படமும்
கவிதையும் – முதல் பதிவு
[படம்-1
கவிதை-1]
எந்த
ஊருக்குப் பயணம் சென்றாலும் என்
புகைப்படக் கருவியும் என்னுடன் பயணிப்பது வழக்கம். அங்கே பார்க்கும் சில காட்சிகள், சில முகங்களை
மறக்க முடியாது. அப்படி பார்ப்பவைகளில் சிலவற்றை மட்டுமாவது புகைப்படம் எடுப்பதுண்டு. ரொம்ப நாட்களாகவே அந்த புகைப்படங்களுக்குத்
தகுந்த கவிதை எழுதினால் நன்றாக இருக்குமே என்று தோன்றும். கவிதையை ரசிப்பதற்கு
மட்டுமே தெரிந்த எனக்கு கவிதை எழுதுவது கடினம். அப்படியும் சில சமயங்களில் கவிதை
எழுதிப் பார்த்ததுண்டு! நான் எழுதும் கவிதையை நானே ரசிக்க முடியாது என்பதால்
அடுத்தவர்களுடன் அவற்றை பகிர்ந்து கொண்டதில்லை!
”ரசிப்பதோடு
நிறுத்திக்கொள்.... எழுதி அடுத்தவர்களை
ரணப்படுத்தாதே!” என்று உள்மனதும் சொல்லிவிட்டதால் என் கவிதை முயற்சிகளை
கைவிட்டுவிட்டேன்..... “சீச்சீ... இந்தப்
பழம் புளிக்கும்.....” நரி கதை தான் என் கதையும்.
என்னுடைய வலைப்பூவில் சில ஓவியங்களை/புகைப்படங்களை
தந்து அவற்றுக்குத் தகுந்த கவிதைகளை மற்றவர்கள் எழுத வெளியிட்டதுண்டு. இரண்டு
ஓவியங்கள் கொடுத்து அவற்றுக்கான கவிதைகளை மற்றவர்கள் எழுதி அனுப்பி வைக்க,
அக்கவிதைகள் எனது வலைப்பூவை அலங்கரித்தன. அக்கவிதைகளைப் படிக்க கீழே உள்ள
சுட்டியைப் பாருங்கள்.
ஓவியக்கவிதை – 2 – இந்த சுட்டியில் ஒரு கவிதையும் அதே
ஓவியத்திற்கு வந்த மற்ற 17 கவிதைகளின் சுட்டியும் இருக்கிறது.....
ஓவியக்கவிதை – 1 – அன்னம் விடு தூது எனும் தலைப்பில்
15 கவிதைகள் – பதினைந்தாம் கவிதைக்கான சுட்டி இது....
நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் கவிதைகள் என்
பக்கத்தில் வெளியிட எண்ணம். சில
நண்பர்களிடம் இம்முயற்சி பற்றி பேசியபிறகு அவர்களுக்கு நான் எடுத்த புகைப்படத்தினை
அனுப்பி வைத்திருக்கிறேன். அவர்கள் அப்படத்திற்குத் தகுந்த கவிதை எழுதி எனக்கு
அனுப்பி வைக்க, என் பக்கத்தில் புகைப்படமும், எடுத்த இடம் பற்றிய தகவல் மற்றும்
அவர்களது கவிதையும் வெளியிடப்படும். முதல்
புகைப்படமும், கவிதையும் இன்று.......
புகைப்படம்-1:
எடுக்கப்பட்ட இடம்:
திண்டுக்கல் அருகே சிறுமலை எனும் சிற்றூர். திண்டுக்கல் நகரிலிருந்து
நத்தம் செல்லும் சாலையில் சிறுமலை பிரிவு எனும் இடம் உண்டு. அந்தப் பிரிவுச்
சாலையில் 18 கொண்டைமுனை வளைவுகளைக் கடந்து சென்றால் சிறுமலை எனும் மிகச் சிறிய ஊர்
இருக்கிறது. சிறுமலை பற்றிய மேலதிகத் தகவல்கள் எனது துணைவியின் வலைப்பூவில் இங்கேயும் இங்கேயும்.... அங்கே சென்ற போது மலைப்பாதையில் ஒரு குதிரையின் மீது விறகுகளை
ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்தார் ஒருவர்.
பின்புறத்திலிருந்து தான் படம் எடுக்க முடிந்தது – இந்தப் படத்தினை, ”நான் ஒன்று சொல்வேன்" எனும் வலைப்பூவில் எழுதி வரும் – செல்வக்குமார்
அவர்களுக்கு அனுப்பிவைத்தேன். அவர்
எழுதித் தந்த கவிதை இதோ.....
கவிதை-1:
பிதாவே... மன்னிக்காதீர்கள்...
துள்ளித்திரிந்த
என்னை..
காடழித்து
சுள்ளி சுமக்க
வைத்தோனே..
அள்ளிவை
கொஞ்சம்..
கொள்ளிவைக்க..
அசுவமேதக்கூட்டமே!
பாரம்
சுமப்பதனால்
என்னைத்
தள்ளிவைக்காதீர்...
இது
என் பிழையன்று...
ச்சீய்...
மனிதப்பிழைப்பு...
செல்வக்குமார்.....
என்ன நண்பர்களே, படமும் கவிதையும் வரிசையில் முதலாம்
படமும் நண்பர் செல்வக்குமார் எழுதிய கவிதையையும் ரசித்தீர்களா? இனி ஒவ்வொரு புதன்
கிழமையும் படமும் கவிதைகளும் வெளிவரும். இதே படத்திற்கேற்ற கவிதையை நீங்களும் எழுத
நினைத்தால் எழுதி என் மின்னஞ்சல் முகவரிக்கு ( venkatnagaraj@gmail.com ) அனுப்பி வைத்தால் எனது பக்கத்தில் வெளியிடுகிறேன். கவிதை எழுத விருப்பம் இருந்தால் உங்களது
மின்னஞ்சலிலிருந்து எனக்கு அனுப்புங்கள். நான் எடுத்த புகைப்படம் ஒன்றினை அனுப்பி
வைக்கிறேன்.
கவிதை எழுதுபவர்களுக்கு ஊக்கம் தரும் முயற்சி மட்டுமே.
வேறு எந்த நோக்கமும் இல்லை. சில கவிதைகள்
சேர்ந்தபிறகு அவற்றைத் தொகுத்து மின்னூலாகவும் வெளியிடலாம். அனைவருடைய படைப்புகளையும் படிப்பவர்களிடம்
கொண்டு சேர்க்க இது ஒரு முயற்சி.... கவிதை
மற்றும் புகைப்படம் பற்றிய எண்ணங்களை பின்னூக்கத்தில் சொல்லுங்கள்.....
மீண்டும் வேறொரு பதிவில் சந்திக்கும் வரை....
நட்புடன்
வெங்கட்.
திருவரங்கத்திலிருந்து....
நல்ல முயற்சியில் இறங்கியுள்ளீர்கள். பாராட்டுகள்.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி டாக்டர் ஜம்புலிங்கம் ஐயா.
நீக்குநல்ல முயற்சி தொடரட்டும் !
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான்ஜி!
நீக்குபடமும் ...கவிதையும் ...அருமை ..
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றிஅனுராதா ப்ரேம் ஜி!
நீக்குநல்ல படம்
பதிலளிநீக்குஅதற்கேற்ற அற்புதமான கவிதை
நல்ல முயற்சி
தொடர நல்வாழ்த்துக்கள்
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமணி ஜி!
நீக்குஉங்களுக்கும் ஒரு புகைப்படம் வரும்... விரைவில்.
சிறந்த கவிதை. பாராட்டுக்கள்
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB ஐயா.
நீக்குஅருமை
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நாகேந்திர பாரதி ஜி!
நீக்குநல்லதொரு முயற்சி! முன்பே கலந்துகொள்ள நினைத்து இருந்தேன்! முடியவில்லை! இந்த முறை முயற்சிக்கிறேன்! பாராட்டுக்கள்!
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ். உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு வேறு ஒரு படம் விரைவில் அனுப்பி வைக்கிறேன். அப்படத்திற்கான கவிதை எழுதி அனுப்புங்கள்.
நீக்குரசித்தேன்.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.
நீக்குகாட்சியும் கவிதையும் நன்று..
பதிலளிநீக்குநல்லதொரு முயற்சி தொடர்வதற்கு நல்வாழ்த்துகள்..
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!
நீக்குAsuvametha kouttamea vari super. Keep it up.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பஷீர் அலி ஜி!
நீக்குகவிதை அருமை நல்லதொரு முயற்சி பாராட்டுகள் ஜி எனக்கும் கவிதைக்கும் 142 கி.மீ.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!
நீக்குநல்ல முயற்சி செல்வகுமார் அண்ணாவின் கவிதையும் உங்கள் புகைப்படமும் அருமை ...
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீமலையப்பன் ஸ்ரீராம்.
நீக்குசெல்வகுமாரின் கவிதை அருமை
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முரளிதரன்.
நீக்குபின்னூட்டமிட்ட அனைத்து நண்பர்களுக்கும்...உங்களுக்கும் நன்றி..உங்களின் முயற்சிகள் யாவும் சிறக்க மனமார்ந்த வாழ்த்துகள்...
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி செல்வக்குமார்.
நீக்குபடத்தேர்வும் கவிஞர் தேர்வும் அருமை.
பதிலளிநீக்குவரிகளில் கோபம் தெறிக்கிறது.
தொடரட்டும் இந்தப் புதிய முயற்சி.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முத்துநிலவன் ஐயா.
நீக்குஅருமையான முயற்சி நண்பரே....
பதிலளிநீக்குவாழ்த்துகள் நண்பரே ...
என்னால் முடிந்ததை ஏதோ கிறுக்குவேன்...
இதோ எனது மின்னஞ்சல்
ajaisunilkarjoseph@gmail.com
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அஜய் சுனில்கர் ஜோசஃப். உங்கள் மின்னஞ்சலுக்கு நான் எடுத்த படம் ஒன்றை அனுப்பி வைக்கிறேன் விரைவில்.
நீக்கு'நச்'சென்று ஒரு நல்ல கவிதை. வாழ்க.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி...
நீக்குபடம் அழகு! கவிதையும், கோபத்திலும் அழகு நங்கைகள் அழகாய் இருப்பது போல, கனலுடன் செக்கச் சிவந்து அழகுடன் வரிகள்! அருமை...
பதிலளிநீக்குதொடரட்டும் தங்களது முயற்சி வெங்கட்ஜி!
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!
நீக்கு
பதிலளிநீக்குபுகைப்படமே ஒரு கவிதை தான். அதற்கு அழகு சேர்த்து இருக்கிறார் திரு செல்வக்குமார் அவர்கள்! அவருக்கும் தங்களுக்கும் பாராட்டுக்கள்!
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா....
நீக்கு