திங்கள், 24 ஆகஸ்ட், 2020

சக மனிதர்கள் - ஆன்லைன் அலப்பறைகள்

 


அனைத்து நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம். இன்றைய நாளை, நல்லதொரு வாசகத்துடன் ஆரம்பிக்கலாம். 

ஆயிரம் தோல்விகளை நீ ஒரு விஷயத்தில் அடைந்தாலும் சற்றும் சளைக்காத போராட்ட குணம் ஒன்று உன்னிடம் இருக்குமேயானால் உன் போல வெற்றியாளன் இந்த உலகில் யாரும் இல்லை… 

******
 

தினமும் மகளின் தோழி ஒருவர் வகுப்பு நடக்கும் போதே அலைபேசியில் மெசேஜ் செய்து "ஹாய்! ரோஷ்ணி! என்ன பண்ற? என்று ஏதோ ஒன்றைக் கேட்டுக் கொண்டே இருப்பாள். மகள் மடிக்கணினி வழியே வகுப்புக்குள் செல்வதால் அலைபேசி என்னிடம் தான் இருக்கும். 

வகுப்பு முடிந்ததும் மகள் மெசேஜை பார்த்து விட்டு " எதுக்கு மெசேஜ் பண்ண?" என்று கேட்டால் " ஒண்ணுமில்ல! சும்மா தான் கேட்டேன்!" என்பாள். 

இன்றும் அப்படியே தான். வகுப்பு நடக்கும் போதே மெசேஜ் செய்து கொண்டிருந்தாள். ஹாய்! என்ன பண்ற? என்றாள். நானும் விடவில்லை...:) "என்னப்பா விஷயம்?" என்றேன். 

பதிலே இல்லை. 

சிறிது நேரம் கழித்து "என்னப்பா! பதிலே காணோம்! என்றேன். 

"நான் க்ளாஸ்ல இருந்து வெளிய வந்துட்டேண்டி" மூணு sumல டவுட் என்றாள். 

சரி! ரோஷ்ணி உனக்கு சொல்லித் தருவா! என்று பதில் அனுப்பினேன். 

அப்போது தான் அவளுக்கு சாட் செய்தது ரோஷ்ணி அல்ல என்று தெரிந்திருக்கிறது :) மகள் வகுப்பு முடிந்து வெளியே வந்ததும் குறிப்பிட்ட அந்தத் தோழியின் பெயரைச் சொல்லி அவள் வகுப்பில் இருந்தாளா? என்று கேட்டேன். 

ஆமாம்மா! இருந்தாளே! நான் டீச்சர் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்லும் போதே கூடவே சொல்லிட்டு இருந்தாளே! என்றாள். அப்போது தான் எனக்கு விஷயம் புரிந்தது. மகளை திசைதிருப்பி அவள் கவனத்தை சிதறடிப்பது தான் அவள் எண்ணம். 

இது போன்று அடுத்தவர்களை திசைதிருப்பி விட்டு தான் ஜெயிக்கும் எண்ணம் எப்போது உருவாகிறது? இது ஒன்றும் ஆரோக்கியமான போட்டி அல்லவே! 

இந்த விஷயத்தினை முகநூலில் பகிர்ந்தபோது வந்த பின்னூட்டங்களை பார்க்கும் போது எல்லோருக்கும் எல்லாக் காலத்திலுமே யாரேனும் ஒருவரால் தொல்லை இருந்திருக்கிறது என்று தெரிய வருகிறது. 

சக மாணவர்களுக்கு மட்டுமல்ல இப்போது ஆன்லைன் வகுப்பு எடுக்கும் ஆசிரியர்களுக்கும் இடைஞ்சல் தரப்படுகிறது. Chat boxல் வீடியோ சரியாக இல்லை, ஆடியோ ஒழுங்காக இல்லை என்று ஒருவர் கமெண்ட் போட வரிசையாக வகுப்பில் பாதிப் பேருக்கு மேல் "ஆமா! ஆமா! யெஸ்! யெஸ்! ......., ......, ????, !!!! இப்படி எதையாவது வரிசையாக போட்டு குழப்பி விடுகின்றனர் :( 

என் பள்ளி நாட்களை பற்றி யோசித்ததில் பள்ளியில் இது போன்ற தொல்லைகள் இருந்ததாக நினைவில்லை. ஆனால் அக்கம்பக்கம் இருந்தவர்கள் டேப்ரெக்கார்டரில் பாடல்களை சத்தமாக ஒலிக்க விட்டு படிக்க விடாமல் தொல்லைக் கொடுப்பார்கள். ஒட்டி ஒட்டி இருக்கும் தனியே ரூம்கள் இல்லாத வீடு :( 

அன்றாடம் இது போல யாரேனும் ஒருவரால் தொல்லைகளைத் தான் அனுபவிக்க வேண்டியதாய் தான் இருக்கிறது. ஒரு நல்ல புடவை கட்டிக் கொண்டால் கூட அவர்களை விட எடுப்பாக தெரியக்கூடாதென்று நம்மை குழப்பி விடுவார்கள் :)  

2 bhk வீடு வாங்கியிருக்கிறோம் என்று சொன்னால் "ட்ரிப்பிள் பெட்ரூம் வாங்கியிருக்கக் கூடாதா? என்பார்கள் :) உங்களால் ஒரு விஷயத்தை செய்ய முடியாது என்பார்கள்! மாற்றி மாற்றி பேசி நம்மை குழப்பி விடுவார்கள். 

இதுபோன்ற அத்தனையும் அன்றாடம் நாம் கடந்து தான் ஜெயித்துக் கொண்டிருக்கிறோம். இப்படியான எண்ணம் கொண்டவர்களை மாற்ற முடியாது! 

இனி வரும் புதிய தலைமுறைக்கேனும் பெற்றோர் அனைவரையும் பாராட்டவும், ஊக்கப்படுத்தவும், உற்சாகப்படுத்தவும், பழி வாங்கும் எண்ணம் இல்லாமல் இருக்கவும் சொல்லித் தரலாம். 

நண்பர்களே, இன்றைய பதிவில் உங்களுடன் பகிர்ந்து கொண்ட விஷயங்கள் பற்றிய உங்கள் கருத்துகளைச் சொல்லுங்களேன். விரைவில் வேறு ஒரு பதிவுடன் மீண்டும் ச[சி]ந்திப்போம்... 

நட்புடன் 



ஆதி வெங்கட்

36 கருத்துகள்:

  1. இதுவும் கடந்து போகும்...
    ரோஷ்ணியை கவனமாக இருக்கச் சொல்லுங்கள்...

    நலம் வாழ்க...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதுவும் கடந்து போகும் - உண்மை துரை செல்வராஜூ ஐயா.

      கவனமாக இருக்க வேண்டியது தான் அத்தியாவசியத் தேவையாக இருக்கிறது.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  2. அன்பு ஆதி,
    இதை முக நூலிலும் படித்து வருத்தப்பட்டேன்.

    அன்பு வெங்கட் ,முயன்று நம் வலிமையைப் பெருக்குவோம்.
    மனதைத் திடமாக வைத்துக் கொள்வதே முதல் வழி.
    அனைவரும் நலமுடன் இருங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அனைவரும் நலமாக இருக்க வேண்டும். அது தான் முக்கியம் வல்லிம்மா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  3. அனுபவங்கள் கிடைத்து மனம் பக்குவம் அடையும் பல வழிகளில், இதுவும் ஒரு வகை... இந்த முக்கியமான வகையை புரிந்து கொள்ளவும் ஒரு வாய்ப்பு...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை தான் தனபாலன். அனுபவங்கள் நமக்கு பாடம் சொல்லித் தருபவை.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  4. வாசகம் அருமை.
    கெட்ட எண்ணங்கள் உள்ளவர்கள் என்றும், எங்கும் வருவார்கள். நாம்தான் கவனமாக இருக்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கில்லர்ஜி.

      நாம் கவனமாக இருக்க வேண்டியது தான்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  5. எல்லாமே பார்ட் ஆஃப் லைஃப் என்று ஆகிவிட்டது. நாம் இத்தகையவற்றைப் புரிந்துகொள்வதுதான் முக்கியம்.

    பள்ளி, இன்டர்வியூ, கல்லூரி, ஆபீஸ் என்று எங்கும் இது இருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பார்ட் ஆஃப் லைஃப். உண்மை தான் நெல்லைத்தமிழன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  6. இதை முக நூலில் படித்தேன். காலம் இப்படித்தான் இருக்கிறது நாம்தான் ஜாக்கிரதையாக இதை எல்லாம் தாண்டி வர வேண்டி இருக்கிறது..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காலம் இப்படித்தான் இருக்கிறது. கவனமாக இருக்க வேண்டியிருக்கிறது மதுரைத் தமிழன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு

  7. இந்த இளம் வயதில் குழந்தைகள் இப்படி இருந்தால் எதிர்காலத்தில் அவர்கள் எப்படி இருப்பார்கள் என நினைத்து பார்த்தால் அது மிகவும் கவலைகுரியதாகவே இருக்கிறது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இளம் வயதிலேயே இப்படியான சிந்தனைகள் வருவது வேதனை தான் அன்பு.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  8. திசை திருப்பும் எண்ணம் மிகவும் கொடியது. வளரும் காலத்தில் மாணவர்களிடம் இது அதிகமாகக் காணப்படுவதைக் காண்கிறேன். பிள்ளைகள் கவனமாக இருக்கவேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //திசை திருப்பும் எண்ணம் மிகவும் கொடியது// உண்மை முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  9. வாசகம் அருமை மேடம்.
    நம்மால் மாற்ற முடியாத இவர்களை புரிந்துகொண்டு அவர்களையும் நம் முன்னேற்றத்திப்கு படிகளாக எண்ணுவதே மேலும் ஊக்கம் கொள்ளச் செய்யும்.
    நம்மை திசை திருப்புபவர்கள், நம்மை ஊக்குவிப்பவர்களையும் விட இலக்கை நோக்கி கூர்மையாக செலுத்துபவர்கள் என்பது என் வாழ்வு அணுபவம்.
    நம்மை இகழ்பவர்களே, நம் திறமையை மேலும் உயர்த்த வலுவாக தூண்டுபவர்கள் என்பதும் என் அணுபவம்.
    இதை தெள்ளென காட்டும் ஒரு நூல் குறித்த மதிப்புறையை சீக்கிரம் எழுதும் திட்டமும் உள்ளது.
    றோஶினிக்கு எங்கள் உளம் கணிந்த வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி அரவிந்த்.

      தங்கள் அனுபவங்களையும், கருத்துகளையும் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

      வாழ்த்தியமைக்கு நன்றி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அரவிந்த்.

      நீக்கு
  10. இளம் வயதில் இதுபோன்ற எண்ணங்கள் உள்ளவர்களால் ஆபத்து. ரோஷ்ணியை கவனமாக இருக்க சொல்லுங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மகளும் கவனமாகவே இருக்கிறார்! தங்களது அன்பிற்கு நன்றி மாதேவி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  11. ஆன்லைன் வகுப்பு ஒரு மணிநேரம் நடத்த ஒரு ஆசிரியர் குறைந்தபட்சம் மூன்று மணி நேரம் வரை தன்னை தயார் படுத்திக் கொள்ள வேண்டும்.அவரின் உழைப்பும் இதுபோல் சிறுசிறு இடையூறுகளால் வீணாகிறது.நாம் செய்யும் சிறுபிழையும் பலரின் நேரத்தையும் உழைப்பையும் திருடுகின்றது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பெயரறியா நண்பரே. உங்கள் பெயரையும் குறிப்பிட்டு இருக்கலாம்.

      ஆசிரியர்களுக்கும் கடினமான பணி தான் இது.

      நீக்கு
  12. முகநூலில் படித்தேன்.
    இப்படியும் குழந்தைகள் இருக்கிறார்களே என்று வருத்தமாய் உள்ளது.
    ரோஷ்ணி இவர்களை பொருட்படுத்தாமல் இருக்கட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விதம் விதமான சூழல், விதம் விதமான நடவடிக்கைகள். என்ன சொல்ல முடியும். இதையும் கடக்க வேண்டியிருக்கிறது கோமதிம்மா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  13. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கஸ்தூரி ரெங்கன்.

      நீக்கு
  14. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராமசாமி ஜி.

      நீக்கு
  15. இன்றைய இளைஞர்களின் புத்திசாலித்தனம் இதுபோன்றுதான் பெரும்பாலாக வீணடிக்கப்படுகிறது.நல்ல விழிப்புணர்வைத் தரும் பதிவு...வாழ்த்துகளுடன்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வீணடிக்கப்படும் திறமைகள் - உண்மை தான் ரமணி ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  16. வளரும் பருவத்திலேயே இப்படியா என வேதனைதான் ஏற்படுகிறது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வேதனை தான் கரந்தை ஜெயக்குமார் ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  17. //எல்லோருக்கும் எல்லாக் காலத்திலுமே யாரேனும் ஒருவரால் தொல்லை இருந்திருக்கிறது என்று தெரிய வருகிறது. //

    உண்மைதான்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சேஷாத்ரி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....