செவ்வாய், 6 அக்டோபர், 2020

கதம்பம் – ஆன்லைன் – க்வில்லிங் ஜும்கா – கோஃப்தா - ATM உடன் குஸ்தி - மனம்

அனைத்து நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம். இன்றைய நாளை, நல்லதொரு வாசகத்துடன் ஆரம்பிக்கலாம். 

அளவுக்கு அதிகமான அன்பு முதலில் பிரமிக்கப்பட்டு, பின் ரசிக்கப்பட்டு, தொல்லையாகி சலிக்கப்பட்டு, இறுதியில் உதாசீனப்படுத்தப் படுகிறது! 


ஆன்லைன் அலப்பறைகள்! – 3 அக்டோபர் 2020 

டீச்சர் - டேய் கிரி! நேத்து ஏண்டா கிளாஸுக்கு வரல?? 

கிரி - நெட் கிடைக்கவே இல்ல மிஸ்!! 

டீச்சர் - இது ஒரு சாக்குடா உங்களுக்கு! விளையாடும் போது மட்டும் நெட் பிராப்ளமே வராது. 

வீடு பெருக்கிக் கொண்டே இந்த உரையாடலை கேட்டுக் கொண்டிருந்தேன். ஹா…ஹா…ஹா… 

லாக்டவுன் முன்னேற்றம்! 

மகள் - அம்மா! இது கரெக்ட்டா பாரேன்! 

நான் - இப்படித் தாண்டா கண்ணு! பண்ணப் பண்ண தானே தெரியும்… கத்தியில காய் கட் பண்ணவும், ஃபுல்கா ரொட்டி பண்ணவும் அப்பாக்கிட்ட தான் கத்துண்டேன்… 

மகள் - வாவ்! நம்ப அப்பா! நம்ப அப்பா தி கிரேட்... என்றாள். 

மகளுக்கு தன் தலைமுடியை தானே பின்னிக் கொள்ளவும், சமைக்கவும் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும் என்று நெடுநாட்களாக சொல்லிக் கொண்டிருந்தேன். ஒருவழியாக இப்போது ஓரளவு கற்றுக் கொண்டு விட்டாள். இப்போது உள்ள சூழ்நிலையில் யாரையும் சார்ந்து இருக்க முடியாது இல்லையா? 

இந்த வார காணொளிகள்! 


என்னவர் தன் பீஹார் மற்றும் ஜார்கண்ட் பயணத்தின் போது சுவைத்த கச்சே கேலே கி சப்ஜி (வாழைக்காய் கோஃப்தா) பற்றிச் சொல்லி, நீயும் செய்து பார் என்றார். அந்த சப்ஜி தான் இந்த வார காணொளியாக ஆதியின் அடுக்களையில் வெளியிட்டுள்ளேன். இந்த ரெசிபி எழுத்து வடிவில் சென்ற மாத சஹானா இணைய இதழில் வெளிவந்தது என்பது கூடுதல் தகவல். 


Paper Quilling Jhumka! 




மகள் இந்த வாரம் தன் சேனலில் பேப்பர் க்வில்லிங் ஜிமிக்கியின் செய்முறையை பகிர்ந்துள்ளாள். 



எலுமிச்சை சேவை


ப்ரெட் உப்புமா


பச்சை சுண்டைக்காய் கூட்டு

வாட்ஸப் ஸ்டேட்டஸில் பகிர்ந்து கொண்ட சில உணவுகளின் படங்களும் பகிர்ந்துள்ளேன். மேலே கொடுத்துள்ள காணொளிகளை, நேரம் கிடைக்கும் போது பார்த்து விட்டு கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்களேன். 

புரட்டாசி சனிக்கிழமை – 3 அக்டோபர் 2020: 

மாதத் துவக்கம் என்பதால் வழக்கமான விஷயங்களுக்காக வெளியே சென்றிருந்தோம். ஊரடங்கு துவங்கியது முதல் காலியாக தென்பட்ட கடைவீதியில் இன்று ஒரே கும்பல்! புரட்டாசி சனிக்கிழமை என்பதால் கோவிலுக்கு வந்திருந்த மக்கள் தான். அக்கம்பக்கம் கிராமங்களிலிருந்து நடையாகவோ, பேருந்திலோ வந்திருப்பார்கள் போல. கைக்குழந்தைகளைக் கூட சுமந்து வந்திருந்தனர். எல்லாம் சரியானது போல தான் ஒருநிமிடம் தோன்றியது!! ஆனால்?? 

டென்ஷன் பேர்வழி! 

ஏ.டி.எம் இயந்திரத்தை பொறுத்தவரை, ஒன்று வேலை செய்யாது! இல்லையென்றால் பணம் இருக்காது! குறிப்பிட்ட எண் பதிவாகாது! இப்படியான விஷயங்கள் தான் கொஞ்சம் டென்ஷனை உருவாக்கி விடும்... இன்று எங்களுக்கு முன்னே இயந்திரத்தை உபயோகித்தவர்களை பார்த்து ரொம்பவே டென்ஷனாகி விட்டோம். 

அப்பாவும் மகனுமாக இருவரும் சேர்ந்தே உபயோகித்தனர்! ஒருவர் சொல்வதை மற்றொருவர் நம்பவில்லை போலும். சில நிமிஷ போராட்டம். மெஷினை தட்டி பார்க்கின்றனர்! உள்ளே தேடி பார்க்கின்றனர்! மீண்டும் மீண்டும் ஏதோ போராட்டம்! 

இன்று பணம் எடுத்த மாதிரி தான் என்று எனக்குத் தோன்றியது. ஒருவழியாக ஒருவருக்கொருவர் உபதேசம் செய்து கொண்டு வெளியே வந்தனர். மெஷின் வேலை செய்கிறதா என்று கேட்க நினைத்து வாயை மூடிக் கொண்டேன். 

மருத்துவமனைக்கு சென்றால் நமக்கு முன் செல்பவர்கள் நம்மை மணிக்கணக்காக காத்திருக்க வைப்பர். நாம் சென்றால் இரண்டே நிமிடங்களில் வெளியே வந்துவிடுவோமே. அதுபோல அடுத்து சென்ற நாங்களும் எந்தத் தடையும் இல்லாமல் சில நிமிடங்களிலேயே வந்த வேலை முடிந்து வெளியே வந்தோம். 

மனம் – 05 அக்டோபர் 2020:



எங்களுக்கு பிடித்த திரைப்படங்களுள் ஒன்று! தெலுங்கு டப்பிங் படம். சென்ற வருடம் டெல்லியை நோக்கிய ரயில் பயணத்தில் கூட நேரத்தைக் கடத்த பார்த்துக் கொண்டு சென்றோம்.🙂

Bhittu என்ற ஆறு வயது சிறுவன் தன் அப்பா, அம்மாவை ஒரு கார் விபத்தில் இழக்கிறான். எப்படியோ படித்து, வளர்ந்து சிறந்த தொழிலதிபராக ஆகிறான். ஏறக்குறைய 25  வருடங்களுக்குப் பிறகு ஒரு சந்தர்ப்பத்தில் மறுபிறவி எடுத்துள்ள தன் அப்பாவையும், அம்மாவையும் சந்திக்கிறான்.

இப்படித்தான் ஆரம்பிக்கிறது கதை. நகைச்சுவை, ஆச்சரியங்கள் கலந்த நல்லதொரு படம் இது. ஆக்‌ஷன், கொலை, ரவுடித்தனம் இதெல்லாம் இதில் இருக்காது.🙂மூன்று தலைமுறையைச் சேர்ந்தவர்களை ஒன்றுடன் ஒன்று இணைக்கும் பந்தம் தான் கதைக்கரு!!

Akkineni family தயாரிப்பு என்பதால் அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த நாகேஸ்வர ராவ், நாகார்ஜுன், நாக சைதன்யா என மூவரும் நடித்துள்ளனர். சமந்தாவும், ஷ்ரேயாவும் ஹீரோயின்கள்! 2014 ல் வெளியான திரைப்படம். நாகேஸ்வர ராவ் அவர்களின் கடைசித் திரைப்படம்!

லாஜிக் இல்லையென்று சொன்னாலும் அப்பா, அம்மா மீண்டும் பிறவி எடுத்து சந்திப்பது என்பது எவ்வளவு பெரிய வரம்!! என்னைப் போன்றவர்களுக்கு அதன் உணர்வு புரியும்!!

நேரம் கிடைத்தால் இந்த blockbuster திரைப்படத்தை Hotstarல் கண்டுகளிக்கலாம்!


நண்பர்களே, இன்றைய பதிவில் உங்களுடன் பகிர்ந்து கொண்ட விஷயங்கள் பற்றிய உங்கள் கருத்துகளைச் சொல்லுங்களேன். விரைவில் வேறு ஒரு பதிவுடன் மீண்டும் ச[சி]ந்திப்போம்... 

நட்புடன் 




ஆதி வெங்கட்

18 கருத்துகள்:

  1. வழக்கம்போல வாசகம் சிறப்பு.

    கதம்பம் சுவை, சுவாரஸ்யம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகம், பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி ஸ்ரீராம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  2. பதில்கள்
    1. கதம்பம் பகிர்வு உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி நெல்லைத் தமிழன்.

      நீக்கு
  3. எல்லாவற்றையும் முகநூலிலும்/சமையல் தவிர்த்து பார்த்தேன். பச்சைச் சுண்டைக்காய் இங்கேயும் வாங்கி வந்தார். சாம்பார்/குழம்பு பண்ணிட்டு மிச்சத்தை மாவடு ஜலத்தில் போட்டு வைச்சிருக்கேன். இஃகி,இஃகி,இஃகி,நல்ல வெயில் அடிக்குது! மோர் மிளகாயும் (சின்ன நாட்டு மிளகாயில்) போட்டு வைச்சிருக்கேன். ஆடையைக் கடைந்து வந்த மோர் இருந்தது. சேவை நானும் பண்ணணும்னு நினைக்கிறேன். மாவு கிளறுவதுதான் கொஞ்சம் கஷ்டமான வேலையாகப் போய்விட்டது இப்போல்லாம். புழுங்கலரிசியில் அரைச்சு இட்லி மாதிரி வார்த்துப் பண்ணணும். அது கொஞ்சம் கஷ்டம் இல்லை. இப்போதெல்லாம் ப்ரெடே வாங்குவதில்லை, ப்ரெட் உப்புமா உப்பு ப்ரெடில் தான் நன்றாக இருக்கு. ஆனால் இங்கே அபூர்வமாகத் தான் உப்பு ப்ரெட் கிடைக்கும். மில்க் ப்ரெட், ஸ்வீட் ப்ரெடில் நன்றாக இல்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவின் பகுதிகள் உங்கள் கருத்துப் பகிர்வுக்கு மிக்க நன்றி கீதாம்மா.

      நீக்கு
  4. //விளையாடும் போது மட்டும் நெட் பிராப்ளமே வராது//

    ஹா.. ஹா.. உண்மைதான்.

    கதம்பம் வழக்கம் போல ரசிக்க வைத்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கதம்பம் பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கில்லர்ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  5. கதம்பம் சுவை
    தாங்கள் குறிப்பிடும் படத்தினை அவசியம் பார்ப்பேன்
    நன்றி சகோதரி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  6. ATM பலசமயம் பொறுமையை சோதிப்பது உண்மை...

    மற்ற அனைத்து பகுதிகளும் அருமை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி தனபாலன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் நன்றி.

      நீக்கு
  7. நன்றாக இருக்கிறது வாசகம். கதம்பம் வழக்கம் போல் அருமை.
    ஆதியின் சமையல் . ரோஷ்ணியின் கைவேலைகளை பார்க்கிறேன்.
    இருவருக்கும் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகம், பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  8. தெலுங்கு திரைப்படம் எனக்கும் பிடித்தது. விஜய் தொலைக்காட்சியில் நிறைய தடவை வைத்து விட்டார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.

      நீக்கு
  9. அப்பாவும் மகனுமாக இருவரும் சேர்ந்தே உபயோகித்தனர்! ஒருவர் சொல்வதை மற்றொருவர் நம்பவில்லை போலும். சில நிமிஷ போராட்டம். மெஷினை தட்டி பார்க்கின்றனர்! உள்ளே தேடி பார்க்கின்றனர்! மீண்டும் மீண்டும் ஏதோ போராட்டம்!
    தினமும் இங்கே பல ஆச்சரியமான சுவராசியமான நிகழ்வுகளை ஏடிஎம் மூலம் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....