ஞாயிறு, 9 ஆகஸ்ட், 2020

Time – குறும்படம்


அனைத்து நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம். இன்றைய பொழுதை, நல்லதொரு வாசகத்துடன் ஆரம்பிக்கலாம். 

யாருக்காகவும் எந்த சூழ்நிலையிலும் நம்மை விட்டுக் கொடுக்காத ஒரே ஒரு உறவு கிடைத்தால் போதும். இந்த உலகையே வென்று விடலாம்! 


இந்த முறை நான் உங்களுடன் பகிர்ந்து கொள்வது ஒரு பிலிப்பைன்ஸ் நாட்டு குறும்படம். நேரம் எதற்காகவும், யாருக்காகவும் காத்திருப்பதில்லை. தனது மகனுடன் நேரம் செலவழிப்பது பற்றிய தடுமாற்றம் உள்ள ஒரு அம்மா, தனது அம்மா பற்றி சிந்தித்து அதனை மனக்கண்ணில் பார்க்கும்போது நேரத்தின் தன்மையை புரிந்து கொள்கிறார். சிறப்பான முறையில் படமாக்கப்பட்ட இந்த குறும்படம் பத்து நிமிடத்திற்கும் குறைவான நேரத்தினையே எடுத்துக் கொள்ளும்! ஆங்கில சப்டைட்டில் உண்டு என்பதால் மொழி பற்றிய கவலை இன்றி, பார்க்கலாம்! பாருங்களேன்.



காணொளியாக இணைத்திருந்தாலும், சில சமயங்களில் யூவில் சென்று தான் பார்க்க வேண்டும் என இணையம் அடம் பிடிக்கலாம்! அதனால் கீழே யூட்யூப் சுட்டியும் கொடுத்திருக்கிறேன். அங்கேயும் சென்று பார்க்கலாம்!

Time  

நண்பர்களே, இந்த ஞாயிறில் உங்களுடன் பகிர்ந்து கொண்ட குறும்படம் உங்களுக்குப் பிடித்ததா? பதிவு பற்றிய உங்கள் கருத்துகளைச் சொல்லுங்களேன். விரைவில் வேறு ஒரு பதிவுடன் மீண்டும் ச[சி]ந்திப்போம்... 

நட்புடன் 

வெங்கட் நாகராஜ் 
புது தில்லி

32 கருத்துகள்:

  1. இது மாதிரி குறும்படங்கள் உணர்வுகளால் நெய்யபப்டுகின்றன.  அந்தக் குழந்தை குழந்தையாக இருக்கும்வரைதான் நம்மோடு ஒன்றுகிறார்கள்.  முழுப்பங்கும் நமக்கு கிடைக்கும்.  வளர்ந்ததும் நமக்கு அவர்கள் வாழ்வில் சிறு பங்குதான் கிடைக்கும்.  கிட்டத்தட்ட இதை, இந்தக் கருத்தை நேற்று ஒரு பதிவில் கூட பின்னூட்டமிட்டிருந்த நினைவு!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உணர்வுகளால் நெய்யப்படும் குறும்படங்கள் - உண்மை.

      குறும்படம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி ஸ்ரீராம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  2. பிளாஷ்பேக் காட்சிகள் நன்றாய்ப் படம் பிடிக்கப் பட்டிருக்கின்றன.  எனக்கு அது மௌஸம் பட பாடல் காட்சியை நினைவு படுத்தியது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மோசம் படப் பாடல் - :) குறும்படம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி ஸ்ரீராம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  3. சிறு குறும்படத்தில் பத்து நிமிடத்துக்குள் கொடுக்கும் உணர்வுகளை, பல கோடி செலவு செய்து மூன்று மணிநேரம் எடுக்கும் தமிழ்ப் படங்களில் கொடுக்க முடியவில்லையே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //பத்து நிமிடத்துக்குள் கொடுக்கும் உணர்வுகளை, பல கோடி செலவு செய்து மூன்று மணி நேரம் எடுக்கும் தமிழ்ப் படங்களில் கொடுக்க முடியவில்லையே!// இதே அளவு நேரம் கொண்ட படங்களிலும் தர முடிவதில்லை! :)

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி.

      நீக்கு
  4. காலை வணக்கம் சகோதரரே

    வாசகம் அருமை. குறும்படம் நன்றாக உள்ளது. பாசங்களை எந்தந்த நேரங்களில் வெளிப்படுத்துவது மிக அவசியமென்பதை உணர்த்தும் உணர்வுபூர்வமான படம். இதில் நடித்தவர்கள் நன்றாக நடித்திருந்தார்கள். சில இடங்கள் கண் கலங்க செய்து விட்டன. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காலை வணக்கம் கமலா ஹரிஹரன் ஜி.

      வாசகம், குறும்படம் பிடித்திருந்ததில் மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  5. சிறப்பான விசயத்தை குறைந்த நேரத்தில், அற்புதமாக உணர்த்தி விட்டார்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குறைந்த நேரத்தில் சொன்ன சிறப்பான விஷயம் - உண்மை தான் தனபாலன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  6. உணர்வுகள் கொட்டிக்கிடக்கும் படம்
    நன்றி ஐயா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குறும்படம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  7. அருமையான படம். யதார்த்தமும் கூட. மிகவும் ரசித்தேன்.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குறும்படம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி துளசிதரன் ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  8. மிக அருமையான குறும்படம்.
    நடித்தவர்கள் எல்லோரும் நன்றாக நடித்தார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குறும்படம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  9. அன்பு வெங்கட் ,
    மிக அருமையான குறும்படம்.
    அன்பு ஒன்றுதான் அத்தனை உள்ளங்களையும் இணைக்கிறது.
    தலைமுறை தலைமுறையாகத் தொடர்கியறது.
    மிகச் சிறப்பாகப் படம் பிடித்திருக்கிறார்கள்.
    அதைப் பகிர்ந்து மகிழ வைக்கிறீர்கள் நன்றி மா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குறும்படம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி வல்லிம்மா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  10. அருமையான குறும்படம். நம் உணர்வுகள் நேரத்தை விட மதிப்பு மிகுந்தது என்பதை அழகாக சொல்லி இருக்கின்றனர்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குறும்படம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி இராமசாமி ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  11. வாசகம் அருமை. உணர்கள் காயப்பட்டால் சரி செய்தல் சிரமம். உணர்வுகளை மதிக்க தெரிந்திருக்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குறும்படம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கயல் இராமசாமி மேடம்..

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  12. எவ்வாறாக இவ்வாறான குறும்படங்களைத் தெரிவு செய்கின்றீர்கள்? மிகவும் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவ்வப்போது இப்படியான குறும்படங்களை இணையத்தில் தேடித்தேடி பார்ப்பது வழக்கம். அவற்றில் மிகவும் பிடித்ததை பகிர்ந்து கொள்வேன் முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.

      குறும்படம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  13. அருமையான படம், இன்னொரு முறைகூட பார்க்க தோன்றுகொன்றது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குறும்படம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கோயில்பிள்ளை.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  14. மிகவும் அருமையான குறும்படம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குறும்படம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி மாதேவி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  15. அருமையான குறும்படம். பார்த்தேன் ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குறும்படம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி அபயா அருணா ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  16. அருமையான குறும்படம். அதிலும் அந்தப் பழைய நினைவுகள் மிக மிக அருமை! தாயின் நினைவில் மகனுக்குத் தான் செய்ய வேண்டியதை நினைவு கூர்ந்தாளே! அது பெரிய விஷயம்! அலுவலக வேலையாக ஓடிக்கொண்டிருக்கும் இப்போதைய தாய்மார்கள் பார்க்க வேண்டிய படமும் கூட!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குறும்படம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கீதாம்மா.

      //அலுவலக வேலையாக ஓடிக் கொண்டிருக்கும் இப்போதைய தாய்மார்கள் பார்க்க வேண்டிய படமும் கூட!// உண்மை.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....