எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Sunday, October 30, 2016

ரங்கோலியில் ராமாயணக் காட்சிகள்....


சமீபத்தில் தலைநகர் தில்லியில் இரண்டாவது தேசிய கலாச்சார விழா நடந்து முடிந்தது. ஒரு வாரத்திற்கு மேல் நிகழ்ச்சிகள் இருந்தாலும் என்னால் இரண்டு தினங்கள் மட்டுமே நிகழ்ச்சிகளுக்கு சென்று வர முடிந்தது. ஒவ்வொரு நாளும் கலைநிகழ்ச்சிகள் களைகட்டின.  பார்வையாளர்களை கவர்ந்திழுக்கும் இசையும் நடனமும் கோலாகலமாக இருந்தது. அந்தத் திருவிழா சமயத்தில் நாக்பூரில் இருந்து வந்திருந்த சில கலைஞர்கள் ஒரு கொட்டகையில் ராமாயணக் காட்சிகளை ரங்கோலியில் வரைந்து காட்சி அமைத்திருந்தார்கள். 

அந்தக் காட்சிகளின் ஒரு தொகுப்பு இங்கே இந்த ஞாயிறில் புகைப்படப் பகிர்வாக......


வால்மீகியும் ராமாயணமும்.....


ஒடிந்தது வில்.....


நடந்தது திருமணம்.....


பாதுகையே அரியணையில்.........


காட்டில் ராமனும் சீதையும்.....


கபட சாமியாராக ராவணன்.....


வீழ்ந்தது ஜடாயுவின் சிறகு.....


கூனியின் கூன் நிமிர்ந்தது.....


ராம பக்த ஹனுமான்.....


நட்பா, பக்தியா?....


ராம நாமத்துடன்  மிதக்கும் கற்கள்.....


கடல் கடந்து போர்.....


அழிந்தது இலங்கை - பார்வையிடும் ராவணன்.....


கலைப்பயணத்தில் ஒரு கலைஞர்......

இந்தக் கலைஞர்களை அழைத்து வந்திருந்தது South Central Zone Cultural Centre, Nagpur.  இந்தியாவில் மொத்தம் இப்படி ஏழு Cultural Centres உண்டு.  Ministry of Culture, New Delhi தான் இந்த அமைப்புகளுக்கு தலைமை. தமிழகத்திலிருந்தும் சில கலைஞர்கள் வந்திருந்தார்கள். அவர்களின் நிகழ்ச்சிகளை பார்க்க முடியாத சூழல். சென்றிருந்த ஒரு நாளில் அவர்களை உணவகத்தில் – “நம்ம ஊரு இட்லிஎன்ற உணவகக் கடை ஒன்றில் பார்க்க முடிந்தது. 23-ஆம் தேதி எங்கள் நிகழ்ச்சி, நிச்சயம் பார்க்க வேண்டும்என அழைப்பு விடுத்தார்கள் – நான் 22-ஆம் தேதியே திருச்சி வருவதற்கு முன்பதிவு செய்திருந்தேன்....

அடுத்த முறை தமிழக நிகழ்ச்சிகளையும் பார்க்க வேண்டும்......  இந்த முறை கொல்கத்தாவிலிருந்து உஷா உதூப் வந்திருந்தார் – அவரது இசை நிகழ்ச்சியைக் கண்டு ரசித்தேன் – ஒரே ஒரு குறை – பல மொழிகளில் பாடல்கள் பாடிய அவர் – தமிழில் ஒரே ஒரு பாட்டு பாடினார் – அதாவது தமிழ் திரைப்படத்திலிருந்து ஒரே ஒரு பாட்டு – அது சத்தியமாக தமிழ் பாடல் அல்ல! என்ன பாடல் என்று தானே கேட்கிறீர்கள்...... அந்த பாட்டு......

...
...
...
...
...
...
...
...
...
...

Why this kolaveri…..  இதை தமிழ் பாடல் எனச் சொன்னது தான் எனக்கு கொலவெறி உண்டாக்கியது! சரி விடுங்கள்.....  அடுத்த வருடம் வேறு தமிழ் பாடல் கேட்க வாய்ப்பு கிடைக்கும் என நம்புவோம்.....

இப்போதைக்கு ராமாயணக் காட்சிகளை – ரங்கோலியில் வரையப்பட்ட காட்சிகளை ரசிப்போம்.... அந்தக் கலைஞர்களுக்கு நம் எல்லோர் சார்பிலும் பூங்கொத்து......

நாளை மீண்டும் ச[சி]ந்திப்போம்.....

நட்புடன்

வெங்கட்.

திருவரங்கத்திலிருந்து......  

24 comments:

 1. என்ன ஒரு அருமையான கைவேலை? ரங்கோலியில் இவ்வளவு அழகாக வரைய முடியுமா என்று அதிசயிக்க வைக்கிறது.

  உஷா உதுப் "தமிழில்" பாடியிருக்கும் பாடல்கள் எது? அண்டர் எ மாங்கோ ட்ரீ, லைஃப் இசை ஃப்ளவர், மேஜிக் ஜர்னி என்று எல்லாமே தமிங்கிலப் பாடல்கள்தான்? ஆனாலும் அவர் ஒரு உற்சாகப் பட்டாசு!

  ReplyDelete
  Replies
  1. ரங்கோலியில் இவ்வளவு அழகாய் வரைய முடியுமா..... வரைவதைப் பார்க்கும் வரை எனக்கும் இதே எண்ணம் இருந்தது. அவர்கள் வரைவதைப் பார்க்கவும் முடிந்தது. எத்தனை திறமை......

   உஷா உதூப் மற்றவர்கள் பாடிய தமிழ் பாடல்களில் ஏதோ ஒன்றை பாடி இருக்கலாம் என்று தோன்றியது....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 2. ஸ்ரீ ராம் சார் சொன்னது நூத்துக்கு நூறு சரி.

  சுப்பு தாத்தா.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சுப்பு தாத்தா....

   Delete
 3. >>> அந்தக் கலைஞர்களுக்கு நம் எல்லோர் சார்பிலும் பூங்கொத்து.. <<<

  அழகிய ஓவியங்களாக ராமகாதை.. மகிழ்ச்சி..

  வாழ்க நலம்!..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!

   Delete
 4. ரங்கோலி ஓவியங்கள் சொல்லும் காட்சிகள் அருமை.
  பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா....

   Delete
 5. ரங்கோலியா...?

  அட சுவரில் வரைந்த ஓவியம் போலல்லவா இருக்கிறது...
  அருமை அண்ணா...

  ReplyDelete
  Replies
  1. ரங்கோலி தான்.... அத்தனை அழகாய் வரைந்திருக்கிறார்கள்......

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பரிவை சே. குமார்.

   Delete
 6. ரங்கோலி கோலங்கள் அருமை. உஷா உதுப் அவர்கள் கூட்டத்தை உற்சாக மனநிலைக்குக் கொண்டுவந்துடுவார். சரியான பாடலைத்தான் தேர்ந்தெடுத்துள்ளார் (assuming other languages songs were also in similar mood)

  ReplyDelete
  Replies
  1. ஹிந்தி, மராட்டி, போஜ்பூரி, பஞ்சாபி என பல மொழிகளில் பாடல்கள் பாடினார். வந்திருப்பவர்களையும் பாடலுக்கு ஏற்ப ஆடவும் வைத்தார். நல்ல நிகழ்ச்சி தான். என்னவோ, தமிழ் பாடல் மட்டும் மனதுக்குப் பிடிக்கவில்லை.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத்தமிழன்.

   Delete
 7. அதனால்தான் அவர்கள் கலைஞர்கள் போலும் அற்புதமான கைவினை.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB ஐயா.

   Delete
 8. கொலைவெறி பாடல் எனக்கும் பிடிக்காது ,கொலைவெறியாய் வரையப் பட்டிருக்கும் படங்களை ரசித்தேன் :)

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான்ஜி!

   Delete
 9. தாங்கள் ரசித்த ஓவியங்களை இங்கே பகிர்ந்து உலகம் முழுவதும் பார்க்க ரசிக்க வைத்ததற்கு நன்றி வெங்கட் இரண்டு ஆண்டுகளுக்கு அப்புறம் குடும்பத்தினருடன் சேர்ந்து தீபாவளி கொண்டாடுவதாக அறிந்தேன் இது போல இனிமேலும் கொண்டாடும் வரம் உங்களுக்கு கிடைக்க வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மதுரைத் தமிழன்.

   Delete
 10. ஓவியங்கள் பிரமிக்க வைக்கின்றது ஜி அருமை.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

   Delete
 11. ரங்கோலியில் இது போன்று புராண காவியங்களை வரையமுடியும் என்பதே ஆச்சரியமாக உள்ளது. படங்கள் அனைத்தும் அருமை.பகிர்ந்தமைக்கு நன்றி!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா....

   Delete
 12. ரங்கோலி கோலம் என்று சொலல்வே முடியவில்லை...பெயிண்டிங்க் ஒவியம் போல இருக்கின்றன...அருமை..மிக மிக அழகு! எத்தனை எத்தனை கலைநுணுக்கம் மிக்கக் கலைஞர்கள் நம்மூரில் இருக்கிறார்கள்!!அனைவருக்கும் வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்..பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி ஜி

  ReplyDelete
  Replies
  1. பிரமிக்க வைத்த விஷயம். தங்களுக்கும் பிடித்திருப்பதில் மகிழ்ச்சி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....