வியாழன், 15 ஆகஸ்ட், 2019

சுதந்திர தினம் - வாழ்த்துகள்



அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம். இன்றைய பொழுதை, ஒரு இனிமையான வாசகத்துடன் ஆரம்பிக்கலாம்.

எவன் ஒருவன் தன் தற்காலிக நலனுக்காகச் சுதந்திரத்தை விட்டுக் கொடுக்கிறானோ அவன் ஒரு பொழுதும் சுதந்திரம் பெறத் தகுதியுடையவனல்ல – ஃப்ராங்க்ளின்.




இன்றைக்கு நம் சுதந்திர தினம். பாரதியார் - சுதந்திரத்திற்கு முன்னரே அவர் நம்மிடையே இல்லாது போனாலும் அவருடைய தீர்க்க தரிசனப் பார்வை மூலம் இந்திய சுதந்திரத்தினை கண்டவர். இந்த நாளில் நமது தேசத்தின் கொடி பற்றி எழுதிய அவர் பாடலை இங்கே பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி… பட்டொளி வீசிப் பறக்கட்டும் நம் தேசியக் கொடி…
   
பல்லவி

தாயின் மணிக்கொடி பாரீர்! – அதைத்
தாழ்ந்து பணிந்து புகழ்ந்திட வாரீர்!

சரணங்கள்

ஓங்கி வளர்ந்ததோர் கம்பம் – அதன்
உச்சியின் மேல் வந்தே மாதரம் என்றே
பாங்கின் எழுதித் திகழும் – செய்ய
பட்டொளி வீசிப் பறந்தது பாரீர்! (தாயின்)

பட்டுத் துகிலென லாமோ? – அதில்
பாய்ந்து சுழற்றும் பெரும்புயற் காற்று
மட்டு மிகுந்தடித் தாலும் – அதை
மதியாதவ் வுறுதிகொள் மாணங்க்கப் படலம் (தாயின்)

இந்திரன் வச்சிரம் ஓர்பால் – அதில்
எங்கள் துருக்கர் இளம்பிறை ஓர்பால்
மந்திரம் நடுவுறத் தோன்றும் – அதன்
மாண்பை வகுத்திட வல்லவன் யானோ? (தாயின்)

கம்பத்தின் கீழ் நிற்றல் காணீர் – எங்கும்
காணரும் வீரர் பெருந்திருக் கூட்டம்
நம்பற்க் குரியர் அவ்வீரர் – தங்கள்
நல்லுயிர் ஈந்தும் கொடியினைக் காப்பார். (தாயின்)

அணியணி யாயவர் நிற்கும் – இந்த
ஆரியக் காட்சியோர் ஆனந்தம் அன்றோ?
பணிகள் பொருந்திய மார்பும் – விறல்
பைந்திரு வோங்கும் வடிவமும் காணீர்! (தாயின்)

செந்தமிழ் நாட்டுப் பொருநர் – கொடுந்
தீக்கண் மறவர்கள் சேரன்றன் வீரர்
சிந்தை துணிந்த தெலுங்கர் – தாயின்
சேவடிக் கேபணி செய்திடு துளுவர். (தாயின்)

கன்னடர் ஓட்டிய ரோடு – போரில்
காலனும் அஞ்சக் கலக்கும் மராட்டர்,
பொனகர்த் தேவர்க ளொப்ப – நிற்கும்
பொற்புடையார் இந்துஸ் தானத்து மல்லர் (தாயின்)

பூதலம் முற்றிடும் வரையும் – அறப்
போர்விறல் யாவும் மறுப்புறும் வரையும்
மாதர்கள் கற்புள்ள வரையும் – பாரில்
மறைவரும் கீர்த்திகொள் ரஜபுத்ர வீரர் (தாயின்)

பஞ்ச நதத்துப் பிறந்தோர் – முன்னைப்
பார்த்தன் முதற்பலர் வாழ்ந்தநன் னாட்டார்,
துஞ்சும் பொழுதினும் தாயின் – பதத்
தொண்டு நினைந்திடும் வங்கத்தி னோரும் (தாயின்)

சேர்ந்ததைக் காப்பது காணீர்! அவர்
சிந்தையின் வீரம் நிரந்தரம் வாழ்க!
தேர்ந்தவர் போற்றும் பரத – நிலத்
தேவி துவஜம் சிறப்புற வாழ்க! (தாயின்)



அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள்.

நாளை வேறு ஒரு பதிவில் மீண்டும் ச[சி]ந்திப்போம்….
 
நட்புடன்

வெங்கட்
புது தில்லி

30 கருத்துகள்:

  1. குட்மார்னிங் வெங்கட்.

    பொன்மொழி தற்போதைய யாரோ ஒரு

    பதிலளிநீக்கு
  2. குட்மார்னிங் வெங்கட்.

    பொன்மொழி தற்போதைய யாரோ ஒரு அரசியல்வியாதியை நினைவுபடுத்துகிறது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அரசியல்வியாதி! இங்கே ரொம்பவே அதிகம் இந்த வியாதி!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  3. பாரதியார் அப்போது முப்பதுகோடி முகமுடையாள் எனில் உயிர் மொய்ம்புற ஒன்றுடையாள் என்று பாடினார். இப்போது எண்ணிக்கை கொஞ்சம் அதிகம். அவ்வளவுதான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்போது எண்ணிக்கை கொஞ்சம் அதிகம்! :))) கொஞ்சம் அல்ல! நிறையவே அதிகம் ஸ்ரீராம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  4. இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  5. இனிய சுதந்திர தின வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

      நீக்கு
  6. இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள் ....

    பாரதியின் வரிகளுடன் இனிய பதிவு ...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி அனு ப்ரேம்ஜி.

      நீக்கு
  7. சரியான நேரத்தில் தந்த பாடல்.
    இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள் ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி.

      நீக்கு
  8. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.

      நீக்கு
  9. இனிய சுதந்திரத் திருநாள் நல்வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

      நீக்கு
  10. இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள் ஜி.

    அருமையான பாடலைப் பகிர்ந்துருக்கீங்க.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி கீதாஜி.

      நீக்கு
  11. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  12. இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள் வெங்கட்ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி இராமசாமி ஜி.

      நீக்கு
  13. இனிய சுதந்திரத் திருநாள் நல்வாழ்த்துகள்!

    பள்ளியில் இந்த பாடல் பாடியது நினைவுக்கு வருது.
    அரசு பள்ளிக்கூடத்தில் தான் அதிகமாய் படித்து இருக்கிறேன், அப்பாவுக்கு அடிக்கடி உத்தியோகம் மாற்றல் ஆவதால். பள்ளியில் சுதந்திர தினத்திற்கு முக்கியமானவர்கள் அழைக்கப்படுவார்கள். அவர்கள் முன் ஆடல் , பாடல் நடைபெறும். கவிதை, கட்டுரை என்று வாசிப்போம். இனிப்பு வழங்கி களித்த நாட்கள் நினைவுக்கு வருகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.

      நீக்கு
  14. வணக்கம் சகோதரரே

    இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள். நல்ல பாடல். பாரதியின் பொருத்தமான பாடலை இங்கு பகிர்ந்தமைக்கு நன்றிகள்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி கமலா ஹரிஹரன் ஜி.

      நீக்கு
  15. எவன் ஒருவன் தன் தற்காலிக நலனுக்காகச் சுதந்திரத்தை விட்டுக் கொடுக்கிறானோ அவன் ஒரு பொழுதும் சுதந்திரம் பெறத் தகுதியுடையவனல்ல – ஃப்ராங்க்ளின்.


    என்று தணியும் இந்த சுதந்திரத் தாகம்.

    கொடுத்து வைத்தவர் நீங்கள். என்றும் சுதந்திரம்.

    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....