வெள்ளி, 23 அக்டோபர், 2020

சாப்பிட வாங்க – Gக்வார் ஃபலி சப்ஜி

அனைவருக்கும் இனிய காலை வணக்கம்! இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

அன்பு வைத்தவர் நிம்மதியை இழந்து தவிக்கிறார் என்றால், அன்பை அவர் சரியாக வைத்திருப்பார் - ஆனால் சரியான இடத்தில் வைத்திருக்க மாட்டார்.

*****



Gக்வார் ஃபலி - என்று ஹிந்தியில் அழைக்கப்படும் காய்கறி என்ன தெரியுமா? நம் ஊரில் நாம் கொத்தவரங்காய் என்று அழைக்கும் காயைத் தான் ஹிந்தியில் இப்படி Gக்வார் ஃபலி என்று அழைக்கிறார்கள். கொஞ்சம் கவனமாக உச்சரிக்க வேண்டிய வார்த்தை இந்த Gக்வார்! கொஞ்சம் தவறுதலாக மாற்றி உச்சரித்து விட்டால் எதிரே இருப்பவர் சண்டைக்கு வந்தாலும் வரலாம்! ஏனெனில் முட்டாள் என்ற அர்த்தம் தரும் வார்த்தை ஒன்றும் இதே போல உண்டு! 

நார் சத்து நிறைந்த காய் இந்த Gக்வார் ஃபலி. வட இந்திய கிராமங்களில் சிலர் இந்த காய்கறியை மாட்டுக்கு மட்டுமே கொடுப்பது கூட வழக்கம் உண்டு - ஏனெனில் இதைச் சாப்பிட்டால் மாடு நிறைய பால் கொடுக்கும் என்று சொல்வதுண்டு! சரி அது புறம் இருக்கட்டும். நாம் இன்றைக்கு இந்த Gக்வார் ஃபலி பயன்படுத்தி வட இந்திய முறையில் சப்பாத்திக்கு தொட்டுக்கையாக சப்ஜி எப்படிச் செய்வது என்று பார்க்கலாம் வாருங்கள். முதலில் இதற்கு என்ன தேவை என்பதைப் பார்த்து விடலாம்!

தேவையான பொருட்கள்: 




Gக்வார் ஃபலி – ¼ கிலோ.
எண்ணெய் – தாளிக்க தேவையான அளவு
ஜீரகம் – 2 ஸ்பூன்
தக்காளி – 3 
வெங்காயம் - 1
இஞ்சி – சிறு துண்டு
சிகப்பு மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
காஷ்மீரி மிளகாய்த் தூள் – ¼ ஸ்பூன்
மல்லித் தூள் – 1 ஸ்பூன்
மஞ்சள் தூள் – ½ ஸ்பூன்
கரம் மசாலா – ½ ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு.
வேர்க்கடலை - ஒரு கப் அளவு 
கொத்தமல்லி தழை பொடியாக நறுக்கியது – சிறிதளவு (அலங்கரிக்க!) அம்புட்டுதேன்!

எப்படிச் செய்யணும் மாமு?

Gக்வார் ஃபலியை சுத்தம் செய்து, சிறு துண்டுகளாக (ஒரு இஞ்ச் அளவு இருந்தால் நலம்) நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள். 

தக்காளி, இஞ்சி, வெங்காயம் ஆகியவற்றை சுத்தம் செய்து சிறு துண்டுகளாக்கி, ஒரு மிக்சி ஜாரில் போட்டு, தண்ணீர் சேர்க்காமல் மைய அரைத்து எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

வேர்க்கடலை - வறுத்ததாக இருந்தால் நல்லது - இல்லையெனில் வறுத்து, அதனை மிக்ஸியில் போட்டு ஒரு சுற்று - ஒன்றும் பாதியுமாக இருப்பது நலம். இங்கே ஒரு சிறிய உரல் போன்ற பாத்திரம் கிடைக்கும் - நம் ஊரிலும் கல்லில் கிடைக்கிறது - அதற்கு ஹிந்தியில் பெயர் என்ன தெரியுமா? மம்ஜாஸ் என்று சிலர் அழைக்க,வேறு சிலர் இமாம் dhதஸ்தா என்று அழைப்பார்கள். அப்படியான சிறு உரலில் இடித்துக் கொண்டாலும் சரி! 

  • இந்த Gக்வார் ஃபலி-யை ஒரு பாத்திரத்தில் போட்டு, அது மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு, நன்கு கொதிக்க விடுங்கள். ஐந்து முதல் ஏழு நிமிடங்களில் காய் நன்கு வெந்து விடும். இப்படி எடுத்துக் கொள்வது ஒரு முறை. 
  • மற்றொரு முறையாக, ஒரு வாணலியில் எண்ணெய் சேர்த்து, அது காய்ந்த பிறகு நறுக்கி வைத்திருக்கும் Gக்வார் ஃபலி-யை சேர்த்து நன்கு வதக்கிக் கொண்டு அதனை ஒரு பக்கம் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். 
இந்த இரண்டு முறைகளில் எந்த முறையில் வேண்டுமானாலும் நீங்கள் செய்யலாம். நான் செய்திருப்பது முதல் முறையில் - அதாவது வேக வைத்து! 

இந்த முன் வேலையெல்லாம் முடிந்த பிறகு, அடுப்பில் ஒரு வாணலி வைத்து, எண்ணெய் சேர்த்து, கொஞ்சம் காய்ந்ததும், ஜீரகம் சேர்த்து பொரிய விடுங்கள். 

அதில் அரைத்து வைத்திருக்கும் வெங்காயம், தக்காளி கரைசலைச் சேர்த்து வதக்குங்கள். சற்றே வதங்கிய பிறகு மஞ்சள் தூள், மல்லித் தூள், மிளகாய்த் தூள், கலருக்காக கொஞ்சம் காஷ்மீரி மிளகாய்த் தூள் சேர்த்து, அவ்வப்போது கலக்கிக் கொண்டே இருக்கவும். எண்ணெய் பிரிந்து வந்த பிறகு சிறிதளவு தண்ணீர் சேர்த்து, தேவையான அளவு உப்பு மற்றும் தயாராக வைத்திருக்கும் Gக்வார் ஃபலி சேர்த்து கலக்கி, சிறிது நேரம் மூடி வைத்து வேக விடுங்கள். மிதமான சூட்டிலேயே நன்கு வெந்து விடும். அவ்வப்போது மூடியை எடுத்து கலக்கி விட்டால் போதும். ஐந்து முதல் எட்டு நிமிடத்தில் நன்கு வெந்து விடும்! நறுக்கி வைத்திருக்கும் கொத்தமல்லியும் சேர்த்து கரம் மசாலா சேர்த்து ஒன்றிரண்டு நிமிடங்கள் வதக்கினால் போதும்! 

கடைசியாக, வேர்க்கடலை இடித்தது/பொடித்தது இருக்கிறதல்லவா, அதனைச் சேர்த்து ஒரு கலக்கு! சாப்பிடும்போது ஆங்காங்கே இருக்கும் வேர்க்கடலை துண்டுகள் வாயில் அகப்பட அது ஒரு தனிச் சுவை தரும்! 



அவ்வளவு தாங்க! சுவையான Gக்வார் ஃபலி சப்ஜி தயார்! ரொட்டி, பூரி என இரண்டுடனும் சுவையான தொட்டுக்கை இந்த சப்ஜி!

பொதுவாக நம் ஊரில், கொத்தவரங்காய் வைத்து பருப்பு உசிலி, தேங்காய் சேர்த்த பொரியல் என்று தான் செய்வோம். இன்றைக்கு பகிர்ந்து இருக்கும் முறை நம் ஊரில் இருப்பவர்களுக்கு புதியது. நீங்களும் இந்த முறையில் செய்து பாருங்கள். செய்து பார்த்து விட்டு உங்கள் கருத்துகளைச் சொல்லுங்களேன்! பதிவில் சொன்ன விஷயங்கள் பற்றிய உங்கள் கருத்துகளை பின்னூட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்களேன். நாளை வேறு ஒரு பதிவில் சந்திக்கும் வரை…


நட்புடன்,


வெங்கட் நாகராஜ்
புது தில்லி.

32 கருத்துகள்:

  1. கவனமாக உச்சரிக்காவிட்டால்..கொத்தரங்காய்..நன்கு எச்சரித்துள்ளீர்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.

      நீக்கு
  2. காலை வணக்கம் சகோதரரே

    அருமையான வாசகம். சப்ஜியும் வழக்கம் போல் அருமை. கொத்தவரங்காயை அங்கு அழைக்கும் முறை உச்சரிக்க சற்று பயமாகவும் உள்ளது. ஹா. ஹா. நீங்கள் சொல்லிய முறைகளை ரசித்தேன். (அதுவும் சாப்பிட்டவுடன் நம்மை அங்காங்கே காற்று ரூபத்தில் பிடித்துக் கொண்டு மிரட்டும்.)

    இங்கு நீங்கள் சொல்லியபடி முன்பெல்லாம் கொத்தவரங்காயை வைத்து என்றாவது ஒருமுறை பொரியல்.உசிலி, பிட்லை,என செய்து சாப்பிட்டுள்ளோம். இதன் சுவை மிகவுப் நன்றாக இருக்கும். இப்போது கொஞ்ச காலமாக ஒத்துக் கொள்வதில்லை. திரும்பவும் வாங்கினால் இதைப் போல கண்டிப்பாக செய்து பார்க்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா ஹரிஹரன் ஜி.

      வாசகமும் பதிவும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி. கொத்தவரங்காய் காற்று ரூபத்தில் பிடித்துக் கொண்டு மிரட்டும் - எனக்கு அப்படித் தோன்றியதில்லை! முடிந்த போது செய்து பாருங்கள்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  3. Gக்வார்ஃபலி என்று படித்தால் பாகுபலி நினைவுக்கு வருகிறது!!  மாட்டுக்கு கொடுப்பார்கள் என்றும் சொல்லி விட்டு நமக்கான ரெசிப்பி!!!!!  கொத்தவரங்காய்தானே?  ஒருவாட்டி செஞ்சு பார்த்துடலாம்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மாட்டுக்கும் கொடுப்பார்கள்! :) நாமும் சாப்பிடலாம்! ஹாஹா.

      முடிந்த போது செய்து சுவைத்துப் பாருங்கள் ஸ்ரீராம். தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  4. இன்றைய பதிவை ரசித்தேன்...
    நலம் வாழ்க...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவினை ரசித்தமைக்கு நன்றி துரை செல்வராஜூ ஐயா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  5. வாசகம் அருமை ஜி
    சப்ஜி வீட்டில் செய்யச் சொல்லணும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகமும் பதிவும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கில்லர்ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  6. எல்லா வட இந்திய சப்ஜிகளிலும் வெங்காயம்,தக்காளி இல்லாமல் இல்லை,இல்லையா? இருக்கட்டும் சுவைக்கலாம். வாசகம் உண்மை,அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தர்ரி வாலி சப்ஜி அதாவது, ட்ரையாக இல்லாமல், கொஞ்சம் லிக்விட்-ஆக இருக்கும் எல்லா வட இந்திய சப்ஜிகளிலும், தக்காளி, வெங்காயம், பூண்டு இல்லாமல் இருக்காது! வெங்காயம் பூண்டு சேர்க்கவில்லை என்றால் தக்காளி அதிகம் சேர்த்து விடுவார்கள் பானும்மா.

      வாசகமும் பதிவும் பிடித்ததில் மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  7. North Indian subji அனைத்தும் எளிய முறையில் சொல்கிறது பயன் தரும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு பயனுள்ளதாக இருந்தால் மகிழ்ச்சி தான் கயல் இராமசாமி ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  8. வாசகம் அருமை சார்.
    அன்பை சரியான இடத்தில் வைக்கவில்லையென்றால் அதுவும் துயரையே தரும்.
    கொத்தவரங்காய் எனக்கு பிடிக்காத காய் தான்.
    என்றாலும், இப்படி வேர்கடலை எல்லாம் போட்டு சப்ஜி செய்தால் எப்படி இருக்கிறது என பார்க்கிறோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி அரவிந்த்.

      கொத்தவரங்காய் பலருக்கும் பிடிக்காது தான்! இந்த முறையில் செய்து பாருங்கள்! பிடித்ததா என்றும் சொல்லுங்கள்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  9. புதிதாக இருக்கிறது... செய்து பார்க்க வேண்டும்... நன்றி ஜி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முடிந்த போது செய்து சுவைத்துவிட்டு சொல்லுங்கள் தனபாலன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  10. ஆஹா...கொத்தவரங்காய் வைத்து சப்ஜியா? செய்துபார்த்துவிடுவோம். செய்முறை சுலபமாக இருக்கு.

    உங்க செய்முறைகளைப் பார்க்கும்போது, இரவுக்கு இரண்டு சப்பாத்திகள்தானா? ஒவ்வொரு நாளும் சைட் டிஷ் பண்ண கஷ்டமாயில்லையா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முடிந்த போது செய்து சுவைத்து விட்டுச் சொல்லுங்கள் நெல்லைத் தமிழன்.

      சைட் டிஷ் செய்வதில் கஷ்டம் ஒன்றும் இல்லை! பழகிவிட்டால் எதுவுமே கடினமல்ல!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  11. இன்றைய வாசகத்திற்கு ஒரு பூங்கொத்து!! அருமை!
    கொத்தவரங்காயை நாம் இப்படி செய்ய மாட்டோம். அதனாலேயே இந்த குறிப்பு ஈர்க்கிறது. வித்தியாசமாய் இருக்கிறது என்பதாலேயே குறிப்பை சேமித்துக்கொண்டேன்.
    வித்தியாசமான குறிப்பிற்கு இனிய நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி மனோம்மா.

      குறிப்பு உங்களுக்கும் பிடித்ததாக அமைந்ததில் மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  12. கொத்தவரங்காயின் ஹிந்தி பெயரை இப்பொழுதான் தெரிந்து கொண்டேன். உச்சரிப்பு கடினம்தான்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராமசாமி ஜி.

      நீக்கு
  13. பதில்கள்
    1. முடிந்த போது சுவைத்துப் பாருங்கள் கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  14. இதுவரை அறியாத நல்லதொரு குறிப்பு... மிக எளிமையாகவும் எந்த ஒரு வித குழப்பம் இல்லாமலும் மிக தெளிவாக சொல்லி சென்ற விதம் அருமை படத்திலும் Gக்வார் ஃபலி சப்ஜி மிக நன்றாக வந்திருக்கிறது பார்த்தது செய்யும் ஆசையும் வந்திருக்கிறது . பாராட்டுக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முடிந்த போது செய்து பாருங்கள் மதுரைத் தமிழன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  15. அன்பு வெங்கட் ,
    அருமையான வாசகம்.
    மிக மிக உணர்ந்த சமாசாரம். நன்றி மா.

    கொத்தவரங்காய் சப்ஜி அட்டகாசம். கேள்விப் படாத ரெசிப்பி.

    எனக்கு கொத்தவரங்காய் மிகவும் பிடிக்கும்.
    அதுவும் நீங்கள் சொல்லி இருக்கும் விதம்
    செய்து பார்க்க வேண்டும். நவராத்திரி
    பூர்த்தியாகட்டும். வெகு சுவையான செய்முறைக்கு மிக நன்றி மா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகம் உங்களுக்கும் பிடித்ததாக அமைந்ததில் மகிழ்ச்சி வல்லிம்மா.

      முடிந்த போது இந்த முறையில் செய்து பாருங்கள்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  16. இந்த சப்ஜி பார்த்திருக்கேன். ஆனால் அதிகம் சாப்பிட்டதில்லை. எப்போவோ கொஞ்சம் போல! என்ன இருந்தாலும் நம்ம ஊர்ப் பருப்புசிலி மாதிரி வருமா? பிள்ளைக்குக் கொத்தவரையை இப்படிப் பண்ணினால் பிடிக்கும். கூடவே உ.கியும் சேர்ப்பாங்க அங்கே. நாங்க சும்ம்ம்ம்ம்மாக் கொஞ்சூண்டு போட்டுப்போம். :)))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உ.கி. சேர்க்கலாம் - ஆனால் நான் சேர்ப்பதில்லை கீதாம்மா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....