எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Monday, May 23, 2016

ஆனந்தம் கொள்கின்றேன் - படக்கவிதை.....

[படம்-1 கவிதை-3]

சென்ற புதன் கிழமை படக் கவிதை வரிசையில் நான் எடுத்த புகைப்படத்தில் ஒன்றும் அதற்கு நண்பர் செல்வக்குமார் அவர்கள் எழுதித் தந்த கவிதையும் படக் கவிதை வரிசையில் முதலாம் கவிதையாக வெளி வந்தது. அதே படத்திற்கு இரண்டாம் கவிதையாக தில்லி நண்பர் பத்மநாபன் அவர்கள் எழுதிய ஒரு கவிதையை வெளியிட்டு இருந்தேன்.  இதோ இன்று அந்த படத்திற்கு வந்த மூன்றாம் கவிதை. அரங்கேற்றம் எனும் வலைப்பூவில் எழுதி வரும் நண்பர் பிரசாத் அவர்கள் இந்த கவிதையை எழுதி அனுப்பி இருக்கிறார். 

இதுவரை அவரது வலைப்பூவை நான் பார்த்ததோ, படித்ததோ இல்லை என்றாலும், எனது வலைப்பூவினை பார்த்து கவிதை எழுதி அனுப்பி இருக்கும் திரு பிரசாத் அவர்களுக்கு எனது மனம் நிறைந்த நன்றி. இப்போது அவரது வலைப்பூவினைத் தொடர ஆரம்பித்து விட்டேன். இனி அவர் பதிவுகளையும் படித்து கருத்திடுவேன்.  பல சமயங்களில் எனது வலைப்பூவை படிப்பவர்களைப் பற்றி அறியாமலே இருந்து விட நேர்கிறது.  அவர்கள் எனை மன்னிப்பார்களாக.....

புகைப்படம்-1:எடுக்கப்பட்ட இடம்:  திண்டுக்கல் அருகே சிறுமலை எனும் சிற்றூர். திண்டுக்கல் நகரிலிருந்து நத்தம் செல்லும் சாலையில் சிறுமலை பிரிவு எனும் இடம் உண்டு. அந்தப் பிரிவுச் சாலையில் 18 கொண்டைமுனை வளைவுகளைக் கடந்து சென்றால் சிறுமலை எனும் மிகச் சிறிய ஊர் இருக்கிறது. அங்கே சென்ற போது மலைப்பாதையில் ஒரு குதிரையின் மீது விறகுகளை ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்தார். படத்திற்கு அரங்கேற்றம்வலைப்பூவில் எழுதும் திரு பிரசாத் எழுதித் தந்த கவிதை இதோ.....

கவிதை-3:

ஆனந்தம் கொள்கின்றேன்.....

சிறகென்று இருந்திருந்தால்
விண்வெளியில் பறந்திருப்பேன் !
விறகிங்கு சுமக்கின்ற‌
வலியின்று திரிந்திருப்பேன் !

பொதி சுமக்கும் என்குடும்பக்
கழுதையதன் கதியறிந்தேன் !
அதி துன்பம் என்றாலும்
தனக்கென்றால் தான் தெரியும் !

பரி என்னை அனுதினமும்
பரிபாலனம் தான் செய்து
பரிதாபமாக அவன்
பளு சுமக்க வைத்தாலும்...

நான்சுமக்கும் விறகெறிந்தே
அவன் வயிறு நிறையுமெனும்
ஓர உண்மை நானறிந்து...

ஆனந்தம் கொள்கின்றேன் !

     பி. பிரசாத்.

என்ன நண்பர்களே, படமும் கவிதையும் வரிசையில் முதலாம் படமும் படத்திற்கான மூன்றாம் கவிதையாக திரு பிரசாத் எழுதிய கவிதையையும் ரசித்தீர்களா?

நான் எடுத்த வேறு சில படங்களை நண்பர்களுக்கு சில அனுப்பி இருக்கிறேன். அந்த படங்களுக்கான கவிதைகள் இன்னும் வந்து சேரவில்லை.  வந்ததும் அவையும் இங்கே பகிர்ந்து கொள்ளப்படும்.  நீங்களும் எனது புகைப்படத்திற்கு ஏற்ற கவிதை எழுத நினைத்தால், உங்கள் விருப்பத்தினை மின்னஞ்சல் ( venkatnagaraj@gmail.com ) மூலம் தெரிவியுங்கள். நான் எடுத்த புகைப்படம் ஒன்றினை அனுப்பி வைக்கிறேன்.

கவிதை எழுதுபவர்களுக்கு ஊக்கம் தரும் முயற்சி மட்டுமே. வேறு எந்த நோக்கமும் இல்லை.  சில கவிதைகள் சேர்ந்தபிறகு அவற்றைத் தொகுத்து மின்னூலாகவும் வெளியிடலாம்.  அனைவருடைய படைப்புகளையும் படிப்பவர்களிடம் கொண்டு சேர்க்க இது ஒரு முயற்சி....  கவிதை மற்றும் புகைப்படம் பற்றிய எண்ணங்களை பின்னூக்கத்தில் சொல்லுங்கள்.....

மீண்டும் வேறொரு பதிவில் சந்திக்கும் வரை....

நட்புடன்

வெங்கட்.


28 comments:

 1. புதுமையான முயற்சி
  படமும் கவிதையும் அருமை
  தம +1

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   Delete
 2. நான்சுமக்கும் விறகெரிந்தே
  அவன் வயிறு நிறையுமெனும்
  ஓர் உண்மை நானறிந்து...
  ஆனந்தம் கொள்கின்றேன்!..

  ஆனாலும் - குதிரைக்கு நல்ல மனம்!..

  வாழ்க நலம்!..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!

   Delete
 3. கழுதை ஆனந்தம் கொள்ளும் அளவுக்கு, இருக்கும் மனிதன் நிலையறிந்து நானும் ஆனந்தம் கொள்கின்றேன் :)

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான் ஜி!

   Delete
 4. கவிதைகள் அணிவகுக்கின்றன போலும். ரசித்தேன்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 5. படக்கவிதை அருமை.

  //சில கவிதைகள் சேர்ந்தபிறகு அவற்றைத் தொகுத்து மின்னூலாகவும் வெளியிடலாம். அனைவருடைய படைப்புகளையும் படிப்பவர்களிடம் கொண்டு சேர்க்க இது ஒரு முயற்சி.... //

  நல்ல முயற்சி. வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா....

   Delete
 6. அருமை! பகிர்வுக்கு நன்றி!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.

   Delete
 7. அட கவிதை நல்லா இகருக்கு ஜி கழுதையைப் பார்க்கும் பொழுது எனக்கும் கவிதை வருதே....

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

   Delete
 8. //

  --
  நான்சுமக்கும் விறகெறிந்தே
  அவன் வயிறு நிறையுமெனும்
  ஓர உண்மை நானறிந்து...
  ஆனந்தம் கொள்கின்றேன் !//

  கழுதைக் கவிதை நன்றாக இருக்கிறது.

  இனி யாரும் மற்றவரை கழுதை என்று சொல்ல மாட்டார்கள்.

  Jayakumar

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜெயகுமார் ஐயா.

   Delete
 9. கவிதை அருமை
  தம +

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மது.

   Delete
 10. //நான்சுமக்கும் விறகெறிந்தே
  அவன் வயிறு நிறையுமெனும்
  ஓர உண்மை நானறிந்து...

  ஆனந்தம் கொள்கின்றேன் !// ஈரம் மிகுந்த வரிகள் ... உங்கள் முயற்சிகளுக்கு நன்றி அய்யா

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீமலையப்பன் ஸ்ரீராம்.

   Delete
 11. அழகான ,அருமையான கழுதையின் வரி(லி)கள்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அஜய் சுனில்கர் ஜோசப்.

   Delete
 12. கவிதை நன்று! தங்களுக்கும் வாழ்த்து!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி புலவர் ஐயா.

   Delete
 13. திரு பிரசாத் அவர்களின் கவிதையை இரசித்தேன். அவருக்கு எனது பாராட்டுக்கள்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

   Delete
 14. கவிதை படித்து ஆனந்தம் கொண்டேன்! பரியின் நிலை குறித்து பரிதாபம் கொண்டாலும், நல்ல கவி கிடைத்ததல்லவா!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி....

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....