ஞாயிறு, 24 மார்ச், 2019

வாரணாசி – கரையோரக் கவிதைகள் – நிழற்பட உலா – பகுதி ஒன்று




சமீபத்தில் உத்திரப் பிரதேசத்தின் ப்ரயாக்ராஜ் நகரில் நடந்த கும்பமேளா பற்றி நீங்களும் படித்திருக்கலாம். கும்பமேளா சமயத்தில் இந்த நகருக்குப் பயணிப்பது இது இரண்டாவது முறை. ஏற்கனவே 2013-ஆம் ஆண்டில் நடந்த கும்பமேளா சமயத்திலும் ப்ரயாக்ராஜ் நகருக்குச் சென்றுவந்த அனுபவங்களை ”மஹாகும்பமேளா” என்ற தலைப்பில் எட்டு கட்டுரைகளாக இங்கே பகிர்ந்து கொண்டது உங்களுக்கு நினைவிருக்கலாம். அந்தப் பதிவுகளை படிக்காதவர்கள் வசதிக்காக கீழே அப்பயணக் கட்டுரைகளின் சுட்டிகள்.









இந்த முறை கும்பமேளா சமயத்தில் ப்ரயாக்ராஜ் மற்றும் வாரணாசி சென்றபோது கிடைத்த அனுபவங்கள் பதிவாக வெளியிட எண்ணம் இல்லை. அதனால் பயணத்தின் போது வாரணாசியில் எடுத்த படங்களும், ப்ரயாக்ராஜ் நகரில் எடுத்த படங்களும் வரும் ஞாயிறுகளில் நிழற்பட உலாவாக வெளியிட நினைத்திருக்கிறேன். அந்த வரிசையில் வாரணாசியில் எடுத்த படங்களின் உலா இன்று முதல். இதோ இந்த வாரத்தில் சில நிழற்படங்களைக் காணலாம் வாருங்கள்! வாரணாசியில் எடுத்த இந்தப் படங்கள் அனைத்துமே படகில் பயணித்தபடியே எடுத்தவை என்பதும் கூடுதல் தகவல்.













என்ன நண்பர்களே, இந்த வாரத்தின் நிழற்பட உலா உங்களுக்குப் பிடித்திருக்கிறதா? உங்கள் கருத்துகளைச் சொல்லுங்களேன். விரைவில் வேறு சில நிழற்படங்களோடு மீண்டும் ச[சி]ந்திப்போம்….
 
நட்புடன்

வெங்கட்
புது தில்லி

36 கருத்துகள்:

  1. மகிழ்வான காலை வணக்கம் வெங்கட்ஜி! முதல் படம் அட்டகாசம். ஈர்க்கிறது...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காலை வணக்கம் கீதா ஜி!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  2. படகில் சென்று கொண்டே எடுத்தது எல்லாமே செமையா வந்துருக்கு ஜி.

    கரையோரக் கட்டிடங்கள் எல்லாம் மிகப் பழைமை வாய்ந்ததோ? நெருக்கமாக கேப் கூட இல்லாமல் இருக்கின்றன...அத்தனைப் படங்களும் அருமை. கும்பமேளா சமயத்தில் என்றால் கூட்ட நெரிசலாக இருந்திருக்குமே..

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கரையோரக் கட்டிடங்கள் அனைத்துமே மிகவும் பழமையானது தான் கீதா ஜி!. பொதுவாகவே வடக்கில் ஒரு கட்டிடத்திற்கும் அடுத்த கட்டிடத்திற்கும் இடைவெளி விட்டு கட்டுவதில்லை - குறிப்பாக பழைய கட்டிடங்கள். இப்போதைய அடுக்கு மாடிக் கட்டிடங்கள் கூட இப்படி ஒற்றைச் சுவரில் ஒன்றுக்கு ஒன்று சப்போர்ட்டாக இருப்பது போல கட்டுகிறார்கள். இடைவெளி விட்டு கட்ட வேண்டும் என்ற விதி இருந்தாலும் அவற்றை எல்லாம் சுலபமாக சரிகட்டிவிடுகிறார்கள்.

      கும்பமேளா நடந்த இடம் ப்ரயாக்ராஜ்! வாரணாசி அவ்விடத்திலிருந்து இரண்டு மணி நேர பயணத்தில் என்பதால் அவ்வளவு கூட்டம் இல்லை. ப்ரயாக்ராஜ் நகரில் இருந்த கூட்டம் சொல்ல முடியாத அளவு! அது பற்றி பிறகு எழுதுகிறேன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி!

      நீக்கு
    2. இடைவெளி விட்டு கட்ட வேண்டும் என்ற விதி இருந்தாலும் அவற்றை எல்லாம் சுலபமாக சரிகட்டிவிடுகிறார்கள். //

      எல்லா ஊருமே இதுக்கு விதிவிலக்கல்ல போல!!!!!!!!!!!!!

      கீதா

      நீக்கு
    3. உண்மை. வடக்கில் இப்படி விதி மீறல்கள் அதிகம்.

      தங்களது மீள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி.

      நீக்கு
  3. குட்மார்னிங்.

    படங்கள் அனைத்தும் சிறப்பு. குறிப்பக ஆற்றோரத்தில் காணப்படும் கட்டிடங்கள் படங்கள் மிகவும் கவர்கின்றன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காலை வணக்கம்.

      ஆற்றோரக் கட்டிடங்கள் மிகவும் பழமையானவை. நிறைய கட்டிடங்களுக்கு வயது 100-க்கு மேல் இருக்கும்...

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  4. படங்கள் அனைத்தும் அருமை.

    நன்றி வெங்கட் சார்.
    8 பாகங்களையும் பொறுமையாக படிக்கிறேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முடிந்த போது மஹாகும்பமேளா பதிவுகளை படித்து உங்கள் கருத்துகளையும் சொல்லுங்கள் சொக்கன் சுப்ரமணியன்...

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  5. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  6. வணக்கம் சகோதரரே

    ஆற்றின் படங்கள் எல்லாம் அருமை. படகுகளில் பயணிக்கும் போது படம் எடுப்பது கடினம். அசைவுகள் வரும். ஆனால் தாங்கள் எடுத்த படங்கள் துல்லியமாக அழகாக உள்ளன. முதல்படம் இயற்கை அழகு மிகவும் நன்றாக உள்ளது. அலங்கரிக்கப்பட்ட படகுகளும், பின்புறம் கட்டடங்களால் நிரம்பி கண்களை கவர்ந்த படங்களும் மிகவும் அழகாக உள்ளது.

    தங்களின் எட்டு கும்பமேளா பதிவுகளையும் நிதானமாக படித்துப் பார்க்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படகுகள், கரை, கட்டிடங்கள் என அனைத்தும் அழகான அனுபவம் வாரணாசியில். இன்னும் நான்கு ஞாயிற்றுக் கிழமைகள் இந்த வாரணாசி நிழற்பட உலா தொடரும்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கமலா ஹரிஹரன் ஜி!

      நீக்கு
  7. படங்களின் தெளிவும், அதன் கோணங்களும் பிரமிக்க வைக்கிறது ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

      நீக்கு
  8. படங்கள் நல்லா இருக்கு. இங்கெல்லாம் இந்த ஜென்மத்தில் போக முடியுமான்னு வேற தோணுது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விரைவில் அங்கே சென்று வர உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கட்டும்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு
  9. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

      நீக்கு
  10. படங்கள் எல்லாம் அழகு.
    கரையோர கட்டிங்கள் காசி என்றால் நினைவுக்கு வரும் கட்டிடம்.
    பல வருடங்களை கடந்தும் நிமிர்ந்து நிற்பவை.

    மணிகர்ணிகா கட்டமும், அரிசந்திரகட்டமும் மறக்க முடியாத காட்சிகள் அடங்கியவை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அழகான கட்டிடங்கள்... எத்தனை பழமை இங்கே....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.

      நீக்கு
  11. ஊன்றிக் கவனித்தால் கட்டிடங்கள் பழமையானவை என்பது தெரிகிறது. ஆனாலும், அவற்றின் கம்பீரம் ரசிக்க வைக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது முதல் வருகை மகிழ்ச்சி. தொடர்ந்து சந்திப்போம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  12. படங்கள் அருமை. காசி சென்றிருந்தபோது, படகிலிருந்து, நாங்கள் பார்த்த சில இடங்களை உங்கள் பதிவில் காணமுடிந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் நினைவுகளை இப்பதிவு மீட்டெடுக்க உதவியதில் மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.

      நீக்கு
  13. படங்கள் அனைத்துமே மிக அழகாக இருக்கின்றன வெங்கட்ஜி.

    உங்கள் படங்களைப் பற்றிச் சொல்லத் தேவையில்லைதான்!

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படங்களை ரசித்ததில் மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன் ஜி.

      நீக்கு
  14. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

      நீக்கு
  15. நிழற்பட உலாவில் நானும் கலந்துகொண்டு உலாவினேன். படங்கள் அருமை! வழக்கம்போல் தங்களது புகைப்பட கருவி துல்லியமாக படம் பிடித்க்ட்டிருக்கிறது தங்களது உபயத்தால்! வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

      நீக்கு
  16. படங்கள் அருமை. உங்கள் துல்லியமான படப்பிடிப்பு அசத்தல்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

      நீக்கு
  17. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அனுராதா ப்ரேம்குமார் ஜி!

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....