செவ்வாய், 27 ஆகஸ்ட், 2019

கதம்பம் – சாலை உலா – நம்பிக்கை – ஓவியம் – மணிகர்ணிகா – ஹெல்தி கேக்



அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம். இன்றைய பொழுதை ஒரு இனிமையான வாசகத்துடன் ஆரம்பிக்கலாம்.

இந்த வாரத்தின் ரசித்த வாசகம்:

நம்பிக்கை என்பது ஒரு நாளில் உதிர்ந்து விடும் பூவாக இருந்துவிடக் கூடாது. மேலும் மேலும் மலரை உருவாக்கும் செடியாக இருக்க வேண்டும்அரிஸ்டாட்டில்.
 
NSB சாலையில் ஒரு உலா – 12 ஆகஸ்ட் 2019



நேற்று திருச்சி மலைக்கோட்டை இருக்கும் N.S.B ரோட்டில் சில வேலைகள் காரணமாக சென்று வந்தோம். பேருந்தை விட்டு இறங்கும் இடத்தில் I love Trichy என்று அமைத்திருக்கிறார்கள். மக்கள் அங்கே செல்ஃபி எடுப்பதும், உடன் வந்திருப்பவர்களை விட்டு புகைப்படம் எடுக்கச் சொல்லிக் கொண்டுமிருந்தனர். நல்லவேளை!! அங்கே தடுப்பு வைத்திருக்கிறார்கள். இல்லையென்றால் முழுதாக படம் வரவில்லையென பின்புறம் நகர்ந்து கொண்டேயிருந்தால் நட்டநடுசாலையில் கூழாக வேண்டியது தான் :(

ஜவுளிக்கடல், பாத்திரக்கடல் என்று எல்லா இடத்திலும் மக்கள் அலையென காட்சியளித்தனர் :) மேலே தொங்க விட்டிருந்த ஆடைகளைப் பார்த்து சிலையாக மாறிவிட, கொஞ்சம் நகருங்க நகருங்க என்று சொல்லிக் கொண்டே இருக்க வேண்டியிருந்தது :) ஆடித்தள்ளுபடி இன்னும் இருக்கே. திருமண சீர்வரிசை பொருட்கள் வாங்கவும், ஜவுளி வாங்கவும் பெரும் படையே இங்கு காணப்பட்டது.

"ஏங்க! இங்கிட்டு வாங்கன்னு சொன்னா கேட்கறீங்களா?” "இது நம்ம பொண்ணுக்கு தேவையாயிருக்கும்ல", "அடிக்கடி தொலஞ்சு போற ஐயிட்டம்ல" என்று பார்த்துப் பார்த்து குடும்பமே தேர்வு செய்து கொண்டிருந்தது :) பாத்திரக்கடலில் எண்ணெய் நிரப்ப உபயோகிக்கும் புனல் கூட எவர்சில்வரில் காணப்பட்டது! விண்டோ ஷாப்பிங்கை சிறப்பாக முடித்துக் கொண்டு, ஆளுக்கொரு ஜிகிர்தண்டாவை ருசித்து விட்டு கிளம்பினோம்.

பேருந்திலும் கும்பல் தான். இறங்க வேண்டிய இடத்தில் எங்களை இறங்க விடாமல் ஏறும் கும்பல் உள்ளே தள்ளி விட, கண்டக்டரும் "ஏம்மா! ஒரு பக்கிட்டு ஏறுங்க! ஒரு பக்கிட்டு இறங்க விடுங்க!” என்று கதறினாலும் ம்ம்ம்ம்ஹூம்ம்ம் :) யாரு சொன்னாலும் நம்மள்ளலாம் கேட்போமா!

யாரோ ஒரு பெண் துப்பட்டாவை தனக்குச் சம்பந்தமில்லையென விட்டுவிட, அது இறங்குபவர்களோடு மறியல் செய்து கொண்டிருந்தது :)

இப்படியாக நேற்றைய நாளை இனிதாக செலவழித்தோம் :)

ஆதியின் அடுக்களையிலிருந்து - கேக் – 14 ஆகஸ்ட் 2019



Healthy cake!!
(No maida, No sugar, No Butter, No egg, No oven)

நெடுநாட்களாக செய்து பார்க்க வேண்டும் என்று நினைத்து. நேற்று செய்து பார்த்த கேக்) மிகவும் சுவையாக இருந்தது.

செய்முறை இங்கு!

ரோஷ்ணி கார்னர் – ஓவியம் - 15 ஆகஸ்ட் 2019:



சுதந்திர தின வாழ்த்துகள் – மகள் வரைந்த ஓவியம்

மணிகர்ணிகா திரைப்படம் – 15 ஆகஸ்ட் 2019



சுதந்திர தினத்தினை முன்னிட்டு Zee தமிழ் தொலைக்காட்சியில் திரையிட்ட படம் – மணிகர்ணிகா - The Queen of Jhansi.  நல்ல திரைப்படம். வாய்ப்பு கிடைத்தால் நீங்களும் பார்க்கலாமே!

திருச்சி கார்னர் - 16 ஆகஸ்ட் 2019



திருச்சிராப்பள்ளி மாநகராட்சியிலிருந்து வீடுகள் தோறும் விநியோகிக்கப்பட்ட நோட்டீஸ். மழைநீர் சேகரிப்பின் அவசியத்தையும், அதைப் பற்றிய விழிப்புணர்வையும் தரும் நோட்டீஸ். ஆனால் திருவரங்கத்தை பொறுத்த வரை எப்போதுமே மழை என்பது அரிது. எதனால் என்பது தெரியவில்லை?

நேற்று தன் சுதந்திர தின உரையில் நம் மாண்புமிகு பாரதப் பிரதமர் கூட இரண்டாயிரம் வருடங்களுக்கு முன் திருவள்ளுவர் என்பவர் நீரின் மகத்துவத்தை "நீரின்றி அமையாது உலகு" என்று சொன்னதாக தெரிவித்தார். யாரேனும் கவனித்தீர்களா?

தமிழரின் பெருமையை உணர்ந்த மற்றொரு தருணம்.

நண்பர்களே, இந்த வாரத்தின் கதம்பம் பதிவு பற்றிய உங்கள் கருத்துகளைச் சொல்லுங்களேன். விரைவில் வேறு சில செய்திகளோடு மீண்டும் ச[சி]ந்திப்போம்….
 
நட்புடன்

ஆதி வெங்கட்

26 கருத்துகள்:

  1. அரிஸ் அதை தனக்குத்தானே சொல்லிக்கொண்டிருப்பார் போலும்! ..ஹா.... ஹா...ஹா...

    குட்மார்னிங்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இனிய காலை வணக்கம் ஸ்ரீராம்.

      தனக்கே அரிஸ் சொல்லிக்கொண்டாலும், அனைவருக்கும் பொருந்தும்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  2. ஆடித்தள்ளுபடி ஷாப்பிங் அனுபவம் புன்னகைக்க வைக்கிறது. கேக் சுவை.ரோஷ்ணிக்கு பாராட்டுகள். மணிகர்ணிகா முதலிலேயே அமேசான் பிரைமில் பார்த்துவிட்டேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆடித்தள்ளுபடி.... :)

      அமேசான் ப்ரைம் சில சமயங்களில் வசதி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  3. கீதா ரெங்கன் பயணத்தில் இருப்பதால் இரண்டு நாட்களாகப் போட்டி இல்லை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹா.... பயணம் முடிந்து வரும் வரை போட்டி இல்லை....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  4. செல்ஃபி மோகம் யாரையும் விடாது கருப்பு

    //யாரோ ஒரு பெண் துப்பட்டாவை தனக்குச் சம்பந்தமில்லையென விட்டுவிட, அது இறங்குபவர்களோடு மறியல் செய்து கொண்டிருந்தது//

    இதுதான் இன்றைய இளைய தலைமுறையின் அவலநிலை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இளைய தலைமுறை - நல்லது கெட்டது எல்லாம் கலந்தது தான் எல்லா தலைமுறைகளும் கில்லர்ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  5. அருமையான பதிவு.
    முகநூலில் படித்து விட்டேன்.இங்கும் படித்தேன்.
    ரோஷ்ணிக்கு வாழ்த்துக்கள்.
    மணிகர்ணிகா பார்க்கவில்லை, பார்க்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.

      நீக்கு
  6. ரோஷ்ணியின் ஒவியம் வண்ண மயமாக இருந்தது. மணிகர்ணிகா ஹிந்தியில் பார்த்து விட்டோம் இருந்தாலும் விஐய் டிவியில் தமிழில் ரசித்தோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராமசாமி ஜி.

      நீக்கு
  7. 'யாரோ ஒரு பெண் துப்பட்டாவை தனக்குச் சம்பந்தமில்லையென விட்டுவிட...' எவ்வள்வு நைஸான வர்ணனை!..
    //No maida, No sugar, No Butter, No egg, No oven)//

    பின்னே என்ன தான் அது?.. இதே வார்த்தைகளை நீங்கள் இந்தியில் எழுதியிருந்தீர்கள் என்றால் ஒன்றுமே புரிந்திருக்காது.. பிரதமர் எது சொன்னாலும் இந்தக் குறை தான்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //பின்னே என்ன தான் அது?// ஹாஹா.... கேக் தான்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜீ.வி. ஐயா.

      நீக்கு
  8. NSB சாலையில் எந்த இடத்தில் உள்ளது இந்த I Love Trichy அமைப்பு? அழகாக உள்ளது.

    செல்வி ரோஷிணியின் விடுதலை நாள் வாழ்த்து ஓவியம் நன்றாக உள்ளது. அவருக்கு எனது வாழ்த்துகள்! ‘நீரின்றி அமையாது உலகு’ என்ற திருவள்ளுவரின் குறளை பிரதமர் சொல்லியிருப்பது அருமை ஆனால் திரு ஜீவி அவர்கள் சொன்னதுபோல் இந்தி தெரியாதவர்களுக்கு புரிந்திருக்காது என்பதே உண்மை.

    அரிஸ்டாட்டில் கருத்தோடு தொடங்கிய இந்த கதம்பம் மணம் வீசுகீறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

      நீக்கு
  9. அன்பு வெங்கட்,
    திருச்சி அனுபவம் பிரமாதம். துப்பட்டா வழி மறித்தது ஆஹா ஹா.
    கவிதை கவிதை.
    கண்முன்னால் போஸ் சாலை வந்துவிட்டது. நன்றி மா. ரோஷ்ணியின்
    ஓவியம் வண்ணக்குவியல்.
    ஆதியின் கேக் சுவை. நமக்குத் தேவையான ரெசிபி.
    திருச்சி சுலபமாக வெற்றி நடை போடுகிறது. நல்ல கவனிப்பால். இன்னும் பஸ்கள் அதிகரித்தால் நன்றாக இருக்கும்.
    மிக மிக சுவையான கதம்பம் நன்றி வெங்கட்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா.

      நீக்கு
  10. I Love Trichy அழகு...

    மற்ற கதம்ப தகவல்களும் அருமை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

      நீக்கு
  11. NSB ரோடில் நின்றால் போதும், பம்பாய் ரயிலில் நடப்பதுபோல உங்களைத் தள்ளிக்கொண்டு போய்விடுவார்கள்! எப்படித்தான் மக்களிடம் அவ்வளவு பணம் இருக்கிறதோ! ஓவியம் அழகாக உள்ளது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்.எஸ்.பி. சாலை - பம்பாய் ரயில் போல! ஹாஹா... உண்மை தான் - அதுவும் பண்டிகைக் காலங்களில் நிற்கவே இடம் இல்லாத அளவுக்குக் கூட்டம் - நெரிசல்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராய செல்லப்பா ஐயா.

      நீக்கு
  12. மதுரை போலவே திருச்சியும் என்னை ஆச்சரியப்படுத்தி ஊர். குறுக்கும் நெடுக்கும் உள்ளே அலைந்து எல்லா இடங்களையும் பார்த்து முடித்த தமிழக நகரங்களில் திருச்சியும் ஒன்று.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. திருச்சி - நல்ல ஊர்! ஒரு சில இடங்களுக்கு மட்டுமே நான் சென்றதுண்டு.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜோதிஜி.

      நீக்கு
  13. ரோஷ்ணி வாழ்துகள்.
    கதம்பம் சுவைத்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....