ஞாயிறு, 17 பிப்ரவரி, 2019

பூக்கள் பூக்கும் தருணம்....




பூக்களை பார்த்தாலே எல்லோருக்கும் மனதில் ஒருவித சந்தோஷம், உற்சாகம், புத்துணர்ச்சி எல்லாம் பொங்கி வரும். இங்கு பிப்ரவரி, மார்ச் மாதங்களில் தான் அதாவது கடுங்குளிர் சற்றே குறைந்து மிதமான சூழலில் மலர்கள் அணிவகுத்து நிற்கும். சென்ற வாரத்திலிருந்தே என்னவர் அலுவலகத்திலிருந்து வரும் வழியெங்கும் மலர்கள் பூத்து கிடப்பதாகச் சொல்லிக் கொண்டிருந்தார். காண வேண்டும் என்று ஆவலாக இருந்தேன். இந்த மாதம் தான் ஜனாதிபதி மாளிகையின் உள்ளே இருக்கும் முகல் கார்டனிலும் மலர்களைக் காண அனுமதி வழங்குவார்கள். அங்கு சென்று வந்த பின் அந்த அனுபவங்களையும் பகிர்ந்து கொள்கிறேன்.








சென்ற ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30-க்கு வீட்டிலிருந்து புறப்பட்டு ஜனாதிபதி மாளிகைக்கு அருகில் சென்றடைந்தோம். அப்போது குளிர் அவ்வளவாகத் தெரியவில்லை… சுற்றுலாவாசிகளின் கூட்டம் சிறிதே இருந்தது. மாளிகையின் கேட் வழியே உள்ளே பார்த்த போது வல்லூறுகள் கும்பலாக அமர்ந்திருந்தது. கிளிகள் பறந்து கொண்டிருந்தன… (எங்க வீட்டின் பின் பக்கத்திலும் வல்லூறுகளின் நடமாட்டம் இருக்கிறது. புகைப்படமெடுப்பதற்குத் தான் சிக்க மாட்டேங்கிறது…)


அப்படியே நார்த் ப்ளாக், செளத் ப்ளாக் எல்லாம் பார்வையிட்டபடி மலர்களின் அழகை ரசித்துக் கொண்டே வந்தோம். செக்யூரிட்டிகளின் பார்வை பார்வையிடும் மக்களின் மீதும் சாலையின் மீதும் என மும்முரமாக இருந்தது. மலர்களை கணவரும், மகளும் மாறி மாறி புகைப்படமெடுத்த படியே வந்தனர். (ஒரே ஒரு மலரை தான் நான் படமெடுப்பதற்குத் கொடுத்தாங்க…. அப்புறம் வேறு சில படமெடுத்தோம்ல…)








அப்படியே காலாற நடந்து பாராளுமன்றத்திற்கு அருகில் சென்று விட்டு அங்கு சில புகைப்படங்களும் எடுத்துக் கொண்டு இந்தியா கேட்டின் அருகில் புல்வெளியில் சிறிது நேரம் அமர்ந்திருந்தோம். மணியும் 6.30 ஆகி இருட்டத் துவங்கி விட்டது. இரண்டு மணி நேரத்தில் குளிரும்  கூடிவிட்டது. ஆகவே கிளம்பி வீடு வந்து சேர்ந்தோம். அன்று எங்களுக்கு ஒரு இனிமையான மாலைப் பொழுதாக கழிந்தது..

தில்லியில் டிசம்பர் மாதத்திலிருந்து குளிர் வாட்டி எடுக்கிறது. மிதமாக இருக்கும் வரை சமாளிக்கலாம். ஒவ்வொரு வருடமும் குளிர்காலத்தில் நண்பர்களை பார்க்கும் போது சென்ற வருடத்தை விட இந்த வருடம் அதிகம் என்பார்கள்… ஆனால் 21 வருடமாக தில்லியில் இருக்கும் என் கணவர் அப்போதெல்லாம் இருந்த குளிரில் பாதி கூட இப்போது இல்லை என்பார்….

ஆனா…குளிர் குளிர் தான், நடுங்குவது நடுங்குவது தான்… ஊரிலிருந்து யாராவது தொலைபேசியில் பேசும் போது ”என்ன குளிர் அதிகமா… குரலே நடுங்குது!” என்று கேட்பார்கள்.

இப்போ பரவாயில்லை…மழை ஒருநாள் சிறிதளவு தூறியது… இது குளிரை அதிகபடுத்தும். சிம்லாவிலும் பனிப்பொழிவு இருப்பதால் குளிர் மார்ச் வரை தொடரும் என்கிறார்கள்.  பார்க்கலாம்…

இந்த மாதம் இரண்டு வருடத்துக்கு ஒருமுறை நடைபெறும் உலக புத்தக கண்காட்சி இருபத்தி ஐந்தாம் தேதி முதல் ஆரம்பமாக இருக்கிறது.  தமிழகத்திலிருந்து இரண்டு மூன்று பதிப்பகங்களாவது வந்தால் நன்றாக இருக்கும்.  அப்ப தானே நாங்க தமிழ்ப் புத்தகங்களை வாங்க முடியும். பார்க்கலாம் யார் வருகிறார்கள் என்று! 

மீண்டும் சந்திப்போம்,


ஆதி வெங்கட்

பின் குறிப்பு: ஃபிப்ரவரி 2012-ல் என்னுடைய வலைப்பதிவில் பகிர்ந்த பதிவு இப்போது இங்கே மீள் பதிவாக....

18 கருத்துகள்:

  1. இனிய காலை வணக்கம் வெங்கட்ஜி!

    காலையிலேயே 5.30க்கு வந்து பார்த்தேன் போஸ்ட் இல்லை...சரி இன்று ஞாயிறு ஸோ ரிலாக்ஸ்டா வரும்னு நினைச்சேன்...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இனிய காலை வணக்கம் கீதா ஜி.

      Schedule செய்ய முடியவில்லை - பணிச்சுமை... சில நிகழ்வுகள்.....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி.

      நீக்கு
    2. இனிய காலை வணக்கம் வெங்கட்ஜி!!! தில்லி ஃபோட்டோஸ் பார்த்ததும் வெங்கட்ஜியின் பதிவு என்று நினைத்தேன்...

      பூக்கள் செம அழகு!! படங்கள் எல்லாமே ரொம்ப அழகு! ஒவ்வொரு பூவும் மனதைக் கொள்ளை கொள்ளுகிற்து. வெங்கட்ஜியின் ஃபோட்டோ எடுக்கும் திறமைக்கு சொல்லனுமா?

      கீதா

      நீக்கு
    3. ரெண்டாவதுல வணக்கம் ஆதினு வந்திருக்கனும்....ஹா ஹா ஹா ஹா பழக்க தோஷம்...

      வெங்கட்ஜி நீங்கள் பணிச்சுமையில் பிசி என்று தெரிகிறது...

      கீதா

      நீக்கு
    4. இனிய காலை வணக்கம் கீதாஜி. படங்களை ரசித்ததில் ம்கிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
    5. இரண்டாவது வணக்கம் :))))

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி.

      நீக்கு
  2. பதில்கள்
    1. சில நினைவுகளை மறக்க முடியுமா.....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா.

      நீக்கு
  3. பூக்கள் படங்கள் எல்லாமே அழகு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  4. 18ம் தேதி என்பதிவில் சில எக்சோடிக் செடிகளும் பூக்களும் பெயர் ஏதும் தெரியாது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி.எம்.பி. ஐயா.

      நீக்கு
  5. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

      நீக்கு
  6. படங்கள் அனைத்தும் வெகு வெகு அழகு! மிகவும் ரசித்தேன் பூக்களை.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்.

      நீக்கு
  7. "//ஆனா…குளிர் குளிர் தான், நடுங்குவது நடுங்குவது தான்…//"
    இங்கு ஒரே வெயில் கொளுத்துகிறது.
    இன்றைக்கு எல்லாம் பயங்கிற வெயில்.

    பூக்களின் படங்கள் எல்லாம் அருமை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சொக்கன் சுப்ரமணியன்.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....