ஞாயிறு, 30 ஆகஸ்ட், 2026

அழகிய படங்களும் சில வரிகளும் - பகுதி எண்பத்தி ஐந்து - விஜி வெங்கடேஷ்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி. 


இதற்கு முன்னர் வெளியிட்ட பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.


***********

வாட்ஸப்பில் வரும் அழகிய வண்ணச் சித்திரங்களுக்கு தகுந்தாற்போல சில வரிகளை விஜி வெங்கடேஷ் அவர்கள் எழுதி அனுப்ப, அவற்றை தொடர்ந்து இங்கே ஞாயிற்றுக் கிழமைகளில் வெளியிட்டுக் கொண்டிருக்கிறேன்.  


அந்த வரிசையில் மேலும் சில படங்களும் அதற்கு விஜி வெங்கடேஷ் அவர்கள் எழுதிய வரிகளும் உங்கள் பார்வைக்கு! எப்படி இருக்கிறது இந்த முயற்சி என்று சொல்லுங்களேன்! படம் பார்த்து உங்களுக்குத் தோன்றும் எண்ணங்களையும் எழுதுங்களேன். ஓவர் டு விஜி வெங்கடேஷ் - வெங்கட் நாகராஜ்.


********


என் அலங்காரம் எப்படி மயில் bro? நல்லா இருக்கா?


நல்லா இருக்காவா... உன் உருவம் பதிச்ச வேல் என்ன! ஒட்டியாணம் cum belt என்ன! அழகான ஆடை என்ன! வேலைப் பிடிச்சுக்கிட்டு style ஆ pose குடுத்துக்கிட்டே smile பண்ற அழகு என்ன! அடடடா ரெண்டு கண்ணு போதாது.... ஒரு சின்ன சந்தேகம் முருகா.....


என்ன மயில் bro?சும்மா கேளு...


என்ன எப்ப release பண்ணுவ? கை காலையெல்லாம் கொஞ்சம் stretch பண்ணி warm-up பண்ணிக்கணும்....🙂 கொஞ்ச நேரத்துல நாம பறக்கணும் இல்லயா? சமத்து...


ஓம் கந்தா போற்றி🙏🏻🙏🏻🙏🏻

*********


கிருஷ்ணா அதைத் தொடாதன்னு எத்தன தடவை சொல்லியிருக்கேன்? இப்ப தொட்டு கீழ வேற இறைச்சிருக்க... வாயையும் கண்ணயும் பாரு... 


இல்லம்மா, பானை கனத்துல இந்தப்பக்கம் சாஞ்சு இருந்துது, அதை சரி பண்றதுக்காகத்தான் கொஞ்சம் எடுத்தேன்... எனக்குத்தான் பின்னாடி வேற இருக்கே, சந்தேகப்படாத...

ஆமா நீ ஏன் இப்பிடி overload பண்ற... quantity correct ஆ வைக்க மாட்டியா?


எடுத்தது தெரியக்கூடாதுன்னு என்னையே question பண்றியா, இதோ வரேன் இரு....


ஜெய் ஶ்ரீ கிருஷ்ணா🙏🏻🙏🏻🙏🏻

*********


நீதான் எதிர்க்கயே இருக்கியே இந்த portrait ஐ வேற எதுக்கு காட்டற கிருஷ்ணா??


இல்ல ராதா exact ஆ என்னை மாதிரி இல்லாட்டாலும் எதிர் வீட்டு aunty வரஞ்ச இந்த portrait மாதிரியாவது வரை போதும்னு சொல்லத்தான்... நீ அசத்திடுவ எனக்குத் தெரியும்.... (இவங்களுக்கு வரஞ்சு பழக நான்தான கெடெச்சேன்..... paint waste.... ஹ்ம்ம்..)


ஜெய் ஶ்ரீ ராதே கிருஷ்ணா🙏🏻🙏🏻🙏🏻

*********


என்னது நம்ம ரெண்டு பேருக்கும் சேர்த்து ஒரு இலைதானா? Too much ஆ இருக்கே! (இவ வாயயையும் கண்ணையும் பார்த்தா எனக்கு எதுவும் மிச்சம் வைப்பான்னு தோணலை...🤨)


Too much ங்கறதுனாலதான்டா ஒரே இல! நான் diet ல இருக்கேன்.அதனால சாதம்,side dishes எல்லாத்தையும் நீ சாப்டுக்கோ.... எனக்கு light ஆ பாயசம், பப்படம், chips போதும்....  என்ன?அப்புறம் அம்மாட்ட நேந்திரம்பழம் இருக்கு.....


நெனச்சேன்.....😏 சே.. சாப்பாட்டுக்கு தனிமைதான் சரி....


Very Happy Onam with Asaththal, amarkala & attahaasa Pookkalam & Sadhya saappaadu💐🌻🌼🌸🌺🪷🪻🥀🌹🌷

********


கைலாயத்தைப் பாத்து அப்பாக்கு கும்பிடு போட்டுக்கிட்டிருக்கான் குமரன்... இத்தனை அழகான தோகையை வெச்சுக்கிட்டிருக்கேன், ஆனா ஏதோ இறகை தலையில சொருகிக்கிட்டிருக்கான்.. ஹ்ம்ம்.. என்ன ரசனையோ...😏


என்ன சொன்ன மயில் bro?


தாமரை மேல உன் தாமரைப் பாதங்களை வெச்சு அருமையா balance பண்றியே எங்க கத்துக்கிட்டன்னு பாத்தேன் வேலவா....🙂

ஓம் ஷண்முகா போற்றி🙏🏻🙏🏻🙏🏻

*******


ப்ப்பா எங்க பாத்தாலும் பானையா இருக்கா, தோட்டத்தை சுத்தி சுத்தி வந்ததுல பயங்கர tired ஆ இருக்கு. கண்ணைச் சுத்துது... கொட்டாவியா வருது... இப்பிடியே ஒரு ஓரமா தாச்சிக்கலாம்...


இந்தப் பிள்ளைய எங்க காணோம்???கிருஷ்ணா கிருஷ்ணா....


(அப்பாடா வந்துடுச்சா call? ஒரு மனுஷன் நிம்மதியா தூங்க நெனச்சா, மூக்குல வேர்த்துடுமே......) வரேம்மா.....


ஜெய் ஶ்ரீ கிருஷ்ணா 🙏🏻🙏🏻🙏🏻

*******


என்ன கிருஷ்ணா? கைல ராக்கி கயிறு ரெண்டுதான் கட்டியிருக்கு? ஒண்ணு சுபத்ரா இன்னொன்னு உன்னை portrait வரஞ்ச aunty... என் தோழிகள் Gopikas எல்லாரையும் வந்து கட்டச் சொன்னேனே, 🎁 கூட தரேன்னேன்... வரலையா???


தெரியல ராதா... நீ ராக்கிங்கறதுக்கு பதிலா ராசலீலா ன்னு சொல்லியிருந்தா ஒருவேளை வந்திருப்பாங்களோ? இல்ல, just கேட்டேன்...


(இருக்கும்.... எல்லாத்துக்கும் colestrol.......☹️ எல்லாம் இவனால்தான்... முகத்தை சாதுவா வெச்சிட்டிருக்கிறதப் பாரு....🤨)


ஜெய் ஶ்ரீ ராதே கிருஷ்ணா🙏🏻🙏🏻🙏🏻

********


இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


வெங்கட் நாகராஜ்

திருவரங்கம்

30 ஆகஸ்ட் 2026

1 கருத்து:

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....