எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Wednesday, May 25, 2016

இறைவன் வகுத்து வைத்தது - படமும் கவிதையும்

[படம்-2 கவிதை-1]

சென்ற புதன் கிழமை அன்று நான் எடுத்த புகைப்படம் ஒன்றிற்கு நான் ஒன்று சொல்வேன்வலைப்பூவில் எழுதும் நண்பர் செல்வகுமார் அவர்கள் எழுதிய கவிதையோடு இந்த படமும் கவிதையும் பகிர்வுகளை தொடங்கினேன்.  அதே படத்திற்கு மொத்தம் மூன்று கவிதைகள் வர, அனைத்தும் ஒவ்வொன்றாய் எனது வலைப்பூவில் பகிர்ந்து கொண்டேன்.  அவை தவிர, வலைப்பதிவர் சுப்பு தாத்தா அவர்கள் ஃபேஸ்புக்கில் அதே படத்திற்கு ஒரு கவிதையை பின்னூட்டமாக எழுதி இருந்தார் – அக்கவிதை கீழே.... 

காலம் முடிஞ்சு போச்சு
காலன் இழுக்கறான்
கயிற்றினால் .
சந்தோசம்.

இருந்தும்,

இன்னும் இருக்கே இரண்டு சுமை.
இதைத் தாங்கும் முதுகு வரும் வரை
இன்று மட்டும் கொடப்பா விடுமுறை.

     சுப்பு தாத்தா....

கவிதை எழுதி அனுப்பிய நண்பர்கள் அனைவருக்கும் நன்றி.  பின்னூட்டம் அளித்து கவிஞர்களையும் என்னையும் ஊக்குவித்த அனைவருக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றி. 

இதோ இந்த புதன் கிழமை படமும் கவிதையும் வரிசையில் இரண்டாவது படம்.  படம் பற்றிய விவரங்கள் கீழே.

புகைப்படம்-2:எடுக்கப்பட்ட இடம்:  சென்னை ECR சாலையில் முட்டுக்காடு அருகே இருக்கும் தக்‌ஷிணசித்ரா. கிராமங்களிலேயே மாட்டு வண்டிகள் இல்லாத ஒரு நிலை இன்று. அங்கே சுற்றுலா வரும் பள்ளிக் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் விரும்பினால் காசு கொடுத்து மாட்டு வண்டி பயணம் மேற்கொள்ளலாம்.  அப்படி சில பள்ளிச் சிறுவர்கள் மாட்டு வண்டி பயணம் சென்றபோது எடுத்த புகைப்படம் இது.  பிரியமில்லாதவனின் கண்கள் சிந்திய கவிதைத் துளிகள் எனும் வலைப்பூவில் எழுதி வரும் – திரு அஜய் சுனில்கர் ஜோசப் அவர்களுக்கு அனுப்பிவைத்தேன்.  அவர் எழுதித் தந்த கவிதை இதோ.....

கவிதை-1:

இறைவன் வகுத்து வைத்தது அப்படி...

பின் கழுத்தில் ஏறிய நுகமும்,
என்னுள்ளே இருக்கும் அகமும்
எனக்கென்றும் பாரம் ஆனதில்லை
காரணம் எனக்கு இறைவன்
வகுத்து வைத்தது அப்படி...

என்னெஜமான் நீ ஆனால்
மனிதா நீ தூரங்கள் செல்ல
நான் உன் பாரங்கள் சுமப்பேன்
காரணம் எனக்கு இறைவன்
வகுத்து வைத்தது அப்படி...

உந்தன் நடையில் பாரங்கள மாற,
எந்தன் நுகமதில் பாரங்கள் ஏற
தாக்கங்களின்றி முன்னேறிச் செல்வேன்.
காரணம் எனக்கு இறைவன்
வகுத்து வைத்தது அப்படி...

என்றெனக்கு பாரங்கள் நீங்கும்
அன்றெனக்கு சோகங்கள் நீங்கும்
என்ற ஏக்கங்கள் எனக்குள்
காரணம் எனக்கு இறைவன்
வகுத்து வைத்தது அப்படி...

உந்தன் வயிற்றுக்கு வாட்டம்
வந்து விடாமல் இருக்க
எந்தன் கால்களின் ஓட்டம் தொடரும்...
காரணம் எனக்கு இறைவன்
வகுத்து வைத்தது அப்படி...

           அஜய் சுனில்கர் ஜோசப்

என்ன நண்பர்களே, படமும் கவிதையும் வரிசையில் இரண்டாம் படமும் நண்பர் அஜய் சுனில்கர் ஜோசப் எழுதிய கவிதையையும் ரசித்தீர்களா? இனி ஒவ்வொரு புதன் கிழமையும் படமும் கவிதைகளும் வெளிவரும். இதே படத்திற்கேற்ற கவிதையை நீங்களும் எழுத நினைத்தால் எழுதி என் மின்னஞ்சல் முகவரிக்கு ( venkatnagaraj@gmail.com ) அனுப்பி வைத்தால் எனது பக்கத்தில் வெளியிடுகிறேன்.  வேறு படத்திற்கு கவிதை எழுத விருப்பம் இருந்தால் உங்களது மின்னஞ்சலிலிருந்து எனக்கு தெரிவியுங்கள். நான் எடுத்த புகைப்படம் ஒன்றினை அனுப்பி வைக்கிறேன்.

கவிதை எழுதுபவர்களுக்கு ஊக்கம் தரும் முயற்சி மட்டுமே. வேறு எந்த நோக்கமும் இல்லை.  சில கவிதைகள் சேர்ந்தபிறகு அவற்றைத் தொகுத்து மின்னூலாகவும் வெளியிடலாம்.  அனைவருடைய படைப்புகளையும் படிப்பவர்களிடம் கொண்டு சேர்க்க இது ஒரு முயற்சி....  கவிதை மற்றும் புகைப்படம் பற்றிய எண்ணங்களை பின்னூக்கத்தில் சொல்லுங்கள்.....

மீண்டும் வேறொரு பதிவில் சந்திக்கும் வரை....

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.


30 comments:

 1. கடந்த பதிவில் கூறியதைப் போல நல்ல முயற்சியில் இறங்கியுள்ளீர்கள். பாராட்டுகள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி டாக்டர் ஜம்புலிங்கம் ஐயா.

   Delete
 2. நன்றி நண்பரே....
  நீங்கள் அனுப்பிய படத்திற்கு வரிகள்
  இதுதானா என்றே தெரியவில்லை...
  இருந்தும் எனது சின்ன மூளையில்
  சிந்திய வரிகள் இவைகளே....
  இன்னும் நன்றாக எழுதியிருக்கலாம்...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அஜய் சுனில்கர் ஜோசப்.

   Delete
 3. தூரங்கள் செல்ல பாரங்கள் சுமப்பேன்..
  வாழ்த்துகள்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரிஷபன் ஜி!

   Delete
 4. தங்களின் புகைப்படத்திற்கு திரு அஜய் சுனில்கர் ஜோசப் அவர்கள் வடித்த கவிதை அருமை! அவருக்கு பாராட்டுகளும் அதை வெளியிட்ட தங்களுக்கு வாழ்த்துக்களும்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

   Delete
 5. நன்றாக இருக்கின்றன - கவிதைகள்..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!

   Delete
 6. ரசித்தேன் அஜய்... வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 7. எல்லாவற்றிலும் இறைவன் செயலைக் காணும் சுனில்குமார் ஜோசப்புக்கு வாழ்த்துகள்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி G.M.B. ஐயா.

   Delete
 8. சுபபு தாத்தா, மற்றும் அஜய் இருவரது கவிதையும் பொருத்தம் வாழ்த்துகள்
  பகிர்வுக்கு நன்றி ஜி

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

   Delete
 9. தங்கள் முயற்சிக்குப் பாராட்டுகள். பள்ளி கல்லூரிக் காலங்களில் எழுதிவந்த நான் இப்போது கவிதைப் பக்கம் செல்லவே தயங்கிடும் எனைப் போன்றோர் கூட எழுத முயற்சி செய்ய தூண்டும் எனபதில் ஐயமில்லை வெங்கட் ஜி. முயற்சி தொடர வாழ்த்துகள்.

  அஜயின் கவிதைக்கும் வாழ்த்துகள்...

  கீதா

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

   Delete
 10. சுப்புத்தாத்தா கலக்குகிறார்!!!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

   Delete
 11. படமும்,பாடலும் அருமை..வாழ்த்துகள் சுனில்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி செல்வக்குமார்.....

   Delete
 12. காசு செலவழித்து மனுஷன் அந்த மாடை,பாடாய் படுத்தாமல் போனால் சரிதான் :)

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான் ஜி!

   Delete
 13. மிகவும் அருமை

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீமலையப்பன் ஸ்ரீராம்.

   Delete
 14. திரு அஜய் சுனில்கர் ஜோசப் அவர்களின் கவிதை நன்று! வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி....

   Delete
 15. கவிதை அருமை! வாழ்த்துகள்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....