திருவரங்கத்தில்
தற்போது சித்திரைத் திருவிழா நடந்து கொண்டிருக்கிறது. இன்றைக்கு தேரோட்டம் –
சித்திரை மாதம் நடக்கும் தேரோட்டம் என்பதால் சித்திரைத் தேர் - சித்திரை வீதிகளில் உலா வரும் தேர். கீழச் சித்திரை வீதி அல்லது கிழக்குச் சித்திரை
வீதியிலிருந்து புறப்பட்டு தெற்குச் சித்திரை வீதி, மேற்குச் சித்திரை வீதி, வடக்குச்
சித்திரை வீதி வழியாக மீண்டும் கிழக்குச் சித்திரை வீதிக்கே நிலை திரும்பும். இன்று காலை அங்கே சென்று தேரோட்டம்
கண்டோம்.
தேரோட்டம்
என்றாலே கொண்டாட்டம் தானே....
திருவரங்கத்தின் அருகிலிருக்கும் பல ஊர்களிலிருந்தும் மக்கள் திரளாக
வந்திருந்து தேரோட்டத்தினைக் கண்டு ரசிப்பது மட்டுமல்லாது அரங்கனையும் தரிசித்து
செல்வார்கள். மக்கள் கூட்டம் என்றால் திருவிழா கடைகள் இல்லாமலா! அவையும் உண்டு.
தேரோட்டம்
சமயத்தில் நான் எடுத்த சில புகைப்படங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளவே இப்பதிவு!
வாருங்கள் புகைப்படங்களைப் பார்க்கலாம்!
மாட்டின் மேல் மேளம் - அதைக் கொட்ட சிறுவர்கள்!
என் கவலை - மாடு மிரண்டு விடாதோ?
ஆண்டாள் - தேரோட்டத்தின் முன்னே நான் வந்தே ஆகவேண்டும் என்ற எண்ணத்தோடு நடக்கிறாளோ?
குதிரையும் உண்டு!
சிங்கம்.... நரசிம்மம் வேடம் அணிந்து தேரோட்டத்தின் முன்னே....
வித்தியாசமாய் ஏதோ இருக்க - புகைப்படம் எடுத்தேன்.
என்னவென்று விற்பனை செய்த பெண்மணியைக் கேட்க.....
அவர் சொன்ன பதில்....
புட்டுங்க!
பஞ்சு மிட்டாய்!
தேரோட்டம் பார்க்க வந்த சிறுமிகள்!
எங்களையும் ஃபோட்டோ புடிங்க மாமா!
குழந்தைகளைக் கவரும் பீப்பீ!
கோலாட்டம் - குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை....
அம்மா.... தேர் எப்ப, எப்படி வரும்?
தேரோட்டம்....
கோலாட்டம் - குழப்பத்தில் குழந்தைகள்..
எஞ்சாய் மாடி! சப்தமிடும் சிறுவர்கள்.....
பொம்மை வாங்கலையோ பொம்மை!
சாயங்காலத்துக்குள்ள இதெல்லாம் வித்துட முடியுமா?
கவலையில் பெரியவர்....
இங்கிருந்து தேர் பார்த்தா நல்லா தெரியும்!
அப்பாவின் தோளில் இருந்தபடி வீதியைக் கவனிக்கும் சிறுவன்.....
பொம்மை.... பொம்மை..... முப்பது ரூபாய்க்கு பொம்மை!
வாயில் எச்சி ஊற வைத்த மாங்காய்.....
புகைப்படம் எடுக்க எத்தனித்தபோது விற்ற பெண்மணி அவசரம் அவசரமாக தலையில் இருந்த துணியை அகற்றினார். நல்லா எடுங்க! - மாங்காயை மட்டும் தாங்க எடுக்கப் போறேன் என்று சொன்னதும் மீண்டும் முக்காடு! வெய்யிலிருந்து காப்பாற்றிக் கொள்ள!
பலாச்சுளை - ஸ்வீட் எடு கொண்டாடு!
வேறொரு
பதிவுடன் உங்களைச் சந்திக்கும் வரை.....
நட்புடன்
வெங்கட்.
திருவரங்கத்திலிருந்து.....
சுடச் சுட படங்கள்.. நன்றி
பதிலளிநீக்குநீங்கள் முகப்புத்தகத்தில் பகிர்ந்த படங்கள் தான் சுடச்சுட! :)
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரிஷபன் ஜி!
ரசனையான படங்கள். மாங்காய் பத்தை, பலாச்சுளை,... பஞ்சுமிட்டாய்க் காரர் படம் போலவே திருமதி ராமலக்ஷ்மியும் ஒரு படம் எடுத்திருக்கிறார் என்று நினைவு.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.
நீக்கு//மாட்டின் மேல் மேளம் - அதைக் கொட்ட சிறுவர்கள்!
பதிலளிநீக்குஎன் கவலை - மாடு மிரண்டு விடாதோ?//
அதிர்வேட்டுக்கப்புறமா நகரா காளை மாடுகளின் மேலே இப்படித் தான் வரும். இருபக்கமும் இரு இளைஞர்கள் கூடவே நடந்தவண்ணம் நகராவைக் கொட்டி முழக்குவார்கள். இப்போ நகரா பார்த்தே 40 வருஷத்துக்கும் மேலே ஆச்சு! (மதுரையிலே பார்த்தது) இங்கே மறுபடி காணக் கொடுத்தமைக்கு நன்றி. தேரைத் தொலைக்காட்சியிலும் உங்க பதிவிலும் பார்த்தாச்சு!
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா....
நீக்குசூப்பர் சகோ,, புகைப்படங்கள் அனைத்தும் அருமை,, இங்கிருந்து பார்த்தா தேர் நல்லா தெரியும் பால்ய நினைவுகளைக் கிளறிய புகைப்படம்,,,
பதிலளிநீக்குமாங்காய் சூப்பர்,,,
மொத்தத்தில் அனைத்தும் அருமை சகோ,,
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மகேஸ்வரி பாலச்சந்திரன் ஜி!
நீக்குஅழகான படங்கள்.. தேரோட்டத்தை நேரில் பார்த்த மகிழ்ச்சி..
பதிலளிநீக்குவாழ்க நலம்...
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!
நீக்குதேரோட்டம் படங்கள் எல்லாம் அருமை. நேரில் கண்டு களித்த உணர்வு.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா....
நீக்குதேரோட்டத் திருவிழாவில்
பதிலளிநீக்குகலந்து கொண்ட உணர்வு
புகைப்படங்கள் பிரமாதம்
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமணி ஜி!
நீக்குகூட்டம் என்றாலே எனக்கு பிடிக்காது ,அமைதியான திருவிழாவைக் கண்டு ரசித்தேன் :)
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான் ஜி!
நீக்குபுகைப்படங்களே தேரோட்டமாய் மயக்குகிறது!
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மோகன்ஜி!
நீக்குஅனைத்து படங்களும் அருமை. அதிலும் அந்த மாங்காய்ப் பூ புகைப்படம் அருமை.
பதிலளிநீக்கு(நான் வேண்டாம். என் மாங்காய் மட்டும் வேண்டுமாக்கும் என்று அந்த அம்மணி மாங்காய்க்கும் முக்காடு போட்டிருந்தால்.......... )
மாங்காய்க்கும் முக்காடு போட்டிருந்தால் - முக்காடு போட்ட மாங்காய் என்று எழுதி இருக்கலாம்!
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி.
படங்கள் வழக்கம்போல் அருமை. பாராட்டுக்கள்!
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.
நீக்குபுகைப்படங்கள் பேசுகின்றது ஜி அருமை
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!
நீக்குஅழகான படங்களுடன் ஸ்ரீரங்கம் தேரோட்டத்தை கண் முன்னே நிறுத்திவிட்டீர்கள்! வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.
நீக்குஎத்தனை முறை பார்த்தாலும் பார்க்கத் தூண்டுவனவற்றில் ஒன்று தேரோட்டம். வழக்கம்போல ரசனையான நிலையில் தங்கள் பதிவினை அதிகம் ரசித்தேன்.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி டாக்டர் ஜம்புலிங்கம் ஐயா.
நீக்குபடங்கள் அழகு அண்ணா...
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பரிவை சே. குமார்.
நீக்குஉங்கள் படங்களைப் பார்த்தவுடன், மீண்டும் அந்தக்கால எனது பள்ளிச்சிறுவன் வாழ்க்கை நினைவுகள். ஊர் திருவிழா என்று கிராமத்திலுள்ள சொந்தக்காரர்களின் வீடுகள், கிராமத்து நண்பர்கள் என்று வந்து போயினர். ’நேரு மாமா’ போல் குழந்தைகள் என்றால் உங்களுக்கும் கொள்ளைப் பிரியம். பல மாநிலக் குழந்தைகளின் போட்டோக்களை உங்கள் பதிவுகளிலிருந்து தொகுத்து வைக்கலாம்./
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தமிழ் இளங்கோ ஐயா.
நீக்குலேட்டுத்தான். பலாச்சுளையும், மிளகாய்த்தூள் உள்ள மாங்காயையும் தவறவிடவேண்டியதாகிவிட்டது. குழந்தைகள்தான் இத்தகைய திருவிழாவில் மகிழ்ச்சியை அதிகரிப்பவர்கள். போட்டோக்கள் அருமை.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.
நீக்குபுகைப்படங்களே தேரோட்டத்தைப் பறைசாற்றுகிறது..அதுவும் பஞ்சு மிட்டாய், பொம்மைக்காரர், ஊதுகுழல்....புகைப்படங்கள் எல்லாம் மிக அருமை.
பதிலளிநீக்குகீதா: அழகு! எல்லாமே. எங்கள் ஊரின் தேரோட்டத்தை நினைவுபடுத்தியது எங்கள் ஊரிலும் சித்திரைமாசம்தான் தேர். மாங்காய் பத்தை மிக மிக அழகு ஏதோ மலர் மொட்டு போன்று அதுவும் மலரின் இடையில் சிவப்பு ஷேட் இருப்பது போன்று...பலாச்சுளை நாவில் நீர் ஊறவைத்தது ஜி.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன் ஜி!
நீக்கு