ஞாயிறு, 15 நவம்பர், 2026

அழகிய படங்களும் சில வரிகளும் - பகுதி 94 - விஜி வெங்கடேஷ்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


இதற்கு முன்னர் வெளியிட்ட மறக்க முடியா முகம் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 





*******


வாட்ஸப்பில் வரும் அழகிய வண்ணச் சித்திரங்களுக்கு தகுந்தாற்போல சில வரிகளை விஜி வெங்கடேஷ் அவர்கள் எழுதி அனுப்ப, அவற்றை தொடர்ந்து இங்கே ஞாயிற்றுக் கிழமைகளில் வெளியிட்டுக் கொண்டிருக்கிறேன்.  


அந்த வரிசையில் மேலும் சில படங்களும் அதற்கு விஜி வெங்கடேஷ் அவர்கள் எழுதிய வரிகளும் உங்கள் பார்வைக்கு! எப்படி இருக்கிறது இந்த முயற்சி என்று சொல்லுங்களேன்! படம் பார்த்து உங்களுக்குத் தோன்றும் எண்ணங்களையும் எழுதுங்களேன். ஓவர் டு விஜி வெங்கடேஷ் - வெங்கட் நாகராஜ்.


*******



Boss joke சொல்லிட்டு தானே சிரிக்கிறாரு.... joke ஐ விட அவர் வயிறு குலுங்கறது தான் பாக்க இன்னும் வேடிக்கையா இருக்கு.... ஆனா கேட்டா உங்க joke பிரமாதம்னுதான் சொல்லணும்....


ஓம் கணேசாய நமஹ🙏🏻🙏🏻🙏🏻


*******



நீ என்னைக் கட்டிப் போட்டுக்கோ, no problem. ஆனா சுத்தி வர எதுக்கு விளக்கு? கட்டிப் போட்டதை வெளிச்சம் போட்டு எல்லோருக்கும் காண்பிக்கணுமா? இதெல்லாம் ஒரு பெருமையா?


இல்ல தாமோதரா, உள்ளிருந்து நான் உன்னைப் பாத்துக்கிட்டே இருப்பேன், அதுக்கு வெளிச்சம் வேணுமில்ல?


(தப்பிச்சு போறேனான்னு நோட்டம் விடன்னு சொல்லு... ஹ்ம்ம்… பாவம்மா நீ..)


ஜெய் ஶ்ரீ கிருஷ்ணா🙏🏻🙏🏻🙏🏻


*******



என் பிரபுவாக எனக்கு காட்சி கொடுங்கள் கிருஷ்ணா..


ஒரே நிமிஷம் தான், அதுக்குள்ள நல்லா பாத்துக்கோ. அப்புறம் அம்மா வந்துடுவா அவ கண்ணுக்கு நான் குட்டி கிச்சா தான் ok? (மயக்கம் போட்டு விழுந்தான்னா யாரு தண்ணி தெளிச்சு எழுப்பி விடறது! என் வாய்க்குள்ள பார்த்துட்டே அவ தடால்....)


ஓம் மஹாபலாய நமஹ🙏🏻🙏🏻🙏🏻


********



Wow ten thousand-wala  பாத்தியா கிருஷ்ணா? பத்தவெச்சா 15 நிமிஷத்துக்கு ச்சும்மா இந்த ஊரே அதிரும்   இல்ல? Super..


ஆமாம் முருகா ஆனா ரெண்டு திரியும் உன்னைப் பாத்து இருக்கு.... இப்ப பத்த வெச்சென்னா ஊர் மட்டும் அதிராது.... கையில ஊதுபத்தி வேற எறிஞ்சுக்கிட்டிருக்கு....

please கொஞ்சம் பாத்து.... நாம வீட்டுல வேற சொல்லிட்டு வரல.... 


ஜெய் ஶ்ரீ கிருஷ்ணா🙏🏻🙏🏻🙏🏻


********



கிருஷ்ணா சீக்கிரம் முதுகு வலிக்குது...


இரு அக்கம் பக்கம் பாத்துட்டுத்தான கை வைக்கணும்....


எனக்கென்னவோ நீ pose குடுக்கற மாதிரி தோணுது… சீக்கிரம் ஆகட்டும், இன்னும் இந்த கேரியர் ல வேற என்ன இருக்குன்னு பாக்கணும்...


ஜெய் ஶ்ரீ கிருஷ்ணா🙏🏻🙏🏻🙏🏻


********



வேலவா கொஞ்சம் நீ தள்ளி உக்காந்தா photo ல என் தோகையும் தெரியும்...


அது நான் கீழ இறங்கினாத்தான் நடக்கும்.தெரிஞ்ச வரைக்கும் போதும் மயில் bro… அதோட திருப்திபட்டுக்கோ...



(வேலை மட்டும் நடு நாயகமா வெச்சுக்கத் தெரியும்....😏)


ஓம் ஶ்ரீ ஷண்முகா போற்றி🙏🏻🙏🏻🙏🏻



*******



ஆரம்பிச்சாச்சா உன் வேலைய? At Least கீழ சிந்தாமயாவது சாப்பிட முடியாதா கிருஷ்ணா உன்னால?


நீ ஏன் இப்படி கொழ கொழன்னு வெண்ணை எடுத்து  வச்சிருக்க? Amul butter மாதிரி இருந்தா நான் ஏன் சிந்தப் போறேன்.. கத்துக்கோம்மா...


(நெனச்சேன்..😏)


ஜெய் ஶ்ரீ கிருஷ்ணா🙏🏻🙏🏻🙏🏻


********


படங்களும் படங்களுக்கான வரிகளும் உங்களும் பிடித்திருக்கும் என நம்புகிறேன்.  மீண்டும் வேறு ஒரு பதிவு வழி சந்திப்போம்…




நட்புடன்


விஜி வெங்கடேஷ்


*******


இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


வெங்கட் நாகராஜ்

திருவரங்கம்

15  நவம்பர் 2026


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....