புதன், 8 நவம்பர், 2017

தேவதாரு காட்டுக்குள்ளே தேவாலயம் - தரம்ஷாலா!


இரண்டாம் தலைநகரம் – பயணத் தொடர் – பகுதி 5

முந்தைய பகுதிகளை படிக்காதவர்கள் வசதிக்காக - பகுதி-1 2 3 4


St. John's Church in the wilderness!
தரம்ஷாலா....


தேவாலயம் செல்லும் பாதையில்...

நட்டி என்கிற அழகிய கிராமத்திலிருந்து, பனிபடர்ந்த தௌலாதார் மலைச்சிகரங்களை ரசித்து, காலை உணவை முடித்துக் கொண்ட பிறகு நாங்கள் சென்ற இடம் ஒரு தேவாலயம். மிகவும் பழமையான ஒரு தேவாலயம் இருக்கும் இடத்திற்குத் தான் எங்கள் அடுத்த பயணம். Church of St. John in the Wilderness என அழைக்கப்படும் இந்த தேவாலயம் அடர்ந்த தேவதாரு மரங்கள் அடர்ந்த காட்டுக்குள் இருக்கின்றது. சாலையில் வாகனத்தினை நிறுத்தி விட்டு, கற்கள் பதித்த பாதையில் உள்ளே செல்லும் வேளையில் உங்களுக்கு இந்த இடம் பற்றிய சில தகவல்களையும் சொல்லிக்கொண்டே செல்கிறேன். 1852-ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட இந்த தேவாலயம் வட இந்தியாவில் இருக்கும் பழமையான தேவாலயங்களில் முதன்மையானது.


தேவாலயம் இன்னுமொரு புகைப்படம்...

Gothic கட்டிட அமைப்பில் கட்டப்பட்ட இந்த தேவாலயத்தில், அந்தக் காலத்திலேயே பெல்ஜியன் கண்ணாடியால் ஆன ஜன்னல்கள் அமைத்திருக்கிறார்கள். அந்த ஜன்னல்களில் ஏசுவின் படமும் John the Baptist படமும் வடிக்கப்பட்டிருக்கும். அதனால் தான் இந்த தேவாலயத்திற்கு, Church of the St. John என்ற பெயரும் வந்ததாம். கடல் மட்டத்திலிருந்து 1750 மீட்டர் உயரத்தில் அமைந்திருக்கும் இந்த தேவாலயத்தில் ஆங்கிலேய வைஸ்ராயாக இருந்த லார்ட் எல்ஜின் அவர்களின் நினைவிடமும் அமைந்திருக்கிறது. தரம்ஷாலாவில் தங்கி இருந்த ஆங்கிலேய சிப்பாய்களும் அவர்களது குடும்பத்தினரும் வழிபட ஏதுவாக அமைக்கப்பட்டது இந்த தேவாலயம். பெல்ஜியன் கண்ணாடிகள் வைக்கப்பட்ட ஆண்டு 1863 – அதாவது லார்ட் எல்ஜின் மறைந்த ஆண்டு – அவரது மனைவி அந்த கண்ணாடி ஜன்னல்களை கொடுத்தாராம்.


தேவாலயம் உள்ளே... 

1905-ஆம் ஆண்டு நிகழ்ந்த காங்க்ரா பூகம்பத்தில் தேவாலயத்தின் மேற்பகுதிகள் சேதமடைய, மீண்டும் புனரமைக்கப்பட்டது. தேவாலயத்தில் இருந்த மணியும் சேதமடைந்ததால் புதியதாக மணி தேவையாக இருக்க, Whitechapel Bell Foundry [Mears & Stainbank] எனும் நிறுவனம், இங்கிலாந்திலிருந்து மணியைத் தயாரித்து தரம்ஷாலா அனுப்பி வைத்திருக்கிறார்கள். மிகவும் அதிக எடை கொண்டதாக இருந்ததால் தேவாலயத்தின் மேலே மணியை நிறுவ முடியாமல் போக, இரண்டு தூண்களின் நடுவே தொங்கவிட்டார்களாம்! 1994-ஆம் வருடம் சில திருடர்கள் மணியைக் களவாட முயற்சி செய்தும், அதன் எடை காரணமாக திருட முடியாமல் போனதாம்! தற்போது ஒரு பெரிய கூண்டுக்குள் அதை வைத்திருக்கிறார்கள் – பூட்டுப் போட்டுதான்!


தேவாலயம் பின்னர் இருக்கும் நினைவிடம்...

தேவாலயத்தின் பின்புறத்தில் லார்ட் எல்ஜின் அவர்களுடைய நினைவிடம் அமைந்திருக்கிறது. அமைதியான சூழலில் தேவாலயம், நினைவிடம் என இருப்பது நல்ல விஷயம். தற்போது ஒரு சுற்றுலாத் தலமாக இருந்தாலும், இன்னமும் ஞாயிறுகளில் இங்கே பிரார்த்தனைக் கூட்டங்கள் உண்டு. தேவாலயம் தேவதாரு மரங்கள் அடர்ந்த காட்டுக்குள் இருப்பதால், நிறைய பறவைகளும் தொடர்ந்து குரல் கொடுத்துக் கொண்டே இருந்தன. நிறைய பூச்செடிகளும் இருந்தன என்பதால் பூக்களின் வாசமும், இயற்கையான நறுமணமும் கமழ்ந்து கொண்டிருந்தது. தேவாலயத்தின் உள்ளே புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை என நுழைவாயிலேயே எழுதி வைத்திருந்தாலும், மக்கள் கேட்பார்களா என்ன? “வளைத்து வளைத்து புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தார்கள்.  


பிரம்மாண்ட மணி...

தேவாலயத்தின் உள்ளே சென்று சில நிமிடங்கள் அமர்ந்து பிரார்த்தனை செய்து கொண்டிருந்தோம். சில நிமிடங்கள் கழித்து வெளியே வந்து, வெளிப்புறத்தில் சில புகைப்படங்களை எடுத்துக் கொண்டு, இருந்த என்னைப் பார்த்து, ஒரு சிப்பந்தி, உட்புறத்தில் நீங்கள் படம் எடுக்கவே இல்லையே என ஆச்சர்யத்துடன் கேட்டார்.  வெளியிலிருந்து Zoom செய்து எடுத்துக் கொள்ளுங்கள் எனச் சொல்ல, ஒரே ஒரு படம் எடுத்துக் கொண்டேன்.  அமைதியான சூழலிலிருந்து விடுபட மனதில்லை என்றாலும் புறப்படத்தானே வேண்டியிருக்கிறது! அந்த அமைதியான சூழலில் சில புகைப்படங்கள் எடுத்துக் கொண்டு, மனதில் ஒரு அமைதியுடன் அடுத்த இலக்கை நோக்கி பயணத்தைத் தொடர்ந்தோம்.  அடுத்து சென்ற இடமும் ஒரு வழிபாட்டுத் தலம் தான். அது என்ன இடம் என்று அடுத்த பதிவில் சொல்கிறேன்.

தொடர்ந்து பயணிப்போம்

நட்புடன்

வெங்கட்

புது தில்லி. 


28 கருத்துகள்:

  1. இந்த தேவாலயத்தின் புகைப்பட முன்னரே பகிர்ந்திருக்கிறீர்களோ? பார்த்த நினைவாய் இருக்கிறது.

    ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. புகைப்பட முன்னோட்டம் வெளியிட்ட போது இப்படம் வெளியிட்டிருந்தேன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்....

      நீக்கு
  2. தேவாலயப் படங்கள் அற்புதம் ஐயா
    ரசித்தேன்
    தம +1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  3. வித்தியாசமான அனுபவங்கள் உங்களுக்கு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரிஷபன் ஜி!

      நீக்கு
  4. புகைப்படங்கள் ஸூப்பர் இரசித்தேன்

    கடந்த சில தினங்களாக வலைப்பதிவுக்கு சரியாக வர இயலவில்லை வெளியூர் பயணம் இனி தொடரும். ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சில சமயங்களில் இப்படித்தான் - பலரது பதிவுகள் படிக்க முடிவதில்லை.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

      நீக்கு
  5. அமைதி தவழும் இடத்திற்கு அழைத்துச் சென்றமைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.

      நீக்கு
  6. தேவாலயம், அதன் சூழல், இவைகளே மனதில் அமைதியை வரவழைக்கக்கூடியவை. புகைப்படங்களை ரசித்தேன். இடமும் ரொம்ப நல்லா இருக்கு. கண்ணாடியில் வண்ண நிற கிறிஸ்து, புனித ஜான் படங்கள் தேவாலயத்தின் சூழலை நன்கு பிரதிபலிக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு
  7. படங்கள் சொல்கின்றன அதன் அழகையும் அமைதியையும் ரசித்தேன் நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பூவிழி.

      நீக்கு
  8. /
    தேவாலயத்தின் உள்ளே சென்று சில நிமிடங்கள் அமர்ந்து பிரார்த்தனை செய்து கொண்டிருந்தோம்./ அங்கு சென்றும் கிருஷ்ணா ராமா என்றுதானே பிரார்த்தனை செய்தீர்கள் ,

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவர்களை மட்டும் இல்லை! சீக்கிய குருமார்களையும், அல்லாவையும், ஏசுவையும் இன்னும் பலப் பல கடவுள்களையும் நினைத்துக் கொண்டோம்!

      உலகில் உள்ள அனைவருக்கும் நல்ல மனதை, நல்ல புத்தியைக் கொடு என வேண்டிக் கொண்டோம்.

      79-வயது - பிறந்த நாள் நல்வாழ்த்துகள்.

      நீக்கு
  9. புகைப்படங்களே இந்த இடத்தின் Serenity ஐ பேசுகிறது. மிகச் சிறந்த பயணங்கள். அற்புதமான அனுபவங்கள். கடவுளின் அருள் உங்களுடன். வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாண்டியன் சுப்ரமணியன் - தங்களது முதல் வருகையோ? மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  10. தேவாலயம் மிக அழகாக இருக்கிறது வெங்கட்ஜி! புகைப்படங்கள் அருமை! அமைதியை வரவழைக்கும் சூழல் இல்லையா...கண்ணாடியில் பிம்பங்கள் அழகு.

    தொடர்கிறோம் ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

      நீக்கு
  11. பழமையான தேவாலயம் அழகு.
    இருப்பிடம் சொல்கிறது அமைதியை.
    பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...

      நீக்கு
  12. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி புலவர் ஐயா.

      நீக்கு
  13. தேவதாரு மரங்கள் அடர்ந்த காட்டுக்குள் இருக்கும் தேவாலயம் புகைப்படத்திலேயே பார்க்க அழகாய் உள்ளதென்றால் நேரில் பார்க்கும்போது இன்னும் அழகாய் இருக்கும் என எண்ணுகிறேன். இதுபோன்ற இடங்களையெல்லாம் பார்க்கும் வாய்ப்பு பெற்ற தாங்கள் கொடுத்துவைத்தவர். படங்களை விளக்கங்களோடு பகிர்ந்தமைக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

      நீக்கு
  14. தேவாலயங்களில் எனக்குப் பிடிச்சது இந்த ஸ்டெய்ன்க்ளாஸ் ஜன்னல்கள்தான்!

    அருமையான இடம்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசி டீச்சர்.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....