எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Sunday, May 22, 2016

பதாய் நடனம் – ஹாலிடே நியூஸ் – பதிவர் சந்திப்புசென்ற மாதம் ஹாலிடே நியூஸ் மாத இதழ் பற்றி உங்களுடன் பகிர்ந்து கொண்டது நினைவிருக்கலாம். இந்த மாதமும் [மே] ஹாலிடே நியூஸ் வெளிவந்து சில நாட்கள் ஆகின்றன என்றாலும், நேற்று தான் மே மாத ஹாலிடே நியூஸ்எனக்கு கிடைத்தது. ஆமாம் நேற்று பதிவர், நண்பர் செந்தில் குமார் அவர்கள் மதுரையிலிருந்து திருச்சி வர, அவரை திருச்சியின் மத்தியப் பேருந்து நிலையத்திற்குச் சென்று சந்தித்தேன்.  என்னைச் சந்திப்பதற்காகவே மதுரையிலிருந்து பயணித்து திருச்சி வந்திருந்த நண்பர் செந்தில் குமார் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி.தமிழகத்திற்கு இம்முறை வந்த சில நாட்களாகவே அலைபேசி மூலம் பேசிக் கொண்டிருந்தோம். ஒவ்வொரு முறையும் சந்திக்கலாம் என நினைத்த தேதியும், இடமும் மாறிக் கொண்டே இருந்தது. அவருக்கு பணிச்சுமை, நானும் ஏதேதோ வேலைகள் என சந்திப்பு தள்ளிப் போய்க்கொண்டிருந்தது. நானே மதுரை சென்று வர நினைத்திருந்தாலும் என்னால் சென்று அங்கிருக்கும் பதிவுலக நண்பர்களை சந்திக்க இயலவில்லை.  நேற்று தனது பணிச்சுமைகளுக்கு இடையே மதுரையிலிருந்து திருச்சிக்குப் பயணித்து வந்தார் நண்பர் செந்தில் குமார்.சந்திப்பின் போது இந்த மாத ஹாலிடே நியூஸ் இதழும், தினத்தந்தி வெளியிட்ட நண்பர் செந்தில்குமார் அவர்களின் நம்ப முடியாத உண்மைகள்புத்தகமும், தின வணிகம் மற்றும் அக்ரி டாக்டர் நாளிதழ்களின் இதழ்களில் ஒன்றும் எனக்குத் தந்தார்.  மத்தியப் பேருந்து நிலையத்தின் எதிரே இருந்த ஒரு உணவகத்தில் இரவு உணவினைச் சாப்பிட்டபடியே பயண அனுபவங்களையும் வலையுலக அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டோம். 

இம்முறை ஹாலிடே நியூஸ் இதழில் பல பதிவர்களின் கட்டுரைகள் வெளிவந்திருக்கின்றன.  சென்ற இதழ் போலவே சிறப்பான வண்ணப் படங்கள், சிறப்பான கட்டுரைகள் என இதழ் அமர்க்களமாக வெளிவந்திருக்கிறது. 

நாம் இங்கே கோடையின் கொடுமையில் இருக்க, நடுங்க வைத்த லண்டன் குளிர் பற்றி எழுதி இருக்கிறார் பதிவர் ஞா. கலையரசி அவர்கள்.  எரிமலைக்கு மேலே நடந்து சென்று அங்கே கிடைத்த அனுபவங்களை பகிர்ந்து கொண்டிருக்கிறார் நண்பர் சுரேஷ்.  டாக்டர் ஜம்புலிங்கம் ஐயா அவர்கள் அலஹாபாத் நகரிலிருக்கும் ஆனந்த பவன் சென்று வந்த அனுபவத்தினைப் பற்றி எழுதி இருக்கிறார்கள்.

விண்கல் ஒன்று விழுந்ததால் உண்டாகிய லோனார் கிரேட்டர் லேக் எனும் ஏரி பற்றிய தகவல்கள், கண்ணாடி போன்ற தெளிந்த நீர் கொண்ட மலாவி ஏரி பற்றிய தகவல்கள், கண்ணாடிப் பல்லக்கில் சப்தஸ்தான திருவிழா, ஆயிரங்காலத்து அதிசயம் ஐஹோலே, அரிட்டாபட்டி கலைப் பொக்கிஷங்கள், வடகிழக்கு மாநில பயணத் தொடர் என மிகச் சிறப்பான கட்டுரைகள் இந்த இதழில் வெளிவந்திருக்கின்றன. நான் எடுத்த புகைப்படங்களோடு, புந்தேல்கண்ட் பகுதியின் ‘பதாய்நடனம் பற்றிய சிறு கட்டுரையும் இந்த ஹாலிடே நியூஸ் இதழில் வெளிவந்திருக்கிறது.  நான் எடுத்த புகைப்படம் ஒன்றை முழுபக்க வண்ணப்படமாக ஒரு மாத இதழில் பார்க்கும் போது மனதில் மகிழ்ச்சி.  தொடர்ந்து இரு மாதங்களாக என்னுடைய பகிர்வு இந்த மாத இதழில் வருவதில் இரட்டிப்பு மகிழ்ச்சி. 

50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் மாத இதழை தபால் மூலம் பெற விரும்பும் வெளியூர் நண்பர்கள் ஒரு வருடத்திற்கான சந்தா தொகை [600 ரூபாய்] செலுத்தி உங்களது வீட்டிற்கே வரவழைத்துக் கொள்ளலாம். மேலும் தகவல்கள் தெரிந்து கொள்ள 99430-19032 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.  தமிழில் இப்படி சிறப்பான, வண்ணமயமான சுற்றுலா இதழ் தொடர்ந்து வரவேண்டும் என்பதால் உங்கள் ஆதரவினைத் தாருங்கள்.

நண்பர் செந்தில் குமார் அவர்களுடன் பேசிக் கொண்டிருந்த பின்னர் உணவகத்திலிருந்து பேருந்து நிலையம் நோக்கித் திரும்பினோம்.  இன்னும் சற்று நேரம் பேசிய பிறகு அவர் மதுரைக்குப் பேருந்தில் புறப்பட நான் திருவரங்கம் திரும்பினேன்.

எல்லா தமிழகப் பயணங்கள் போலவே இம்முறையும் ஒரு சில பதிவுலுக நண்பர்களை மட்டுமே சந்திக்க முடிந்தது. இந்த முறை நான் சந்தித்த பதிவுலக நட்புகள் – திரு செந்தில் குமார், திரு ரிஷபன், திருமதி கீதா சாம்பசிவம், திருமதி கீதா, திரு கஸ்தூரி ரெங்கன், திரு செல்வகுமார் மற்றும் சில புதுக்கோட்டை நண்பர்கள்.  சந்திக்க இயலாதவர்கள் பலர்...  அவர்களை அடுத்த முறை சந்திக்க வேண்டும். 

நாளை தில்லியில் இருக்க வேண்டும். மூன்று வார விடுமுறைக்குப் பிறகு தில்லி திரும்புகிறேன். பணிச்சுமை அதிகம் இருக்கும் என்பதால் இன்னும் சில தினங்களுக்கு இணையத்தில் அதிகம் உலவ இயலாது. முடிந்தபோது பதிவுகள் மூலம் சந்திக்கிறேன். நடுநடுவே ஏற்கனவே எழுதி வைத்திருந்த பதிவுகள் Schedule செய்து வெளியிடப்படலாம்!

மீண்டும் வேறொரு பதிவில் சந்திக்கும் வரை.....

நட்புடன்

வெங்கட்.

திருவரங்கத்திலிருந்து.....

38 comments:

 1. ஹாலிடே நியூஸ் அறிமுகம் பார்த்து மகிழ்ச்சி. புதிய தகவல் எனக்கு.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரிஷபன் ஜி!.

   Delete
 2. வலையுலக ஜாம்பவான்களின் ஆக்கங்களைத் தாங்கிய ஹாலிடே நியூஸ் இதழின் அறிமுகம் கண்டு மகிழ்ச்சி.. வாழ்க நலம்..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!

   Delete
 3. ஆஹா, சந்தித்த சில மணி நேரங்களிலேயே அதை பதிவாக வெளியிட்டு, அசத்திவிட்டீர்கள். தங்களை சந்தித்ததில் எனக்கும் மட்டற்ற மகிழ்ச்சி! 'ஹாலிடே நியூஸ்' இதழை அறிமுகப்படுத்தியதற்கும் நன்றி!
  த ம 2

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி செந்தில் குமார்.

   தங்களைச் சந்தித்ததில் மகிழ்ச்சி.

   Delete
 4. மாத இதழில் உங்கள் படைப்பு வெளிவருவதற்கு வாழ்த்துகள். சந்தித்த பதிவர்களில் இருவரை விட்டு விட்டீர்களே...!!

  ReplyDelete
  Replies
  1. சந்தித்த பதிவர்களில் இருவரை விட்டு விட்டேனா.... :) ஹா....ஹா...

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 5. ஹாலிடே நியூஸ் இதழில் உங்கள் படங்கள், கட்டுரை, மற்றும் பதிவுலக நண்பர்கள் கட்டுரைகள் இடம் பெற்று இருப்பது அறிந்து மகிழ்ச்சி.
  வாழ்த்துக்குள் எல்லோருக்கும்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா....

   Delete
 6. நானும் மே மாத இதழை வாங்கி படிக்க வேண்டும். நீங்கள் இருவரும் சந்தித்துக் கொள்ளப் போகும் விஷயத்தை, கடைசி நேரத்தில்தான் எஸ்.பி.எஸ் அவர்கள் சொன்னார். இதனால் என்னால் உங்களோடு உரையாடும் சந்தர்ப்பம் கிடைக்காமல் போய் விட்டது.

  ReplyDelete
  Replies
  1. உங்களை இம்முறை சந்திக்க இயலவில்லை. நேற்று மாலை நேரம் என்பதால் உங்களை அழைக்கவில்லை..... அடுத்த பயணத்தில் உங்களைச் சந்திக்கிறேன் ஐயா.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தமிழ் இளங்கோ ஐயா.

   Delete
 7. ஹாலிடே நியுஸ் இதழை பற்றியும் நண்பரை பற்றியும் பகிர்ந்தமைக்கு நன்றி!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.

   Delete
 8. பேரூந்து நிலையத்தில் சந்தித்த அவர் அப்படியே மதுரை திரும்பிவிட்டாரா. நாங்கள் மதுரை சென்றிருந்தபோது எங்களை ஓட்டல் அறையில் சந்திப்பதாகக் கூறியவரால் முடியவில்லை. நாங்கசள் ஒரு குழுவாக இருந்ததால் என்னாலும் தனியே சந்திக்க முடியவில்லை

  ReplyDelete
  Replies
  1. பேருந்து நிலையம் எதிரே உள்ள உணவகத்தில் சந்தித்தோம். அவர் மதுரைக்கும் நான் திருவரங்கத்திற்கும் திரும்பினோம்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB ஐயா.

   Delete
  2. ஜி.எம்.பி. அய்யா அவர்களுக்கு
   தாங்கள் மதுரை வந்திருந்தபோது தங்களின் மொபைல் எண் தெரியாமல் வீட்டு தொலைபேசியை தொடர்பு கொண்டு முடியாமல் இருவருக்குமான தகவல் தொடர்பு விட்டுப்போனதும். தாங்கள் தாமதமாக தொடர்பு கொண்டபோது என்னால் வரமுடியாமலும் போனது. நாமிருவரும் சந்திக்க முடியாமல் போனதற்கு கம்யூனிகேஷன் கேப்பே காரணம். மற்றொரு சந்தர்ப்பத்தில் அவசியம் சந்திப்போம்!

   Delete
  3. பல சமயங்களில் இப்படி தொடர்பு கொள்ள முடியாமல் போவதுண்டு.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி செந்தில் குமார்.

   Delete
 9. இருவரும் சந்தித்துக்கொண்டதில் மகிழ்ச்சி ஜி தொடரட்டும்....

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

   Delete
 10. இனிமையான சந்திப்பு ஐயா

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   Delete
  2. சகோதரர் செந்தில்குமாரை சந்தித்து அளவளாவிய அனுபவம் படிக்க இனிமையும் சுவாரசியமாகவும் இருந்தது!

   Delete
  3. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மனோ சாமிநாதன் மேடம்.

   Delete
 11. ஹாலிடே நியூஸ் அறிமுகம் பார்த்து மகிழ்ச்சி. புதிய தகவல் எனக்கு.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சீனி.

   Delete
 12. நண்பர்கள் சந்திப்பு மனதிற்கு இனிமை...வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நாஞ்சில் மனோ.

   Delete
 13. ஹாலிடே நியூஸ் வாணிகப் படிக்கத் தூண்டுகிறது. தங்கள் கட்டுரையும் இடம் பெற்றமைக்கு வாழ்த்துகள்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முரளிதரன்.

   Delete
 14. உங்களின் கட்டுரையும் அவை சார்ந்த புகைப்படமும் 'ஹாலிடே நியூஸ்' மாத இதழில் வெளி வந்தது குறித்து மகிழ்ச்சி!
  பதாய் ஹோ! பாய், பதாய் ஹோ!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி...

   Delete
 15. அருமையான சந்திப்பு
  நட்பு வளரட்டும் ...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அஜய் சுனில்கர் ஜோசப்.

   Delete
 16. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜனா சார்.

   Delete
 17. ஹாலிடே நியூஸ் இதழில் தங்களது பயணக் கட்டுரை இடம் பெற்றது அறிந்து மிக்க மகிழ்ச்சி. வாழ்த்துகள்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா. என்னுடைய கட்டுரை கலாச்சாரம் பற்றிய கட்டுரை - பயணப் பகிர்வு இல்லை.

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....