நம்ம காய்கறி வாங்க மார்க்கெட் போனா பல காய்கறி வாங்கிட்டு வருவோம். வீட்டுக்கு வந்து அதை வைத்து சமையல் செய்வோம் இல்லைன்னா
பச்சையா சாப்பிடுவோம். ஆனா இவங்களைப் பாருங்க
காய்கறிகளை வைத்து அற்புதமான இசை தருகிறார்கள்.
The Vegetable Orchestra என்பது வியன்னாவில் இருக்கும் ஒரு இசைக்குழு. 1998 – ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த குழு இதுவரை
மூன்று இசை ஆல்பங்களை வெளியிட்டு இருக்கிறார்கள்.
திரு
ஆர்.எஸ். கிருஷ்ணமூர்த்தி அவர்களின்
வலைப்பூவில் இந்தக் குழுவினரின் ஒரு காணொளி பார்த்தவுடன் இணையத்தில் இவர்களைப் பற்றிய
விவரங்களைத் தேடினேன். இவர்களைப் போலவே நிறைய
குழுவினர் இப்போது காய்கறிகளை வைத்து இசை விருந்து தருகிறார்கள். நான் பார்த்ததை உங்களுடனும் பகிர்ந்து கொள்ளவே இப்பகிர்வு.
இந்த வித்தியாசமான இசையைக் கேட்டு இன்புறுங்கள்.
மற்றுமொரு காணொளி உங்கள் பார்வைக்கு!
என்ன நண்பர்களே வித்தியாசமான
இசையை ரசித்தீர்களா?
நட்புடன்
வெங்கட்.
புது தில்லி.



