ஏழு சகோதரி மாநிலங்கள் பயணம் – பகுதி 12
மணிப்பூர்
அருங்காட்சியகத்திலிருந்து வெளியே வந்து கர்நாடகத்தினைச் சேர்ந்த பாதுகாவலரிடம்
பேசிக் கொண்டிருந்த போதே ஓட்டுனர் ஷரத்-ஐ அலைபேசியில் அழைத்தோம். அவர் வண்டியோடு
வர அடுத்தது எங்கே செல்லப் போகிறோம் எனக் கேட்க அவர் சொன்ன பதில் கொஞ்சம் பயம்
அளித்தது – [ch]சரஸ் என்றார். ஹிந்தி மொழியில் [ch]சரஸ்
என்றால் கஞ்சாவாச்சே, நம்மை கஞ்சா தோட்டத்திற்கு அழைத்துச் செல்லப் போகிறாரோ என்று
மனதிற்குள் ஒரு அபாய மணி அடித்தது. புரியாத மாதிரி மீண்டும் அவரிடம் வினவ, அவர்
மீண்டும் [ch]சரஸ் என்றே சொன்னார்.
சரி
கேள்வியை மாற்றிக் கேட்போம் என “அங்கே என்ன இருக்கிறது?” என்று கேட்க,
என்னை ஒரு மாதிரியாகப் பார்த்து அது கிறிஸ்துவர்களின் ஆலயம் என்றார்! அட செம பல்பு வாங்கிவிட்டேனே என நினைத்துக்
கொண்டு, ”ஓ சர்ச்-ஆ?” என்று கேட்டு விட்டு, அங்கே விடுங்கள் வண்டியை
எனச் சொல்லி விட்டேன். மணிப்பூர் நகரின்
மையத்திலிருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் இடம் மந்த்ரிபுக்ரி. இந்த இடத்தில் அமைந்துள்ள அருமையான கிறிஸ்துவ
தேவாலயம் தான் St. Joseph’s
Cathedral.
ரோமன் கத்தோலிக் பிரிவினைச் சேர்ந்த கிறிஸ்துவர்களின்
தேவாலயம் இது. வாயிலில் இருந்த பதாகை வழிபாட்டு
நேரமாக காலை 07.30 மணி என அறிவித்தது. நாங்கள் சென்றது மதியம் உச்சி வெய்யில்
அடிக்கிற நேரம். பிரார்த்தனை
இல்லாவிட்டாலும் உள்ளே சென்று அமைதியாக சில நிமிடங்கள் அமர நினைத்து, யாரைக்
கேட்பது என பாதுகாப்பு அறையில் தேடினோம். ஒருவருமே இல்லை. ஓட்டுனர் ஷரத்-ஐ கேட்க, எங்காவது போயிருப்பார்,
நீங்கள் வெளியிலிருந்து பார்த்து வாருங்கள் எனச் சொல்லி விட்டார்.
நண்பர்களுடன் தேவாலயத்திற்கு முன்...
ஒரு அழகிய தோட்டத்தில் Anglo-Manipuri கட்டிடக்
கலையில் கட்டப்பட்டிருக்கிறது St.
Joseph’s Cathedral. பின் புலத்தில் மலைகள் தெரிய மிக அருமையாக வடிவமைக்கப்பட்ட சர்ச் இது. முன்புறத்தில் ஒரு பெரிய ஏசு கிறிஸ்துவின் சிலை
இரு கரங்களையும் விரித்து மக்களை அழைக்கிறார்.
நானும் நண்பர்களும் அழைப்பினை ஏற்று உள்ளே நுழைந்தோம். சில புகைப்படங்களை
எடுத்துக் கொண்டு சர்ச் வாயில் வரை சென்று பூட்டியிருந்த கதவுகளுக்கு அருகே நின்று
சில நிமிடங்கள் அனைவரது நலனுக்காகவும் பிரார்த்தனை செய்தோம்.
மணிப்பூர் மாநிலத்தில் மற்ற வடகிழக்கு மாநிலங்கள் போலவே
கிறிஸ்துவமும் உண்டு. மற்ற மாநிலங்களில்
கிறிஸ்துவமே அதிகம் என்றாலும், வைஷ்ணவ மாநிலமான மணிப்பூரிலும் கிறிஸ்துவம்
இருக்கிறது. அவர்களுக்கான பல வழிபாட்டுத் தலங்களும் இருக்கின்றன. இம்ஃபால் நகரின் இந்த St. Joseph’s Cathedral 1980-களில் அமைக்கப்பட்டது என்று தெரிகிறது. சிறப்பான கட்டிட அமைப்பாக இருந்ததைப் பார்த்து
விட்டு அங்கிருந்து புறப்பட்டோம் – சர்ச் திறந்திருந்தால் இன்னும் கொஞ்ச நேரம்
உள்ளே சென்று அமர்ந்திருந்து, மேலும் சில புகைப்படங்களை எடுத்திருக்கலாம்.
அங்கிருந்து நாங்கள் அடுத்ததாய் சென்ற இடம், அது என்ன
இடம் என அடுத்த பதிவில் பார்க்கலாமா?
மீண்டும் சந்திப்போம்....
நட்புடன்
வெங்கட்.
புது தில்லி.
அழகிய படங்களுடன் - இன்றைய பதிவு அருமை..
பதிலளிநீக்குஅடுத்த பதிவினைக் காண - ஆவலுடன்!..
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!
நீக்குதேவாலயத்தை காணும் போதே அமைதி தெரிகிறது.கர்த்தருக்கு தோத்திரம்.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி....
நீக்குசரஸ் என்றால் கஞ்சா.... ஹா... ஹா.... ஹா... ஆமாம். கூடவே எனக்கு தர்மேந்திராவும் ஹேமாமாலினியும் நினைவுக்கு வந்தார்கள்! கல் கி ஹஸீ முலாகாத் கேலியே...
பதிலளிநீக்குபள்ளி படிக்கும் காலத்தில் மாதத்தின் முதல் வெள்ளியில் திருப்பலி பூசை நடைபெறும். அதில் சிலநேரம் கலந்து கொள்வதுண்டு.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.
நீக்குஉள்ளே புகைப்படம் எடுக்க அனுமதி உண்டா
பதிலளிநீக்குசில தேவாலயங்களில் அனுமதி உண்டு. முன்னர் எடுத்திருக்கிறேன்....
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB ஐயா.
தேவாலயத்தின் முன் நீங்கள் நின்று எடுத்துக்கொண்ட படம் அருமை. நீங்கள் குறிப்பிட்டதுபோல் தேவாலயம் பார்க்க அழகாக இருக்கிறது. அடுத்து நீங்கள் சென்ற இடம் என்ன என்று அறிய காத்திருக்கிறேன்.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.
நீக்குஅருமையாக அமைந்திருக்கிறது தேவாலயம்! பகிர்வுக்கு நன்றி!
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.
நீக்குதேவாலயத்தின் தோற்றம் அழகு
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.
நீக்குசர்ச் வடிவமைப்பு மிகப் பிரமாதம்
பதிலளிநீக்குஉச்சரிப்பு தரும் திகைப்பு சுவாரஸ்யம்
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமணி ஜி!
நீக்குஇதைப்போல ஒரு நெடுந்தொலைவு செல்ல ஆசை ... முயற்சிக்க வேண்டும்... அருமையான பதிவு
பதிலளிநீக்குமுடிந்த போது சொல்லுங்கள்... சென்று வரலாம்!
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீமலையப்பன் ஸ்ரீராம்.
ரசித்தேன்.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ப. கந்தசாமி ஐயா.
நீக்குஅழகான சர்ச் தொடர்கிறேன் ஜி
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!
நீக்கு