வளர்வது மிக்க மகிழ்வளிக்கிறது.வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி ரமணி சார்.

      நீக்கு
  8. ஆன் லைன் வகுப்புகளில் இப்படி ஒரு சிக்கலா? ஹாஹா! விரைவில் யூ ட்யூப் எதிர்பார்க்கிறேன். வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும், வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி பானுமதிம்மா.

      நீக்கு
  9. ஆன்லைன் பயனுள்ளதா இல்லையா என்று கேட்க வைக்கிற சிக்னல் போனாலெ இத்தனை சங்கடம்னா கணினி வசதி இல்லாதவர் பாடு என்னவாயிருக்கும் தேவை ஒரு அலசல்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் சார் கணினி இல்லையென்றால் சங்கடம் தான்...ஆனால் தற்சமயம் வேறு வழியில்லை..:( தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி ஜி.எம்.பி சார்.

      நீக்கு
  10. கதம்பம் அருமை. ஆன்லைன் வகுப்பில் நடந்த சம்பவம் சிரிப்பை வரவழைத்தது. ரோஷ்ணியின் ஒவியங்கள் சூப்பர். யு டியூப் தொடங்க எங்கள் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும், வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி ராமசாமி ஜி..

      நீக்கு
  11. ரோஷ்ணியின் ஓவியங்கள் அருமை! ஆன்லைன் கிளாஸ் அலப்பறை சிரிப்பூட்டியது.காவிரியாற்றின் படங்கள் சிறப்பு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவின் அனைத்து பகுதிகளையும் வாசித்து கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி தளிர் சுரேஷ் சார்..

      நீக்கு
  12. வணக்கம் சகோதரி

    வாசகம் அருமை. ஆன்லைன் கிளாஸ் இந்த மாதிரி பிரச்சனைகள் (கரண்ட் கட்.. இணையத் தொடர்பு சரியாக வராமல் நடுவிலேயே போய் விடுவது) இருப்பது சற்று சிரமந்தான். கிளாஸில் நடந்தவை ஸ்வாரஸ்யமாக இருக்கிறது.

    தங்கள் மகளின் ஓவியங்கள் மின்நிலா வில் வெளிவந்தமைக்கு மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். இப்போது ரோஷ்ணி வரைந்துள்ள ஓவியமும் மிக அழகாக உள்ளது. திறம்பட ஓவியங்கள் வரையும் தங்கள் மகளுக்கு என் அன்பான வாழ்த்துகளை தெரிவியுங்கள்.

    காவிரிக் கரை படங்கள் நன்றாக உள்ளன.
    சப்பாத்தியும், தொட்டுக் கொள்ளும் சைடிஸும் நன்றாக உள்ளன. யூடியூபில் தங்கள் சமையலை காண ஆவலாக உள்ளேன். வாழ்த்துகள். கதம்பம் அருமையாக உள்ளது. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அனைத்து பகுதிகளையும் வாசித்து கருத்துக்களை பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றி கமலா ஹரிஹரன் ஜி..

      நீக்கு
  13. வாசகம் உண்மை. Maturity இல்லாமல் இருப்பது தான் காரணம். சப்பாத்தி மிக நன்றாக உள்ளது. மகள் ஓவியம் அருமை. காவிரி ஆற்றை நேரில் இவ்வாறு பார்க்கும் வாய்ப்பு கிட்டவில்லை. You tube is best. எப்போது வேண்டுமானாலும், எந்த ஓரு அயிட்டம் வேண்டுமானாலும் பார்க்க எளிதாக உள்ளது. துவங்கினால் பழகி விடும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் ஜி..சேனல் துவங்கி போடத் துவங்கினால் பழகி விடும் என்று நினைக்கிறேன்.தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி கயல் ராமசாமி ஜி..

      நீக்கு
  14. இந்த online அலப்பறைகள் எங்கள் வீட்டிலும் பல உண்டு ..


    எங்கள் ப்ளாகின் "மின்நிலா" இணைய இதழில் ரோஷ்ணி ஓவியங்கள் ...வாழ்த்துக்கள்

    ரோஷ்ணி இந்த வருட படமும் மிக அழகு ...

    விரைவில் உங்களின் youtube சேனல் காண ஆவல் ...சீக்கிரம் தொடங்கி விடுங்கள் ...

    உங்களின் செய்முறை எல்லாமே நன்றாக இருக்கிறது ...தங்களின் ebook வாசித்து அங்கு கருத்துரை கூட இட்டேன்.....அருமையான செய்முறைகள்


    இந்த வீடியோ எடிட்டிங் அதிக நேரம் எடுப்பது உண்மை தான் ...ஆரம்பத்தில் எப்படி blog போஸ்ட் போட நேரம் எடுக்கும் ...ஆனால் இப்பொழுது விரைவாக போட்டு விடுகிறோம் அல்லவா அது போல அதுவும் செய்ய செய்ய வேகம் வரும் ...எனது அனுபவத்தில் கண்டது ...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆன்லைன் அலப்பறைகள் - பல வீடுகளில் இப்படித்தான் இந்தக் காலத்தில்.

      ஓவியம் - வாழ்த்தியமைக்கு நன்றி அனுப்ரேம் ஜி.

      யூ ட்யூப் சேனல் - இப்போது ஆரம்பித்தாயிற்று.

      வீடியோ எடிட்டிங் - போகப் போக பழகி விடும் - உண்மை தான்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  15. எல்லாமும் முகநூல் வழியாப் பார்த்தேன். எந்த வழியாக அம்மாமண்டபம் படித்துறைக்குப் போனீர்கள்? முக்கிய வாசல் பூட்டி இருக்கு! பக்கவாட்டுப் பெரிய படிகள் வழியாகப் போயிருப்பீங்கனு நினைக்கிறேன். யாரையும் விடறதில்லைனு மாமா சொன்னார். அதான் நீங்க படித்துறைக்குப் போனது ஆச்சரியமா இருந்ததோடு சிலர் குளிப்பதாகவும் சொல்லி இருக்கீங்க! தண்ணீர் வந்ததிலே இருந்து ஆற்றுக்குள் யாரையும் இறங்க அனுமதிக்கலைனு சொன்னாங்க. நாங்க போய்ப் பார்க்கலை. நான் கீழேயே இறங்கறதில்லை! :)))))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பக்க வாட்டு வழி திறந்தே இருக்கிறது. வருபவர்கள் குறைவாகவே இருந்தார்கள் எனச் சொன்னார்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா.

      நீக்கு
  16. விரைவில் யூ ட்யூப் சானல் தொடங்கவும் வாழ்த்துகள். ஆரம்பத்தில் பழகச் சிரமமாக இருந்தாலும் போகப் போகச் சரியாகிடும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. யூ ட்யூப் சேனல் - தொடங்கியாச்ச்! போகப் போகப் பழகி விடும் - உண்மை கீதாம்மா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....