செவ்வாய், 20 அக்டோபர், 2020

கதம்பம் - கொலு பொம்மைகள் - காணொளி – இன்ஸ்டா - அரட்டை

அனைத்து நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம். இன்றைய நாளை, நல்லதொரு வாசகத்துடன் ஆரம்பிக்கலாம். 

எப்போதுமே குறை மட்டுமே காண்பவர்களுக்கு பாராட்டத் தெரியாது! பாராட்டத் தெரிந்தவர்களுக்கோ குறைகளே கண்களில் தெரிவதில்லை! 

****

நவராத்திரி கொலு – 17 அக்டோபர் 2020: 

இன்று முதல் நவராத்திரி துவக்கம்! முப்பெரும் தேவியரை வழிபடும் நாட்கள் இவை! எல்லாருக்கும் எல்லாம் கிடைக்க, நல்லதே நடக்க, தொற்று முற்றிலும் நீங்க, மன அமைதி கிடைக்க பிரார்த்தனை செய்வோம்! 

கொலு பொம்மைகள்! 



நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் இந்த பொம்மைகள் பத்து வருடங்களுக்கு முன் தீபாவளி சமயத்தில் டெல்லியில் வாங்கியது. தண்ணீர் குடத்தை சுமந்து கொண்டிருக்கும் பெண்மணிகள்! ஒவ்வொன்றும் பத்து ரூபாய் தான். 

தீபாவளி சமயத்தில் நாங்கள் இருந்த பகுதியில் நிறைய கடை போடுவார்கள். அதை வேடிக்கை பார்ப்பதில் எனக்கு எப்போதுமே ஸ்வாரஸ்யம்! இங்கே பொங்கலுக்காக வீட்டை பெயிண்ட் செய்வதைப் போல அங்கே தீபாவளிக்காக வீட்டை பெயிண்ட் செய்து அழகுபடுத்துவார்கள்! கடைகளில் லஷ்மி பூஜைக்காக லஷ்மியும், கணேஷாவும் எங்கும் நிறைந்திருப்பார்கள்! அது போக அலங்கார விளக்குகள், அழகுப் பொருட்கள், உலர்பருப்புகள், இனிப்புகள் என எங்கும் கொண்டாட்டமாக இருக்கும். இதை எழுதும் போது அங்கேயே சென்ற உணர்வு :) 

ஆதியின் அடுக்களை: 

எங்கள் வீட்டில் கடந்த ஏழெட்டு வருடங்களாகவே மண்பாத்திர சமையல் தான். இங்குள்ள நட்புகளுக்கும் தெரிந்திருக்கும். என்னிடம் இருக்கும் மண்பாத்திரங்களின் சேகரிப்பு தான் இந்த வாரக் காணொளியாக பகிர்ந்திருக்கிறேன். இணைப்பு இதோ. 



இன்ஸ்டாவில் நான்! 

இதுவரை எட்டிக் கூட பார்த்ததில்லை! மகள் தான் துவக்கிக் கொடுத்தாள். adhivenkat82 என்ற பெயரில் அங்கே இருக்கிறேன் என்பதை சொல்லிக் கொள்கிறேன். 

தடுமாற்றம்: 

சில நேரங்களில் குழப்பம் ஏற்படுகிறது. எதில் என்று கேட்கிறீர்களா??? சொல்கிறேன். காலை நேரத்தில் பாலை அடுப்பில் வைத்து விட்டு அடுத்து சர்க்கரை எடுப்பதற்கு பதில் உப்பு ஜாடியை எடுக்க வேண்டும் என்று ஏன் தோன்றுகிறது என்று தெரியவில்லை. இது போல சில நேரங்களில்! 

மினியேச்சர் செட்: 





டெல்லியில் வருடாவருடம் நடக்கும் India International Trade Fairல் வாங்கிய மூங்கில் சோஃபா செட் இது. பிரகதி மைதான் என்ற இடத்தில் வருடந்தோறும் குழந்தைகள் தினத்தில் துவங்கி இரண்டு வாரங்களுக்கு நடைபெறும் இந்த கண்காட்சியில் மாநிலங்கள் வாரியாக நிரந்தரமாக கட்டிடங்களே இருக்கும். அங்கே அஸ்ஸாமின் கண்காட்சியில் மூங்கிலால் ஆன பொருட்கள் ஏராளமாக இருந்தன. நவராத்திரிக்காக அங்கே வாங்கிய மூங்கில் செட் இது. 

இந்த கண்காட்சிக்கு சென்ற வந்த அனுபவத்தைப் பற்றி என் வலைப்பூவில் எழுதியிருக்கிறேன். இணைப்பு இதோ. 



இன்றைய நாள் இனிய நாள் - 18 அக்டோபர் 2020: 

இந்தப் பதிவை எழுதிக் கொண்டிருக்கும் வேளையில் பள்ளித் தோழிகளிடமிருந்து க்ரூப் கால் வந்தது! என்னோடு சேர்த்து ஆறு பேர்! ஒரு மணிநேரம் போனதே தெரியவில்லை. சிரித்து மாளலை. இனிமையாக்கிய தோழிகளுக்கு நன்றிகள். 

நண்பர்களே, இன்றைய பதிவில் உங்களுடன் பகிர்ந்து கொண்ட விஷயங்கள் பற்றிய உங்கள் கருத்துகளைச் சொல்லுங்களேன். விரைவில் வேறு ஒரு பதிவுடன் மீண்டும் ச[சி]ந்திப்போம்... 

நட்புடன் 


ஆதி வெங்கட்

18 கருத்துகள்:

  1. வாசகம் அருமை.
    மூங்கில் சேர்கள் ஸூப்பர்.

    தோழிகளுடன் கலந்துரையாடுவது மனதுக்கு சந்தோசத்தை தரும்.

    கதம்பம் வழக்கம் போல அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கில்லர்ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  2. வாசகம் முற்றிலும் உண்மை.

    இன்ஸ்டாவினால் என்ன பயன் என்று எனக்குத் தெரியாது.  நான் அந்தப் பக்கம் போனதில்லை.  அதேபோல பேஸ்புக் மெசஞ்சர் பக்கமும் போனதில்லை.  இன்ஸ்டால் செய்து கொண்டதில்லை!  பல வருடங்களுக்கு முன்பே என் நண்பன் பிரகதி மைதான் பற்றிச் சொல்லி இருக்கிறான். 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகம் - உண்மை தான்.

      இன்ஸ்டா - ஒரு முறை தரவிறக்கம் செய்தேன் - ஆனால் இன்ஸ்டால் செய்யவில்லை!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  3. பதில்கள்
    1. மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  4. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நாகேந்திர பாரதி.

      நீக்கு
  5. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.

      நீக்கு
  6. அன்பு ஆதி.
    மண்பாண்டங்கள் ஆச்சர்யம் கலந்த மகிழ்ச்சி.இனிய நவராத்திரி
    நல் வாழ்த்துகள் மா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாழ்த்தியமைக்கு நன்றி வல்லிம்மா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா.

      நீக்கு
  7. கொலு பொம்மைகள், மினியேச்சர் செட் அழகு...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

      நீக்கு
  8. கதம்பம் அருமை.முகநூலில் படித்துவிட்டேன்.

    மினியேச்சர் செட் அழகு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.

      நீக்கு
  9. பதில்கள்
    1. கதம்பம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....