செவ்வாய், 3 மார்ச், 2020

கதம்பம் – சந்திப்பு – வாழைப்பூ வடை – ஓவியம் - குக்கீஸ்


நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் ஆரம்பிக்கலாம்.

நட்பு என்பது வெறும் வார்த்தை அல்ல. உணர்வோடும் உறவோடும் நம் வாழ்வில் நுழையும் ஒரு பொக்கிஷம்!


ஆதியின் அடுக்களையிலிருந்து… -  28 ஃபிப்ரவரி 2020:


 வாழைப்பூ வடை…

மாலை நேரத்தில் கொறிக்க!!

வாரச் சந்தையில் கூறு 10 ரூ என்று வாங்கியதில் மூன்று வாழைப்பூ இருந்தது. ஒரு பூவை நேற்று இரவே ஆய்ந்து, மோரில் நறுக்கி போட்டு வைத்திருந்தேன். அதில் பாதிப் பூவை, கடலைப்பருப்பு கலவையுடன் சேர்த்து பள்ளியிலிருந்து மகள் வந்தவுடன் வடையாக தட்டிப் போட்டது.

வாங்க நட்புகளே! சுடச்சுட வாழைப்பூ வடை சாப்பிடலாம்.

தேநீருடன் - ஒரு கடி! ஒரு குடி!

நட்பு - 25 ஃபிப்ரவரி 2020:



நேற்று மாலை டெல்லித் தோழி ஷோபனாவுடனான சந்திப்பில் நேரம் போனதே தெரியவில்லை. அலுவல் வேலையாக திருச்சிக்கு வந்திருந்தும், நேர நெருக்கடியிலும் எங்களைக் காண வந்தது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.

நாங்கள் எல்லோரும் டெல்லியில் ஒரே பகுதியில் வசித்தவர்கள். வார இறுதிக்களை இனிமையாக கழித்தவர்கள். மாதம் ஒரு முறையேனும் ஒவ்வொருவர் வீட்டில் "கெட் டு கெதர்" ஏற்பாடு செய்யப்பட்டு ஆளுக்கொரு பதார்த்தமாக செய்து எடுத்துக் கொண்டு சென்று வேலைகளை பகிர்ந்து, சாப்பிட்டு அரட்டை அடிப்பது, "இந்தியா கேட்" டிற்குச் சென்று வருவது, குளிர்காலங்களில் வெயில் அடிக்கும் பகல் வேளைகளில் அருகில் இருக்கும் பூங்காக்களுக்கு சென்று அரட்டை அடிப்பது என்று பொழுதுகளை இனிமையாக கழித்திருக்கிறோம்.

எல்லோரிடமும் கற்றுக் கொள்ள வேண்டிய குணாதிசயங்கள் சில இருக்கும். இந்தத் தோழியிடம் நான் தெரிந்து கொண்டது ஆர்ப்பாட்டமில்லாத நிதானம். அலுவலகத்தில் எவ்வளவோ வேலைப் பளு இருப்பினும், டெல்லியின் கடும் வாகன நெரிசலிலும் நீண்ட நேரம் பயணித்து வீடு திரும்பியதும் உடனே அடுக்களைக்குச் சென்று அடுத்து ஆக வேண்டிய வேலைகளை கவனிப்பார்.

இவர்கள் வீட்டுக்கும் யாரேனும் வந்து கொண்டே தான் இருப்பார்கள். அவர்களையும் முடிந்தவரை சாப்பிடாமல் அனுப்பியதில்லை. வீட்டு வேலைக்கும் ஆள் வைத்துக் கொண்டதில்லை. வார இறுதியிலும் காய்கறி மண்டிக்குச் சென்று வாங்கி வருவது, வீட்டை சுத்தம் செய்வது என்று ஏதேனும் செய்து கொண்டே தான் இருப்பார்.

குக்கரிலேயே செய்யும் சன்னா மசாலாவும், ஸ்டஃப்பிங் இல்லாத ப்ரெட் பக்கோடாவும் நான் இந்தத் தோழியிடம் தான் கற்றுக் கொண்டேன். சென்ற மே மாத டெல்லிப் பயணத்தில் எங்களுக்கு என்ன வேண்டும் எனக் கேட்டு சமைத்து தந்தார். சுடச்சுட ஃபுல்கா ரொட்டி இன்னும் ஒன்று கூடுதலாகவே உள்ளே சென்றது :)

டெல்லியில் அப்போது ஒன்றாக இருந்த நாங்கள் இப்போது ஆளுக்கொரு திசையாக டெல்லி, மும்பை, சென்னை, திருச்சி என்று இருக்கிறோம். மீண்டும் வாராதோ அந்த பசுமையான நாட்கள்?

ரோஷ்ணி கார்னர் - 27 ஃபிப்ரவரி 2020

சமீபத்தில் மகள் வரைந்த ஒரு ஓவியம் – உங்கள் பார்வைக்கு.



ஆதியின் அடுக்களையிலிருந்து… - குக்கீஸ் – 1 மார்ச் 2020:

Gulab jamun cookies!!



சில மாதங்களுக்கு முன் வாங்கி வைத்த குலாப்ஜாமூன் மிக்ஸ் அப்படியே இருந்தது. அதை குலாப்ஜாமூனாக செய்தால் இனிப்பு ப்ரியையான என்னிடமிருந்து அதைக் காப்பாற்றுவது கடினம் :)

அதை வைத்து வேறு ஏதாவது செய்து பார்க்கலாம் என்று YouTube-ல் தேடிய போது கிடைத்தது இந்த ரெசிபி. செய்முறை எளிது. சுவையோ அபாரம். குக்கீஸ் கட்டரோ, மைக்ரோவேவ் அவனோ இல்லாததால் வழக்கம் போல் கடாயில் உப்பு போட்டு சூடுபடுத்தி பேக் செய்துள்ளேன். ஒழுங்கான வடிவமாக இருக்காது :)

இந்த இணைப்பில் செய்முறையைப் பார்க்கலாம்.


பின்னோக்கிப் பார்க்கலாம் வாங்க – 3 மார்ச் 2014



இதே நாளில் 2014-ஆம் ஆண்டு வலைப்பூவில் எழுதிய ஒரு வாசிப்பனுபவம். இந்திரா சௌந்தர்ராஜன் அவர்களின் எழுத்தில் “என் பெயர் ரங்கநாயகி” புத்தகத்தினை வாசித்த அனுபவத்தினை பகிர்ந்து கொண்டிருக்கிறேன். பதிவினை அப்போது படிக்காதவர்கள் வசதிக்காக, இங்கே அப்பதிவின் சுட்டி…


என்ன நண்பர்களே, இந்த நாளின் கதம்பம் பதிவு உங்களுக்குப் பிடித்திருந்ததா? பதிவு பற்றிய உங்கள் கருத்துகளைப் பின்னூட்டத்தில் தெரிவிக்கலாமே!

மீண்டும் சந்திப்போம்… சிந்திப்போம்…

நட்புடன்

ஆதி வெங்கட்.

28 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. நலமே விளையட்டும்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஐயா.

      நீக்கு
  2. வாழைப் பூ வடை எங்கள் வீட்டில் அடிக்கடி செய்யப்படுவதாகும்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா... மகிழ்ச்சி. நிறைய பேர் வீட்டில் இப்போது செய்கிறார்கள்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஐயா.

      நீக்கு
  3. பதில்கள்
    1. மகளின் ஓவியம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி துரை செல்வராஜூ ஐயா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  4. ரோஷினியின் கைவண்ணம் மெருகேறி வருகிறது...வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மகளின் ஓவியம் உங்களுக்கும் பிடித்திருப்பதில் மகிழ்ச்சி ரமணி ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  5. சுவையான கதம்பம்....


    ரோஷ்ணியின் ஓவியம் மிக அழகு...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கதம்பம் பதிவு உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி அனுப்ரேம் ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  6. கதம்பம் மிகவும் அருமை... அன்பு மகளுக்கு பாராட்டுகள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கதம்பம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி தனபாலன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  7. ஓவியம் அழகு வாழைப்பூ வடை வீட்டில் அடிக்கடி செய்வார்கள்.
    நட்பு பொன்பொழிக் கேற்ற பதிவு ஸூப்பர்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்திருப்பதில் மகிழ்ச்சி கில்லர்ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  8. தங்கள் அன்பு மகளின் கைவண்ணம் அருமை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மகள் வரைந்த ஓவியம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  9. வாழைப்பூ வடை பார்க்கவே அழகு.
    நானும் செய்து இருக்கிறேன் வாழைப்பூ வடை.

    ஓவியம் அழகு. ரோஷணிக்கு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கதம்பத்தின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா...

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  10. இந்திரா சௌந்தர ராஜன் நம் வலைப்பதிவர் ( இப்போதெல்லாம் பெயர்கள்நினைவுக்கு வருவதில் சிரமம் இப்போது நினைவுக்கு வருகிறது ஷைலஜா நாராயணன் ) திருமதி ஷைலஜா வின் உறவு என்றுசொன்ன / எழுதிய நினைவு அவரும் ஸ்ரீரங்கத்துக்காரர்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம். முன்பெல்லாம் பதிவுகள் எழுதிக் கொண்டிருந்தார் ஜி.எம்.பி. ஐயா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  11. வாழைப்பூவை ஆய்ந்துவடைக்கு சரிசெய்வததான்பெரியவேலை சுள்ளான்கள் என்பார்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம். அதிக வேலை தான் ஜி.எம்.பி. ஐயா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  12. மிக நேர்த்தியான வேலைப்பாடுடன் ஆதியின் கைவண்ணங்களில் ருசியான
    வடையும் ,குக்கீஸும்.
    அன்பான தோழிகள் ஒரு வரம். மீண்டும் இனிமையான
    நேரங்கள் கிடைக்க வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா...

      நீக்கு
  13. ரோஷ்னியின் ஒவியம் சூப்பர்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராமசாமி ஜி.

      நீக்கு
  14. கதம்பம் சுவை.மகளுக்கு பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கதம்பத்தின் சுவை உங்களுக்கும் பிடித்திருந்ததில் மகிழ்ச்சி மாதேவி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....