வியாழன், 15 அக்டோபர், 2020

வாசிப்பை நேசிப்போம் – திரிவேணி சங்கமம் – ராம தேவேந்திரன்

அனைவருக்கும் இனிய காலை வணக்கம்! இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

ஆரோக்கியமான வாழ்வை உறுதிசெய்ய மனதை மகிழ்ச்சியோடு வைத்திருங்கள். கவலை, அவசரம், பயம், தயக்கம் போன்றவற்றால் அலைக்கழிக்கப்படாமல் இருந்தால் உடல் ஆரோக்கியமாக இருக்கும். 


***** “வாசிப்பை நேசிப்போம்” – எனும் முகநூல் குழுமம் பற்றி சென்ற வாரங்களில் ஒன்றிரண்டு பதிவுகளில் குறிப்பிட்டு இருந்தது நினைவிருக்கலாம். ”வாசிப்பை நேசிப்போம்” குழுவினர் தற்போது நடத்திக் கொண்டிருக்கும் #Reading_Marathon2020 என்ற தொடர் வாசிப்பு போட்டியில், பயணம் குறித்த போட்டி நடந்த வாரத்தில் என்னுடைய சில மின்னூல்களை குழுமத்தில் அறிமுகம் செய்திருந்தார்கள். அப்படியான அறிமுகங்களை உங்களுக்கான தகவலாகவும், எனக்கான ஒரு சேமிப்பாகவும் இங்கேயும் பகிர்ந்து வருகிறேன். இந்தப் போட்டியில் எனது “திரிவேணி சங்கமம்” மின்னூலை ராம தேவேந்திரன் அவர்கள் அறிமுகம் செய்திருக்கிறார். அவருக்கு எனது மனம் நிறைந்த நன்றி. ராம தேவேந்திரன் அவர்கள் செய்த அறிமுகம் கீழே! 


#Reading_Marathon2020 

#RM522 

#42/50 

கடிதம்/பயணம் 

நூல் : திரிவேணி சங்கமம் (காசி – அலஹாபாத் பயணம்) 

ஆசிரியர் : வெங்கடராமன் நாகராஜன் 

பதிப்பு. : அமேசான் மின்நூல் 

ஆசிரியர் வெங்கடராமன் நாகராஜன் பல பயண நூல்கள் வெளியிட்டுள்ளார். 

இந்த திரிவேணி சங்கமம் (காசி – அலஹாபாத் பயணம்) மின்னூலின் வழியே நமக்காக காசி விஸ்வநாதர் - விசாலாட்சி தரிசனத்திற்ககு அழைத்து செல்கிறார் வாருங்கள் நாமும் பயணிப்போம். 

//அலஹாபாத் நகரின் திரிவேணி சங்கமம் பகுதியில் கோட்டையிலிருந்து வெளியே வரும்போது பலவிதமான மக்களைச் சந்திக்கலாம். படகுக் காரர்கள், சில்லறை வியாபாரிகள், வியாபாரிகள், சங்கமத்திலிருந்து உங்களை நகரத்திற்கு அழைத்துச் செல்லக் காத்திருக்கும் ஷேர் ஆட்டோ ஓட்டுனர்கள், கையில் குழந்தைகளை வைத்துக் கொண்டு யாசகம் கேட்கும் பெண்கள், நீண்ட தாடியும், ஜடாமுடியும் வைத்திருக்கும் சாமியார்கள், இவற்றையெல்லாம் புகைப்படம் எடுத்து தனது நாட்டில் சென்று “See this… Poor Indians” என்று காண்பிக்கப்போகும் வெள்ளைக்காரர்கள் என பலதரப்பட்ட மக்களையும் பார்த்தபடியே வெளியே வரலாம். 

பெரும்பாலும் இங்கே நம்பிக்கையோடு வரும் பக்தர்களிடம் “பண்டாக்கள்” நிறையவே பணம் பிடுங்குகிறார்கள். வரும் பக்தர்களும் நேரக் குறைவின் காரணமாகவோ, வழி தெரியாத காரணத்தினாலோ, இவர்களின் வலையில் விழுந்து விடுகிறார்கள்.// 

ஒவ்வொரு பயணகட்டுரையும் நம்மை அந்த இடத்திற்ககு ஒருமுறையாவது பார்க்க வேண்டும் என ஆவலை தூண்டுகிறது. 

தனது அனுபவங்களை பகிரும் போது அந்த அனுபவங்களை படிப்பவர்களை தன் கூடவே அழைத்துசெல்லும் அருமையான மொழிநடையில் ஒவ்வொரு பயணகட்டுரையும் கொடுப்பதில் நண்பருக்கு நிகர் நண்பரே!! 

என நம்மையும் கூடவே அழைத்து செல்லும் விதமே மிக அழகு !!! 

நன்றி 

ராம தேவேந்திரன் 

***** 

வாசிப்பை நேசிப்போம் முகநூல் குழுவில் எனது மின்னூலை அறிமுகம் செய்திருக்கும் திரு ராம தேவேந்திரன் அவர்களுக்கு மீண்டும் ஒரு முறை எனது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். ”திரிவேணி சங்கமம்” மின்னூலை அமேசான் தளத்திலிருந்து தரவிறக்கம் செய்து கொள்ள முடியும் – கிண்டில் அன்லிமிட்டட் கணக்கு இருப்பவர்கள் இலவசமாக தரவிறக்கம் செய்து கொள்ளலாம். மற்றவர்கள் ரூபாய் 50/- செலுத்தி தரவிறக்கம் செய்து கொள்ளலாம். தரவிறக்கம் செய்து கொள்ள இங்கே செல்லலாம்! 

இன்றைய பதிவு வழி உங்களுடன் சில தகவல்களை பகிர்ந்து கொள்ள முடிந்ததில் மகிழ்ச்சி. பதிவு பற்றிய உங்களுடைய கருத்துகளை பின்னூட்டத்தில் சொல்லுங்கள்! நாளை மீண்டும் வேறோரு பதிவுடன் சந்திக்கும் வரை… 

நட்புடன், 


வெங்கட் நாகராஜ் 
புது தில்லி.

24 கருத்துகள்:

 1. // ஒவ்வொரு பயணக்கட்டுரையும் நம்மை அந்த இடத்திற்கு ஒருமுறையாவது பார்க்கவேண்டும் என ஆவலைத் தூண்டுகிறது //

  உண்மை.

  பாராட்டுகளும் வாழ்த்துகளும் வெங்கட்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாழ்த்தியமைக்கு நன்றி ஸ்ரீராம்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 2. விமர்சனம் செய்தவருக்கு நன்றியும், தங்களுக்கு வாழ்த்துகளும் ஜி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாழ்த்தியமைக்கு நன்றி கில்லர்ஜி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 3. பதில்கள்
  1. வாழ்த்தியமைக்கு நன்றி கிரேஸ். அமேசான்.காமிலும் இருக்கிறது. அமேசான் கிண்டில் வழி மொத்தம் 13 Region-களில் இந்த மின்னூலும், என்னுடைய மற்ற மின்னூல்களும் கிடைக்கிறது. அமேசான்.காம் மூலம் படிக்க முகவரி - https://www.amazon.com/dp/B08L186NTN

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
  2. மீள் வருகைக்கு நன்றி கிரேஸ். முடிந்தால் நூல்களைத் தரவிறக்கம் செய்து வாசித்து, உங்கள் கருத்துகளைத் தெரிவியுங்கள்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 4. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நாகேந்திர பாரதி.

   நீக்கு
 5. விமசர்சனம் நன்றாக செய்து இருக்கிறார்.

  வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாழ்த்தியமைக்கு நன்றி கோமதிம்மா.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 6. த்ரிவேணி சங்கமம் பற்றி நானுமெழுதி இருக்கிறேன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தகவலுக்கு நன்றி ஜி.எம்.பி. ஐயா.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 7. விமர்சனம் அழகாக செய்திருக்கும் ராம தேவேந்திரனுக்கும் உங்களுக்கும் என் வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாழ்த்தியமைக்கு நன்றி இராமசாமி ஜி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 8. உங்கள் எழுத்துகளைப் பற்றி நாங்கள் நன்கறிவோம். அதனை வாசகர் நன்கு உணர்ந்து, படித்து, அனுபவித்து எழுதியுள்ள விதம் பாராட்டத்தக்கது. மனம் நிறைந்த வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாழ்த்தியமைக்கு நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 9. நல்லதொரு விமர்சனம்... ராம தேவேந்திரன் அவர்களுக்கும், தங்களுக்கும் வாழ்த்துகள்...

  பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....