எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Monday, July 16, 2012

யாரடி நீ மோகினி?


[பட உதவி: கூகிள்]

தலைப்பைப் பார்த்ததுமே ”என்ன ஆச்சு?” என்று நினைப்பவர்களுக்கு, இது இப்ப நடந்த விஷயமில்லை, தில்லியில, நானும் சில நண்பர்களும் ஒண்ணா சேர்ந்து தங்கியிருந்தப்போ நடந்த பழைய கதைன்னு சொல்லிக்கிறேன்.

இப்ப மாதிரி அலைபேசியெல்லாம் இல்லை அப்போ. தொலைபேசி தான். நாங்க யாரையாவது கூப்பிடணும்னா, வெளியே போய் கூப்பிடுவோம். எங்களை தொடர்பு கொள்ளணும்னா, அலுவல் நேரத்தில் தான் முடியும், மத்த நேரத்தில முடியாதுன்ற நிலை. சரி ஆகற செலவாகட்டும்னு தில்லியின் எம்.டி.என்.எல். இணைப்புக்கு விண்ணப்பித்தேன். அடுத்த நாளே வந்து தொலைபேசி இணைப்பு கொடுத்து, “ட்ரிங், ட்ரிங்” ஒலிக்க வைச்சு, இனிப்பு வாங்க செலவுன்னு ஒரு நூறையும் வாங்கிட்டு போய்ட்டாங்க! 

உறவுகள், தெரிந்த நண்பர்களுக்கெல்லாம் புதிய தொலைபேசி எண்ணைத் தந்தாயிற்று. அழைப்புகளும் வந்த வண்ணம் இருந்தது. ஆறு மாதத்திற்குப் பிறகுதான் தொல்லை ஆரம்பித்தது. முதல் தொல்லை நன்றாக நினைவிருக்கிறது.

[பட உதவி: கூகிள்]ஒரு நாள் நள்ளிரவு. தூக்கத்தில், ‘ட்ரிங்… ட்ரிங்…’ ஓசை எங்கேயோ கேட்பது போல இருந்தது. எங்கேயோ இல்லை, இங்கே தான் என விடாது ஒலித்தபோது புரிந்தது. தூக்கக் கலக்கத்திலேயே காதில் வைத்து கொட்டாவி விட்டபடியே, ‘ஹலோ….”வினேன். எதிர்பக்கத்தில் சத்தமே இல்லை. மீண்டும் ’ஹலோ…. ஹலோ…”.  இரவின் நிசப்தம் போலவே எதிர்பக்கத்திலும் எல்லையில்லா நிசப்தம். சரி வைத்து விடலாமென நினைக்கும்போது, எதிர்பக்கத்திலிருந்து சப்தம்...

மன்மத லீலை படத்தில் “ஹலோ மை டியர் ராங் நம்பர்” பாட்டிலே ஒரு பெண் குரல் வருமே அதே மாதிரி ”ஹலோ…” ந்னு ஹஸ்கி வாய்ஸ்-ல ஒரு பெண் குரல். இது என்னடா வம்புன்னு “ஹலோ” சொன்னால், மீண்டும் நிசப்தம்.  இரண்டு மூன்று ஹலோவிற்கு பிறகு “டொக்” என வைக்கப்படும் சப்தம். கஷ்டப்பட்டு தூங்க ஆரம்பித்தால் மீண்டும் நான்கு மணிக்கு “ட்ரிங்… ட்ரிங்…”.

ஹஸ்கி வாய்ஸ் காலையிலே ஹலோ சொல்லப்போகுதோன்னு எடுத்தால், நிசப்தம். ஒன்றிரண்டு நிமிடங்களுக்குள், ஒரு பாட்டு கேட்டது. என்ன பாட்டுன்னு தானே கேக்கறீங்க…  “நீ தானே என் பொன் வசந்தம்… புது ராஜ வாழ்க்கை நாளை என் சொந்தம்” பாட்டு தான்.

[பட உதவி: கூகிள்]


பாட்டு இரண்டு நிமிடம் ஓடின பிறகு வைச்சுட்டாங்க தொலைபேசியை. சரின்னு நானும் வைச்சுட்டு தூங்கலாம்னா, தூக்கம் வரல :) ஒவ்வொரு ராத்திரியும், அகால வேளையிலேயே தொலைபேசி, பாட்டுன்னு, விளையாட்டு தொடர்ந்து, நடந்துட்டே இருந்தது. ஒரே எரிச்சல், ராத்திரி தூக்கம் போறது மட்டுமில்லாம, யாரு தொந்தரவு பண்றாங்கன்னு தெரியாம இருக்கறது அதை விட கஷ்டமில்லையா. 

இதற்கிடையே, அதே ஏரியாவில் நான் வேற வீடு மாற்றி வந்து, நம்பரும் மாறிடுச்சு. அப்பாடா, இனிமே கொஞ்சம் நிம்மதின்னு நினைச்சிருந்தேன். ஆனா, மனசோட ஒரு மூலையிலே யாருன்னே தெரியாத அந்த மோகினி பாவம் நம்பர் தெரியாமதான் இப்பல்லாம் தொலைபேசியில் அழைத்து பாட்டுப் போடலையோன்னு ஒரு கவலை வந்து டேரா போட்டு உட்கார்ந்துடுச்சு! ஆனால், ரொம்ப நாள் கவலைப்பட வைக்கவில்லை அந்த மோகினி. 

திரும்பவும் இரவு, நடு ஜாமம், விடிகாலை என அவ்வப்போது ட்ரிங், ட்ரிங், ஒரு நல்ல காதல் பாட்டுன்னு தொடங்கிடுச்சு புது வீட்லயும். எந்த நம்பர்ல இருந்து தொலைபேசி வருதுன்னு பார்க்க, காலர் ஐ.டி. வைச்ச தொலைபேசி வாங்கலாமான்னு யோசிச்சேன். ஏனோ, அந்த சஸ்பென்ஸ் போயிடுமேன்னு விட்டுட்டேன். நல்ல நல்ல பாட்டா போடறாங்களே, “நேயர் விருப்பம்” கேட்கலாமான்னு கூட யோசிப்பேன் சில சமயம். 

இதுக்கு நடுவிலே ஐயாவுக்கு கல்யாணம் ஆயிடிச்சு. அப்புறமும் தொலைபேசி அழைப்புகள் குறையல. ஆனா, இப்பல்லாம் சோக ராகம் பாட ஆரம்பிச்சுது தொலைபேசி. இது என்னடா தொல்லையா போச்சு, அர்த்த ராத்திரில முகாரி ராகம் கேட்க வேண்டியதாயிருக்கே!. அம்மணி வேற, ”ஏங்க இத்தனை நாளா தொந்தரவு பண்றாங்கன்னா எதாவது செய்ய வேண்டியது தானே” அப்படின்னு கேட்க ஆரம்பிச்சாட்டங்க! ஆளே யாருன்னு தெரியாம, என்ன பண்ணறதுன்னு புரியலையே…

இதுக்கு எல்லாம் முடிவு கட்டற மாதிரி ஒரு விஷயம் நடந்தது. எம்.டி.என்.எல். காரங்களே அங்கங்க பள்ளம் தோண்டிப் போட்டு ஏதோ ஒயரெல்லாம் மாத்தினாங்க. அதிலேர்ந்து சேர்ந்து பத்து நாள் கூட தொலைபேசி வேலை செய்யாது.  அப்பப்ப செத்துடும்….  அதை ரிப்பேர் பண்ண, ஒரு ஹரியானாக்காரர் [எம்.டி.என்.எல்.-ல வேலை செய்யறவர் தான்] வருவார். அவர் ஹர்யான்வியில் பேச, நம்ம வீட்டு எஜமானியம்மா முழிக்க, ஒரே தொந்தரவா போச்சு. ஹரியானா காரங்க பாஷையே ஒரு மாதிரிதான். எல்லாத்துக்கும் ஒரு “ரே” அல்லது “சு” சேர்த்துப்பாங்க. அவங்களோட பிரதாபங்கள் பத்தி தனியா ஒரு பதிவே எழுதலாம். அது அப்பறமா…  :)

சரி போங்கய்யா, நீங்களுமாச்சு உங்க ஃபோனுமாச்சுன்னு ஒரு மொபைல் வாங்கி ஏர்டெல் கனெக்‌ஷன் வாங்கிட்டேன்.  அதுக்கப்பறம் அர்த்த ராத்திரில ஃபோனும் வரதில்லை, பாட்டும் கேட்க முடியல! ஒரு எஃப்.எம். ரேடியோ வாங்கிடலாம்னா, அதிலும் ஹிந்தி பாட்டு தானே வரும்னு விட்டுட்டேன்..

இதெல்லாம் நடந்து எட்டு - ஒம்பது வருஷம் ஆயிடுச்சு. ஆனா, இன்னிக்கு வரைக்கும் மண்டையைக் கொடையற விஷயம் “யாரடி நீ மோகினி” தான்! அந்த மோகினியை எப்படிக் கண்டுபிடிக்கிறதுன்னு யாராவது அனுபவசாலிகள் சொன்னா நல்லா இருக்கும்!

மீண்டும் சந்திப்போம்!

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.


66 comments:

 1. என்னாங்க இது சஸ்பென்சா முடிச்சிட்டீங்க

  ReplyDelete
  Replies
  1. இன்னிக்கு வரைக்கும் எனக்கே சஸ்பென்ஸ் தான் மோகன்... :)

   தங்களது உடனடி வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

   Delete
 2. Replies
  1. தொல்லை பேசி... :)

   தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!

   Delete
 3. தொலைபேசி வழியே வந்த தொல்லை நீங்கினாலும் இன்னும்
  நினைவைவிட்டு நீங்க வில்லை போலும்!

  சா இராமாநுசம்

  ReplyDelete
  Replies
  1. சில நினைவுகள் நெஞ்சைவிட்டு விலகுவதில்லையே... :)

   தங்களது வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் மிக்க நன்றி புலவரே.

   Delete
 4. //நல்ல நல்ல பாட்டா போடறாங்களே, “நேயர் விருப்பம்” கேட்கலாமான்னு கூட யோசிப்பேன் சில சமயம். //


  ஹாஹா;-))))))))) இ(த்)து..............

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் ரசிப்பிற்கும் மிக்க நன்றி துளசி டீச்சர்.

   Delete
 5. முடிவு தெரியாமலே இருக்கட்டும்
  அது கூட சிறப்பாகத்தான் இருக்கிறது
  முடிவு தெரிந்தால் ஒருவேளை
  சுவாரஸ்யம் குறைந்து போக வாய்ப்பிருக்கு
  சுவாரஸ்யமான பதிவு
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. //முடிவு தெரியாமலே இருக்கட்டும்
   அது கூட சிறப்பாகத்தான் இருக்கிறது
   முடிவு தெரிந்தால் ஒருவேளை
   சுவாரஸ்யம் குறைந்து போக வாய்ப்பிருக்கு//

   இது கூட நன்றாகத்தான் இருக்கிறது. மோகினி எங்கிருந்தாலும் வாழ்க!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமணி ஜி.

   Delete
 6. Replies
  1. தமிழ்மணம் நான்காம் வாக்கிற்கு மிக்க நன்றி ரமணி ஜி.

   Delete
 7. மிகவும் சுவாரசியமான நிகழ்ச்சி. முடிவு தெரியாமே மண்டைக் குடைச்சலாயிருக்கு.நீங்கள் சொல்லியிருக்கும் விதம் அருமை.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் இனிய கருத்திற்கும் பதிவினை ரசித்தமைக்கும் மிக்க நன்றி ருக்மணிம்மா...

   Delete
 8. Replies
  1. இந்த பஸ்ஸை விட்டா என்ன... சொந்த பஸ்-ஸே வந்துடுச்சே... :)

   தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி கவி அழகன்!

   Delete
 9. தொல்லை தந்த அனுபவத்தை நகைச்சுவையாகவும் அழகாகவும் சொல்லியுள்ளீர்கள், வெங்கட்ஜி.

  சஸ்பென்ஸ் இன்னும் நீடிப்பதே இதில் உள்ள சுவாரஸ்யமான விஷயம்.
  தலைப்பும் அருமை.

  ReplyDelete
  Replies
  1. தங்களது தொடர் வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் மிக்க நன்றி வை.கோ.ஜி.

   Delete
 10. // ‘ஹலோ….”வினேன்.// ஹா ஹா ஹா

  // “நேயர் விருப்பம்” // ஹா ஹா அந்த திகில்லையும் உங்களுக்கு விளையாட்டு கேக்குதோ

  /“யாரடி நீ மோகினி”// ச வாடா போச்சே, ரைட்டு விடுங்க...

  எழுத்து நடை அருமை சார்

  ReplyDelete
  Replies
  1. பதிவினை ரசித்து கருத்துரைத்தமைக்கு மிக்க நன்றி சீனு.

   Delete
 11. எதுக்கும் இன்னொரு எம்டிஎன்எல் கனெக்சன் வாங்கிப்பாருங்க. தத்துவப் பாட்டால ஒலிச்சாலும் ஒலிக்கலாம்.

  ReplyDelete
  Replies
  1. ஆஹா, இது நல்ல ஐடியாவா இருக்கே.... :)

   தங்களது வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி ஷாஜஹான் ஜி!

   Delete
 12. நல்ல நினைவுகள்... ஒரு தலை காதலாக இருக்குமோ... ? தொடருங்கள்...
  பகிர்வுக்கு நன்றி... (த.ம. 5)

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   Delete
 13. சில புதிர்கள் விடைத் தெரியும் வரைத்தான் சுவாரசியமாக இருக்கும். விடைத் தெரிந்தால் ‘சப்’ என்று போய்விடும்.

  அதாவது புதிர் புதிராக இருப்பதால் தான் ‘பதிவு’ஆகி இருக்கிறது.

  ReplyDelete
  Replies
  1. //சில புதிர்கள் விடைத் தெரியும் வரைத்தான் சுவாரசியமாக இருக்கும். விடைத் தெரிந்தால் ‘சப்’ என்று போய்விடும்.//

   ஆமாண்டா சீனு. தெரியாத வரைக்கும் ஓகே தான்!

   வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றிடா சீனு [வெங்கட ஸ்ரீனிவாசன்].

   Delete
 14. கல்யாணத்திற்கு முன்னால் சுகமானா ராகங்கள்! அப்புறம் சோகமான ராகங்களா! நடக்கட்டும்! நடக்கட்டும்.

  ReplyDelete
  Replies
  1. இது நடந்து முடிந்த கதை அண்ணாச்சி!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் [ஈஸ்வரன்].

   Delete
 15. நீங்க பிலாகுல எழுதுறதுக்கு ஒரு மேட்டர் ரெடி பண்ணத்தான் அந்த மோகினி வந்திச்சு போல..
  வேற எந்த காரணமும் எனக்கு பிடிபடல..

  ReplyDelete
  Replies
  1. ஆஹா ரொம்ப வருஷம் கழிச்சு நான் பிளாக்-ல எழுதுவேன்னு மோகினிக்கு அப்பவே தெரிஞ்சுருக்கு போல!

   தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி மாதவன்.

   Delete
 16. அதுவும் ஒரு சுகம் தான் இல்லங்க. பொல்லாத போக்கிரி சார் நீங்க அந்த டயலாக் நினைவுக்கு வருகிறது.

  ReplyDelete
  Replies
  1. //பொல்லாத போக்கிரி சார் நீங்க // அச்சச்சோ... அப்படி எல்லாம் இல்ல சகோ... “நான் ரொம்ப நல்லவன்!”... :)))))

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சசிகலா.

   Delete
 17. முடிவை கூறாமல் சுவாரஸ்யமாக முடித்துவிட்டீர்கள் :)

  ReplyDelete
  Replies
  1. வலைச்சரத்தில் அருமையான பணி ஆற்றியதற்கு வாழ்த்துகள் நண்பரே.

   தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி வரலாற்று சுவடுகள்.

   Delete
 18. யார்ன்னு தெரிஞ்சுட்டா சுவாரஸ்யம் போய்டும். முகம் தெரியாத மோகினியாய் இருப்பதே உத்தமம். (வீட்டம்மா பக்கத்துல இல்லன்னதும் இந்த விஷயங்கள்லாம் வெளிய வருதா? பத்தவச்சிர்றேன் பரட்டை.. ஹி... ஹி...)

  ReplyDelete
  Replies
  1. //முகம் தெரியாத மோகினியாய் இருப்பதே உத்தமம். (வீட்டம்மா பக்கத்துல இல்லன்னதும் இந்த விஷயங்கள்லாம் வெளிய வருதா? பத்தவச்சிர்றேன் பரட்டை.. ஹி... ஹி...)//

   ஆஹா கிளம்பிடாரைய்யா கிளம்பிட்டாரு!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கனேஷ்!

   Delete
 19. Replies
  1. அதானே...

   தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ரிஷபன் ஜி!

   Delete
 20. /மண்டையைக் கொடையற விஷயம்/

  தொல்லை விட்டது எனத் துரத்தியடியுங்கள்:)!

  ReplyDelete
  Replies
  1. //தொல்லை விட்டது எனத் துரத்தியடியுங்கள்:)!//

   சரியாச் சொன்னீங்க சகோ... துரத்தியாச்சு!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி!

   Delete
 21. Replies
  1. நிசமாத்தாங்க! இப்படியெல்லாம் சந்தேகப்பட்டா அளுதுருவேன்!

   தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி அமுதா கிருஷ்ணா!

   Delete
 22. இது எதோ கல்யாணத்துக்கு அப்புறம் கால் வரலைனு ரொம்ம்ம்ம்ம்ப பீல் பண்ணி எழுதின மாதிரினா இருக்கு! :))

  ReplyDelete
  Replies
  1. ஆஹா.... நீ வேற கிளம்பிட்டயா?

   தோஹா நிலவரம் எப்படி!

   வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தக்குடு.

   Delete
 23. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி பழனி. கந்தசாமி ஜி!

   Delete
 24. ஆஹா நல்ல ஒரு மோகினியை மிஸ் பண்ணிட்டீங்களே மக்கா....ம்ம்ம்ம் நானா இருந்தால் யோசிக்கவே பயமா இருக்கு ம்ஹும் விடுங்க...!

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மனோ மக்கா!

   Delete
 25. அப்பவே எசப்பாட்டு பாடக் கிடைச்ச சந்தர்ப்பத்தை நழுவ விட்டுட்டீங்க. இனிமே கண்டுபிடிச்சுதான் என்ன ஆகப் போகுது... விடுங்க....!!

  ReplyDelete
  Replies
  1. //இனிமே கண்டுபிடிச்சுதான் என்ன ஆகப் போகுது... விடுங்க....!!//

   எப்பவோ விட்டாச்சு ஸ்ரீராம்...

   தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 26. Replies
  1. தங்களது வருகைக்கும் சிரிப்பானுக்கும்! மிக்க நன்றி முத்துலெட்சுமி.

   Delete
 27. உங்க போன் அனுபவம் பார்த்ததும் நானும் இதுபோல போன் அனுபவம் ஒன்னு பதிவா போட்டிருப்பது நினைவுக்கு வந்தது. அதையே நாளை மீள் பதிவா போடலாம்னு கூட தோனுச்சு

  ReplyDelete
  Replies
  1. ஓ... நீங்களும் மீள் பதிவா நாளைக்கே போடுங்கம்மா...

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி லக்ஷ்மிம்மா.

   Delete
 28. Replies
  1. ஒண்ணும் செய்ய முடியாது! :)))

   தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சீனி.

   Delete
 29. மோகினியெல்லாம் கூட உங்க தோஸ்தா இருக்குதா?.. இல்லை க்ராஸ் டாக்கா இருக்குமோ?

  ReplyDelete
  Replies
  1. க்ராஸ் டாக்-லாம் இல்லை! :) மோகினி தோஸ்த்!

   தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி அமைதிச்சாரல்.

   Delete
 30. வித்தியாசமான அனுபவம்! விடை தெரியாத கேள்வி என்றுமே சுவாரஸ்யம்தான்!!

  ReplyDelete
  Replies
  1. //விடை தெரியாத கேள்வி என்றும் சுவாரஸ்யம்தான்...//

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மனோ சாமிநாதன் ஜி!

   Delete
 31. முடிவு தெரியாமலே இருக்கட்டும் வெங்கட்ஜி...

  ReplyDelete
  Replies
  1. அது தான் நல்லதுன்னு எனக்கும் தெரியும்... :)

   தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ரெவெரி.

   Delete
 32. தினமும் பாட்டு - அதுவும் டெல்லியில் தமிழ்ப்பாட்டு!!, நம்பர் மாறினாலும் கண்டுபிடிச்சு மறுபடியும் பாட்டு, கல்யாணமானப்புறம் சோகப்பாட்டு..., மொபைல் வாங்கியதும் நின்றுபோன பாட்டு.... இதெல்லாம் ‘லிங்க்’ பண்ணாலே புரியுமே... உங்களை நல்லாத் தெரிஞ்ச ஒரு ‘மோகினி’யாத்தான் இருக்கும்னு!!

  ஆமா, ‘மிட்-நைட்’ ஃபோன்காலை எப்பவுமே நீங்கதான் அட்டெண்ட் பண்ணுவீங்களா? உடன் வசித்த உங்க நண்பர்கள் யாருமே அட்டெண்ட் பண்ண மாட்டாங்களா? தப்பித்தவறி அவங்க ஃபோனை எடுத்தாங்கன்னா, பாட்டு வருமா.. காத்துதான் வருமா?

  தக்குடு சொன்னதையும் ரிப்பீட்டிக்கிறேன்!! :-)))))

  ReplyDelete
  Replies
  1. என்னைத் தெரிந்த அந்த மோகினி யாரென்பதில் தான் குழப்பமே...

   எனக்கே நிறைய அழைப்புகள் வரும்.... ஏனெனில் நண்பர் வட்டாரம் மிக மிக அதிகம்! :)

   ஆகா தக்குடு சொன்னதை நீங்களும் சொல்றீங்க! ம்ம்... நடக்கட்டும்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஹுசைனம்மா.

   Delete
 33. தொடரட்டும் உங்கள் மோகினி நினவு!!!!! அப்போதுதான் வாழ்க்கை முழுவதும் ஞாபகம் இருக்கும்.

  வாழ்க உங்கள் பணி

  அன்புடன்

  விஜய்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் இனிய கருத்திற்கும் மிக்க நன்றி விஜயராகவன் ஜி!

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....