ஞாயிறு, 29 மார்ச், 2020

நல்லதே நினைப்போம் - குறும்படம்


அனைத்து நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம். இன்றைய பொழுதை ஒரு இனிமையான வாசகத்துடன் ஆரம்பிக்கலாம்.

என்னை யாருக்கும் பிடிக்கவில்லை என்று கவலைப்படுவதற்கு நீ சந்தையில் விற்கப்படும் பொம்மையல்ல. நீ என்பது நீயே… உன்னை உனக்குப் பிடித்திருந்தால் போதும்.


சமீப நாட்களில் அதிகமாக குறும்படங்கள் பார்க்க ஆரம்பித்திருக்கிறேன்.  நாள் முழுவதும் வரும் செய்திகளை, காணொளிகளை பார்த்து மனது கஷ்டப்படுவதை விட நல்ல படங்களாக தேர்ந்தெடுத்து பார்க்கலாம் என்றால் இரண்டு மணி நேரம் ஓடும் படங்களைப் பார்க்கும் பொறுமை இல்லை. அதனால் பதினைந்து இருபது நிமிடங்கள் மட்டும் ஓடக்கூடிய சில குறும்படங்களை தினமும் ஒன்றிரண்டாவது பார்த்து விடுகிறேன்.  அப்படி பார்த்த ஒரு குறும்படம் – மனதைத் தொட்ட குறும்படம் என்பதால் இங்கே பகிர்ந்து கொள்கிறேன். இந்த வாரமும் குறும்படம் ஹிந்தி மொழியில் தான் – ஹிந்தி தெரியாதவர்கள் கவலை கொள்ள வேண்டாம் – ஆங்கிலத்தில் சப் டைட்டில் உண்டு! படத்தினைப் பார்க்கும் முன்னர் சில வார்த்தைகள்…

கணவன், மனைவி இரண்டு குழந்தைகள். முதல் காட்சியே கணவனுக்கும் மனைவிக்குமான சண்டையில் ஆரம்பிக்கிறது – எல்லாம் இல்லாத கொடுமை தான் – கணவரின் தொழிலில் மந்தமான சூழல். நான்கு ஐந்து மாதங்களாக வீட்டு வாடகை கொடுக்க முடியவில்லை – பிள்ளைகளின் பள்ளிக்குக் கட்டணம் கட்ட முடியவில்லை.  தொழிலில் வாடிக்கையாளர்கள் இவர் விற்பனை செய்யும் தண்ணீர் சுத்திகரிப்பு இயந்திரங்களை வேண்டும் எனச் சொல்லி, கொண்டு போய் கொடுக்கும்போது வேண்டாம் எனச் சொல்லி விடுகிறார்கள்.  இந்த பிரச்சனைகள் போதாது என, அவருக்கு உடல் நிலையும் சரியில்லாமல் போகிறது – தொடர் இருமல். மருத்துவர் சில பரிசோதனைகளைச் செய்து கொள்ளச் சொல்லி அதன் முடிவுகளோடு சந்திக்கச் செல்கிறார்.  அப்போது மருத்துவமனையில் என்ன நடக்கிறது, அங்கே சந்திக்கும் நபர் இவரை நிறையவே கேள்வி கேட்க, இத்தனை நாள் மனதுக்குள் வைத்திருந்த சோகம் அனைத்தும் வெடித்து வெளியே வருகிறது. தன் பிரச்சனைகளை அவரிடம் சொல்லி, செத்து விடலாம் எனத் தோன்றுகிறது என்கிறார். மருத்துவரைச் சந்தித்த பிறகு அவரது பிரச்சனைகளுக்கு நல்ல முடிவு கிடைத்ததா? இல்லையா என்பதை இந்தப் படத்தினைப் பார்த்து தெரிந்து கொள்ளுங்களேன்!




நண்பர்களே, நல்லதே நினைப்போம் என்று நமக்குச் சொல்லும் இந்தக் குறும்படம் உங்களுக்குப் பிடித்ததா? இந்தக் குறும்படம் பற்றிய உங்கள் கருத்துகளைச் சொல்லுங்களேன். விரைவில் வேறு ஒரு பதிவுடன் மீண்டும் [சி]ந்திப்போம்...

நட்புடன்

வெங்கட்
புது தில்லி

30 கருத்துகள்:

  1. இனிய காலை வணக்கம் வெங்கட்ஜி!

    நல்ல வாசகம். சிறிய வயது அனுபவத்தையும் நினைவூட்டுகிறது!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இனிய காலை வணக்கம் கீதாஜி.

      வாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

      நீக்கு
  2. இனிய காலை வணக்கம் வெங்கட், அருமையான
    குறும்படம். வாழ்க்கை எத்தனை உன்னதம்.
    வாழ்க வளமுடன்.
    மிக மிக நன்றி மா.சந்தோஷம் எங்கும் நிலைக்கட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இனிய காலை வணக்கம் வல்லிம்மா....

      குறும்படம் நல்ல விஷயம் சொல்கிறது. உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

      சந்தோஷம் எங்கும் நிலைத்திருக்கட்டும்.

      நீக்கு
  3. ஆ...   அந்த கணவனுக்கு தொடர் இருமலா?  உடனே டெஸ்ட் செய்ய வேண்டுமே...   கூட இருந்தவர் எவ்வளவு அருகில் உட்கார்ந்திருந்தாரோ...   அவரையும் தனிமைப்படுத்த வேண்டுமே...   ஹா..  ஹா..  ஹா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இனிய காலை வணக்கம் ஸ்ரீராம்.

      தொடர் இருமலா... தனிமைப் படுத்த வேண்டுமே! ஹாஹா.... கொரோனா எப்படியெல்லாம் நினைக்க வைக்கிறது.

      நீக்கு
    2. நீங்க வேற ஸ்ரீராம். இன்று மகாபாரதம் சீரியல் பார்த்தபோதும், உள்ளத்தை அள்ளித்தா படம் பார்த்தபோதும், அடடா, கட்டிப்பிடிக்கிறார்களே, கை குலுக்குகிறார்களே, 1 மீட்டர் தொலைவைக் கடைபிடிக்கவில்லையே என்றே என் மனதில் ஓடிக்கொண்டிருந்தது (நிஜமா)

      நீக்கு
    3. ஹாஹா... கட்டிப்புடி வைத்தியம் பார்க்கறாங்களேன்னு பயமாதான் இருக்கு!

      1 மீட்டர் தொலைவை கடைபிடிப்பதே இல்லை யாருமே நெல்லைத் தமிழன்.

      நீக்கு
    4. மீள் வருகைக்கு நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  4. நான் குறும்படங்கள் கூட பார்ப்பதில்லை.  மனம் செல்ல மாட்டேன் என்கிறது.  பாடல்கள் கூட கேட்பதில்லை.  ஏதோ பொழுது நகர்கிறது.  புதுமைப்பித்தன் சிறுகதைத் தலைப்பு போல ஒவ்வொரு நாளையும் 'ஒரு நாள் கழிந்தது' என்று தள்ளத் தோன்றுகிறது.  தவறுதான்.  ஆனாலும் அப்படிதான் இருக்கிறது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சின்னச் சின்ன விஷயங்களை செய்து கொண்டே இருக்க வேண்டியிருக்கிறது ஸ்ரீராம். ஒரேயடியாக ஒன்றுமே செய்யாமல் இருந்தால் மனம் அலைபாயும். அதனால் தான் இந்த மாதிரி விஷயங்களை செய்து கொண்டே இருக்க வேண்டும்.

      முடிந்த போது இந்த குறும்படம் பாருங்கள். நல்ல விஷயங்களைச் சொல்லி இருக்கிறார்கள்.

      நீக்கு
  5. உன்னை உனக்குப் பிடித்திருந்தால் போதும். மிகவும் ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.

      நீக்கு
  6. பொன்மொழி அற்புதம் ஜி எனக்குள் புத்துணர்வை தந்தது நன்றி.

    குறும்படம் காண்கிறேன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பொன்மொழி உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கில்லர்ஜி.

      குறும்படம் முடிந்த போது பார்த்து உங்கள் கருத்துகளைச் சொல்லுங்கள் ஜி.

      நீக்கு
  7. நல்லதொரு குறும்படம் ஜி... நன்றி...

    நல்லதே நடக்க வேண்டும்... நடக்கும்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குறும்படம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி தனபாலன்.

      நல்லதே நடக்கட்டும். நடக்கும் என்ற நம்பிக்கையுடன் இருப்போம்.

      நீக்கு
  8. வீடியோ நாட் அவைலபிள் என்கிறது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்த காணொளியை இங்கே சேர்த்ததால் அப்படி வருகிறது. ஒரு முறை க்ளிக் செய்தால் மேல்பக்கத்தில் Watch in Youtube என வருகிறது பாருங்கள். அதன் மூலம் பார்க்கலாம். அவர்கள் தளத்தில் மட்டுமே பார்க்க வேண்டும் என்பதால் இப்படிச் செய்கிறார்கள் ஜி.எம்.பி. ஐயா. சுட்டியும் தருகிறேன்.

      http://www.youtube.com/watch?v=GZT_C3yiWjw&feature=emb_err_watch_on_yt

      நீக்கு
  9. இனிமையான வாசகம் ரசித்தேன்.
    நல்லதொரு குறும்படம்.
    நானும் youtubeல் தான் சென்று பார்த்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி சொக்கன் சுப்ரமணியன்.

      யூட்யூப் காரன் இங்கே பார்க்காதே, என் பக்கத்தில் பாருன்னு திருப்பி அடிக்கிறான்! ஹாஹா... அவனுக்கு சம்பாத்தியம் முக்கியம் ஆச்சே!

      நீக்கு
  10. வாசகம் அருமை.
    காணொளி அதைவிட அருமை.

    அவருக்கு கிடைக்கும் முடிவு அருமை.
    நன்றாக நடித்து இருக்கிறார்கள் அனைவரும்.
    வாழ்க்கை இனி சுகமே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா...

      குறும்படம் பற்றிய உங்கள் கருத்திற்கு நன்றி.

      நீக்கு
  11. //உன்னை உனக்குப் பிடித்திருந்தால் போதும்.
    //

    இதுதான் முக்கியம், ஒருவரை வாழவைக்க இது போதும்.. குறும்படம் இப்போ பார்க்கவில்லை.. பின்பு முடிஞ்சால் வருகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி அதிரா...

      குறும்படம் முடிந்த போது பாருங்கள் அதிரா. நல்ல படம். உங்களுக்கும் பிடிக்கும் என நம்புகிறேன்.

      நீக்கு
  12. உன்னை உனக்குப் பிடித்திருந்தால் போதும் - இதில் பல அர்த்தம் உள்ளது. நாம் தர்மப்படி நடக்கவில்லை என்றால் நம் மனசாட்சி ஒத்துக்கொள்ளாது, நம் மனது நம்மை நிம்மதியாக இருக்க விடாது. நாம் நம் மனசாட்சிக்கு நேர்மையாக நடந்துகொண்டுவிட்டால், பிறர் என்ன நினைப்பாரோ என்று நாம் ஏன் கவலைப்படவேண்டும்? மற்றவர் பெர்சப்ஷன் நம்மை எதற்காக பாதிக்கவேண்டும்? நல்ல வாசகம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி நெல்லைத் தமிழன்.

      நீக்கு
  13. பதில்கள்
    1. குறும்படம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி மாதேவி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....