எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Friday, May 13, 2016

ஃப்ரூட் சாலட் – 163 – சின்ன வயது பெரிய மனது – அன்னையர் தினம் - வறட்சி

சின்ன வயது, பெரிய மனசு:சென்னை மாம்பலம் பாலகிருஷ்ணா தெருவில் சூடு தாங்காமல் நடந்தும் வாகனங்களிலும் செல்லக்கூடியவர்கள் ஒரு வீட்டில் வாசலில் நின்று நீர் மோர் வாங்கி குடித்துவிட்டு செல்கிறார்கள்.

வீட்டு வேலை செய்பவர்கள்,கூரியர் பையன்கள்,ஆட்டோ ஒட்டுனர்கள்,கைவண்டி இழுப்பவர்கள்,தெருக்கூட்டுபவர்கள் என்று பலதரப்பினரும் பழக்கப்பட்டது போல அந்த வீட்டின் வாசலில் வழங்கப்படும் நீர் மோரை வாங்கி சாப்பிட்டு தாகம் தீர்ந்து திருப்தியுடன் செல்கின்றனர்.இப்படியே அடுத்தடுத்த கூட்டம் வருகிறது, தாகம் தீர்த்துக்கொண்டு செல்கிறது.

யார் இந்த அளவு இத்தனை மக்களுக்கு தாகம் தீர்ப்பது கூட்டத்தை விலக்கி எட்டிப்பார்த்தால் ஒரு ஆச்சர்யம் காத்திருந்தது. காரணம் பத்து வயது சிறுமி தன் வயதை ஒத்த தோழிகளின் துணையுடன் 'வாங்க,வாங்க மோர் குடிங்க, தர்பூசணி எடுத்துக்குங்க, நுங்கு சாப்பிடுங்க' என்று அகமும்,முகமும் மலர வரவேற்று வந்தவர்களுக்கு இலவசமாக மோரும், தர்பூசணியும், நுங்கும் வழங்கிக்கொண்டிருந்தார்.

பெயர் கவிபாரதி

சென்னை பி.எஸ்.முத்தா பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படிக்கிறார்.கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் இவர் தன் வீட்டு பால்கணியில் இருந்து ரோட்டில் போகிறவர்களை பார்த்துக்கொண்டு இருந்த போது பலரும் வெயிலில் சிரமப்பட்டு செல்வதையும், வீடுகளில் தண்ணீர் கேட்டு காத்திருந்து குடிப்பதையும் பார்த்து இருக்கிறார்.ஏற்கனவே ரோடுகளில் சிலர் நீர் மோர் வழங்குவதை பார்த்திருந்த கவிபாரதி மனதில் ஏன் நாமும் அவர்களைப் போலவே நமது தெரு வழியாக செல்பவர்களுக்கு நீர் மோர் வழங்கக்கூடாது என்று முடிவு செய்து தன் தாய் ஸ்ரீநித்யா தந்தை குமார் ஆகியோரிடம் சொல்லியிருக்கிறார்.

அவர்களும் சந்தோஷமாக சம்மதம் தர வீட்டு உண்டியலில் சேர்த்து வைத்திருந்த பணத்தை முதல் மூலதனமாக போட்டு வீட்டிலேயே மோர் தயாரித்து வாசலில் வைத்து வழங்கினார்.மோர் குடித்து தாகம் நீங்கியவர்கள் 'நல்லாயிருக்கணும் தாயி' என்று வாழ்த்தினர்.இதனால் உற்சாகம் அடைந்தவர் அந்த வருடம் கோடைகால பயிற்சி முகாமிற்கு கூட போகாமல் அக்னி நட்சத்திரம் முடியும் வரை வீட்டு வாசலில் மோர் வழங்கினார். இதே போல கடந்த வருடம் வழங்கும் போது இவரது தோழிகளும் சேர்ந்துகொண்டனர்.

இது மூன்றாவது வருடம் கவிபாரதியின் நீர் மோர் சேவையைப் பாராட்டி அவரது உறவினர்கள் பலரும் ஆசீர்வாதம் செய்து பணம் வழங்கினர், இப்போது அந்த பணத்தைவைத்து தர்பூசணி மற்றும் நுங்கு போன்றவைகளையும் வழங்குகிறார்.தினமும் 75 லிட்டர் மோர் தற்போது செலவாகிறது.பகல் 11 மணியில் இருந்து வெயில் இறங்கும் மதியம் 3 மணி வரை நீர் மோர் வழங்கப்படுகிறது.தர்பூசணியும் நுங்கும் இருப்பில் உள்ளவரை கொடுக்கப்படும்.எந்நேரமும் மண்பானை தண்ணீர் குறைவின்றி குடிக்கலாம்.

கவிபாரதியின் இந்த நீர்மோர் சேவையின் பின்னனியில் அவரது தாயார்ஸ்ரீநித்யாவிற்கு பெரும்பங்கு இருக்கிறது.வீட்டிற்கு குடிப்பதற்கு ஆவின் பால் வாங்குகிறார் ஆனால் மக்கள் குடிப்பதற்கு கொடுக்கப்படும் மோருக்காக கூடுதல் விலை கொடுத்து ஆர்கானிக் பால் வாங்குகிறார்.மோரில் தாகம் தீர்க்கும் மூலிகைகள் சேர்ப்பதுடன் அதன் சுவைக்காக தாளிக்கவும் செய்கிறார்.

கவிபாரதியின் இந்த அன்பு சேவைக்காக அவளது தோழியரின் பெற்றோர்,என் தோழியர், என் கணவர்,அக்கம் பக்கத்தார்,உறவினர் என்று பலர் உதவுகின்றனர் அவர்களுக்குதான் இந்த புண்ணியமும் நன்றியும் போய்ச்சேரவேண்டும். மற்றபடி மகள் கவிபராதி மனதில் மக்களுக்கு செய்யும் சேவையே மகேசனுக்கு செய்யும் சேவை என்பதை பதியவைத்துவிட்டேன், அவள் அதை மிகவும் கெட்டியாக பிடித்துக்கொண்டு ஒரு பெரிய ஈடுபாட்டோடு செய்கிறாள் எனறார் ஸ்ரீநித்யா,அதை ஆமோதிப்பது போல 'எனக்கு இது ரொம்ப பிடிச்சுருக்கு இதைப்போலவே எல்லா தெருவிலும் எல்லோரும் கொடுத்தா இன்னும் சந்தோஷமாக இருக்கும்' என்கிறார் கவிபாரதி.

இன்னும் ஒரு டம்ளர் கொடு தாயி என்று கேட்டு வாங்கி குடித்த ஒரு பெரியவர் 'சின்ன வயசுல உனக்கு பெரிய மனசும்மா ஆயுசுக்கும் நீ மகராசியா நல்லாயிருக்கணும்' என்று வாழ்த்தினார்கள்.

நன்றி: தினமலர்

வறட்சி.....

புகைப்படக் கவிதை..... முகப்புத்தகத்தில் படித்தது. கலங்க வைத்த கவிதை.....காத்தில்ல மழயில்ல கால் வவுத்து கஞ்சியில்ல
கிழக்கால அடிச்ச மழ தெக்கால அடிக்கவில்ல
வக்கத்த சாமி அது வரமேதும் கொடுக்கவில்ல
ஆத்துல தண்ணியில்ல அள்ளி திங்க அங்க மண்ணுமில்ல
பசிச்ச வவுத்துக்கு பசி மறந்து போச்சு மழத்தண்ணி நெலம் பாத்து
பல மாசம் ஆச்சு.. அரிசியை பொங்கித்தின்னு ஒரு வருசம் ஆச்சு..
வெலவாசி அது ஏறி விண்ணுக்கு போச்சு.. வெசம் வாங்க வழியில்ல
வெசனமா ஆச்சு.. குடிக்கிற தண்ணிக்கும் வெல வச்சாச்சு
வெவசாயி பொழப்புக்கே உல வெச்சாச்சு..!
ஆட்சியில இருப்பவங்க யார நாங்க குத்தம் சொல்ல
ஆரு வந்து ஆண்டாலும் எங்க வாழ்க்கையில உச்சமில்ல...
நாங்க ஊரு திங்க உழச்ச கூட்டம்.. இன்னக்கி ஒரு வா சோத்துக்கே திண்டாட்டம்...
வாழத்தான் வழிவுடலை.. சாகவாவது ஒரு வழி சொல்லு
ஆண்டவனே கும்பிடுறோம்... வந்து அள்ளிகிட்டு போயிடய்யா...


தமிழகமும் தேர்தலும்:

அம்மாவுக்கும்
அப்பாவுக்கும் சண்டை....
விவாகரத்தின் தீர்ப்பு....
குழந்தை
அம்மாவிடம் 5 வருடம்,
அப்பாவிடம் 6 வருடம்.
தவிக்கும்
அக்குழந்தையின் பெயர் -

தமிழ்நாடு!....

ராஜா காது கழுதை காது:

சற்றே இடைவெளிக்குப் பிறகு ஃப்ரூட் சாலட்-ல் இப்பகுதி...... J

பேருந்து நிறுத்தம் ஒன்றில் பேருந்துக்காக காத்திருந்தேன் – நேரம் நண்பகல்... சூரியன் தகித்துக் கொண்டிருந்தது – அமர்ந்திருந்தபோதே வியர்வை வழிந்து கொண்டிருந்தது. பேருந்து நிறுத்தத்தின் அருகே இருந்த வேப்ப மரத்திலிருந்து அவ்வப்போது சுகமான காற்று வீசிக் கொண்டிருக்க கொஞ்சம் நிம்மதியாக இருந்தது.

எதிர் சாலையிலிருந்து ஒரு இளம்பெண், ஒரு குழந்தை மற்றும் குழந்தையின் அம்மா பேருந்து நிறுத்தத்தினை நோக்கி நடந்து வந்து கொண்டிருந்தார்கள். காலியாக இருந்த சிமெண்ட் பெஞ்சில் அமர்ந்து கொண்டு ஆறாக ஓடிய வியர்வையைத் துடைத்துக் கொண்டார்கள். அந்த நேரத்தில் வேப்ப மரக் காற்று இதமாய் வீச, அந்த இளம்பெண் சொன்னது......

“நான் மட்டும் ஆம்பளையா பொறந்திருந்தா, அடிக்கிற வெயிலுக்கு, ஒரு கைலி மட்டும் கட்டிட்டு இங்கேயே உட்கார்ந்துடுவேன்......

அன்னையர் தினம்

மனதைத் தொடும் காணொளி.....  பாருங்களேன்.
க்ருஷ்..... 

என் மகள் வரைந்த ஓவியம் பகிர்ந்து கொண்டு சில நாட்களாகிறது. அவள் வரைந்த ஓவியம் ஒன்று இங்கே......
பிரச்சனையும் தீர்வும்...

வாத்தியார் வகுப்பறைக்குள் நுழைந்தார். மேஜை மீதிருந்த கண்ணாடி டம்ப்ளரை எடுத்து தூக்கிக் காட்டினார்.

இது எவ்வளவு வெயிட் இருக்கும்?

100 கிராம், 50 கிராம் என்று மாணவர்கள் ஆளாளுக்கு ஒரு எடையை சொன்னார்கள்.

இதோட சரியான எடை எனக்கும் தெரியாது. ஆனா என்னோட கேள்வி அதுவல்ல

வாத்தியார் தொடர்ந்தார். இதை அப்படியே நான் கையிலே பிடிச்சிக்கிட்டிருந்தேன்னா என்ன ஆகும்?

ஒண்ணுமே ஆகாது சார்

வெரிகுட். ஆனா ஒரு மணி நேரம் இப்படியே பிடிச்சிக்கிட்டிருந்தேன்னா…?

உங்க கை வலிக்கும் சார்

ஒருநாள் முழுக்க இப்படியே வெச்சிருந்தேன்னா

உங்க கை அப்படியே மரத்துடும் சார்

வெரி வெரி குட். ஒரு மணி நேரத்துலே என் கை வலிக்கறதுக்கும், ஒரு நாளிலே மரத்துப் போகிற அளவுக்கு மாறுறதுக்கு இந்த தம்ப்ளரோட வெயிட் கூடிக்கிட்டே போகுமா என்ன?

இல்லை சார். அது வந்து

எனக்கு கை வலிக்காம, மரத்துடாம ஆகணும்னா நான் என்ன பண்ணனும்?

கிளாஸை உடனே கீழே வெச்சுடணும் சார்

எக்ஸாக்ட்லி. இந்த கிளாஸ்தான் பிரச்சினை. ஒரு பிரச்சினை நமக்கு வந்ததுன்னா அதை அப்படியே மண்டைக்கு ஏத்தி ஒரு மணி நேரம் வெச்சிருந்தோம்னா வலிக்க ஆரம்பிக்கும். ஒரு நாள் முழுக்க அப்படியே வெச்சிருந்தா மூளை செயலிழந்து மரத்துடும். அதனாலே உங்களுக்கு ஏதாவது பிரச்சினை வந்துடிச்சின்னா தூக்கி ஒரு ஓரமா கடாசிடுங்க. அதுவே சரியாயிடும். சரியா?

மீண்டும் அடுத்த வெள்ளியன்று வேறொரு ஃப்ரூட் சாலட்-ல் சந்திக்கும் வரை….

நட்புடன்

வெங்கட்

திருவரங்கத்திலிருந்து.....

38 comments:

 1. ஸாலட்-ல் எல்லா பழங்களின் சுவையும் அருமை! :)

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மஹி.

   Delete
 2. கவிபாரதி பற்றி நானும் குறித்து வைத்துள்ள்ளேன்.

  வறட்சி கலங்க வைக்கிறது. காஞ்சா கருவெள்ளம், பெய்தால் பெருவெள்ளம் என்பது போல ஆகிவிட்டது.

  ஏற்கெனவே படித்த கவிதை. அம்மா அப்பா விவாகரத்து! மீண்டும் ரசித்தேன்.

  ரா கா க கா... ஹா... ஹா... ஹா...

  காணொளி பார்க்கவில்லை.

  ரோஷிணிக்குப் பாராட்டுகள்.

  பிரச்னையின் தீர்வு அருமை.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 3. கவிபாரதி பெயருக்கேற்ற குழந்தை...வாழ்த்துகள் அவளின் குடும்பத்தினருக்கு....

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

   Delete
 4. கவிபாரதிக்கு அன்பு வாழ்த்துகள்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரிஷபன் ஜி!

   Delete
 5. தங்களின் மகளின் ஓவியம் அருமை
  நன்றி ஐயா
  தம +1

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   Delete
 6. சத்தான் மிக மிக அற்புதமான
  சத்தான பயனுள்ள சாலட்

  காணொளி அருமை
  பகிர்ந்திருக்கிறேன்

  குட்டிப்பதிவரின் படம் அருமை

  பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமணி ஜி!

   Delete
 7. கவிபாரதி பாராட்டுக்குறியவர்
  விவசாயின் வேதனையான கவிதை ஓவியம் நன்று ஜி

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

   Delete
 8. செல்வி கவிபாரதிக்கு பாராட்டுக்கள்!அன்னையர் தினம் எப்படி கொண்டாடப்படுகிறது என்பதை அந்த காணொளி காட்டியது அருமை. தங்கள் மகளுக்கு எனது வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

   Delete
 9. #அம்மாவிடம் 5 வருடம்,
  அப்பாவிடம் 6 வருடம்.#
  அய்யாவிடம் அதிகமாய் ஒரு வருடம் விடுவதை விட ,ஆயாவிடம் ஒரு வருடம் விடலாமே :)

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான்ஜி!

   Delete
 10. கவிபாரதியின் பெற்றோருக்கு பாராட்டுக்கள் சலாட் அனைத்தையும் ரசித்து சுவைத்தேன்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB ஐயா.

   Delete
 11. வெயிலுக்கு இதமான ஃப்ரூட் சாலட்..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி எழில்.

   Delete
 12. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி புலவர் ஐயா.

   Delete
 13. குட்டிக் கதை,படம், கவிதை,அத்தனையும் அருமை

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முரளிதரன்.

   Delete
 14. மிக அருமையான பதிவு. வெய்யிலுக்கு நிழல் கிடைத்தது போல. இப்படிக் கலங்கடிக்கும் வெய்யிலில் நீர்மோர் மற்றும் பழங்களைத் தானம் செய்யும் கவி பாரதிக்கு என் நல் ஆசிகள். ஊரெங்கும் இந்தத் தர்மம் பெருகட்டும்.
  ராஜா காது ...சூப்பர்.
  காணொளி மனதை வலிக்க வைத்தது.
  எத்தனை பெரிய உண்மை.
  ரோஷ்ணி மிக அழகாக வரைகிறாள். அன்பு ஆசிகள்.
  விவசாயியின் வறட்சிக் கவிதை படிக்கும் போதே நெஞ்சு வறள்கிறது.
  நன்றி வெங்கட்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா....

   Delete
 15. அம்மாவுக்கும்

  அப்பாவுக்கும் சண்டை....

  விவாகரத்தின் தீர்ப்பு....

  குழந்தை

  அம்மாவிடம் 5 வருடம்,

  அப்பாவிடம் 6 வருடம்.

  தவிக்கும்

  அக்குழந்தையின் பெயர் -


  தமிழ்நாடு!....


  இதை இதற்கு முன்னால் படித்திருக்கிறேன் நண்பரே
  ஏன் இந்த நாற்றம் என யோசித்தேன்
  பிறகுதான் வர வேண்டியது மாற்றம் என புரிந்தது...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அஜய்.

   Delete
 16. கவிபாரதியின் முயற்சி பாராட்டத்தக்கது. அவரையும், துணை நிற்போரையும் பாராட்டுவோம். உங்கள் மகளின் ஓவியம் கண்டேன். அவருக்கு என் வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி டாக்டர் ஜம்புலிங்கம் ஐயா.

   Delete
 17. அந்தக் கவிதையில் மனம் செல்லவில்லை..

  மற்றபடி தொகுத்தளிக்கப்பட்ட அனைத்தும் அருமை..

  நல்மனங்கொண்ட கவிபாரதி எல்லா நலனும் பெற்று வாழ அன்பின் நல்வாழ்த்துகள்..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!

   Delete
 18. ப்ரூட் சாலட்டுக்கு தமிழ் பெயர் என்ன வெ.நா? பழக்குவை, பழக்கூழ், கனிக்கூட்டு??

  ReplyDelete
  Replies
  1. பழக்கலவை... ? :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மோகன்ஜி!

   Delete
 19. சாலட் இனிப்பும் கசப்பும் கலந்து கட்டி...

  கவிபாரதி எங்கள்ப்ளாகில் வாசித்தோம் இங்கும் வாசித்தாயிற்று குட்டிப் பெண்ணிற்கும் எல்லோருக்கும் வாழ்த்துகள் வளரட்டும் சேவை.

  வறட்சி வேதனை மனதை என்னவோ செய்துவிட்டது.

  அம்மா அப்பா விவாகரத்து அதுதான் நடந்துவந்துகொண்டிருக்கிறது ரசிக்க வைத்த வரிகள்.

  மதர்ஸ் டே காணொளி மனதை வேதனைஅடைய வைத்தது.

  பேருந்து நிறுத்தத்தில் அந்த இளம் பெண் சொன்னது ஹஹஹஹ்

  ரோஷிணிக் குட்டிக்கு வாழ்த்துகள்! அவரது திறமை மேலும் வளர்ந்திடவும் வாழ்த்துகள்!.

  க்ளாஸ் கதை மின் அஞ்சலில் வந்ததுண்டு. வாசித்தது என்றாலும் நல்ல கருத்து...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....