சனி, 28 மே, 2016

எனக்கொன்றும் சிரமமில்லை - படமும் கவிதையும்

[படம்-2 கவிதை-2]

படமும் கவிதையும் வரிசையில் இரண்டாம் புகைப்படத்திற்கு வந்த இரண்டாம் கவிதையோடு உங்களை இன்று சந்திப்பதில் மகிழ்ச்சி. கவிதையை எழுதி அனுப்பியவர் தில்லையகத்து க்ரோனிக்கிள்ஸ் வலைப்பூவில் எழுதி வரும் சகோதரி கீதா அவர்கள்.  படம் பற்றிய குறிப்பும் கவிதையும் இதோ....

புகைப்படம்-2:எடுக்கப்பட்ட இடம்:  சென்னை ECR சாலையில் முட்டுக்காடு அருகே இருக்கும் தக்‌ஷிணசித்ரா. கிராமங்களிலேயே மாட்டு வண்டிகள் இல்லாத ஒரு நிலை இன்று. அங்கே சுற்றுலா வரும் பள்ளிக் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் விரும்பினால் காசு கொடுத்து மாட்டு வண்டி பயணம் மேற்கொள்ளலாம்.  அப்படி சில பள்ளிச் சிறுவர்கள் மாட்டு வண்டி பயணம் சென்றபோது எடுத்த புகைப்படம் இது.  சகோதரி கீதா அவர்கள் எழுதித் தந்த கவிதை இதோ.....

கவிதை-2:

எனக்கொன்றும் சிரமமில்லை

ஐந்தறிவு செக்கு மாடு நான்
ஆறறிவுச் செல்வங்கள் நீங்கள்
செக்கு மாடாய் புத்தகச் சுமையைத்
தினமும் சுமந்திட
இன்று ஒரு நாளேனும்
சுமை இல்லாது மகிழ்வாய் இருந்திட
உங்களை இழுப்பதில்
எனக்கொன்றும் சிரமமில்லை
மகிழ்ச்சியுடன் இழுத்திடுவேன்!


செல்வங்களே ஒரு வேண்டுகோள்

கழனிகளில் வாழ்ந்த நாங்கள்
இன்று
கழனிகளை மனிதர்கள் தொலைத்ததால்
வீதிகளில் நாங்கள்
பாரமில்லைதான் நீங்கள், எனினும்
நாளைய செல்வங்களே
கழனிகளை மீட்டெடுத்திடுவீரெனில்
எனது அடுத்த தலைமுறையேனும்
கழனிகளில் வாழ்ந்திடுமே!

என்ன நண்பர்களே, படமும் கவிதையும் வரிசையில் இரண்டாம் படமும் சகோதரி கீதா அவர்கள் எழுதிய கவிதையையும் ரசித்தீர்களா? இதே படத்திற்கேற்ற கவிதையை நீங்களும் எழுத நினைத்தால் எழுதி என் மின்னஞ்சல் முகவரிக்கு ( venkatnagaraj@gmail.com ) அனுப்பி வைத்தால் எனது பக்கத்தில் வெளியிடுகிறேன்.  வேறு படத்திற்கு கவிதை எழுத விருப்பம் இருந்தால் உங்களது மின்னஞ்சலிலிருந்து எனக்கு தெரிவியுங்கள். நான் எடுத்த புகைப்படம் ஒன்றினை அனுப்பி வைக்கிறேன்.

கவிதை எழுதுபவர்களுக்கு ஊக்கம் தரும் முயற்சி மட்டுமே. வேறு எந்த நோக்கமும் இல்லை.  சில கவிதைகள் சேர்ந்தபிறகு அவற்றைத் தொகுத்து மின்னூலாகவும் வெளியிடலாம்.  அனைவருடைய படைப்புகளையும் படிப்பவர்களிடம் கொண்டு சேர்க்க இது ஒரு முயற்சி....  கவிதை மற்றும் புகைப்படம் பற்றிய எண்ணங்களை பின்னூக்கத்தில் சொல்லுங்கள்.....

மீண்டும் வேறொரு பதிவில் சந்திக்கும் வரை....

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.


30 கருத்துகள்:

 1. மாட்டு வண்டி பயணம் இது.
  மாட்டும் கொண்டி வரும் வரை
  தொடரும் இது.

  பாட்டு பல பாடி
  பகல் கனவு கண்டதெல்லாம்
  நாட்டு நடப்போடு சேராதடி,

  ஊருக்கு வெளியிலே
  ஒரு வண்டிப்பயணத்திலே
  ஒண்ணாக இருந்ததெல்லாம்
  வெறும் கனவாக போகுமடி,
  உனக்கு
  வயசிலே புரியுமடி.


  வாட்டும் வெய்யிலிலே
  வெந்ததெல்லாம் போதுமடி.
  வீடு நோக்கி போவுங்கடி .


  சுப்பு தாத்தா.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் அழகிய கவிதையை பின்னூட்டமாக தந்தமைக்கும் மிக்க நன்றி சுப்பு தாத்தா.....

   நீக்கு
 2. படமும் அதற்கேற்ப கவிதை எழுதியிருந்த கீதா சகோவின் வரிகளும் அருமை!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி செந்தில் குமார்.

   நீக்கு
 3. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   நீக்கு
 4. கவிதையும், வேண்டுகோளும் அருமை வில்லங்கத்தாருக்கு வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

   நீக்கு
 5. ஒன்றை ஒன்று விஞ்சி நிற்கும் கவிதைகள். பாராட்டுகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி டாக்டர் ஜம்புலிங்கம் ஐயா.

   நீக்கு
 6. உங்களின் புகைப்படம் மிக அழகு! அதற்கேற்ற அருமையான கவிதையை படைத்திருக்கும் கீதாவிற்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மனோ சாமிநாதன் மேடம்.

   நீக்கு

 7. சகோதரி கீதா அவரக்ளின் கவிநயத்தோடு கூடிய கருத்தாழமிக்க கவிதைக்கு பாராட்டுக்கள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

   நீக்கு
 8. மிக்க நன்றி வெங்கட் ஜி. பல வருடங்களுக்குப் பிறகு இப்போது எழுதுவதால் கவிதை என்று வரும் போது கொஞ்சம் தயக்கம் இருக்கத்தான் செய்கின்றது. என்றாலும் உங்கள் இந்த முயற்சியும், இந்தப் புகைப்படமும் எழுதத் தூண்டியது. ஊக்குவிப்பதற்கு மிக்க நன்றி. இங்கு வெளியிட்டமைக்கும் மிக்க மிக்க நன்றி.

  இங்கு கவிஞர்கள், தமிழ் விற்பன்னர்கள் பலர். எல்லோரும் மிக அருமையாக எழுதிவருகின்றார்கள். ஏதோ தேர்வு எழுதிவிட்டு முடிவுகளுக்குக் காத்திருக்கும் மாணவி போல் அந்த விற்பன்னர்கள் என்ன சொல்ல இருக்கின்றார்கள் என்று அறியும் ஆவலில்...

  மீண்டும் நன்றி ஜி

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

   நான் எடுத்த புகைப்படத்திற்கு அருமையானதோர் கவிதை எழுதி அனுப்பிய உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி. தொடரட்டும் உங்கள் கவிதைகள்.

   நீக்கு
 9. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 10. அருமையான கவிதை! வாழ்த்துக்கள் கீதாவுக்கு பகிர்ந்த உங்களுக்கும் நன்றிகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனிமரம் நேசன்.

   நீக்கு
 11. அருமையான கவிதை.
  //கழனிகளை மீட்டெடுத்திடுவீரெனில்
  எனது அடுத்த தலைமுறையேனும்
  கழனிகளில் வாழ்ந்திடுமே!//

  கழனியை மீட்டு எடுக்கட்டும் நாளைய தலமுறை.
  கீதா அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
  உங்களுக்கு நன்றி வெங்கட்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா....

   நீக்கு
 12. கவிதை அருமை ... உங்கள் முயற்சிக்கு பாராட்டுக்கள் அய்யா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீமலையப்பன் ஸ்ரீராம்.

   நீக்கு
 13. உண்மையை அழகாக கூறிய கீதா அம்மாவின் கவிதை வரிகளை இரசித்தேன் ஐயா.அவர்களுக்கு வாழ்த்துகள்.தங்களின் நல்ல முயற்சிக்கு பாராட்டுக்கள்.எங்கள் கல்லூரியிலும் எனது சகோதரிகள் அழகான கவிதைகளை எங்களது மெல்லினம் இதழுக்கு தருவார்கள் அதனை தங்களுக்கும் மின்னஞ்சல் செய்கிறேன் ஐயா.
  நன்றி ஐயா.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வைசாலி செல்வம்.

   நீக்கு
 14. வெங்கட்ஜி இந்தப் பதிவும் சரி இதன் அடுத்த பதிவும் சரி இங்கு கணினியில் பதிவு மட்டுமே வருகின்றது. பின்னூட்டங்கள் எதுவுமே வரவில்லை அதனால் பார்க்க முடியவில்லை. இப்பொது வரை முயன்றும் பின்னூட்டங்கள் எங்களது உட்பட இங்கு பார்க்க முடியவில்லை.

  கவிதைக்கு என்ன கருத்துகள் வந்தன என்று தெரியவில்லை என்றாலும் கருத்துகள் கொடுத்திருக்கும் அனைவருக்கும் மிக்க நன்றி.

  ஒரு சில தளங்களுக்கு மட்டுமே பின்னூட்டம் அளிக்க முடிகின்றது. இணையம் வந்து கொண்டிருக்கின்றது எதனால் என்று தெரியவில்லை...ஒரு வேளை செர்வர் பிரச்சனையா என்று தெரியவில்லை.

  கீதா

  (ஸாரி வெங்கட் ஜி. இதன் முதல் வரி அடுத்த பதிவிற்கான வரி..அதுவும் சேர்ந்து வந்துவிட்டதால் அதை எடுத்துவிட்டு மீண்டும் கொடுத்திருக்கின்றேன்....)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

   நீக்கு
 15. கவிதையை ரசித்து வாழ்த்தியமைக்கு, அனைவருக்கும் எங்கள் மனமார்ந்த நன்றிகள்.

  வெளியிட்டு ஊக்குவிக்கும் வெங்கட்ஜி உங்களுக்கும் வணக்கங்கள், நன்றிகள் பல!

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....