திங்கள், 26 அக்டோபர், 2020

அடுத்த மின்னூல் - கிட்டூ’ஸ் கிச்சன்

அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இன்றைய நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

விட்டுக் கொடுங்கள் - விருப்பங்கள் நிறைவேறும்; தட்டிக் கொடுங்கள் - தவறுகள் குறையும்; மனம் விட்டுப் பேசுங்கள் - அன்பு பெருகும்!

*&*&*&*&*&*&



இந்த வாரம் மீண்டும் ஒரு மின்னூல் வெளியீடு பற்றிய தகவலுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி. இந்த வாரம் வெளியிட்டு இருக்கும் மின்னூல் சமையல் குறிப்புகள் - 20 வகை வட இந்திய சப்ஜி வகைகளை தன்னகத்தே கொண்ட மின்னூலாக வெளியிட்டு இருக்கிறேன். அமேசான் தளம் வழியே வெளிவரும் எனது 26-ஆவது மின்னூல் இது! 

இந்த மின்னூல் எனது வழக்கமான மின்னூல்களிலிருந்து மாறுபட்டது! எப்படி என்று கேட்டால், வழக்கமாக பயணம் சம்பந்தமான நூல்கள் தான் என்னுடைய அதிக அளவு நூல்கள். கடந்த இரண்டு நூல்களான “ஓரிரவில் ஒரு ரயிலில்” மற்றும் “என் இனிய நெய்வேலி” ஆகியவற்றில் முதலாவது கூட பயணங்கள் சம்பந்தப்பட்ட அனுபவங்களே! இரண்டாவதான ”என் இனிய நெய்வேலி”, நான் பிறந்த நகரமான நெய்வேலியில் எனக்குக் கிடைத்த அனுபவங்களைச் சொன்ன நூல். 

கடந்த முப்பது வருடங்களாக தில்லி வாசம் என்பதாலும், பெரும்பாலான நாட்களில் சுயம் பாகமாக சமையல் என்பதாலும் வட இந்திய சப்ஜிகளைத் தான் அதிகம் சமைப்பது வழக்கம். அப்படி சமைத்த சில உணவுகளை எப்படிச் செய்வது என்ற குறிப்புகளை முன்னரே ஒரு மின்னூலாக www.freetamilebooks.com தளத்தில் வெளியிட்டிருக்கிறேன் – இலவசமாக தரவிறக்கம் செய்து கொள்ள சுட்டி - சாப்பிட வாங்க... இதில் விதம் விதமான, பல பகுதிகளில் நான் சுவைத்த உணவுப் பொருட்கள் பற்றிய கட்டுரைகளும், குறிப்புகளும் இருக்கிறது. 

இப்போது அமேசான் தளத்தின் வாயிலாக வெளியிடும் இந்த மின்னூலில் பகிர்ந்து கொண்டிருக்கும் எல்லா குறிப்புகளுமே வட இந்திய சமையல் முறைகள் தான் – சப்பாத்தி மற்றும் பூரிக்கு தொட்டுக்கையாக இந்த சப்ஜிகளைச் செய்து சுவைக்கலாம்! சில சப்ஜிகளை சாதத்துடனும் சேர்த்து சாப்பிடலாம்! இந்தக் குறிப்புகள் உங்களுக்கும் பயன்படும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு! மின்னூலை தரவிறக்கம் செய்து படிக்கப் போகும் உங்களுக்கு எனது மனம் நிறைந்த நன்றி!  கிட்டூ’ஸ் கிச்சன் மின்னூலை தரவிறக்கம் செய்து கொள்ள முகவரி கீழே!


இந்தத் தகவலுடன், வழமை போல சொல்லும் ஒரு தகவலும்! இந்த மின்னூல் போலவே எனது மற்ற மின்னூல்கள் அனைத்திற்குமான சுட்டிகளை தெரிந்து கொள்ள விரும்பினால் எனது வலைப்பூவின் வலப் பக்கத்தில் இருக்கும் “மின்புத்தகங்கள்” என்ற சுட்டியைச் சுட்டினால், இது வரை வெளியிட்ட அனைத்து மின்னூல்கள் பற்றிய தகவல்களும், அவற்றைத் தரவிறக்கம் செய்து கொள்ள தேவையான சுட்டிகளும் கிடைக்கும். இங்கேயும் அந்தப் பக்கத்தின் சுட்டியைத் தந்திருக்கிறேன். இதுவரை வெளியான மின்னூல்களைப் படிக்க விரும்பினால் படித்து உங்கள் மேலான கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள். 

நாளை வேறு ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை… மீண்டும் சந்திப்போம்… சிந்திப்போம். 

நட்புடன் 



வெங்கட் நாகராஜ்
திருவரங்கத்திலிருந்து...

18 கருத்துகள்:

  1. மின் நூலுக்கு வாழ்த்துக்கள் சார்.

    பதிலளிநீக்கு
  2. 26வது மின்நூலுக்கு வாழ்த்துகளும், பாராட்டுகளும்.

    பதிலளிநீக்கு
  3. மின்நூல்கள் தொடர... வாழ்த்துகள் ஜி

    பதிலளிநீக்கு
  4. அட? நவராத்திரியிலேயே வந்துட்டீங்களா? இந்தப் பக்கமே வரமுடியலை. அதனால் தெரியலை. நல்வரவு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம்! தில்லிக்கு திரும்பி வந்த பிறகு தான் பதிலே அளிக்க முடிந்திருக்கிறது! :)

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா.

      நீக்கு
  5. தொடர்ந்த வெளியீடுகளுக்கு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....