எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Tuesday, May 10, 2016

கள்வனின் காதலன் - மழையில் நனைந்து...


முகப் புத்தகத்தில் நான் – 6

கள்வனின் காதலன் – 10 மே 2016

தலைநகரில் எங்கள் பகுதியில் இருக்கும் ஒரு தோழி. தமிழர் என்றாலும் தமிழ் படிக்க அவ்வளவாக வராது. பேசுவதும் மழலையாகத் தான் இருக்கும்.  குழந்தைப் பருவத்தில் வேறு மாநிலத்தில் இருந்தவர் என்பதால் தமிழில் பேசுவதும் படிப்பதும் கொஞ்சம் தகராறு.  ஆனாலும் தமிழ் மீது கொஞ்சம் ஆவலுண்டு. என்னிடம் இருக்கும் புத்தகங்களை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளும் வழக்கமுண்டு. இந்தத் தோழியும் சில சமயங்களில் என்னிடமிருந்து தமிழ் புத்தகத்தினை வாங்கிக் கொள்வார் – படிப்பதற்கு தான்....

சமீபத்தில் அவருடைய பெற்றோர்கள் தில்லி வந்திருந்தார்கள். வந்த சில நாட்களில் அந்த தோழி என்னிடம் வெங்கட்ஜி அப்பாவுக்கு வீட்டுல சும்மாவே உட்கார்ந்து இருக்க கஷ்டமா இருக்கு....  [b]போரடிக்குது.  படிக்க ஏதாவது புஸ்தகம் இருந்தா பரவாயில்லைன்னு சொன்னாங்க....  சரி உங்க கிட்ட புஸ்தகம் வாங்கித் தரேன்னு அவர்கிட்ட சொன்னப்ப, அவங்க படிக்க விட்டுப்போன சில புஸ்தகங்கள் கேட்டாங்க... அது உங்க கிட்ட இருந்தா கொடுங்களேன்என்றார்.

அதுக்கென்ன என்னிடம் அந்த புஸ்தகம் இருந்தால் கண்டிப்பாக தரேன் எனச் சொல்லி, என்ன புஸ்தகம் எனக் கேட்க, அவர் சொன்னது.....

...
...
...
...
...
...
...
...

கல்கி எழுதிய “கள்வனின் காதலன்

கேட்டவுடன் கொஞ்சம் சிரித்தபடியே அவரிடம் சொன்னேன் – கல்கி மீண்டும் பிறந்து எழுதினால் தான் உண்டும்மா, கல்கி எழுதியது “கள்வனின் காதலிகாதலன் இல்லை என்று சொன்னேன்.  அதைக் கேட்ட நானும் மற்ற நண்பர்களும், அன்றிலிருந்து அவரை கலாய்த்துக் கொண்டிருக்கிறோம். 

சில நாட்கள் கழித்து வேறொரு புஸ்தகம் கேட்டார் – அது பொன்னியின் செல்வன்– நல்ல வேளை பொன்னியின் செல்வி என்று கேட்காமல் விட்டார்......

இது நடந்து பல நாட்கள் ஆனாலும் எழுதாமல் தான் இருந்தேன். சில நாட்கள் முன்னர், அவரிடம் எழுதப்போகிறேன் என்று சொல்ல, “எழுதுங்க வெங்கட்ஜிஎன்றார் சிரித்தபடியே......

மழையில் நனைந்து........ – 10 மே 2016தலைநகர் தில்லிக்குப் போன புதிது....  நல்ல வெய்யில். சுட்டெரிக்கும் வெய்யில் சமயத்தில் திடீரென மழை பெய்தால் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும்?  மழையை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தேன். தமிழகத்தில் இருந்தவரை மழையில் நனைவது பிடிக்கும் என்றாலும், நனைவதற்காகவே வெளியே சென்றதில்லை.  தில்லியில் என்னை கட்டுப்படுத்த யாரும் இல்லை என்றாலும் மழையில் நனையத் தோன்றவில்லை.

எதிர் வீட்டு மொட்டை மாடியில் சலசலப்பு. பார்த்தால் அந்த வீட்டில் இருந்த மொத்த குடும்பமும் மொட்டை மாடிக்கு வந்து சேர்ந்தார்கள். மழையில் உல்லாசமாய் நனைந்து மகிழ்ச்சியாக இருந்தார்கள். ஒவ்வொரு மொட்டை மாடியிலும் குடும்பத்துடன் மழையில் நனைந்து கொண்டிருந்தார்கள். இது தமிழகத்திலிருந்து சென்ற எனக்கு புதிதாய் இருந்தது.  அதன் பிறகு என்னுள்ளும் ஒரு வேகம் பிறந்தது. உற்சாகத்துடன் மொட்டை மாடிக்கு ஓடி மழை நிற்கும் வரை நனைந்து கொண்டிருந்தேன்.

இப்போதும் அவ்வப்போது இப்படி மழையில் நனைவது உண்டு! இன்றைக்கு திருவரங்கத்தில் மாலை மூன்றரையிலிருந்து நல்ல மழை – ஒரு மணி நேரத்திற்கு மழை பெய்தது – அப்படியே வெளியே சென்று மழையில் நனையவேண்டும் எனது மனது சொன்னாலும் செய்ய முடியவில்லை! J தில்லி சென்ற பிறகு அங்கே மழை பெய்தால் நனைய வேண்டும்!......

என்ன நண்பர்களே, என்னுடைய சமீபத்திய முகப்புத்தக இற்றைகளை ரசித்தீர்களா? பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்.....

நட்புடன்

வெங்கட்.

திருவரங்கத்திலிருந்து.....

36 comments:

 1. “கள்வனின் காதலன்” ஹாஹாஹா ரசித்தேன் ஜி
  டெல்லி மழையில் நனைந்திட வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

   Delete
 2. சுவாரஸ்யம். பதிவில் நனைந்தேன் என்று சொல்லலாமா!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 3. இரண்டுமே அருமையான அனுபவங்கள்!
  த ம 3

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி செந்தில் குமார்.

   Delete
 4. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி புலவர் ஐயா.

   Delete
 5. ரசித்தேன் நண்பரே.....
  நன்று தொடர்ந்து பதிவுகள்
  தாருங்கள் என்னால் முடிந்தவரை
  என் வருகை தொடரும்...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அஜய் சுனில்கர் ஜோசஃப்.

   Delete
 6. இரண்டு நிகழ்ச்சிகளும் சிரிப்பை வரவழைத்தது. புத்தகம் படிக்கப் படிக்கத்தான் மொழியறிவு வரும். நிறைய சமயங்களில், நாம் விருப்பப்படுவதைச் செய்யமுடியாது சூழ்'நிலை தடுக்கும். அது மழையில் நனைவதாகட்டும், வீட்டுல சட்டை போடாமல் இருப்பதாகட்டும், ரோட்டில் குச்சி ஐஸ் சாப்பிடும் ஆசையாகட்டும், ரோட்டுக்கடைகளில் பஜ்ஜி சாப்பிடும் ஆசையாகட்டும், சாலைக் கடைகளில் இருக்கும் காரம் போட்ட மாங்காய் சாப்பிடும் எண்ணமாகட்டும் .. 'நம்மோடு வருபவரைப் பார்த்தும், நம் குடும்பம் (சமயத்தில் குழந்தைகள் கூட) அனுமதிக்காது என்று எண்ணியும் அமைதிகாக்க வேண்டியிருக்கும்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லத் தமிழன்.

   Delete
 7. வணக்கம் பயணப் பதிவரே
  திருவரங்கத்திலும் நனையலாமே

  ReplyDelete
  Replies
  1. திருவரங்கத்திலும் நனையலாமே... முடிவதில்லை :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மது.

   Delete
 8. நல்ல வேளை.பருத்திபன் கனவைக் கேட்காமல் போனாரே :)

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான் ஜி!

   Delete
 9. அனுபவங்கள் இனிமையானவை ஐயா
  நன்றி

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   Delete
 10. மழையில் நனைவதில் தனி மகிழ்ச்சி..

  வாழ்க நலம்!..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!

   Delete
 11. எங்களுக்கும் சிரிப்புதான் வந்தது :))

  இப்போதும் மழை நேரத்தில்தான் எனக்கு வெளியில் நிறைய வேலை இருக்கும்.... நனைவதற்காகவே !

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சித்ரா சுந்தரமூர்த்தி....

   Delete
 12. நான் படித்து ரசித்த நூல்களில் ஒன்று கல்கியின் கள்வனின் காதலி. கதையின் ஓரிடத்தில் கதாநாயகன் நிலாவைப் பார்த்துக்கொண்டு, இதே சமயம் அவள் இந்நிலாவைப் பார்த்துக் கொண்டிருப்பாள் என்று நினைத்துப் பார்ப்பான். அந்த நினைவினையும் காட்சியையும் நான் பல முறை ரசித்துள்ளேன். இந்த உங்களின் அனுபவம் என்னுடைய அனுபவத்தை நினைவூட்டியது.

  ReplyDelete
  Replies
  1. பதிவு உங்கள் நினைவலைகளை மீட்டியதில் மகிழ்ச்சி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி டாக்டர் ஜம்புலிங்கம் ஐயா.

   Delete
 13. மழை என்ருமே மகிழ்ச்சி தருவதுதான்..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜனா ஐயா.

   Delete
 14. Super. Wish you more and more rain in Srirangam.
  Vijay

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி விஜயராகவன் ஜி!

   Delete
 15. நல்ல பெரு மழையில் நனைவது நல்லதுதான். சிறு தூறலில் தான் நனைய கூடாது என்பார்கள்.
  பதிவு அருமை.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...

   Delete
 16. ரசித்தேன்! மழையில் நனைவது சுகம்தான்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.

   Delete

 17. 1968 ஆம் ஆண்டு புது தில்லியில் பணி புரிந்துகொண்டிருந்தபோது ஆகஸ்ட் திங்களில் வந்த முதல் மழையில் பெரும்பாலோர் நடுத் தெருவில் நின்று ஆடிக்கொண்டு மழையில் நனைந்ததை வியப்போடு பார்த்த அந்த அனுபவம் எனக்கும் கிட்டியது. பதிவை இரசித்தேன்!

  ReplyDelete
  Replies
  1. உங்களுக்கும் தில்லி அனுபவம் கிடைத்திருப்பது அறிந்து மகிழ்ச்சி ஐயா.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

   Delete
 18. கள்வனின் காதலன்...ஹஹஹஹஹ்...மழை பிடிக்கும் ஆனால் நனைவதில்லை வேண்டுமென்றே...உடலுக்கு ஒத்துக் கொள்வதில்லை...

  கீதா: ஆஹா மழையில் நனைவது ரொம்பப் பிடிக்கும். இந்த வருடமும் சென்னையில் பெய்த முதல் அக்னி நட்சத்திர மழையில் நனைந்தாயிற்று!!!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....