ஞாயிறு, 15 மார்ச், 2020

ரோஜா பூந்தோட்டம் – தலைநகரிலிருந்து – நிழற்பட உலா…



அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம்.  இந்த நாளை, கவிமலர் என்பவர் எழுதிய நல்லதொரு கவிதையுடன் ஆரம்பிக்கலாமா?
 
உன்
அழகிலும்
வாசத்திலும்
மதி மயங்கி
கிடக்கிறேன்
அதிலும்
உன் இதழில்
பனித்துளியை
காண்கையில்
மென்மேலும்
காதல் கொள்கிறேன்…
ரோஜாப்பூவே!

தலைநகரின் ஷாந்தி பத் பகுதி – வெளிநாடுகளின் தூதரகங்கள் நிறைந்த பகுதி.  அந்தப் பகுதியில் சாலையின் இருபுறங்களும் அழகான புல்வெளிகளும், பூஞ்செடிகளும் உண்டு. கூடவே சிறந்த பராமரிப்பும்.  எல்லா நாட்களிலும் அங்கே பூக்கள் பூத்துக் குலுங்குவதைக் காண முடியும்.  அந்தப் பகுதியில் இருக்கும் இரயில் அருங்காட்சியகம் அருகே இரண்டு பூங்காக்கள் – ஒன்று BRICS ROSE GARDEN மற்றொன்று INDO AFRICAN FRIENDSHIP GARDEN.  சென்ற வாரத்தின் விடுமுறை நாளொன்றில் இந்தப் பூங்காக்களுக்குச் சென்று வரலாம் என முடிவு செய்திருந்தோம் – தோம் என இங்கே குறிப்பிடக் காரணம் முடிவு செய்தது நானும் நண்பர் பத்மநாபனும்.  பத்மநாபன் அவர் வீட்டிலுருந்தும், நான் என் வீட்டிலிருந்தும் ஒரே சமயத்தில் புறப்பட்டு அங்கே சந்திப்பது என முடிவு செய்தோம். அவர் முன்னரே வந்து சேர, நான் பேருந்து கிடைக்காத காரணத்தால் சற்றே தாமதமாக சென்று சேர்ந்தேன்.  முதல் நாள் பெய்த மழையில் ரோஜாக்கள் பல தங்கள் இதழ்களை இழந்திருந்தாலும் இருந்த பூக்களை மட்டும் பார்த்து ரசித்ததோடு, எனது காமிராவிலும் சிறைபிடித்து வந்தேன். 

அப்படி எடுத்த நிழற்படங்கள், இந்த வாரத்தின் நிழற்பட உலாவாக இதோ உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். ரோஜாவின் படங்கள் உங்களுக்கும் பிடித்திருக்கும் என நம்புகிறேன். 


































































நண்பர்களே, இந்த வாரத்தின் நிழற்பட உலா உங்களுக்குப் பிடித்திருந்ததா என்பதை பின்னூட்டத்தில் சொல்லுங்களேன். விரைவில் வேறு ஒரு பதிவுடன் மீண்டும் [சி]ந்திப்போம்...

நட்புடன்

வெங்கட்
புது தில்லி

34 கருத்துகள்:

  1. அழகிய ராஜாக்களின் தரிசனம் காலையில்.  மனம் மலரட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ரோஜா ராஜா ஆகிவிட்டது!   கவிமலர் எழுதிய கவிதை அழகு.

      நீக்கு
    2. மனம் மலரட்டும் - அப்படியே ஆகட்டும் ஸ்ரீராம்.

      நீக்கு
    3. ரோஜா மலர்களில் ராஜா!

      கவிதை உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி ஸ்ரீராம்.

      நீக்கு
  2. பூக்களின் தெளிவு வசீகரிக்கிறது ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பூக்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கில்லர்ஜி.

      நீக்கு
  3. ரோஜாக்கள் படம் அழகு.... ரோஜா படம் எடுத்த பத்மநாபன் அண்ணாச்சியைத்தான் காணோம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ரோஜா படம் எடுத்த அண்ணாச்சி படம் உண்டு - ஆனால் உங்களைப் போலவே அவரும் படங்களை வெளியிட விரும்புவதில்லை நெல்லைத் தமிழன்.

      நீக்கு
    2. அதுல என்ன பிரச்சனைனா... எழுத,தை வைத,து ஒருவருக்கு நாம் கற்பனையில் உருவம் கொடுப்போம்...அது எப்படிப் பொருந்துது என்று பார்க்கும் ஆவல்தான். ஹா ஹா ஹா

      நீக்கு
    3. ஹாஹா... நல்ல ஆவல் உங்களுக்கு! உருவத்திற்கும் எழுத்திற்கும் சம்பந்தம் இருப்பது மாதிரி எனக்குத் தோன்றவில்லை நெல்லைத் தமிழன்.

      நீக்கு
  4. ரோஜாக்கள் அழகு. சிவப்பு ரோஜாவும், ரோஜா நிற ரோஜாவும் நசிராபாதில் இருக்கையில் வளர்த்திருக்கோம். மற்றவை வரவில்லை. வெள்ளை ரோஜா கொஞ்சம் வந்தது. இப்போது எல்லாம் நினைவுகள் மட்டுமே! அழகிய பூக்களைக் காலை வேளையில் கண்ணாரக் கண்டு மகிழ்ந்தேன். நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ரோஜாக்கள் - நெய்வேலி வீட்டோடு தோட்டமும் பூக்களும் போயிற்று! தில்லி வந்த பின்னர் இப்படி பூங்காக்களில் பார்த்து ரசிக்க மட்டுமே முடிகிறது கீதாம்மா..

      காலை நேரத்தில் பூக்கள் கண்டு ரசிக்க முடிந்ததே உங்களுக்கு! மகிழ்ச்சி.

      நீக்கு
  5. பதில்கள்
    1. பதிவு உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி தனபாலன்.

      நீக்கு
  6. வணக்கம் சகோதரரே

    கவிதை அருமை. மலர்களின் படங்கள் ஒவ்வொன்றும் விதவிதமான அழகு. ரோஜா என்றாலே அழகுதானே.. அதன் வண்ணங்கள் கண்களை கவர்கிறது. மிகவும் ரசித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கவிதை உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கமலா ஹரிஹரன் ஜி.

      ரோஜா என்றாலே அழகு தானே! உண்மை.

      நீக்கு
  7. நிழற்படத் தொகுப்பு அருமை.

    தமிழ் வலைப்பூக்களுக்கு ஆதரவு வழங்க, புதிய வலைத்திரட்டியை உருவாக்கும் புதிய முயற்சி. உருவாகியது புதிய இணையத்தளம்: வலை ஓலை . நமது, வலை ஓலை இணையத்தளத்தில் பரீட்சார்த்தமாக 14 வலைத்தளங்கள் இணைக்கப்பட்டுள்ளன.

    தற்போது, தங்களது ரோஜா பூந்தோட்டம் – தலைநகரிலிருந்து – நிழற்பட உலா… பதிவும் எமது தளத்தில் இணைக்கப்பட்டுள்ளது. அத்துடன், அனைத்து வலைத்தளங்களையும் எமது வலைத்திரட்டியில் இணைக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளோம்.

    உங்கள் மேலான ஆதரவை வழங்க கேட்டுக் கொள்கிறேன். உரிய ஆதரவின்றி இழுத்து மூடப்பட்ட வலைத் திரட்டிகளின் நிலை எமது தளத்துக்கு ஏற்படாது என நம்புகிறோம்.

    உங்கள் வலைப்பதிவை அறிமுகப்படுத்த ஒரு சந்தர்ப்பம். விபரம் இங்கே: நீங்களும் எழுதலாம்

    எமது வலைப் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ள வலைத்தளங்களின் வலைப்பட்டியலைக் காண: வலைப் பட்டியல்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி சிகரம் பாரதி.

      வலை ஓலை - வாழ்த்துகள். உங்கள் முயற்சி வெற்றி பெறட்டும்.

      நீக்கு
  8. ரோஜாவும் அழகு . கவிதையும் அழகு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கவிதையும் ரோஜாக்களும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி நாகேந்திர பாரதி.

      நீக்கு
  9. பதில்கள்
    1. ரோஜாக்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  10. ஆலங்கட்டி மழை பெய்து இருக்கு போலவே! தொலைக்காட்சியில்ப் பார்த்தேன்.
    மலர்களின் அழகு கண்ணைக்கவருது.
    அனைத்து மலர்களும் அழகு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆலங்கட்டி மழை - ஆமாம் கோமதிம்மா... நேற்று (சனிக்கிழமை) மதியம் ஆலங்கட்டி மழை.

      மலர்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

      நீக்கு
  11. கவிதையும் நன்றாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கவிதையும் உங்களுக்குப் பிடித்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா...

      நீக்கு
  12. பதில்கள்
    1. ரோஜாக்களின் அழகு உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி குமார்.

      நீக்கு
  13. மனதை மலரச் செய்யும் வண்ண ரோஜாக்கள்.. படங்கள் அழகு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மனதை மலரச் செய்யும் வண்ண ரோஜாக்கள் - உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி ராமலக்ஷ்மி.

      நீக்கு
  14. மலர்ந்து சிரிக்கும் ரோஜாக்களை என்றும் காண தெவிட்டுவது இல்ல ...அற்புத அழகு அவை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தெவிட்டாத அழகு தான் இப்பூக்கள் - உண்மை அனுப்ரேம் ஜி. பார்க்கப் பார்க்க அலுக்காதவை.

      நீக்கு
  15. ஹைய்யோ !!!! எத்தனையெத்தனை நிறங்கள் !!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அழகான நிறங்களில் பூக்கள். உங்களுக்கும் பிடித்தில் மகிழ்ச்சி துளசி டீச்சர்.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....