திங்கள், 19 அக்டோபர், 2020

அமேசான் தளத்தில் எனது 25-ஆவது மின்னூல் – என் இனிய நெய்வேலி

அனைத்து நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம். இன்றைய பொழுதை, நல்லதொரு வாசகத்துடன் ஆரம்பிக்கலாம். 

உங்கள் வாழ்நாளில் எதைச் செய்தாலும் திருப்தியுடன் செய்யுங்கள். அதுவே உங்கள் வாழ்வை அர்த்தம் உள்ளதாக மாற்றும். 

*****



அன்பின் நண்பர்களுக்கு, மேலும் ஒரு மின்னூல் வெளியீடு பற்றிய தகவலுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி. அமேசான் தளம் வழி வெளியிடப்படும் எனது 25-ஆவது மின்னூல் இது என்ற தகவலை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் கூடுதல் மகிழ்ச்சி. பெரும்பாலான நூல்கள் எனது பயணங்கள், பயண அனுபவங்கள் மட்டுமே என்றாலும், இந்த நூல் சற்றே வித்தியாசமாக எனது அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் ஒரு மின்னூல். நான் எனது இளமைப் பருவத்தில் சுற்றி வந்த எனது பிறந்த ஊரான நெய்வேலி நகர் பற்றியும் அங்கே கிடைத்த அனுபவங்கள், சம்பவங்கள் என பலவற்றைச் சொல்லும் மின்னூல் இந்த மின்னூல். இந்த மின்னூலில் விவரித்திருக்கும் சம்பவங்களை சுவை படவே சொல்லி இருக்கிறேன் என்று உணர்கிறேன். எப்படி வந்திருக்கிறது இந்த மின்னூல் என்பதை நீங்கள் படித்துப் பார்த்து தான் சொல்ல வேண்டும். 

சிறு வயது அனுபவங்கள், அந்த நாளைய நினைவலைகள், மனிதர்கள், சிறு வயதில் சந்தித்த மனிதர்கள் என்பதால் நினைவினை விட்டு அகலாத மனிதர்களாக அவர்கள் இருக்கிறார்கள் – இன்றைய நாள் வரை. டிரைவரூட்டம்மா, டைலர் ராமதாஸ் போன்ற கதை மாந்தர்களை மறக்க முடியுமா என்ன? சிறு வயதில் செய்த விஷமங்கள் இன்றைக்கும் நினைவில் இருக்கிறது. மரத்தில் ஏறியது, ஊர் சுற்றியது என பல விஷயங்களையும் நான் இந்த மின்னூல் வழி உங்களுடன் பகிர்ந்து கொண்டிருக்கிறேன். உதாரணத்திற்காக ஒரு விஷயம் மட்டும் இங்கே! 

நெய்வேலி ஆரம்பித்தது பற்றி அவ்வூர் பேருந்து நிலையத்தில் பிச்சை எடுத்த ஒருவர் பாட்டாக பாடியபடி பிச்சை எடுப்பாராம் – அதனைப் பார்த்த அம்மா எங்களுக்கும் சொன்ன பாடல் அந்த பாடல்! அந்த மனிதர் பாடிய பாடல் கீழே:- 

கடலூருக்கு நேர் மேற்கு நெய்வேலிதாங்க! 
அங்கே நிலக்கரியின் வேலை ரொம்ப பிரமாதம் தாங்க! 
ஆதியிலே ஜெம்புலிங்க முதலியார்தாங்க 
அங்கே நிலத்தில் ஒரு கிணறு வெட்ட கரியைக் கண்டாங்க! 

முதல் நான்கு அடி மட்டுமே கேட்ட நிலையில் பேருந்து அங்கிருந்து நகர்ந்துவிட அவர் பாடிய முழு பாடலும் கேட்க முடியவில்லையே என்ற வருத்தம் அம்மாவுக்கு இன்னமும் உண்டு – சுமார் ஐம்பது வருடங்கள் கடந்த பின்பும்! அந்த வருத்தம் எனக்கும் இருக்கிறது – தெரிந்திருந்தால் முழுப் பாடலையும் உங்களுடன் பகிர்ந்திருக்கலாமே என்று... நெய்வேலி மேல் கொண்ட காதலினால் பாடலின் இந்த நான்கு வரிகளும் பசுமரத்தாணி போல இன்னமும் அம்மாவின் நினைவிலிருக்கிறது! என் நினைவிலும் தான்! 

மின்னூலை வாசிக்க விரும்புபவர்கள் அமேசான் தளத்திலிருந்து தரவிறக்கம் செய்து வாசிக்கலாம். Kindle Unlimited Subscription வைத்திருப்பவர்கள், இந்த மின்னூலை இலவசமாகவே தரவிறக்கம் செய்து படிக்கலாம். மற்றவர்கள் ரூபாய் 50 மட்டும் செலுத்தி, தரவிறக்கம் செய்து கொண்டு வாசிக்கலாம்! இல்லை பணம் செலுத்த விருப்பமில்லை என்றால் – சற்றே காத்திருந்தால் சில நாட்களில் ஐந்து நாட்கள் மட்டும் இலவசமாக தரவிறக்கம் செய்து கொள்ளும் வசதியை தரும்போது தரவிறக்கம் செய்து கொள்ளலாம்! மேற்கண்ட மூன்று வழிகளில் எது உங்கள் விருப்பமோ அதைத் தேர்ந்தெடுக்கலாம்! அது உங்கள் இஷ்டம்! தரவிறக்கம் செய்து கொள்ள சுட்டி கீழே! 



இன்னும் ஒரு தகவலும்… ஏற்கனவே சென்ற சனிக்கிழமை காஃபி வித் கிட்டு பதிவில் சொன்னது போல, ஏற்கனவே வெளியிட்ட மின்னூலான “இரண்டாவது தலைநகரம்” மின்னூலை வரும் புதன் கிழமை மதியம் 12.29 வரை இலவசமாகத் தரவிறக்கம் செய்து கொள்ளலாம். அதற்கான சுட்டி – ”இரண்டாவது தலைநகரம்”!  முடிந்தால் தரவிறக்கம் செய்து, வாசித்து உங்கள் கருத்துகளை எழுதி அனுப்பினால், எனது வலைப்பூவிலும் பகிர்ந்து கொள்வேன்! 

தொடர்ந்து மின்னூல்கள் வெளியிட விருப்பம் உண்டு – நேரமும் காலமும் சரியாக இருந்தால் அடுத்த வாரமே வெளியிடும் வாய்ப்பு இருக்கிறது. வெளியிட்டால் நிச்சயம் தகவலை பகிர்ந்து கொள்கிறேன். நாளை வேறு ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை… 



நட்புடன் 



வெங்கட் நாகராஜ் 
புது தில்லி

24 கருத்துகள்:

  1. இருபத்தைந்தாவது மின்னூலுக்கு வாழ்த்துகள்.  பழைய நினைவுகள் அதுவும் இளமைக்கால நினைவுகள் என்றுமே சுகமானவை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாழ்த்தியமைக்கு நன்றி ஸ்ரீராம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  2. காலை வணக்கம் சகோதரரே

    வாசகம் அருமை. உங்களின் 25 ஆவது புதிய மின்னூலுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.பிறந்த ஊரை மறக்க முடியுமா? தாங்கள் அந்த நினைவுகளை புத்தகமாக தொகுத்தது மிகச்சிறப்பு. பாராட்டுக்கள். அந்தப்பாடலும் நன்றாக உள்ளது. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா ஹரிஹரன் ஜி.

      வாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

      மின்னூல் - வாழ்த்தியமைக்கு நன்றி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  3. 25ஆவது மின்னூலுக்கு வாழ்த்துகள். நூலைப் பற்றிய தங்கள் அறிமுக உரை அருமை. பகிர்ந்த வாசகம் சிறப்பு. உண்மை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாழ்த்தியமைக்கு நன்றி ராமலக்ஷ்மி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  4. 25ஆவது மின்னூல் என்பது மகிழ்ச்சியைத் தருகிறது. உங்களின் நடையும், பயண அனுபவங்களும், புகைப்படப் பகிர்வுகளும், சமூகம் சார்ந்த நோக்கும் எங்களைக் கவர்ந்திழுப்பனவாகும். எழுத்துப்பணி தொடர மனம் நிறைந்த வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாழ்த்தியமைக்கு நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  5. மிக்க மகிழ்ச்சி ஜி
    25-வது மின்நூல் வாழ்த்துகள் இன்னும் அணி வகுக்கட்டும்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாழ்த்தியமைக்கு நன்றி கில்லர்ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  6. 25 ஆவது மின் நூலுக்கு வாழ்த்துக்கள் சார்.
    என் அலுவலகத்தில் ஒரு பெண் ஊழியர் நெய்வேலியில் வீடு வாங்கியுள்ளார்.
    அவரை, நெய்வேலி என்று பட்டப்பெயர் சூட்டி மகிழ்ந்தேன்.
    அவருக்கு ஏனோ அதை சொன்னால் கோபம் வரும்.
    சீக்கிரம் தங்கள் இளம் வயது அணுபவங்களை அறிய ஆவலாய் உள்ளேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாழ்த்தியமைக்கு நன்றி அரவிந்த்.

      நெய்வேலி நகருக்குள் வீடு வாங்கியிருக்க முடியாது! வெளியில் இந்திரா நகர் போன்ற தனியார் காலனிகள் உண்டு. அங்கே வாங்கியிருக்கலாம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  7. குடும்பத்தில் அனைவரும் dedication உள்ளவராக இருக்கிறார்கள். அதனால் தான் இவ்வளவு அழகான கொலு பார்க்க முடிந்தது. ஒவ்வொன்றும் ரசித்தேன். தங்களுக்கு கிடைத்த வாய்ப்பை எங்களிடம் பகிர்ந்து கொண்ட உங்களுக்கு மிக்க நன்றிகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முந்தைய பதிவுக்கான கருத்துரை இன்றைய பதிவில் வந்துவிட்டது போலும்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கயல் இராமசாமி ஜி.

      நீக்கு
  8. மிகவும் மகிழ்ச்சி ஜி... வாழ்த்துகள்...

    நன்றி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாழ்த்தியமைக்கு நன்றி தனபாலன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  9. வாசகம் நன்றாக இருக்கிறது.
    உங்கள் 25 வது மின்னூலுக்கு வாழ்த்துக்கள்
    நெய்வேலி பகிர்வுகள் நன்றாக இருந்தது ,அது மின்னூல் ஆகி இருப்பது மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா.

      வாழ்த்தியமைக்கு நன்றி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  10. உங்களுடைய மின்னூலுக்கு வாழ்த்துகள் வெங்கட் ஜி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாழ்த்தியமைக்கு நன்றி இராமசாமி ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  11. பதில்கள்
    1. வாழ்த்தியமைக்கு நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  12. இருபத்தைந்தாவது மின்னூலுக்கு வாழ்த்துகள் அன்பு வெங்கட்.

    எல்லோருக்கும் மிகப் பிடித்த பருவம்
    இள வயதுதான்.

    களங்கமில்லாத காலம்.
    பெற்றோருக்கும் நமக்குப் பிடித்த நினைவுகள்.,
    விருப்பமாக இருப்பதுதான் நன்மை.
    இன்னும் நிறைய எழுத வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாழ்த்தியமைக்கு நன்றி வல்லிம்மா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....