வியாழன், 15 ஜூலை, 2021

இடுக்கண் - குறும்படம்அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


நேற்று வெளியிட்ட கடந்து வந்த பாதை பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 


அமைதியை விட உயர்வான சந்தோஷம் இந்த பூமியில் வேறு ஒன்றும் இல்லை.


******


இரண்டே இரண்டு முதியவர்களை கதாபாத்திரங்களாகக் கொண்டு இயக்கப்பட்டிருக்கும் நல்லதொரு குறும்படம்.  மொத்தம் 13 நிமிடங்கள் மட்டுமே.  ஒரு பெரியவர் கோவில் ஒன்றின் அருகே பிச்சை எடுக்க, மற்ற பெரியவர் அங்கேயே தேங்காய் விற்பனை செய்கிறார். இரண்டு பேரின் அனுபவங்கள் இங்கே குறும்படமாக.  சிறப்பாக எடுத்திருக்கிறார்கள். குறும்படம் எடுத்த, நடித்த, பங்குபெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்.  மனதைத் தொடும் குறும்படம். பார்க்கலாமே!மேலே உள்ள காணொளி வழி பார்க்க இயலவில்லை என்றால், கீழே உள்ள சுட்டி வழி பார்க்கலாம். 


Idukkan (sufferings) - Award winning Tamil Short film - YouTube


நண்பர்களே, இந்த நாளில் பகிர்ந்து கொண்ட குறும்படம் குறித்த உங்கள் கருத்துகளை பின்னூட்டம் வாயிலாக பகிர்ந்து கொள்ளலாமே!  மீண்டும் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்வெங்கட் நாகராஜ்

புது தில்லியிலிருந்து…


18 கருத்துகள்:

 1. மக்களின் மனோபாவம் அறிந்த சாமர்த்தியம்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. குறும்படம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி ஸ்ரீராம்.

   நீக்கு
 2. நல்லதுக்கு காலமில்லை ஏமாற்றினால்தான் வாழமுடியும் இவ்வுலகில்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஏமாற்றினால் தான் வாழமுடியும் இவ்வுலகில் - உண்மை கில்லர்ஜி.

   நீக்கு
 3. பதில்கள்
  1. குறும்படம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி தனபாலன்.

   நீக்கு
 4. வணக்கம் சகோதரரே

  இன்றைய வாசகம் அருமை. குறும்படம் அருமையாக நெகிழ்ச்சியூட்டும்படியாக உள்ளது. இரு பெரியவர்களின் நடிப்பும் இயல்பாக, நன்றாக உள்ளது. இடுக்கண் களைவது நட்பு என்பது போல் அருகிலிருக்கும் தெரிந்த நட்பின் துன்பத்தை அறிந்து அவருக்கு உதவி செய்வது மனிதாபிமான செயல்களில் ஒன்று என்பதை அந்த பிச்சை எடுக்கும் முதியவர் காட்டியிருப்பது நன்றாக உள்ளது மனதுக்கு திருப்தியை தந்த குறும்படம். பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் கமலா ஹரிஹரன் ஜி.

   வாசகமும் குறும்படம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 5. மனதை மிகவும் நெகிழ்த்தி விட்ட குறும்படம்! எங்கேயிருந்து இப்படியெல்லாம் அருமையான குறும்படங்களை தேடிப்பிடிக்கிறீர்கள் வெங்கட்? ஒருத்தர் அமைதியாய் எல்லாவற்றையும் கவனிக்கிறார்! இன்னொருத்தர் தவிக்கிறார், கலங்குகிறார். அவருக்கு அமைதியாய் இருப்பவர் ஒரு சின்ன உதவி தான் புத்திசாலித்தனமாக் செய்கிறார். அந்த உதவி பெற்ற அந்தக் கிழவரின் புன்னகை கடைசியில் எத்தனை அழகாய் இருக்கிது! நமக்குமே அந்தப்புன்னகை மனதை இதமாய் தடவுகிறது! உதவி செய்தவர் புன்னகைத்துக்கொள்கிறார். அவர் மனதில் எத்தனை வலிகளோ!
  மிக அருமை வெங்கட்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. குறும்படம் தேடிப்பிடிக்கிறீர்கள்? - அவ்வப்போது குறும்படங்களைப் பார்ப்பது வழக்கம். அதில் பிடித்தவற்றை இங்கேயும் பகிர்ந்து கொள்வது வழக்கம் மனோம்மா.

   குறும்படம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

   நீக்கு
 6. சிறப்பான சமயோஜித புத்தி.
  நான் திரை வாசிப்பான் வைத்து யூட்டியூபில் பிற மொழி படங்களின் சப்டைட்டில்ஸ் களை படிக்கும் சூக்ஷமத்தை அறிந்தவுடன் தாங்கள் பரிந்துறைக்கும் பிற குரும்படங்களையும் பார்த்துவிடுவேன் சார்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அரவிந்த்.

   நீக்கு
 7. மிக அருமையான குறும்படம்.
  மனைவிக்கு மருந்து வாங்க பணம் கிடைத்த மகிழ்ச்சியில் கம்பீரமாக நடந்து போகிறார்.

  உதவி செய்தவர் நல்ல அனுபவசாலியாக இருக்கிறார். அவர் ஏன் பிச்சை எடுக்கிறார் என்று தெரியவில்லை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. குறும்படம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 8. பதில்கள்
  1. குறும்படம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   நீக்கு
 9. அருமையான குறும்படம். மக்களின் மனநிலையை எடுத்துச் சொல்கிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. குறும்படம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி மாதேவி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....