புதன், 27 மார்ச், 2013

பங்குனி உத்திரம் – கொண்டாட்டம்!



[மனச் சுரங்கத்திலிருந்து!]

பங்குனி உத்திரம். மிகச் சிறப்புடைய நாள் இந்நாள் – இதே நாளில் தான் விஷ்ணுவின் புதல்வராக தர்மசாஸ்தா அவதரித்தார்.  லக்ஷ்மி தாயார் பார்க்கவ மகரிஷியின் மகளாக பூமியில் பார்கவி எனும் பெயரில் அவதரித்தாள்; கைலாயத்தில் சிவன் – பார்வதி திருமணம் இதே பங்குனி உத்திர நாளில் தான் நடந்தது. ராமன் - சீதாதேவி, லக்ஷ்மணன் - ஊர்மிளை, பரதன் - மாண்டவி, சத்ருக்னன் - ச்ருதகீர்த்தி ஆகியோர் திருமணம் நடந்ததும் இதே நாளில் தான்!  மேலும் முருகன் – தெய்வானை திருமணம் நடந்ததும் இதே நன்னாளில் தான்!

இப்படி பல சிறப்புகளைக் கொண்ட பங்குனி உத்திரத் திருவிழா ஒவ்வொரு வருடமும் என்.எல்.சி. நிறுவனத்தினால் வெகு விமரிசையாக பத்து நாள் உற்சவமாகக் கொண்டாடப்படும் ஒரு விழாஇந்த வருட பங்குனி உத்திரத்தின் போது சிறுவயது முதலே நான் ரசித்த இந்த விழாவினைப் பற்றிய, தேனில் ஊறிய பலாச்சுளை போன்ற இனிய நினைவுகளை மனச்சுரங்கத்திலிருந்து மீட்டெடுத்தது

நெய்வேலியில் உள்ள வேலுடையான்பட்டு கோவில் மிகவும் பழமையான கோவில்இங்கே குடிகொண்டு இருக்கும் முருகப் பெருமானுக்கு பங்குனி உத்திரத்தின் போது வருடா வருடம் 15 ஆயிரம் பக்தர்களுக்கு மேல் காவடி, பால்குடம் சுமந்து வந்து நேர்த்திக் கடன் செலுத்துவார்கள்சுற்றி இருக்கும் ஊர்களில் இருந்தெல்லாம் மக்கள் இந்த நேரத்தில் வந்து வழிபட்டு முருகனின் அருளைப் பெறுவார்கள்.

நாங்கள் இருந்தது வட்டம் பதினொன்றில்அங்கேயிருந்து பொடி நடையாக எட்டு ரோடு எனும் பெயரிடப்பட்ட எட்டு ரோடுகள் சந்திக்கும் இடத்திற்கு அப்பா, அம்மா, சகோதரிகளோடு கிளம்பிவிடுவோம்ஏனெனில் அந்த வழியாகத் தான் எல்லா கோவில்களிலிருந்தும் கிளம்பும் காவடிகள் வேலுடையான்பட்டு கோவிலுக்குச் செல்லும்



வட்டம் 11, 18, எட்டு ரோடு பகுதிகளில் இருக்கும் பிள்ளையார் கோவில்கள், வட்டம் 28 முருகன் கோவில், வட்டம் 27 பெருமாள் கோவில் போன்ற பல கோவில்களிலும் இருந்து பக்தர்கள் பல வடிவங்களில் அலங்கரிக்கப்பட்ட காவடிகளைத் தோளில் சுமந்து நடந்து வருவார்கள்சிலர் மிகப் பெரிய காவடிகளையும், சிலர் சிறிய தேர், பால்குடம் போன்றவற்றையும் எடுத்து வருவார்கள்இவர்களுக்கு தார் சாலையில் நடந்து வரும்போது கால் சுடாமல் இருக்க, தண்ணீர் லாரிகள் அவ்வப்போது சாலையில் தண்ணீர் ஊற்றிய படி செல்லும்

எட்டுரோடு பகுதிக்கு வந்து பல காவடிகள் பார்த்த பிறகு, அங்கிருந்து காவடிகள் கூடவே நடந்து செல்வோம்நடந்த களைப்பினைப் போக்க, ஆங்காங்கே பக்தர்கள் குழாம், நிறுவனங்கள், என்.எல்.சி. நிறுவன ஊழியர்கள் எனப் பலர் தண்ணீர் பந்தல்கள் அமைத்து விறுவிறுப்பாக நீர்மோர், பானகம் வினியோகம் செய்து கொண்டு இருப்பார்கள்ஒரு இடம் விடாமல் அனைத்திலும் இவற்றை அருந்துவதில் எனக்கும் சகோதரிகளுக்கும் போட்டிகோவிலுக்குச் சென்று மனதார முருகனைத் தரிசித்து திரும்புவோம்.

திரும்பி வரும் வழியில் அதற்குள் புளியோதரை, தயிர்சாதம் என அன்னதானம் தொடங்கியிருக்கும்அவற்றினையும் ஒரு கை பார்த்து விட்டு மதியத்திற்கு மேல் வீடு திரும்புவோம்பத்து நாட்களிலும் மாலை நேரத்தில் திருவிழா பார்ப்பதற்கு வேலுடையான்பட்டு கோவில் சென்று விடுவோம்திருவிழா என்பதால் நிறைய கடைகள் போடுவார்கள்அது மட்டுமில்லாது, ரங்கராட்டினங்கள் போன்ற விளையாட்டுகளும், மேஜிக் ஷோ, உலக அதிசயம்இருதலைப் பாம்பு, மனிதத் தலை-பாம்பு உடல், மரணக் கிணற்றில் பைக் ஓட்டும் பெண் என்றெல்லாம் மனிதர்களைக் கவர்ந்து இழுக்கும் கடைகள் என்று நிறைய இருக்கும்

இவை மட்டுமல்லாது பொம்மைக் கடைகள், தின்பண்டங்கள் விற்கும் கடைகள் என திருவிழா அமர்க்களமாக நடக்கும்மாலை நான்கு மணிக்கு வீட்டை விட்டுக் கிளம்பினால், வீடு திரும்ப எப்படியும் 10 மணிக்கு மேல் ஆகி விடும்விலைவாசியும் அப்போதெல்லாம் அதிகமில்லை என்பதால் திருவிழா சென்று திரும்பியதில் அவ்வளவாக செலவும் ஆகியிருக்காது!

எத்தனை இனிய நினைவுகள்சில வருடங்களுக்கு முன் நெய்வேலிக்குப் பங்குனி உத்திரம் சமயத்தில் சென்றிருந்தேன்மனைவி மற்றும் மகளுடன்காவடிகள், நிகழ்ச்சிகள் பார்த்து மகிழ்ச்சியிலும், பழைய நினைவுகளிலும் திளைத்திருந்தேன்நான் சிறு வயதில் ரசித்த, அனுபவித்த இனிய விஷயங்களை எனது மனைவி-மகளுக்குப் பகிர்ந்து கொண்டே அப்போதைய நிகழ்ச்சிகளைப் பார்த்துக் கொண்டிருந்தேன்

இந்த திருவிழாக்களை இன்னும் இனிமையாக்குபவைஅங்கே நிகழும் சந்திப்புகள்நிறைய நண்பர்களைச் சந்திக்க முடியும்மனைவி, மகளுடன் சென்ற போது நிறைய நண்பர்களை அங்கே பல வருடங்கள் கழித்துச் சந்திக்க முடிந்ததில் இரட்டிப்பு சந்தோஷம்!

இனிய நினைவுகளை அவ்வப்போது பகிர்ந்து கொள்வதும் ஒரு சந்தோஷம் தானே! வேறு சில நினைவுகளுடன் மீண்டும் சந்திக்கும் வரை....

நட்புடன்

வெங்கட்
புது தில்லி.

34 கருத்துகள்:

  1. தேனில் ஊறிய பலாச்சுளை போன்ற இனிய நினைவுகளை மனச்சுரங்கத்திலிருந்து மீட்டெடுத்த பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!

      நீக்கு
  2. மிக அருமையான மலரும் நினைவுகள்!
    எனக்கும் பங்குனி உத்திரம் என்றால் ரொம்பவும் பிடிக்கும் - துணைவரின் பிறந்த நாள் ஆயிற்றே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முதலில் உங்களவருக்கு எங்களது இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரஞ்சனிம்மா.

      நீக்கு
  3. எஞ்சாய் பண்ணியிருக்கீங்க. காவடியெல்லாம் சினிமாவில் பார்த்ததோடு சரி.
    சமீப பயணத்தில் எட்டுரோடு வழியில் வந்த நினைவு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை தான். நிறையவே எஞ்சாய் பண்ணியிருக்கிறோம்.

      தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி அப்பாதுரை.

      நீக்கு
  4. மனச் சுரங்கத்திலிருந்து எடுத்துக் கொடுத்த
    தங்க நினைவுகள் அருமை
    படங்களுடன் பதிவு என்னையும் பல
    திருவிழாக் கொண்டாட்டங்களை நினைத்துப் பார்க்க வைத்தது
    வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்வரவு ரமணி ஜி!

      தங்களது வருகை என்னை மகிழ்வித்தது.

      வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  5. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் தமிழ்மணம் இரண்டாம் வாக்கிற்கும் மிக்க நன்றி ரமணி ஜி!

      நீக்கு
  6. மிகவும் இனிமையான நினைவலைகள். படங்களும், பகிர்வும் அருமை.

    /நான் சிறு வயதில் ரசித்த, அனுபவித்த இனிய விஷயங்களை எனது மனைவி-மகளுக்குப் பகிர்ந்து கொண்டே அப்போதைய நிகழ்ச்சிகளைப் பார்த்துக் கொண்டிருந்தேன். //

    மகிழ்ச்சியான தருணங்கள். பாராட்டுக்கள், வெங்கட்ஜி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!

      நீக்கு
  7. நல்ல மலரும் நினைவுகள்.
    நாங்களும் கூடவே வந்து ரசித்தோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரவாணி.

      நீக்கு
  8. பங்குனி உத்திர திருவிழாவை நேரே கண்டு களித்தேன் உங்கல் பதிவு மூலம்.வேலுடையான்பட்டு கோவிலுக்குச் உறவினர்களுடன் வந்து பார்த்து இருக்கிறேன்.
    பெரிய தெப்பகுளத்துடன் ஒரு ஐய்யனார் கோவிலும் பார்த்த நினைவு இருக்கிறது.
    திருவிழாவில் நண்பர்கள், உறவினர்களை சந்திப்பது மகிழ்ச்சிதான்.


    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பங்குனி உத்திரம் சமயத்தில் பக்கத்து ஊர்கள் பலவற்றிலிருந்தும் மக்கள் வந்த வண்ணம் இருப்பார்கள்....

      பெரிய தெப்பக்குளம் இப்போதும் உண்டு. பங்குனி உத்திரம் சமயத்தில் தெப்போற்சவம் வெகு விமரிசையாக கொண்டாடுவார்கள்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.

      நீக்கு
  9. இனிய நினைவுகள்...

    எதிர்ப்பார்க்காத நண்பர்களை சந்திக்கும் போது கிடைக்கும் ஆனந்தமே தனி... இரட்டிப்பு சந்தோசம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை தான். அங்கே நடக்கும் சந்திப்புகள் என்றென்றும் மறப்பதில்லை!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

      நீக்கு
  10. இனிய நினைவுகள். பகிர்வு அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

      நீக்கு
  11. அருமையான இனிய நினைவுகளை மீட்டியிருக்கிறீர்கள். என் மனதிலும் இதேபோல எங்களூரில் என் கணவர், என் மாமனார் மாமியுடன் பார்த்துக் களித்த தருணங்களை நிழலாட வைத்துவிட்டீர்கள்.

    அழகிய படங்களுடன் அமர்க்களமான பதிவு. பகிர்வுக்கு மிக்க நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இளமதி.

      நீக்கு
  12. பழமையின் நினைவுகள் என்றுமே இனிமைதான், திரு வெங்கட் அவர்களே. மேலும் நம் இளமைகால நண்பர்களின் சந்திப்பு, அவர்களுடன் நம் கடந்த காலங்களின் நிகழ்வுகளை பகிர்ந்து கொள்வதால் ஏற்படும் பேரானந்தம், , வார்த்தைகளில் சொல்ல முடியாதது. பங்குனி உத்திர சிறப்புகளை எங்களுடன் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.வாழ்க, வளர்க

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சித்தப்பா.

      நீண்ட இடைவெளிக்குப் பிறகு தங்களது கருத்துரை. மிக்க மகிழ்ச்சி.

      நீக்கு
  13. இனிய நினைவுகளை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி. எங்களுக்கும் பலவிஷயங்கள் தெரிந்துகொள்ள முடிகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பூந்தளிர்.

      நீக்கு
  14. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜனா சார்.

      நீக்கு
  15. இந்தக் கோவிலுக்குச் சென்று வேலுடையானை தரிசிக்கும் பாக்கியம் எனக்கும் கிடைத்தது.

    நினைவுகள் தொடர்கதை. நல்ல நினைவுகள் நம் வாழ்வை நிறைக்கட்டும். வாழ்க.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் உறவினர் அங்கே இருந்ததால் நீங்களும் பார்த்திருக்க முடியும்... மிக்க மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் [ஈஸ்வரன்] அண்ணாச்சி.

      நீக்கு
  16. பங்குனி உத்திரம் திருவிழா இனிய கொண்டாட்டங்கள்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி.

      நீக்கு
  17. நான்கூட அடிக்கடி இந்த வேலுடையான்பட்டு( பேச்சு வழக்கில் 'வேல்றாம்பட்டு'னு சொல்லுவோம்) முருகன் கோவிலுக்கு போவதுண்டு. ஒரு நேர்த்திக்கடன் பாக்கி இருக்கிறது. கடந்த பனிரண்டு வருடங்களாக முயற்சிக்கிறேன், முடியவில்லை. ஊருக்குப் போனால் கண்டிப்பாக இங்கு போய்வர வேண்டும்.

    கூட்டம் காரணமாக பங்குனி உத்திரம், தைப்பூசம் சமயத்தில் போகாமல் சாதாரண நாட்களில் போவேன். உங்களின் இந்தப் பதிவு பழைய நினைவுகளை மீட்டுக் கொண்டுவந்துவிட்டது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சித்ரா சுந்தர்.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....