புதன், 14 ஆகஸ்ட், 2019

இரண்டாயிரம்…



அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம். இன்றைய பொழுதை, ஒரு இனிமையான வாசகத்துடன் ஆரம்பிக்கலாம்.

ஒரு செயலை இதய பூர்வமாக செய்யும்போது தான் அந்தச் செயல் மதிப்பும் சிறப்பும் பெறுகிறது - புத்தர்



பைசா Bபோல்தா ஹே


ஹிந்தியில் ”பைசா Bபோல்தா ஹே” என்று சொல்வதுண்டு. பணம் பேசும்… பணத்திற்கு மட்டும் பேசும் சக்தி வந்து விட்டால்… சற்றே யோசித்துப் பாருங்கள்… பணத்திற்கு பேசும் சக்தி வந்து விட்டால் அது எங்கெங்கே பயணித்து ங்கள் கைக்கு வந்து சேர்ந்தது என்பதை அதனால் பெருங்கதையாகச் சொல்ல முடியும். நல்ல வேளை அதனால் பேச முடியாது! அப்படி பேசியிருந்தால் என்னவெல்லாம் அந்தப் பணத்தை வைத்து செய்தார்கள் என்று தெரிந்து கொள்ளலாம் – லஞ்சம் முதல் சம்பளம் வரை, வாழ்வு முதல் சாவு வரை, கோவில் முதல் கல்லறை வரை, என பலப் பல செயல்களில்/இடங்களில் அந்தப் பணம் பயணித்து உங்களிடம் வந்து சேர்ந்த கதை சொல்லக்கூடும். அது சரி எதற்காக இந்த பணம் பேசும் கதை இன்றைக்கு?

சமீபத்தில் இந்திய ரிசர்வ் வங்கியின் தளத்தினை பார்க்கும்போது [வாரா வாரம் இந்தத் தளத்தினைப் பார்க்க வேண்டியது என் அலுவலக வேலைகளில் ஒன்றாக இருந்தது – இதில் வரும் ஒரு Notification பார்த்து செய்ய வேண்டிய வேலைகள் உண்டு!] ரிசர்வ் வங்கியின் தளத்திலேயே பைசா போல்தா ஹே என்ற பெயரில் ஒரு இணையதளத்திற்கான சுட்டியும் பார்க்கக் கிடைத்தது. அங்கே என்ன தகவல் கிடைக்கும் எனத் தேடப் போக தற்போது புழக்கத்தில் இருக்கும் ரூபாய் நோட்டுகளில் என்னென்ன அம்சங்கள் எங்கெங்கே இருக்கின்றன என்பதை தெரிந்து கொள்ளும் வசதி அந்தத் தளத்தில் இருக்கிறது. உங்கள் கைகளில் தவழும் பணத்தில் என்னென்ன அம்சங்கள் இருக்கின்றன என்பதை தெரிந்து வைத்துக் கொள்வது நல்லது தானே. அந்தத் தளத்தின் வழி நீங்களும் தெரிந்து கொள்ளலாமே!


விக்கிரமாதித்தனும் பட்டியும்:



விக்கிரமாதித்தன் கதைகள் எத்தனை முறை கேட்டு இருப்போம். எங்கள் ஊரில் ஒரு பாட்டி – இந்தக் கதைகளை விலாவரியாக, உணர்வு பூர்வமாக எங்களுக்கெல்லாம் சொல்லுவார்.  ”பத்ரகாளி இருக்காளே… அவ பட்டிக்கு இரண்டாயிரம் ஆண்டு உயிர் வாழற வரத்தினைத் தந்தாள் தெரியுமா?” என்று கேட்டு கதை சொல்ல ஆரம்பிப்பார் பாட்டி. ”அது எப்படி பாட்டி ஒரு ஆளு இரண்டாயிரம் வருஷம் உயிர் வாழ முடியும்? சும்மா டூப் அடிக்காத” என்று நாங்கள் கேட்க, ”பத்ரகாளி கேட்கும் வரம் கொடுப்பவள் டா… இரண்டாயிரம் வருடம் உயிர் வாழும் வரம் கொடுப்பதற்கு ஒரு கண்டிஷன் போட்டாளே… எல்லா விதமான அங்க லட்சணங்களும் முழுமையாக அமைந்த ஒரு சக்ரவர்த்தியின் தலையைக் கொய்து வந்து எனக்குக் காணிக்கையாகச் சமர்பிக்கச் சொல்லி! அது என்ன சுலபமான கார்யமா என்ன?

பட்டியும் சும்மாவா? தேவேந்திரனிடம் ஆயிரம் வருடங்கள் இராஜபரிபாலனம் செய்யும் வரம் பெற்ற விக்கிரமாதித்தன் தலையை வெட்டிக் கொண்டு போய் பத்ரகாளி காலடியில் வைத்து இரண்டாயிரம் ஆண்டு வாழும் வரம் அடைந்தானே… அப்புறமும் சும்மா இருந்தானா? தன்னுடைய மதியினால் பத்ரகாளியிடமே வரம் பெற்று விக்கிரமாதித்தனின் மீண்டு உயிர்பிக்க வைத்தானே?” இதெல்லாம் பத்ரகாளியோட அருள் தாண்டா பசங்களா…. அவள் அருள் இருந்தால் எல்லாம் சாத்தியம்… இரண்டாயிரம் ஆண்டு உயிர் வாழறது பெரிய விஷயமே இல்லைடா பசங்களா, ஆனா இருக்கற வரைக்கும் மத்தவங்களுக்கு உதவியா இருக்கணுமே தவிர, உபத்திரவமா இருக்கக் கூடாது” என்று ஸ்வாரஸ்யமாகச் சொன்ன கதையை மறக்க முடியுமா? 

அது சரி இன்றைய பதிவில் இரண்டாயிரம் பற்றிய இரண்டு செய்திகள் எதற்கு? இன்றைய பதிவின் ஆரம்பத்தில் சொன்ன புத்தரின் பொன்மொழிக்கும் இந்தப் பதிவுக்கும் கூட சம்பந்தம் உண்டு! ” ஒரு செயலை இதய பூர்வமாக செய்யும்போது தான் அந்தச் செயல் மதிப்பும் சிறப்பும் பெறுகிறது” – பதிவுகள் எழுதும் செயலையும் இதய பூர்வமாக நான் செய்து வருகிறேன் என்று தான் தோன்றுகிறது. அதனால் தான் இன்றைக்கு வரை ஏதோ எழுதிக் கொண்டே இருக்கிறேன். நான் எழுதிய பதிவுகள் மற்றவர்களுக்கு ஏதோ ஒரு விதத்திலாவது பயன் உடையதாக இருந்திருக்கும் என நம்புகிறேன். இன்றைய பதிவு, இந்தப் பக்கத்தில் 2000-ஆவது பதிவு! இதுகாறும் எனது பதிவுகளுக்கு ஆதரவு அளித்து வந்த அத்துணை நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.



சிலருக்கு இரண்டாயிரம் பதிவுகள் எழுதுவது அப்படி ஒன்றும் பெரிய விஷயமில்லை. இந்தப் பதிவுலகில் ஏற்கனவே அப்படி பதிவுகளை எழுதி இருக்கிறார்கள். அதுவும் எந்தவித அறிவிப்புகளும் இல்லாமல் எழுதிக் கொண்டே இருக்கிறார்கள்.  எழுத வேண்டும் என்ற எண்ணமே இல்லாமல் இருந்த எனக்கு இது பெரிய விஷயம். அதனால் தான் இந்த பதிவு இரண்டாயிரமாவது பதிவு என்ற அறிவிப்பு!


நண்பர்களே, இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்துகளைச் சொல்லுங்களேன். நாளை வேறு ஒரு பதிவில் மீண்டும் ச[சி]ந்திப்போம்….
 
நட்புடன்

வெங்கட்
புது தில்லி

32 கருத்துகள்:

  1. இனிய காலை வணக்கம் வெங்கட்ஜி

    அருமையான வாசகம். உண்மைதான்!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதாஜி. வாசகம் உங்களுக்கும் பிடித்திருந்ததில் மகிழ்ச்சி.

      நீக்கு
  2. வெங்கட்ஜி 2000 வது பதிவிற்கு வாழ்த்துகள்!

    நீங்கள் தொடர்ந்து எழுத வேண்டும். எவ்வளவு தகவல்கள் அறிகின்றோம் உங்க்ள் தளத்தின் வழி! அதுவும் அருமையாக எழுதுகின்றீர்கள்..வாழ்த்துகள் பாராட்டுகள்.

    ரூபாய் பேசுவது..ஆஆஆஆ...ரூபாய் 500, 1000 செல்லாது என்று வந்ததும் என்னிடம் இருந்த 500 என்னைப் பார்த்து சோகமாகவும் தன் கதையைச் சொல்லுவது போலவும் எழுதி...ஹிஹிஹி அதுக்கப்புறம் சொல்ல மாட்ட்டேன் ஹா ஹா அது புரிந்திருக்கும்...

    ...வாசகத்திற்கும் இதற்கும் ஆன தொடர்பு, எழுதும் போது இதயபூர்வமாக ஆர்வத்துடன் எழுதினாலும் சமீபகாலமாக பல சிந்தனைகளின் தாக்குதலினால் நத்தை போன்று ஆகிவிட்டது!!!!!!!!!! மனதில் ஏன்னவோ நிறைய வந்து விழுகிறது எண்ணங்கள்...வந்து விழும் கருத்துகளை ஒழுங்கு படுத்தி பதிவாக எழுத முடியாமல் சென்று கொண்டிருக்கிறது.

    இந்த வாசகத்தை மனதில் நிலை நிறுத்திக் கொள்ள வேண்டும்...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி கீதாஜி.

      நீக்கு
  3. இதயபூர்வமாக நாம் எத்தனை செயல்களைச்செய்கிறோம், செய்ய முடிகிறது என்கிற கேள்வி வருகிறது.

    குட்மார்னிங் வெங்கட்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஸ்ரீராம்.

      கேள்விகள் - முடிவில்லாத/பதில் இல்லாத கேள்விகள் இப்படி நிறைய உண்டு!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  4. ரூபாயில் ரெக்கார்டிங் வசதி வைத்திருந்தாள் நல்லது. அதுவரை இருந்த ரெக்கார்டிங்குகளைக் கேட்டு தேவையானால் தேவை இல்லாதவற்றை அழித்து மருட்டி நாமும் ரெகார்ட் செய்து அனுப்பலாம்!!! சுட்டிக்குப் பிறகு செல்லவேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ரெக்கார்டிங் வசதி - இருந்தால் நன்றாகத் தான் இருக்கும் ஸ்ரீராம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  5. இரண்டாயிரம் இருபதாயிரம் ஆக வாழ்த்துகள் வெங்கட். பயனுள்ள பல தகவல்கள், சுவாரஸ்யமான விளம்பர காணொளிகள், அழையா பயணக்கட்டுரைகள், அழகிய படங்கள்... இப்போதெல்லாம் கதைகளும் அனுபவங்களும் இடம்பெற தொடங்கி இருக்கிறது... ரசனையான தளம். மென்மேலும் வளர வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  6. இரண்டாயிரம் பதிவுகள் தொட்டமைக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள் ஜி

    கதைகளும் பொருத்தம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி.

      நீக்கு
  7. அப்போ இன்னும் 19 நாளில் 2019 வது பதிவு. 2019இல் 2019. மற்ற வருடங்களில் இந்த ஜோடிப்பொருத்தம் இருந்திருக்காது.
    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  8. ஆஹா 2000-ஆவது பதிவு வாழ்த்துகள் ..

    சில நேரம் தோன்றுவது உண்டு ..எதற்கு நாம் இப்படி பதிவுகள் போடுகிறோம் என்று ...அந்த நேரத்தில் தங்களின் தளமும் அதில் வாசித்த சில வரிகளும் எனக்கு ஊக்கம் தரும் ...

    எந்த விதமான எதிர்பார்ப்பும் இல்லாமல் எனக்கு பிடித்ததை செய்கிறேன் என உங்கள் தளத்தில் எங்கோ படித்த நினைவு...



    பல நேரம் உங்களின் பதிவுகளின் எண்ணிக்கை பார்த்து மலைத்ததும் உண்டு ...

    ஆக பல நேரம் வழிகாட்டியாக தங்கள் தளம் எங்களுக்கு ...

    மேலும் மேலும் பல பதிவுகளை எழுதி சிகரம் தொட வாழ்த்துக்கள் ..

    -----தற்போது புழக்கத்தில் இருக்கும் ரூபாய் நோட்டுகளில் என்னென்ன அம்சங்கள் எங்கெங்கே இருக்கின்றன ---- சிறப்பான தகவல்கள் ...அருமை



    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //எனக்கு பிடித்ததை செய்கிறேன்// உண்மை. அப்படிச் செய்வது நல்லது - நம் செயல் அடுத்தவரை தொந்தரவு செய்யாத வரை!

      //பல நேரம் வழிகாட்டியாக தங்கள் தளம் எங்களுக்கு// மகிழ்ச்சி அனு ப்ரேம் ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  9. வணக்கம் சகோதரரே

    இயத பூர்வமாக செய்யும் செயல் மதிப்பும் சிறப்பும் பெறுகிறது. நல்லதொரு வாசகம். ரசித்தேன்.

    பணத்துடன் பேச ஆரம்பித்து விட்டால், நன்றாகத்தான் இருக்கும். ஆனாலும் இப்போதும் பணந்தானே பேசிக் கொண்டு உள்ளது.. ரூபாய் நோட்டுக்களைப் பற்றிய விபரம் அருமை.

    தாங்கள் வலைத்தளத்தில் 2000 பதிவுகளை எட்டி அந்த விக்கரமாதித்தியன் போல் சாதனை புரிந்திருப்பதற்கு என் மனப்பூர்வமான நல்வாழ்த்துக்கள். உங்கள் பதிவுகள் ஒவ்வொன்றும் படிக்க வித்தியாசமானவை.பல விஷயங்களை அறிந்து கொள்ள உதவியாய் இருப்பவை. நான் மிகவும் ரசித்துப் படிப்பேன். மேலும் இன்னமும் பல ஆயிரங்கள் கடந்து தாங்கள் சாதனை புரிய வேண்டுமென இறைவனை பிரார்த்திக்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி கமலா ஹரிஹரன் ஜி.

      நீக்கு
  10. அர்த்தமுள்ள பதிவுகள் 2000 விரைவில் 20000 ஆக பல்கிப்பெருகட்டும். வாழ்த்துகள். ரூபாய் நோட்டுப் பேசினால் பல கதைகளைச் சொல்லும் என்பதோடு பலர் மாட்டிப்பாங்க என்பதும் இருக்கே! அப்படியானும் ரூபாய் நோட்டுப் பேசட்டும்.

    விக்ரமாதித்தன் கதைக்கு வரைந்திருக்கும் படங்கள் "பொன்னியின் செல்வன்" நாவலையும் ஓவியர் மணியத்தையும் நினைவூட்டுகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி கீதாம்மா.

      நீக்கு
  11. சுவையான உபயோகமான தகவல்கள் வெங்கட்..
    அம்மாடி! இரண்டாயிரமாவது பதிவா? வாழ்த்துக்கள்,ஜி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜீவி ஐயா.

      நீக்கு
  12. இந்த விக்கிரமாதித்தன் கதை புத்தகம் பிரேமா பிரசுர வெளியீடாக இருக்கலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இருக்கலாம். இந்தப் படம் இணையத்தில் எடுத்தது. என்னிடம் இருக்கும் புத்தகம் திருச்சி வீட்டில் இருக்கிறது.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜீவி ஐயா.

      நீக்கு
  13. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

      நீக்கு
  14. இரண்டாயிரம் பதிவுகள் ஒரு சாதனை. வாழ்த்துக்கள் வெங்கட் ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராமசாமி ஜி.

      நீக்கு
  15. இரண்டாயிரம் பதிவுகள் எழுதியும் இன்னும் Adsense விளம்பர வருமானத்திற்குள் போகவில்லையே நீங்கள்! வழிகட்டினால் எங்களுக்குப் பயன்படுமே! வாழ்த்துக்கள்!
    (அது சரி, எப்படி 2000 எழுதினீர்கள்? பாத்ரூம் கூடப் போகமாட்டீர்களோ?)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //பாத்ரூம் கூடப் போக மாட்டீர்களோ?// ஹாஹா... நல்ல சந்தேகம் உங்களுக்கு!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராய செல்லப்பா ஐயா.

      நீக்கு
  16. 2000 பதிவுக்கு வாழ்த்துக்கள் வெங்கட், வாழ்க வளமுடன்.
    பெரிய எழுத்து விக்கரமாதித்தன் புத்தகம் இருந்தது எங்கள் வீட்டில்.
    பாட்டி சொன்னது அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....