ஞாயிறு, 8 நவம்பர், 2026

அழகிய படங்களும் சில வரிகளும் - பகுதி 93 - விஜி வெங்கடேஷ்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


இதற்கு முன்னர் வெளியிட்ட காஃபி வித் கிட்டு  பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 






*******


வாட்ஸப்பில் வரும் அழகிய வண்ணச் சித்திரங்களுக்கு தகுந்தாற்போல சில வரிகளை விஜி வெங்கடேஷ் அவர்கள் எழுதி அனுப்ப, அவற்றை தொடர்ந்து இங்கே ஞாயிற்றுக் கிழமைகளில் வெளியிட்டுக் கொண்டிருக்கிறேன்.  


அந்த வரிசையில் மேலும் சில படங்களும் அதற்கு விஜி வெங்கடேஷ் அவர்கள் எழுதிய வரிகளும் உங்கள் பார்வைக்கு! எப்படி இருக்கிறது இந்த முயற்சி என்று சொல்லுங்களேன்! படம் பார்த்து உங்களுக்குத் தோன்றும் எண்ணங்களையும் எழுதுங்களேன். ஓவர் டு விஜி வெங்கடேஷ் - வெங்கட் நாகராஜ்.


*******



என்னது, என்னமோ எடுத்து கணபதியின் பையில் போடற மாதிரி தேவி பாவனை பண்றாங்க.. கணேசனும் எல்லாம் கிடைச்ச மாதிரி முகமெல்லாம் சிரிப்பா தேவிய பாக்கறான்? ஒண்ணும் புரியலையே...


அதெல்லாம் எங்களுக்குள்ள விஷயம், உனக்குப் புரியாது சிம்மா, அனாவசியமா மூக்கை நுழைச்சு கவலைப் படாம கொஞ்சம் தள்ளி நிக்கறயா? 


இதோ...கிளம்பறேன் தேவி...( தெரிஞ்சுக்கலாமேன்னு பாத்தா.... எனக்குத் தேவதான்....😏)


ஓம் சசாமர ரமாவாணி சவ்ய தக்ஷிண சேவிதாயை நமஹ🙏🏻🙏🏻🙏🏻


*******



தலையில சொட்ட சொட்ட எண்ணெய் வெச்சு சீக்காப் பொடி போட்டு தேச்சு விடறதுல அம்மாக்கு அப்படி என்னதான் ஆனந்தமோ...


ஆமா குமரா இப்போதான் வித விதமா ஷாம்பு வந்திடுச்சே… அம்மா boomer ஆ இருக்காங்க இல்ல?


Shhhhh பேசாம தலைய கொஞ்சம் அசக்காம இருங்க...


ஓம் ஶ்ரீ தேவ்யை நமஹ🙏🏻🙏🏻🙏🏻


*******



வாயுபுத்ரா, கண்ணை மூடிக்கொண்டு பறக்கற… பாத்து... என்னை நழுவ விட்டுடாத....


மாட்டேன், கிருஷ்ணா நீங்களும் என் பிரபுவும் வேறா என்ன?


(ப்பா, நினைவுல அது இருந்தா சரி...) எதுக்கும் கண்ணைத் திறந்துக்கிட்டே பற மாருதி… தூசி விழுந்தா எடுத்துக்கலாம்....


ஜெய் ஶ்ரீ ஆஞ்சநேயா🙏🏻🙏🏻🙏🏻


********



அம்மா போயிட்டு சீக்கிரம் வாம்மா… உன்னை விட்டுட்டு எங்களால இருக்க முடியாது...


சரி சரி போதும், ஓவரா scene போட வேண்டாம்.... அப்பாவ போன தடவை மாதிரி சாப்பிட வித விதமா  பண்ணித் தரச் சொல்லி படுத்தி எடுக்கக் கூடாது என்ன? சமத்தா இருங்க...


ஓம் ஶ்ரீ அன்னதாயை நமஹ🙏🏻🙏🏻🙏🏻


********



என்ன கணேசா உனக்கு இன்னும் விடியலையா? எழுந்திரு கண்ணா… ஸ்கூலுக்கு நேரமாச்சு...


வயிறு வலிக்கிற மாதிரி இருக்குப்பா....


பின்ன? கணக்கில்லாம உள்ள தள்ளினா?

இனிமே இவனுக்கு strict diet தான்... தேவிட்ட சொல்லி வைக்கணும்....


ஓம் நமசிவாய🙏🏻🙏🏻🙏🏻


********



சிம்மா நீ என் கண்ணைப் பொத்தலை, முகத்தையே பொத்திட்ட. இந்த விளையாடெல்லாம் வெச்சுக்காத... சே முதல்ல அவனுக்கு நகம் cut பண்ணணும்! கீறிட்டான்....


ஓம் நமசிவாய🙏🏻🙏🏻🙏🏻



*******



கண்ணன் வருவான் கதை சொல்லுவான்.. வண்ண மலர் தொட்டில் கட்டித் தாலாட்டுவான்....


வந்தாச்சு.ராதா.எழுந்திரு… கதை OK. அந்தத் தொட்டில் எல்லாம் குழந்தைகளுக்கு.... அதுல உக்காந்து ஆட்டச் சொல்லி படுத்தக் கூடாது..... சரியா? என்ன கதை உடணும்? sorry சொல்லணும்?


ஜெய் ஶ்ரீ ராதே கிருஷ்ணா🙏🏻🙏🏻🙏🏻


********


படங்களும் படங்களுக்கான வரிகளும் உங்களும் பிடித்திருக்கும் என நம்புகிறேன்.  மீண்டும் வேறு ஒரு பதிவு வழி சந்திப்போம்… வாசகர்கள் அனைவருக்கும் மனம் நிறைந்த தீபாவளி திருநாள் நல்வாழ்த்துகள்.




நட்புடன்


விஜி வெங்கடேஷ்


*******


இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


வெங்கட் நாகராஜ்

திருவரங்கம்

8  நவம்பர் 2026


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....