எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Thursday, September 26, 2013

இதழில் எழுதிய கவிதைகள்


சமீபத்தில் சென்னையில் நடந்த பதிவர் சந்திப்பின் போது மொத்தம் ஐந்து புத்தகங்கள் வெளியிடப்பட்டன. அவற்றில் ஒன்று சங்கவி என்ற பெயரில் வலைப்பூ வைத்திருக்கும் நண்பர் சங்கமேஸ்வரன் அவர்களின் புத்தகம். புத்தகத்தின் தலைப்பு – “இதழில் எழுதிய கவிதைகள்”. வெளியீடு – அகவொளி பதிப்பகம். விலை ரூபாய் 70/-. பதிவர் சந்திப்பின் போது வாங்கிய புத்தகங்களில் இன்று இப்புத்தகத்தைப் பற்றி பார்க்கலாம்!பொதுவாகவே கவிதைகளில் காதல் ரசம் நிரம்பி வழியும் என்பதை பல கவிதைகளில் பார்த்திருக்கிறேன். இந்த புத்தகம் முழுவதும் அப்படி காதல் நிரம்பி வழிந்து ஓடுகிறது – எங்கு பார்க்கிலும் முத்தம் தான்! பெ. கருணாகரன், தேனம்மை லக்ஷ்மணன் மற்றும் மதுமதி ஆகியோரின் அணிந்துரையோடு வந்திருக்கும் இந்தப் புத்தகத்தில் இருக்கும் பல கவிதைகளில் நான் ரசித்த சில கவிதைகளை இங்கு பகிர்கிறேன்.

சிப்பிக்குள்
ஒளிந்திருக்கும்
முத்து போல்
கன்னக் குழிக்குள்
ஒளிந்திருக்கிறது
எனக்கான உன்
காதல் புன்னகை!

-              கல்லூரியில் படிக்கும் போது நண்பன் எழுதிய “அடியே, சிரிக்காதே, நீ சிரித்தால் உன் கன்னக்குழியில் விழ்ந்து எழ முடியாது தத்தளிக்கிறேன்என்ற கவிதை மனதிற்குள் வந்து போனது.

உன்னை
மறக்க
நினைக்கும்
போதெல்லாம்
தோற்று விடுகிறேன்
மனதிடம்...... பல விஷயங்கள் இப்படித்தான் – மறக்க நினைப்பவை எப்போதும் நெஞ்சில்......

நீ தந்த
ஒற்றை முத்தத்தில்
ஜன்னல் வழியே
நம்மை பார்த்து
சிலிர்த்துக் கொண்டது
மழை! சில்லென்ற மழைக்கே வெட்கம் வந்து விட்டதோ..... :)

முத்தம் கேட்டேன்
நீ
மின்னஞ்சலில்
அனுப்பினாய்!
வெட்கத்தில் வேலை
செய்ய மறுக்கிறது
என் மெயில் ஐ.டி.! இப்படி மட்டும் நடந்துவிட்டால் தேவையில்லாத பல மெயில்களை நான் தடுத்துவிடுவேன்!

மழையை
எனக்கு
ரொம்ப பிடிக்கும்.....
என்னவளின்
முகத்தில்
மழைத்துளி
பட்டு ஒட்டாத வரை!!  - அட என்ன தைரியம் இந்த மழைக்கு.....

பாத்திரம்
தேய்க்கும்போது
தண்ணீரில் கோலம்
போட்டுப் போட்டு
அழித்தால்
அவள்
அவன் பேரை
எழுதுகிறாள்
என அர்த்தம்!!” இக்கவிதை சங்கவிக்கு ரொம்பவே பிடிக்கும்போல – புத்தகத்தில் இரண்டு இடங்களில் வருகிறது [பக்கம் 80 மற்றும் 94].

இது போன்ற பல கவிதைகள் புத்தகத்தில் – ஒரே முத்த மழை பொழிந்திருக்கிறது.  படங்கள் நிறையவே தந்திருக்கிறார்கள் – ஒவ்வொரு கவிதைக்கும் ஒரு படம் – பல கலர் படங்கள் – கலரிலேயே அச்சடிக்க அதிகம் செலவு ஆகும் – புத்தக விலையும் எகிறிவிடும் என்ற காரணத்தால் கருப்பு வெள்ளையில் அச்சடித்திருக்கிறார்கள் – பல கதாநாயகிகள் கருப்பு வெள்ளையில் பயமுறுத்துகிறார்கள். இதை தவிர்த்திருக்கலாம் என்பது என் எண்ணம்.

சந்திப்பின் போது புத்தகத்தினை வாங்கியவுடன் எனது அருகிலேயே இருந்த சங்கவி “என்றும் அன்புடன் – சங்கவிஎன புத்தகத்தில் கையெழுத்திட்டு தந்தார்.  அவருக்கு எனது நன்றி!

உங்களுக்கு காதல் பிடிக்குமெனில் இந்த புத்தகமும் இதில் இருக்கும் கவிதைகளும் பிடிக்கும்.....  படித்து பாருங்களேன்!

மீண்டும் வேறொரு பகிர்வில் உங்களைச் சந்திக்கும் வரை.....

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

32 comments:

 1. நானும் அந்த கவிதை நூலை
  முழுவதும் படித்து
  முத்தத்தின் சத்தத்தில்
  சித்தம் கலங்கி
  பித்தனாகிப் போனேன்
  அருமையான விமர்சனம்
  பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமணி ஜி!

   Delete
 2. Replies
  1. தமிழ் மணம் இரண்டாம் வாக்கிற்கு மிக்க நன்றி ரமணி ஜி!

   Delete
 3. இப்போதான் படிக்க ஆரம்பித்திருக்கிறேன்.. வாழ்த்துகள் சதீஷ்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோவை ஆவி.

   Delete
 4. Dear Kittu,

  Mazhaiyai yenakku romba piddikkum... Kavidaigal arumai.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி உஷா சித்தி.

   Delete
 5. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   Delete
 6. அண்ணே தங்கள் விமர்ச்சனத்திற்கும் அதை பதிவாக்கியதற்கும் மிக்க நன்றி... தங்களை குடும்பத்துடன் நிகழ்வில் சந்தித்தது மிக்க மகிழ்ச்சி...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சங்கவி.

   இன்னும் பல புத்தகங்கள் வெளியிட வாழ்த்துகள்.

   Delete
 7. தலைப்பிற்கு பொருத்தம் தான் போல .

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரவாணி.

   Delete
 8. புத்தக விமர்சனம் அருமை. கவிதையுடன் தாங்கள் கொடுத்திருந்த பாய்ண்ட்ஸ்களும் ரஸிக்கும்படியாக இருந்தன. பாராட்டுக்கள், ஜி.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!

   Delete
 9. சிலிர்த்த மழைக் கவிதை ஈர்த்தது. வெட்கப்படும் ஈ மெயிலும்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 10. பகிர்வுக்கு நன்றி.சங்கவிக்கு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா....

   Delete
 11. மிகவும் ரசித்து விளம்பரப் படுத்தியுள்ளீர்கள் சகோதரரே .
  உங்களுக்கும் இப் புத்தக வெளியீட்டாளருக்கும் என் மனம்
  கனிந்த வாழ்த்துக்கள் .கவிதைகள் மிகவும் சிறப்பாக அமைந்துள்ளது .

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அம்பாள் அடியாள்.

   Delete
 12. கவிதை நூல் பற்றிய பதிவு இரசிக்கும்படி தேர்ந்தெடுத்த தேன் துளிகளாய் இருந்தது! நன்றி நண்பரே!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சேஷாத்ரி.

   Delete
 13. கவிதையுடன் உங்கள் வரிகள் கவிதைகளுக்கு அழகு சேர்த்தன.
  நல்ல விமரிசனம்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரஞ்சனிம்மா....

   Delete
 14. அழகான விமர்சனம் கொடுத்த உங்களுக்கும் எழுதிய கவிஞர் சங்கவிக்கும் வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சே. குமார்.

   Delete
 15. கவிதைகள் புத்தகத்தை வாங்கிப் படிக்கத் தூண்டுகின்றன.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அப்பாதுரை.

   Delete
 16. நீங்கள் ரசித்த கவிதைகளைப் படித்ததில் உங்களின் ரசனைக்கு அருகில் நான் இருப்பதை அறிந்து மகிழ்கிறேன்! சங்கவிக்கு மனம் நிறைந்த நல்வாழ்த்துகள்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பால கணேஷ்.

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....