வெள்ளி, 16 அக்டோபர், 2020

வாசிப்பனுபவம் - சுஜாதாவின் கமிஷனருக்குக் கடிதம் – ஆதி வெங்கட்

அனைவருக்கும் இனிய காலை வணக்கம்! இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

வாய்ப்பு ஒன்று கிடைத்தால்… நீங்கள் அனுபவித்த துயரங்களை உன் அருகில் இருப்பவர்களுக்கு நேராமல் பார்த்துக் கொள்ளுங்கள். அது யாராக இருந்தாலும் சரி! 

***** 

இன்றைக்கு நாம் பார்க்கப் போவது கோவை2தில்லி தளத்தில் இதே நாளில் 2013-ஆம் ஆண்டு வெளியிட்ட ஒரு வாசிப்பனுபவம். அந்த வலைப்பூவில் இப்போது எழுதுவதே இல்லை. இங்கேயே எழுதிக் கொண்டிருக்கிறார். அதே பதிவு இங்கே ஒரு சேமிப்பாகவும் மீள் பதிவாகவும்! – வெங்கட் நாகராஜ், புது தில்லி. 

***** 
கமிஷனருக்குக் கடிதம்! 
பங்களூரு உப்பாரப்பேட்டை காவல் நிலையத்தில் இளம்பெண் மாயா என்பவள் ஏ.எஸ்.பியாக புதிதாக பணியில் சேருகிறாள். அங்கே இவளுடன் ஐ.பி.எஸ் அதிகாரிகளாக சுதாகரும், ரமேஷூம் பணிபுரிகிறார்கள். பணியில் சேர்ந்த அன்றே ஹிட் அண்டு ரன் கேஸ் ஒன்றை பார்வையிடச் செல்கிறாள். அடுத்து தற்கொலை ஒன்று. இப்படி பணியில் சேர்ந்த அன்றே விபத்து, தற்கொலை, ரத்தம் எனப் பார்த்து மிகவும் சோர்வடைகிறாள். 

தங்களுடன் ஒரு பெண் பணிபுரிவதில் கமிஷனரான சுதாகருக்கு வெறுப்பு ஏற்படுத்தியது. அதனால் மாயாவுக்கு இப்படிப்பட்ட கேஸ்களைக் கொடுத்து அவளே ராஜினாமா செய்து விட்டுச் செல்லும் படி செய்தார். ஆனால் மாயாவோ கொஞ்சம் பயந்தாலும், சமூகத்தை திருத்த தனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்ததாக நினைத்து தனக்கு கிடைத்த கேஸ்களில் அக்கறை வைத்து பணிபுரிந்தாள். 

அதன் பின் சுதாகர் மாயாவிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி வேண்டுகோள் வைக்கிறார். ஆனால் சுதாகர் விவாகரத்தானவர் என்பதையும், அவருக்கு ஒரு மகள் இருப்பதாகவும், மாதமொரு முறை அவள் தந்தையை காண வருவதாகவும் சொல்லி, ரமேஷ் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படியும் சொல்கிறார். ஆனால் மாயாவுக்கோ திருமணம் பற்றிய எண்ணமேயில்லை… 

இப்படியிருக்க இவர்களுக்கு விதவிதமான கேஸ்கள் கிடைக்கின்றன. மூவரும் இணைந்து செயல்படுகிறார்கள். இடையில் வக்கீல் மூலமாகவும், பத்திரிக்கையாளர் மூலமாகவும் நிறைய பிரச்சனைகள் வந்து மாயாவிற்கு பணியில் நிலைத்து இருக்க முடியுமா என்கிற நிலை ஏற்படுகிறது. சுதாகரும் ரமேஷும் வேறு தங்களை திருமணம் செய்து கொள்ள நிர்பந்திக்க, மாயா யோசிக்க ஓரிரு நாட்கள் கேட்கிறாள். இதற்கிடையில் சுதாகரின் மகளும் கடத்தப்படுகிறாள். எங்கு சென்றாள்? என்ன ஆனாள்? என யாருக்கும் தெரியவில்லை. தொடர்ந்து ”கமிஷனருக்குக் கடிதம்” என நான்கு கடிதங்களை அனுப்புகிறார்கள். அதில் தங்களின் வேண்டுகோளை வைக்கிறார்கள். 

இது தான் நான் சமீபத்தில் வாசித்த சுஜாதா அவர்களின் ”கமிஷனருக்குக் கடிதம்” என்கிற புத்தகத்தின் கதை. க்ரைம் நாவலாக ஆரம்பித்த இந்த கதையில் காதலும் உண்டு. இடையில் கேஸ்களை கண்டுபிடிக்க மாயா லேப்க்கு செல்லும் போது நம்மாலும் அறிவியல் பூர்வமாக நிறைய விஷயங்களைத் தெரிந்து கொள்ள முடிகிறது. அந்த விஷயங்கள் நம்மை ஆச்சரியப்படுத்துகின்றன. படித்துக் கொண்டே வந்தீர்களா? இனி….. 

கமிஷனரின் மகள் கிடைத்தாளா? யார் கடத்தினார்கள்? மாயா யாரைத் தேர்ந்தெடுத்தாள்? வேலையை தக்க வைத்துக் கொண்டாளா? சமூகத்தை திருத்த எடுத்த முயற்சி வெற்றி பெற்றதா? போன்ற உங்களின் கேள்விகளுக்கான விடையை அந்த புத்தகத்தை வாங்கி படித்து தெரிந்து கொள்ளுங்கள். 

இந்த புத்தகத்தை வாங்க நீங்கள் அணுக வேண்டிய முகவரி:- 

விசா பப்ளிகேஷன்ஸ் 
புதிய எண்: 16, பழைய எண்: 55 
வெங்கட்நாராயணா ரோடு, 
தி.நகர், சென்னை – 600017. 
தொலைபேசி எண் – 2434 2899, 2432 7696 
புத்தகத்தின் விலை – ரூ 70. 
மொத்த பக்கங்கள் - 144 

இன்றைய பதிவு வழி உங்களுடன் சில தகவல்களை பகிர்ந்து கொள்ள முடிந்ததில் மகிழ்ச்சி. பதிவு பற்றிய உங்களுடைய கருத்துகளை பின்னூட்டத்தில் சொல்லுங்கள்! நாளை மீண்டும் வேறோரு பதிவுடன் சந்திக்கும் வரை… 

நட்புடன், 

ஆதி வெங்கட்

22 கருத்துகள்:

 1. படித்திருக்கிறேன்.  ஆனால் முடிவு நினைவில்லை.  அநேகமாய் இப்போதும் என் கலெக்ஷனில் இருக்கும்.  தேடிப்பார்த்தால் கிடைக்கும்.  சுஜாதா 'தேடாதே' என்று ஒரு கதை எழுதி இருக்கிறார் தெரியுமோ?!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தேடாதே! என்று ஒரு கதை - ஓடாதே படித்திருக்கிறேன்! தேடாதே படித்த நினைவில்லை ஸ்ரீராம்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 2. ஆகா!! யார் கடத்தியிருப்பார்கள்?? நல்ல விமர்சனம் தோழி..வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாழ்த்திய்மைக்கு நன்றி கிரேஸ். யார் கடத்தியிருப்பார்கள்? அதானே... நானும் இந்த நூலை படித்ததில்லை. படிக்க வேண்டும்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 3. வாசகமும் புத்தக அறிமுகமும் அருமை.
  நூல் கிண்டிலில் இருக்கிறதா என தேடி பார்த்து வாசிக்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாசகமும் நூல் அறிமுகமும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி அரவிந்த். கிண்டிலில் இருக்கிறதா என நானும் தேடிப் பார்க்கிறேன். நானும் படித்த நினைவில்லை.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 4. ஆண் என்றால் 'அவர்' 'இவர்', பெண் என்றால் 'அவள்' 'இவள்' -- இந்த மட்டில் தெரிந்து கொண்டதே போதும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இந்தப் பதிவினை எழுதியதும் ஒரு பெண் என்பதைச் சொல்லிக் கொண்டு....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜீவி ஐயா.

   நீக்கு
 5. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   நீக்கு
 6. பதில்கள்
  1. வாழ்த்தியமைக்கு நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 7. சுஜதா கதைகள் விறுவிறுப்பாக இருக்கும். அதற்கு இந்த விமர்சனமே சான்று.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராமசாமி ஜி.

   நீக்கு
 8. சுஜாதாவின் புத்தகங்கள் நிறைய படித்திருக்கிறேன். ”கமிஷனருக்குக் கடிதம்” படித்ததில்லை.ஆரம்பமே அமர்க்களமாக இருக்கிறது.படிக்கவேண்டும் என்ற ஆவலை தூண்டுகிறது. அறிமுகத்திற்கு நன்றி!!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. முடிந்தபோது படித்துப் பாருங்கள் சிவா.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 9. விமரிசனமே இவ்வளவு விறு விறுப்பாக, இருக்கிறது. அதுதான் சுஜாதாவின் மகிமை.
  மிக நன்றி வெங்கட்.
  நல்ல வாசகங்களும் கொடுத்து பதிவைச் சிறப்பாக்குகிறீர்கள். அன்பு வாழ்த்துகள் ஆதிக்கு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாசகமும் பதிவும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி வல்லிம்மா.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 10. நூலினைப் படிக்கத் தூண்டும் விமர்சனம்
  நன்றி சகோதரி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பதிவு உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 11. விமர்சனம் கதை படிக்கும் ஆவலை தூண்டுகிறது. படித்து இருப்பேன், மறந்து விட்டது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பதிவு உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....