வியாழன், 29 ஜூலை, 2021

A CHANGE - குறும்படம்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


நேற்று வெளியிட்ட கடந்து வந்த பாதை பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 


SWITCH OFF YOUR PHONE; SIT DOWN; WATCH YOUR BREATH; YOU WILL SEE ALL THE MISSED CALLS AND UNREAD MESSAGES SENT FROM THE UNIVERSE.


******

குடி குடியைக்   கெடுக்கும் என்று எத்தனை தான் எழுதினாலும், சொன்னாலும், குடிப்பவர்கள் எண்ணிக்கை குறையப் போவதில்லை. அதுவும் அரசாங்கமே மது விற்பனை செய்யும் போது, “விக்குது குடிக்கிறேன்; குடிக்கிறாங்க அதனால விக்கிறோம்” என்று இருவரும் சொல்லிக் கொண்டு இன்னும் தொடர்ந்து கொண்டேதான் இருப்பார்கள்.  “திருடராய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது” என்று சொல்வதை போலவே ‘குடிகாரராய் திருந்தாவிட்டால் குடியை ஒழிக்க முடியாது” என்று தான் சொல்ல வேண்டியிருக்கிறது. பல குடும்பங்கள் சீரழிய இந்த மது போதை காரணமாக  இருக்கிறது. இந்தக் குறும்படம் குடிகாரராக இருக்கும் தனது தந்தையை திருத்த முயற்சிக்கும் ஒரு மகளின் கதையைச்  சொல்கிறது. மிகச் சிறிய குறும்படம் தான் -   பாருங்களேன்.  படத்தில் சொல்வது போல குடிகாரரை திருத்துவது இவ்வளவு எளிதாக இருந்துவிட்டால் எல்லாம் நலமே! ஆனால்…….


மேலே உள்ள காணொளி வழி பார்க்க இயலவில்லை என்றால், கீழே உள்ள சுட்டி வழி பார்க்கலாம். 


A Change | Inspirational Short Film | 1 Million+ Views | Six Sigma Filmsநண்பர்களே, இந்த நாளில் பகிர்ந்து கொண்ட குறும்படம் குறித்த உங்கள் கருத்துகளை பின்னூட்டம் வாயிலாக பகிர்ந்து கொள்ளலாமே!  மீண்டும் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்வெங்கட் நாகராஜ்

புது தில்லியிலிருந்து…


16 கருத்துகள்:

 1. எளிதாக ஓரிரு மாத்திரைகளைக் கொடுத்து திருத்தி விடுகிறார்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இத்தனை எளிதாக இருந்து விட்டால் .... நல்லதே ஸ்ரீராம்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 2. இது சாத்தியமானால் நலம்தான்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சாத்தியமானால் நல்லதே கில்லர்ஜி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 3. இவ்வாறு நடந்தால் நல்லது...

  குடியை மறக்க அதற்கென மருத்துவமனைகள் உள்ளன... ஆனால் அதற்கு வீட்டில் இருக்கும் பெண்கள் (முக்கியமாக தாய் / & தாரம்) அனைவரும் ஒருசேர ஒத்துழைக்க வேண்டும்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அனைவரும் ஒருசேர ஒத்துழைத்தால் நல்லதே தனபாலன்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 4. இவ்வளவு எளிய முறையில் திருத்த முடிந்தால் பல குடும்பங்கள் வாழும். குழந்தைகளுக்காகத் திருந்துங்கள் என்பதே குறும்படம் சொல்ல வரும் செய்தியென எடுத்துக் கொள்ளலாம். குடிப்பவர்கள் மனது வைத்தால்தான் மாற்றம் நிகழும். நல்ல பகிர்வு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பதிவு உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி ராமலக்ஷ்மி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 5. பதில்கள்
  1. நல்லது தான் கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 6. குறும்படம் நன்றாக இருக்கிறது. அந்த மாத்திரை குழந்தை போய் கேட்டால் கொடுப்பது போல் அவ்வளவு எளிதாக கிடைத்தால் எல்லா குழந்தைகளும் தங்கள் குடிகார அப்பாவிற்கு கொடுத்து சரி செய்து விடலாம்.

  குடியை மறக்கும் இடத்தில் கொண்டு விட்டு சிலர் திருந்துகிறார்கள். குடும்பத்தின் மேல் பாசமும் அவர்கள் ஒத்துழைப்பும் இருந்தால் நல்ல படியாக மீண்டு வரலாம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. குறும்படம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 7. வணக்கம் சகோதரரே

  இன்றைய குறும்படம் நன்றாக உள்ளது. நல்லபடியாக குடிகார தந்தையை திருத்திய பெண்ணிற்கு பாராட்டுக்கள். அவர்களும் இந்த மாதிரி விரைவில் திருந்தி விட்டால் நல்லது. பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் கமலா ஹரிஹரன் ஜி.

   குறும்ப்டம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 8. குறும்படம் பார்க்க நன்றாக இருக்கிறது.
  மாத்திரைகள் கொடுத்து திருத்துவது
  ஒரு வழியாக இருக்கலாம்.

  மனம் திருந்தினால் ஒழிய குடிப்பவர்கள் திருந்த வழியில்லை.
  தனபாலன் சொல்வது போல்
  அதற்கான அமைப்புகளில் சேர்ந்து
  மூன்று வாரங்கள் சிகித்சை எடுத்தால் மட்டுமே
  நல்ல வழி பிறக்கும்.
  அந்தக் குழந்தை நன்றாக நடித்திருக்கிறது

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. குறும்படம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி வல்லிம்மா.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....