வெள்ளி, 23 ஆகஸ்ட், 2019

கோட்டைப்புரத்து வீடு…




ஏர்போர்ட்டில் இருந்து வெளிவருகிறான் விசு. அதாவது தற்போதைய கோட்டைப்புர சமஸ்தானத்தின் இளைய மஹாராஜா விஸ்வநாத ரூபசேகர கோட்டைபுரத்தார். அவனை அழைத்துச் செல்ல ஏர்ப்போர்ட்டிற்கு வந்திருந்தார் ”கார்வார் கருணாமூர்த்தி”. காரில் செல்லும் போது பைக்கில் வந்து இடைமறிக்கிறாள் அழகான இளம் யுவதி அர்ச்சனா. விசுவின் காதலி.


காரிலிருந்து இறங்கிய விசு அர்ச்சனாவோடு பேசிக் கொண்டிருப்பதை பார்த்த கார்வார் கருணாமூர்த்தி திடுக்கிடலுடன் விசுவிடம் எடுத்துச் சொல்கிறார். “தம்பி அந்த பொண்ணு பூவோடும் பொட்டோடும் நீண்ட நாட்கள் நல்லா வாழ வேண்டாங்களா?” இதை கேட்டதும் தான் தன்னுடைய ஆயுளும் இன்னும் சில வருடங்கள் தான் என்பதை உணர்ந்து மனம் வெறுத்துப் போகிறது. இது இன்று நேற்று நடப்பவையா என்ன? பரம்பரை பரம்பரையாக கோட்டைப்புர சமஸ்தானத்தின் ராஜாக்கள் ஒவ்வொருவரும் தங்களுடைய முப்பதாவது வயதில் உயிரை விட்டு விடுகின்றனரே…… அப்படியொரு சாபம்!

பெண் வாரிசு பிறந்தாலும் உடனேயே மரணம் சம்பவிக்கிறது. எப்படியாவது பெண் வாரிசு தோன்றி பூஜையறையில் வைக்கப்பட்டிருக்கும் மூங்கில் பெட்டியை அதன் கையால் திறந்து பார்த்தால் தான் பரிகாரம் என்னவென்று அறிந்து கொள்ள முடியும் என்று தவியாய் தவிக்கின்றார் பெரிய ராணி பாண்டியம்மாள்.

தற்போதைய ராஜாவான விசுவின் அண்ணன் கஜேந்திர ரூபசேகர கோட்டைபுரத்தாருக்கு இன்றோடு முப்பது வயது பூர்த்தியாவதால் எல்லோரும் மரணபயத்துடன் குலதெய்வமான வேங்கைப் பொன்னியிடம் முறையிட்டு பூஜை செய்ய காத்திருக்கின்றனர். அம்மனுக்கு மாலையிட்டு வணங்கச் சென்ற கஜேந்திர ரூபசேகர கோட்டைப்புரத்தாரை காத்திருந்தது போல் அங்கிருந்த கோதுமை நாகம் தீண்டி சன்னதிக்குள்ளேயே இறந்து விடுகிறார்.

இப்படி அடுக்கடுக்கான மரணங்கள். எல்லாவற்றுக்கும் காரணம் வஞ்சியம்மாவின் சாபம். அது யாரு அந்த வஞ்சியம்மா? வஞ்சியம்மாவுக்கு நேர்ந்த கதி தான் என்ன? அர்ச்சனாவை திருமணம் செய்ய விரும்பும் விசு நினைத்ததை சாதித்தானா? சாபத்துக்கு பரிகாரம் தான் கிடைத்ததா? இல்லை இது எல்லாமே சதியா?

மேலே சொன்ன எல்லா கேள்விகளுக்கும் உங்களுக்கு பதில் வேண்டுமெனில், நான் வாசித்த இந்திரா செளந்தர்ராஜன் அவர்களின் கோட்டைப்புரத்து வீடு என்ற நூலை வாங்கி வாசித்து நீங்களும் தெரிந்து கொள்ளுங்களேன்.

அந்த கால ராஜாக்கள், அடிமை மக்களை நடத்திய விதம் கொடுமையிலும் கொடுமை…..:((( வாசிக்கும் போதே மனம் பதைபதைத்தது. அதுவும் பெண்களின் நிலை???? இன்றும் இளம் பிஞ்சுகளைக் கூட விட்டுவைக்காத வெறிநாய்களின் செயல்களுக்கும் நிச்சயம் காலம் பதில் சொல்லத் தான் போகிறது!

சமீபத்தில் உறுப்பினராக சேர்ந்துள்ள வாடகை நூலகத்தில் இந்திரா செளந்தர்ராஜன் அவர்களின் ஏராளமான புத்தகங்கள் கொட்டிக் கிடக்கின்றன. நூலின் விலையில் பத்து சதவீதம் வாசிக்கும் கட்டணமாக வசூலிக்கிறார் இதை நடத்தும் தாத்தா. அது போக சொன்ன தேதியிலிருந்து நீட்டிக்கும் ஒவ்வொரு நாளுக்கும் ஒரு சதவிகிதம் கூடுதல். ரொம்ப கண்டிப்பு தான்….:)) இருந்தாலும் நல்ல நூல்களுக்காக செலவழிப்பது தவறில்லை என்று தேர்ந்தெடுத்து வாசிக்கிறேன்.

சக பதிவர் ”சகோதரர் சொக்கன்” அவர்களின் கோட்டைப்புரத்து வீடு விமர்சனம் படித்ததிலிருந்தே குறித்து வைத்திருந்தேன். சென்ற வாரம் நூலகத் தாத்தாவிடம் கேட்ட போது உடனே எடுத்து தந்தார்….:) விறுவிறுப்புக்கு சற்றும் குறைவில்லை. இப்போதெல்லாம் இம்மாதிரி நூல்களை வாசிப்பது தான் எனக்கும் பிடித்திருக்கிறது. ஆவி, பேய், இருட்டு, தனிமை என்றாலே நடுங்கும் நான் மகளையோ, கணவரையோ உடன் வைத்துக் கொண்டாவது இம்மாதிரி நூல்களை படித்து விடுகிறேன்…..:))) தைரியம் வந்தா சரி!!!

இந்த நூலை நீங்கள் வாங்க அணுக வேண்டிய முகவரி:-

வானதி பதிப்பகம்
23, தீனதயாளு தெரு
தி.நகர், சென்னை – 17
முதல் பதிப்பு வெளிவந்த வருடம் – டிசம்பர், 1990
நான் வாசித்தது நான்காம் பதிப்பு – மே, 2011
இப்போதைய விலை – ரூ100
மொத்த பக்கங்கள் – 328

நண்பர்களே, இன்றைய பதிவு பற்றிய உங்கள் கருத்துகளைப் பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்.  நாளை வேறொரு பதிவில் ச[சி]ந்திப்போம்…

நட்புடன்

ஆதி வெங்கட்

பின்குறிப்பு: கோவை2தில்லி தளத்தில் வெளியிட்டது இங்கே மீள்பதிவாகவும் ஒரு சேமிப்பாகவும்...

38 கருத்துகள்:

  1. ஆவலைத் தூண்டும்படியான நறுக்கென்ற விமர்சனம் சகோ.
    வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி.

      நீக்கு
  2. இனிய காலை வணக்கம் ஆதி அண்ட் வெங்கட்ஜி

    வாசிப்பு அனுபவத்தைத் தெரிந்து கொள்ள வருகிறேன். கிப்பத்தான் லாடன் மலையில் இருக்கிறேன்...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இனிய காலை வணக்கம் கீதாஜி. இப்போதுதான் லாடன் மலையில்! ஹாஹா... பயமுறுத்தும் மலையாயிற்றே!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  3. குட்மார்னிங்.

    புத்தகம் விலைகொடுத்து வாங்குவதாயில்லை. யாராவது கொடுத்தால் தேவலாம்!
    அல்லது பி டி எப்பாக கிடைக்கிறதா என்றுபார்க்க வேண்டும்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இனிய காலை வணக்கம் ஸ்ரீராம்.

      //புத்தகம் விலைகொடுத்து வாங்குவதாயில்லை// எனக்கும் இப்போதெல்லாம் இப்படித்தான். வாங்கிய புத்தகங்களை பராமரிக்கக் கஷ்டமாக இருக்கிறது.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  4. நல்ல விமர்சனம் ஆதி. இது ஏதோ ஒரு இதழில் தொடராக வந்ததோ? பயணத்தின் போது வாங்கிய ஏதோ ஒரு இதழில் வாசித்த நினைவு அந்த இதழில் வந்த அந்த பாகம் மட்டுமே..

    எனக்கும் மர்மங்கள், அமானுஷம், த்ரில்லர், நகைச்சுவை வாசிக்க ரொம்பப் பிடிக்கும். படங்களும் அப்படியான படங்கள் பார்க்கப் பிடிக்கும். வாய்ப்பு அரிது என்றாலும்..

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆனந்த விகடனில் வந்தது. இதற்கு முன்னால் இந்திரா சௌந்திரராஜன் கதைகள், நாவல்கள் எழுதி இருந்திருக்கலாம். ஆனால் எனக்கு இந்தக் கதையில் இருந்தே அவர் அறிமுகம்.

      நீக்கு
    2. அப்போதெல்லாம் விகடன் விகடனாக இருந்ததொரு பொற்காலம். :(

      நீக்கு
    3. //ஏதோ ஒரு இதழில் தொடராக வந்ததோ?// இருக்கலாம் கீதாஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
    4. //ஆனந்த விகடனில் வந்தது// தகவலுக்கு நன்றி கீதாம்மா...

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
    5. /விகடன் விகடனாக இருந்தது ஒரு பொற்காலம்/ பல வார இதழ்கள் இப்படித்தான். வார இதழ்கள் பார்த்தே பல மாதங்கள் ஆகிறது.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

      நீக்கு
  5. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.

      நீக்கு
  6. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

      நீக்கு
  7. நல்ல விமரிசனம். நன்றாக உள்ளது. நான் புத்தகங்களைக் கையில் பிடித்துப் படித்தே சில காலம் ஆகின்றது. அநேகமாக இணையத்தில் தான்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

      நீக்கு
  8. ஓ இது சொக்கன் அவர்களின் புத்தகமோ.. கதை நன்றாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், பதிவிலேயே சொல்லி இருக்காங்க இந்திரா சௌந்திரராஜன் எழுதினதுனு. பதிவைப் படிக்காமலேயே கருத்துச் சொன்னால் இப்படித் தான் மாட்டிக்கணும் அதிரடி! :P :P :P சொக்கன் இந்தப் புத்தகத்துக்கு விமரிசனம் எழுதி இருக்கார்.

      நீக்கு
    2. ஆஆஆஆ இதென்ன புயு வம்பு:)) நான் வாசிச்சுத்தான் போட்டேன் அதனாலதான் சொக்கன் எழுதியதோ எனத் தைரியமாகக் கேட்டிருக்கிறேன்.. ஆனா இடையில எங்கோ கொயம்பிட்டேனாக்கும்:))

      https://i.redd.it/r78ytk8h9so11.jpg

      நீக்கு
    3. சொக்கன் - கிர்ர்ர்ர்ர்.... :)

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அதிரா!

      நீக்கு
    4. //பதிவைப் படிக்காமலேயே கருத்துச் சொன்னால் இப்படித் தான் மாட்டிக்கணும் அதிரடி// ஹாஹா....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

      நீக்கு
    5. ஆஹா... ஏதோ கொயப்பம்! :)))

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அதிரடி அதிரா...

      நீக்கு
  9. அன்பு ஆதி.
    சுருக்கமாக அழகாக விமர்சிருத்திருக்கிறீர்கள். சென்னையில் இருக்கிறது இந்தப் புத்தகம்.
    நல்ல விறு விறுப்பு.
    இதைப் படித்ததும் இந்திரா சௌந்திரராஜனின் பல புத்தகங்களை வாங்கினேன்.

    மீண்டும் நினைவுக்குக் கொண்டு வந்து விட்டீர்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இவரது சில புத்தகங்கள் மட்டுமே நான் வாசித்திருக்கிறேன். சில புத்தகங்கள் வாங்கியது திருச்சியில் இருக்கிறது!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா...

      நீக்கு
  10. இந்திரா சௌந்திரராஜன் இன்றைய தமிழின் முன்னணி எழுத்தாளர்களில் ஒருவர். சுவாரச்யத்திற்கு சொல்லவா வேண்டும்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராய செல்லப்பா ஐயா.

      நீக்கு
  11. அருமையான விமர்சனம் ஆதி. நான் வெங்கட் சகோவுடையது என நினைத்துப் படித்தேன் :) நார்த் ல எங்கடா தமிழ் லைப்ரரின்னு :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தேனம்மை, நூலகங்களில் தமிழ்ப் புத்தகங்கள் கிடைக்கும். சில பெரிய நூலகங்களில். தமிழ்ப் புத்தகங்கள் வாராந்தரிகள், மாதாந்தரிகள் எனக் கிடைக்கும். ராஜஸ்தான், குஜராத் போன்ற மாநிலங்களிலேயே தமிழ்ப் புத்தகங்கள் ராணுவ நூலகத்தில் கிடைக்கும். நாம் தெரிந்து கொண்டு வாங்கிப் படிக்கணும். பலருக்கும் இது குறித்துத் தெரிவதில்லை.

      நீக்கு
    2. நார்த்ல எங்கேடா தமிழ் லைப்ரரின்னு! இங்கே தமிழ்ச் சங்க நூலகம் உண்டு. மத்திய அரசின் நூலகத்திலும் தமிழ் நூல்கள் உண்டு.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தேனம்மை சகோ.

      நீக்கு
    3. தில்லியிலும் இப்படி சில நூலகங்கள் உண்டு. எங்கள் அலுவலக நூலகத்திலும் கூட தமிழ் தினசரிகளும், வாராந்திரிகளும் வருவதுண்டு.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

      நீக்கு
  12. இது தொடராக வந்தபோது படித்து இரசித்து இருக்கிறேன். அருமையாக எழுதியிருப்பார் எழுத்தாளர் இந்திரா சௌந்தராஜன் அவர்கள். கதையை முழுதும் சொல்லாமல் பாதி கதையை சொல்லி மீதியை வாசகர்களை படிக்க தூண்டியிருக்கிறீர்கள். அருமையான நூல் ஆய்வு! பாராட்டுகள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

      நீக்கு
  13. மின்னூலாக படித்திருக்கின்றேன். இந்திரா சௌந்தராஜனின் அனைத்து நாவல்களும் இணையத்தில் சில வருடங்கள் முன் தரவேற்றி இருந்தார்கள். அப்போது படித்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நிஷா.

      நீக்கு
  14. புஹ்தகங்களை முன்போல் படிக்க முடிவதில்லை இந்த நாவல் ப்ற்றி கேள்வி பட்டிருக்கிறேன் வாசித்ததில்லை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி.எம்.பி. ஐயா.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....