ஞாயிறு, 8 மார்ச், 2020

அம்மாவின் பாசம் – ஆயில் - குறும்படம்


அனைத்து நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம். இன்றைய பொழுதை ஒரு இனிமையான வாசகத்துடன் ஆரம்பிக்கலாம்.

உன்னால் பிறர் கண்ணீர் விட்டால் அது பாவம். உனக்காக பிறர் கண்ணீர் விட்டால் அது பாசம்!





பொதுவாக ஞாயிறு என்றால் இங்கே நிழற்பட உலா பதிவு தான் இருக்கும். ஆனால் இன்றைக்கு நிழற்பட உலா பதிவு அல்ல! சமீபத்தில் பார்த்த ஒரு விளம்பரம்/குறும்படம் – மனதைத் தொட்ட குறும்படம் என்பதால் இங்கே பகிர்ந்து கொள்கிறேன். படத்தினைப் பார்க்கும் முன்னர் சில வார்த்தைகள்…

ஒரு வீடு… அந்த வீட்டில் ஆறு குழந்தைகள் – ஆறில் ஒரு பெண் குழந்தைக்கு மட்டும் தன் தாய் மீது கொஞ்சம் கோபம் – வெறுப்பு என்று கூட சொல்லலாம்! தன் மீது தன் தாய்க்கு எந்த வித ஈடுபாடோ, விருப்பமோ இல்லை என்ற எண்ணம்.  பொதுவாகவே வீட்டில் மூன்று நான்கு குழந்தைகள் இருக்கும்போது எல்லோரிடத்திலும் அம்மா பாசத்தைப் பொழிந்தாலும் சில குழந்தைகளுக்கு இந்த மாதிரி தோன்றிவிடுவது இயல்பு! அக்கா மீது அம்மா பொழியும் பாசம் அதிகம், என் மீது அத்தனை அன்பு செலுத்துவதில்லை என்ற எண்ணம் வந்து விடும்! ஒரு முறை இப்படித் தோன்றிவிட்டால் அம்மா செய்யும் ஒவ்வொரு விஷயமும், அந்தக் குழந்தைக்கு தவறாகவே தோன்றிவிடுவது இயல்பு – “அக்கான்னா, அம்மாவுக்கு கொஞ்சம் ஸ்பெஷல் தான்! என் மீது பாசம் ஒரு மாற்றுக் குறைவு தான்” என்று தோன்றிவிடும். 

இன்றைக்கு நாம் இங்கே பார்க்கப் போகும் குறும்படமும் ஆறு குழந்தைகள் கொண்ட ஒரு குடும்பத்தில் நடக்கும் கதை தான்! என் அம்மாவின் பார்வையில் எனக்கு முக்கியத்துவம் இல்லவே இல்லை என்று நம்பும் ஒரு பெண் – தான் வீட்டை விட்டுச் சென்றாலும் அம்மாவிற்கு பெரிய இழப்பு இல்லை என்று நினைத்துக் கொள்ளும்படிச் செய்கிறது சில நிகழ்வுகள்.  வீட்டினை விட்டு மேல் படிப்புக்காக வெளி நாடு செல்பவர் சில வருடங்கள் வரை வீடு திரும்பவே இல்லை.  சில வருடங்களுக்குப் பிறகு வீடு திரும்பும் அப்பெண் தன் தாயின் அன்பு மற்றும் பாசம் அவரது எல்லாக் குழந்தைகளுக்கும் உண்டு என்பதை உணர்ந்தாரா இல்லையா என்பது தான் குறும்படத்தில் சொல்லி இருக்கிறார்கள் – Add Oil என்ற தலைப்பு கொண்ட இந்தக் குறும்படம் சீன தேசத்திலிருந்து – Knife எனும் எண்ணை தயாரிப்பாளர்கள் எடுத்த விளம்பரப் படம் என்றாலும் இந்தக் குறும்படம் மனதைத் தொட்டது!  மொத்தம் பத்து நிமிடம் ஓடும் இக்குறும்படத்தினை நேரம் எடுத்துப் பாருங்களேன்.  சீன மொழி தெரியாது என்ற கவலை வேண்டாம் – ஆங்கிலத்தில் Sub Title இருக்கிறது என்பதால் புரிந்து கொள்வதில் சிரமம் இல்லை!



பிற்சேர்க்கை:  பதிவுலகத்தில் இருக்கும், இல்லாத அனைத்து மகளிருக்கும் மகளிர் தின வாழ்த்துகள்.  இந்த பதிவு மகளிர் தினத்தில் சரியாக வந்து விட்டது - என்னையும் அறியாமலே! 

நண்பர்களே, இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்துகளைச் சொல்லுங்களேன். விரைவில் வேறு சில செய்திகளோடு மீண்டும் [சி]ந்திப்போம்...

நட்புடன்

வெங்கட்
புது தில்லி

32 கருத்துகள்:

  1. வணக்கம் சகோதரரே

    முதலில் வாசகம் நன்றாக உள்ளது. இன்றைய தினத்திற்கேற்ற பதிவு அருமை. அம்மாவின் அன்பு என்றுமே தராசு தட்டில் இருக்கும் முள் மாதிரி ஒரே அளவில்தான் இருக்கும். நீங்கள் சொல்வது போல் ஒரிரு குழந்தைகளுக்கு அந்த உணர்வு உண்டாவது இயற்கை. அதனை காட்டும் குறும்படம் பின் காண்கிறேன்.

    தங்கள் வாழ்த்துக்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். அதுபோல் இங்கு பதிவுலகில் வரும் மகளிர் அனைவருக்கும் உலகில் உள்ள மகளிர்கள் அனைவருக்கும் என் அன்பார்ந்த நல்வாழ்த்துக்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கமலா ஹரிஹரன் ஜி.

      அம்மாவின் பாசம் தராசு தட்டில் இருக்கும் முள் மாதிரி - உண்மை.

      காணொளி முடிந்தபோது பாருங்கள் மா...

      நீக்கு
  2. அன்பு வெங்கட் , எல்லா மகளிரும் அவர்களது தந்தையர், கணவன், தம்பி, அண்ணாக்கள் அனைவரும் நலம் பெறட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அனைவரும் நலம் பெறட்டும் - அது தான் தேவை வல்லிம்மா...

      நீக்கு
  3. படத்தை மத்தியானமாகப் பார்க்கிறேன். ஆனால் அம்மாக்கள் தன் குழந்தைகளில் ஒருத்தருக்கோ அல்லது ஒருத்திக்கோ தனியாகப் பாசம் காட்டுவது உண்டு என்றே நான் நம்புகிறேன். நான் பார்த்தவரை அப்படியான அனுபவங்கள். :)))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படம் முடிந்த போது பாருங்கள் கீதாம்மா...

      Exceptions are always there! :) அதிக அளவில் இருப்பதையே பொதுவாக சொல்வது தானே வழக்கம்.

      நீக்கு
    2. எல்லாக் குழந்தைகளிடமும் ஒன்றே போல் அன்பு காட்டுபவரை நான் இதுவரை சந்தித்ததில்லை.

      பொதுவா தலச்சன் பிள்ளை மற்றும் கடைசிப் பிள்ளை மீதும் தாயின் அன்பு அதிகம் இருக்கும் என்றே கண்டிருக்கிறேன்.

      நீக்கு
    3. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத்தமிழன்.

      நீக்கு
  4. பாசம் - பாவம் வேறுபாடு ஸூப்பர். அம்மா பற்றிய உங்கள் பதிவும் ஸூப்பர். இன்று என் அம்மாவின் திதி. எனவே குறும்படம் பின்னர்தான் பார்க்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அம்மாவின் திதி - அவரின் ஆசிகள் என்றும் உங்களுடன் வரும் ஸ்ரீராம்.

      முடிந்தபோது குறும்படம் பாருங்கள்.

      பதிவு உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி ஸ்ரீராம்.

      நீக்கு
  5. இனிய காலை வணக்கம் வெங்கட். கருத்துள்ள குறும்படம். அன்பை அழகாக வெளிப்படுத்துகிறது. டைட்டிl உதவியில் நன்றாகப். புரிந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காலை வணக்கம் வல்லிம்மா...

      குறும்படம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

      வேற்று மொழி குறும்படம் பார்க்கும்போது இப்படி சப் டைட்டில் இருப்பது நல்ல விஷயம் தான் மா... அந்த மொழி தெரியாத மற்றவர்களும் புரிந்து கொள்ள முடிகிறதே...

      நீக்கு
  6. காணொளி பார்த்து ரசித்தேன்... பழைய நினைவுகள் வந்தன

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காணொளி உங்கள் நினைவுகளை மீட்டு எடுக்க உதவியதில் மகிழ்ச்சி நெல்லைத் தமிழன்.

      நீக்கு
  7. மனிதனின் பிரச்சினைக்கு காரணமான குணமே ஒப்பிடுதல் தான்... அதைப் பற்றி எழுதிய பதிவும் ஞாபகம் உள்ளது...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எல்லாவற்றிலும் ஒப்பீடு - அது தானே நடக்கிறது இங்கே!

      பல பிரச்சனைகளுக்குக் காரணம் ஒப்பீடு என்பது உண்மை தான் தனபாலன்.

      நீக்கு
  8. வாசகம் நன்று அண்ணா.
    குறும்படம் பார்த்தேன் நெகிழ வைத்தது.
    மகளிர் நாள் வாழ்த்துக்களுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கிரேஸ்.

      குறும்படம் - இது மாதிரி குறும்படங்கள் நம்மை நெகிழ வைத்து விடுகின்றன. அதே நிறுவனத்தின் வேறு ஒரு விளம்பரமும் பார்த்து ரசித்தேன். பிறிதொரு சமயத்தில் பகிர்ந்து கொள்கிறேன்.

      நீக்கு
  9. பதில்கள்
    1. பதிவு உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி நாகேந்திர பாரதி.

      நீக்கு
  10. குறும்படம் பார்த்தேன்.
    நெகிழ்ச்சி மகிழ்ச்சி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குறும்படம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி தமிழ்ப்பூ...

      நீக்கு
  11. குறும்படம் கண்டேன் ஜி நெகிழ்ச்சி

    அனைவருக்கும் இனிய மகளிர் தின வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நெகிழ வைத்தது இக்குறும்படம் - உண்மை தான் கில்லர்ஜி. இது போன்ற குறும்படங்கள் பார்க்கும்போது தன்னாலே உருவாகும் நெகிழ்ச்சி.

      நீக்கு
  12. சிறப்பு. எல்லாவற்றையும் வார்த்தைகளால் புரிய வைத்துவிட முடியாது. சிலவற்றை காலம் தான உணர்த்த வேண்டும்.

    வலைத் திரட்டியின் புதிய புரட்சி: வலை ஓலை .
    நமது, வலை ஓலை இணையத்தளத்தில் பரீட்சார்த்தமாக 13 வலைத்தளங்கள் இணைக்கப்பட்டுள்ளன. அத்துடன் தங்களது அம்மாவின் பாசம் – ஆயில் – குறும்படம் பதிவும் எமது தளத்தில் இணைக்கப்பட்டுள்ளது. உங்கள் மேலான ஆதரவை வழங்க கேட்டுக் கொள்கிறேன்.

    உங்கள் வலைப்பதிவை அறிமுகப்படுத்த ஒரு சந்தர்ப்பம். விபரம் இங்கே: நீங்களும் எழுதலாம்

    எமது வலைப் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ள வலைத்தளங்களின் வலைப்பட்டியலைக் காண: வலைப் பட்டியல்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வார்த்தைகளால் எல்லாவற்றையும் புரியவைத்து விட முடியாது என்பது உண்மை சிகரம் பாரதி.

      பதிவு உங்களுக்கும் பிடித்திருந்ததில் மகிழ்ச்சி.

      நீக்கு
  13. குறும் படம் நெகிழ்ச்சி.

    அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குறும்படம் உங்களுக்கும் பிடித்திருந்ததில் மகிழ்ச்சி மாதேவி.

      நீக்கு
  14. படம் பார்க்கிறேன் அண்ணா...
    நம் நட்பில் இருக்கும் அனைத்துப் பெண் படைப்பாளர்களுக்கும் இனிய மகளிர் தின வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  15. குறும்படம் நன்றாக இருந்தது , தாயின் பாசத்தை மிக அழகாய் காட்டி இருக்கிறார்கள்.
    வளர்ந்த பின் தாயின் அன்பை புரிந்து கொண்டது மகிழ்ச்சி.
    மகளிர் தின வாழ்த்துக்களுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குறும்படம் உங்களுக்கும் பிடித்திருந்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா...


      வளர்ந்த பின்னராவது புரிந்து கொண்டாரே. சிலர் நன்கு வளர்ந்த பின்னும் புரிந்து கொள்வதில்லை.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....