வியாழன், 6 செப்டம்பர், 2018

ராஜஸ்தான் போகலாம் வாங்க – ஜோத்பூர் – மெஹ்ரான்கட் கோட்டை – உமைத் பவன் அரண்மனை அருங்காட்சியகம்



ராஜாக்கள் மாநிலம் – பகுதி – 27

இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “ராஜாக்கள் மாநிலம்” என்ற தலைப்பில் ஒரு Drop Down Menu இருக்கிறது. அதில் ஒவ்வொன்றாக க்ளிக்கி படிக்கலாமே!


உமைத் சிங் பேலஸ், ஜோத்பூர்...



உமைத் சிங் பேலஸ், ஜோத்பூர்... 


உமைத் சிங் பேலஸ், ஜோத்பூர்...


உமைத் சிங் பேலஸ், ஜோத்பூர்...

மெஹ்ரான்கட் கோட்டையில் நிறைய நேரம் இருந்த பிறகும், மனதுக்கு அங்கிருந்து விலக இஷ்டமில்லை. ஆனாலும் விலகித்தானே ஆக வேண்டும். அங்கிருந்து அடுத்து செல்லும் இடமும் பிரம்மாண்டமான இடம் தான். மார்வார் இன மன்னர்களின் அரண்மனைக்கு தான் நாம் அடுத்ததாகச் செல்லப் போகிறோம். உமைத்dh Bபவன் அரண்மனை என்று அழைக்கப்படும் அந்த அரண்மனையின் பிரம்மாண்டம் – தற்போது அந்த இடம் மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு, மன்னரின் தற்போதைய வாரிசுகள் இருக்கும் இருப்பிடமாகவும், தாஜ் குழுமம் நடத்தும் ஐந்து நட்சத்திர ஹோட்டலாகவும், அரண்மனை அருங்காட்சியகமாகவும் இருக்கிறது என்பதிலிருந்தே புரியும். மெஹ்ரான்கட் கோட்டையிலிருந்து புறப்பட்ட நாங்கள் அடுத்ததாக அங்கே சென்று சேர்ந்தோம்.


ஓ... நானும் இருக்கேனே.... - செல்ஃபி புள்ளையாக இருந்தபோது...
உமைத் சிங் பேலஸ், ஜோத்பூர்... 




உமைத் சிங் பேலஸ், ஜோத்பூர்...


மாடலாக அரண்மனை
உமைத் சிங் பேலஸ், ஜோத்பூர்... 

இந்த அரண்மனை அருங்காட்சியகம் ஞாயிறு தவிர மற்ற எல்லா நாட்களிலும் காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை திறந்திருக்கும். எல்லா அருங்காட்சியகங்கள் போல, இங்கேயும் நுழைவுக் கட்டணம் உண்டு. குழந்தைகளுக்கு 10 ரூபாயும், பெரியவர்களுக்கு 30 ரூபாயும் கட்டணம் – இதே வெளிநாட்டவர் என்றால் 100 ரூபாய்! எங்கள் அனைவருக்குமான கட்டணத்தினை  [ரூபாய் 390/-] செலுத்தி உள்ளே நுழைகிறோம். கேமராவிற்கு கட்டணம் இல்லை. அழகிய பூங்காவோடு பராமரிக்கப்படும் இந்த அரண்மனையின் பிரம்மாண்டம் உங்களை வியக்க வைக்கும் என்பதில் சந்தேகமில்லை. உள்ளே மார்வார் ராஜா, மஹாராஜாக்கள், ராணிகள் பயன்படுத்திய பல பொருட்களை காட்சிப்படுத்தி வைத்திருக்கிறார்கள். வாருங்கள் உள்ளே போகலாம்.


உமைத் சிங் பேலஸ், ஜோத்பூர்...


உமைத் சிங் பேலஸ், ஜோத்பூர்... 


ஜோத்பூர் என எழுதப்பட்ட சங்கு.... 
உமைத் சிங் பேலஸ், ஜோத்பூர்...


சரக்குக் குடுவைகள்... 
உமைத் சிங் பேலஸ், ஜோத்பூர்...

ராஜஸ்தான் மாநிலத்தில் இரண்டாம் பெரிய நகரம் ஜோத்பூர். ராவ் ஜோதா அவர்களால் நிர்மாணிக்கப்பட்ட இந்த நகரில் முந்தைய அரண்மனை சித்தார் அரண்மனை என அழைக்கப்பட்டது. தற்போதைய மன்னரான Gகஜ் சிங் அவர்களின் தந்தையார் மஹாராஜா உமேத் சிங் அவர்களின் காலத்தில் சித்தார் அரண்மனை நவம்பர் 1929-ல் முழுவதும் தகர்க்கப்பட்டு புதியதாக, தற்போது இருக்கும் பிரம்மாண்ட அரண்மனை கட்டப்பட்டது. அவரின் நினைவாகவே இந்த அரண்மனைக்கு உமேத் பவன் அரண்மனை என்ற பெயரும் வந்தது. கிட்டத்தட்ட 15 வருடங்கள் ஆயிற்றாம் இந்த அரண்மனை கட்டி முடிக்க – எதற்காக இந்த அரண்மனையைக் கட்டினார்கள் என்று பார்த்தால் – அங்கே உள்ள மக்களுக்கு வேலை கொடுக்கவாம்! நல்ல விஷயம் தான்.


உமைத் சிங் பேலஸ், ஜோத்பூர்...


அரண்மனை அருகே கட்டப்படும் வீடுகள்... 


சரக்குக் குடுவைகள்... 
உமைத் சிங் பேலஸ், ஜோத்பூர்...

இந்த அரண்மனையில் இருக்கும் மொத்த அறைகளின் எண்ணிக்கையைச் சொன்னால் உங்களுக்கு அதன் விஸ்தாரம், பிரம்மாண்டம் புரியக் கூடும். இங்கே இருக்கும் மொத்த அறைகள் 347! தனியார் வசம் இருக்கும் பிரம்மாண்ட இல்லங்களில் இந்த அரண்மனையும் ஒன்று. ஏற்கனவே சொன்னது போல இந்த அரண்மனை இப்போது மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு, தற்போதைய மன்னர் வம்சத்தினர் தங்கும் வீடாகவும், ஹோட்டலாகவும், அருங்காட்சியகமாகவும் இருக்கிறது. கிட்டத்தட்ட 50000 பேர் இந்தக் கட்டிடத்தின் கட்டுமானத்தில் பணிபுரிந்திருக்கிறார்கள். பதினைந்து வருடங்கள் உழைப்பில் உருவான இந்த அரண்மனையின் வடிவமைப்பாளர் H.V. Lanchester என்பவர்.


இது எப்படி இருக்கு? 
உமைத் சிங் பேலஸ், ஜோத்பூர்... 


Your table is ready....
உமைத் சிங் பேலஸ், ஜோத்பூர்... 


வாசனை திரவியங்களோ...
உமைத் சிங் பேலஸ், ஜோத்பூர்... 

சுமார் 26 ஏக்கர் பரப்பளவில் 110 அடி உயரத்தில் அமைக்கப்பட்ட இந்த அரண்மனை, கட்ட அச்சமயத்தில் ஆன மொத்த செலவு 94,51,565/- ரூபாய் என்கிறது ஒரு தகவல். Goldstraw என்பவரின் மேற்பார்வையில் கட்டப்பட்டது – அதற்கு அவருக்குக் கிடைத்த மாத வருமானம் ஆயிரம் ரூபாய். ஒவ்வொரு உழைப்பாளிக்கும் கொடுக்கப்பட்ட தினக்கூலி வெறும் ஐம்பது பைசா! உழைப்பவனுக்கு என்றைக்குமே சல்லிக்காசு தான் கிடைக்கும் என்பதை அப்போதே புரியவைத்திருக்கிறார்கள். ஓவியங்கள், நகாசு வேலைகள் என பார்த்துப் பார்த்து இழைத்திருக்கிறார்கள். பல நாடுகளிலிருந்து பொருட்களைத் தருவித்து, வடிவமைத்திருக்கும் இந்த இடத்தில் பூங்காக்கள், Ball Room, Billiards Room, tennis court, Darbar Hall, Squash Court என பல வசதிகள் உண்டு. அக்கால அரண்மனைகள் போல இங்கேயும் மர்தானா, ஜெனானா என இரு பகுதிகள் – அதாவது ஆண்களுக்கான மற்றும் பெண்களுக்கான பகுதிகள் தனித்தனியாக இருக்கும் – தனித்தனி வாயில்களோடு!


ஓவியம் ஒன்று.... 
உமைத் சிங் பேலஸ், ஜோத்பூர்...



கடிகாரங்கள்...
உமைத் சிங் பேலஸ், ஜோத்பூர்...

அருங்காட்சியகத்தில் இருக்கும் பொருட்கள் – குறிப்பாக விதம் விதமான கடிகாரங்கள் வியக்க வைக்கின்றன. எத்தனை வடிவங்களில் கடிகாரங்கள், பரிசுப் பொருட்கள், கண்ணாடிகளால் ஆன சரக்குக் [அதாங்க சாராயம்] குடுவைகள், டம்ளர்கள், விளக்குகள் என ஒவ்வொன்றும் ஒவ்வொரு அழகு. பார்த்துப் பார்த்துப் பிரமிக்கும் வகையில் அதனை காட்சிப் படுத்தி இருக்கிறார்கள். கண்ணாடிக் குடுவைகளும், கடிகாரங்களும் நிறையவே இருந்தன. நேரம் பொன்னானது – ராஜ பரம்பரை கடிகாரங்கள் என்ற தலைப்பில் இங்கே காட்சிப்படுத்திய கடிகாரங்களை தனிப்பதிவாக முன்னர் வெளியிட்டு இருக்கிறேன். பார்க்காதவர்கள் அங்கேயும் பார்க்கலாம், ரசிக்கலாம். அனைத்துப் படங்களையும் இங்கே பகிர்ந்து கொள்வது சாத்தியமல்ல. சில படங்கள் மட்டும் இங்கே தந்திருக்கிறேன். விரைவில் தனிப்பதிவாக – படப் பகிர்வாக, ஞாயிறுகளில் பதிவிடுகிறேன்.


உமைத் சிங் பேலஸ், ஜோத்பூர்... 


உமைத் சிங் பேலஸ், ஜோத்பூர்...


விளக்குகள்.... 
உமைத் சிங் பேலஸ், ஜோத்பூர்...

அரண்மனை அருங்காட்சியகத்தில் உள்ள பொருட்களைப் பார்த்து விட்டு அங்கிருந்து வெளியே வந்தோம். அதே இடத்தில் தாஜ் குழுமத்தின் ஐந்து நட்சத்திர ஹோட்டல் இருக்கிறது – வெளியிலிருந்து பார்க்க மட்டுமே நமக்கு முடியும் – என்னது ஒரு நாள் தங்க எவ்வளவு ஆகும் என்றா கேட்கிறீர்கள் – இதோ சொல்கிறேன் – குறைந்த பட்சம் 31000 ரூபாயில் ஆரம்பித்து 500000, ஆமாங்க ஐந்து லட்சம் வரை ஒரு நாள் வாடகை – நான் சொல்வது மொத்த இடத்திற்கு அல்ல, ஒரு அறைக்கான வாடகை தான்! இது தவிர மஹாராஜா அறை, மஹாராணி அறை என இருப்பதற்கு வாடகை – அழைத்தால் சொல்வார்களாம்! மஹாராஜா அறை 4200 சதுர அடி, மஹாராணி அறை – 4850 சதுர அடி! யாருக்காவது தங்க ஆசை இருந்தால், அறைகளின் படம் பார்க்க ஆசை இருந்தால், இந்தத் தளத்தில் பார்க்கலாம்!


சின்னம்...
உமைத் சிங் பேலஸ், ஜோத்பூர்...


உமைத் சிங் பேலஸ், ஜோத்பூர்...


உமைத் சிங் பேலஸ், ஜோத்பூர்...

அரண்மனை வளாகத்திலேயே ஒரு சிறு விண்டேஜ் கார் ம்யூசியமும் இருக்கிறது. சுமார் 20 கார்கள் நிறுத்தி வைத்திருக்கிறார்கள். அனைத்தையும் பார்த்து விட்டு அங்கே இருந்த ஒரு Stall-ல் குல்ஃபி சாப்பிட்டோம். சிலர் பழரசம். அனைத்தும் சேர்த்து 520/- பில்! ரசித்து ருசித்து சாப்பிட்டு, சில பல படங்களைச் சுட்டுத் தள்ளிய பிறகு வெளியே வந்தோம். ஓட்டுனர் ஜோதி எங்களுக்காகக் காத்திருந்தார். அனைவரும் சேர்ந்து, செல்ஃபி ஸ்டிக் வைத்து ஓட்டுனர் ஜோதியுடன் ஒரு படம் எடுத்துக் கொண்டோம். இந்த செல்ஃபி நமக்கென்னவோ ஒத்துவருவதில்லை. இருந்தாலும் எடுத்துதான் பார்ப்போமே என எடுத்தேன் – Of course இங்கே வெளியிடுவதற்கு அல்ல! படங்கள் எடுத்து முடித்த பிறகு அங்கிருந்து புறப்பட்டோம். அடுத்ததாக என்ன, எங்கே சென்றோம் என்பதை நாளை சொல்கிறேன்.

பயணம் நல்லது! ஆதலினால் பயணம் செய்வோம்!

மீண்டும் ச[சி]ந்திப்போம்…

நட்புடன்

வெங்கட்
புது தில்லி.

30 கருத்துகள்:

  1. குட்மார்னிங் வெங்கட். சற்றே நீண்ட பதிவு போல...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காலை வணக்கம் ஸ்ரீராம்.

      சற்றே நீண்ட பதிவு - :) படங்களும் 20-க்கு மேல் இருப்பதால் அப்படித் தோன்றுகிறதோ?

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  2. ஒன்று சொல்லவேண்டும். மாளிகைகள் அழுக்குப் படிந்து நிற்காமல் பளபளப்பாகவே இருக்கின்றன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பராமரிப்பும் உண்டு. நூறு வருடத்திற்கும் குறைவான கட்டிடம் என்பதால் இன்னும் புதியதாகத் தெரிகிறதோ.....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  3. வேலை கொடுப்பதற்காக கட்டுமானம். நல்ல விஷயம்தான். ஆனாலும் மன்னர்கள் வாழ்வை ரசித்திருக்கிறார்கள்... வருடம் முழுவதும் ஒருநாளைக்கு ஒரு அறை என்று வசித்தாலும் போதாது!!! பிரம்மாண்டம். அருகாமை வீடுகள் அபார்ட்மெண்ட் வகையா? தனி வீடுகளோ? அவையும் பெரிதாகத் தெரிகின்றன!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மன்னர்கள் ரொம்பவே ரசித்து வாழ்ந்திருக்கிறார்கள்.... ஒரு நாளைக்கு ஒரு அறை... ஹாஹா...

      அருகே இருக்கும் வீடுகள் - தனி வீடுகள். ராஜ வம்சத்தினரே இப்படி வீடுகள் கட்டி விற்பதாகத் தெரிகிறது. பங்களாக்கள் தான் - பெரிய மனிதர்கள் அரண்மனை அருகே இருக்க வசதி....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  4. ​படங்கள் மூலம் அந்த இடங்களின் பிரம்மாண்டம் தெரிகிறது. பார்த்து ரசிக்க ஏற்ற இடங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம். பிரம்மாண்டம் தான் - நாம் பார்க்கும் இடம் அரண்மனையின் சிறிய பகுதி மட்டுமே என்றாலும் அதன் மூலம் பிரம்மாண்டம் உணர முடியும்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  5. அரண்மனை அழகு. அரண்மனை பக்கத்தில் உள்ள பெரிய வீடுகள் அழகு.
    அருங்காட்சியில் இடம் பெற்ற கடிகாரம் மற்ற பொருட்கள் எல்லாம் அழகு.
    அரண்மனை விவரங்கள் மலைக்க வைக்கிறது.
    பல கோணங்களில் எடுத்த அரண்மனை படங்கள் அழகு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.

      நீக்கு
  6. கலைநயம் மிக்க பொருட்கள் மற்றும் தகவல்கள் அசர வைத்தது...!

    வாடகை யம்மாடி...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஐந்து நட்சத்திர ஹோட்டல் என்பதால் வாடகை அதிகம். சாதாரண பட்ஜெட் ஹோட்டல்களும் இங்கே உண்டு.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

      நீக்கு
  7. கண் கவர் பொருட்கள் ...பிரமாண்டமான அரண்மனை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அனுராதா ப்ரேம்குமார் ஜி!

      நீக்கு
  8. உழைப்பாளிக்கு அடி மட்டக்கூலி இதுதான் எனக்கு வேதனையாக இருக்கிறது.

    அவர்கள் இல்லையெனில் இந்த அரண்மனைகள் உருவாகாது இதை அனைவரும் உணரவேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உழைப்பாளிகளுக்கு அடி மட்டக் கூலி. இது இப்போதும் தொடர்கிறது என்பது தான் வேதனை.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

      நீக்கு
  9. வெங்கட்ஜி நான் வந்தாச்!! ராஜஸ்தானை விட்ட இடத்திலிருந்து தொடர்ந்து சுற்றி வரேன் இல்லைனா சிரமம் ஆகிடும்..ஹா ஹா ஹா..நீங்க போய்க்கொண்டே இருங்கள் நான் இதோ பின்னாடி வேகமாக எல்லாம் பார்த்துட்டு வந்து குழுவோடு ஜாயின் செய்யறேன்...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா.... வருக வருக! சற்றே இடைவெளிக்குப் பிறகு உங்கள் வருகை. மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

      நீக்கு
  10. இத்தனை பெரிய மாளிகைகளைக்கட்ட எது தோற்றுவித்ததோ

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி.எம்.பி. ஐயா.

      நீக்கு
  11. உங்கள் பதிவுகளை http://valaippookkal.com தமிழ் திரட்டியில் இணைத்து உங்கள் எண்ணங்களையும், கருத்துகளையும் உலகமெங்கும் வாழும் தமிழர்களுடன் பகிர்ந்துகொள்ள வேண்டுகிறோம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் தகவல் பகிர்வுக்கும் மிக்க நன்றி வலைப்பூக்கள்!

      நீக்கு
  12. பார்க்காத ஊர் ஜோத்பூர். அரண்மனையின் பிரம்மாண்டம் வியக்க வைக்கிறது. அந்தக்கால ராஜாக்களில் பஞ்சாபின் ரஞ்சித் சிங் ராஜ வாழ்க்கையை மிகவும் ஆடம்பரமாக வாழ்ந்ததாகச் சொல்வார்கள். ராஜஸ்தான் ராஜாக்களும் சளைத்தவர்கள் இல்லை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

      நீக்கு
  13. //எதற்காக இந்த அரண்மனையைக் கட்டினார்கள் என்று பார்த்தால் – அங்கே உள்ள மக்களுக்கு வேலை கொடுக்கவாம்!//

    ஆஹா! அப்பவே நூறு நாள் வேலைத் திட்டமா. இப்போது மாதிரி அல்லாமல் ஒழுங்காக வேலை பார்த்திருப்பார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்போதே நூறு நாள் வேலைத் திட்டம்! ஹாஹா. இது சில வருட வேலைத் திட்டம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி.

      நீக்கு
  14. Dear Sir,
    I happened to visit your blog jumping from thulasidalam blog ... amusing and interesting travelogues i started reading the Rajasthan travelogues. i found there are more informations. so people like me from down tamilnadu , if they want to make a trip they can first go through your blogs. One thing i couldnt find is the accomodation details.... it will be useful for us to know where we can stay probably budget hotels or the hotels you have stayed...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் முதல் வருகை - மிக்க மகிழ்ச்சி.

      பெரும்பாலும் தங்குமிடங்கள் தனியார் இடங்களாக இருந்தால் வாடகை எழுதி இருப்பேன். இந்த ராஜஸ்தான் பயணத்தில் நாங்கள் தங்கியது அரசின் தங்குமிடங்கள். இதற்கடுத்த பகுதியில் விவரங்கள் சொல்லி இருக்கிறேன். ஆயிரம் ரூபாய் முதல் நல்ல வசதியான தங்குமிடங்கள் உதய்பூர்/ ஜோத்பூர் நகரங்களில் கிடைக்கின்றன. மேலதிக விவரங்கள் தேவையென்றால் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள்.

      என்னுடைய வலைப்பூவில் நிறைய பயணக்கட்டுரைகள்/தொடர்கள் உண்டு. சில மின்புத்தகங்களாகவும் இருக்கின்றன. முடிந்த போது படிக்கலாம்.

      தங்களது முதல் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி Sarav.

      நீக்கு
  15. வணக்கம் சகோதரரே

    அரண்மனை மிகவும் அழகாக இருக்கிறது. அதுவும் தாங்கள் பல கோணங்களில் எடுத்த படங்கள் மிகவும் அழகு. அதன் பிரம்மாண்டமும், வேலைப்பாடுகளும் அசர வைக்கின்றன. அருகில் கட்டப்பட்டு வரும் வீடுகள் கூட அரண்மனை சாயல்களை பெற்று வளருகிறதே..

    அங்குள்ள கலைப் பொருள்கள் அனைத்தும் அருமையாக உள்ளது. சங்கு படம் நன்றாக உள்ளது. ஓவியமும் மிக அழகு.

    அரண்மனைப் பற்றிய ஒவ்வொரு விஷயமும் பிரமிப்பாக இருக்கிறது.ஒரு நாள் வாடகை மிகவும் பயமுறுத்துகிறது. ஹா ஹா தங்கள் பதிவின் மூலம் அனைத்து இடங்களையும் சுற்றிப் பார்த்த திருப்தி கிடைக்கிறது. இதுவே போதும்...பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கமலா ஹரிஹரன் ஜி!

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....