வியாழன், 1 அக்டோபர், 2020

வாசிப்பை நேசிப்போம் – அந்தமானின் அழகு – கருணா முர்த்தி

அனைவருக்கும் இனிய காலை வணக்கம்! இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

நமது எண்ணங்கள் மிகவும் வலிமையானது. அவற்றை பூக்களைப் போல தூவினால் அது நமக்கு மாலையாகக் கிடைக்கும். கற்களைப் போல எறிந்தால் அது நமக்குக் காயங்களாகக் கிடைக்கும்! 

***** 

“வாசிப்பை நேசிப்போம்” – வாசிப்பை நேசித்தால் நமது நல்ல பொழுதுகள் இன்னும் நல்லதாகவே தொடர்து கொண்டிருக்கும் என்பதில் சந்தேகமில்லை. வாசிப்பை நேசிப்போம் என்ற முகநூல் குழுமத்தில் சில மாதங்களாக இருக்கிறேன். பலரும் எழுதி வரும் விமர்சனங்கள் வழி, நானும் சில புதிய நூல்களை தெரிந்து கொள்கிறேன். அவற்றைத் தரவிறக்கம் செய்து (மின்னூலாக இருக்கும்பட்சத்தில்!) வாசித்துக் கொண்டும் இருக்கிறேன். குழுமத்தில் தொடர்ந்து பல நூல்களை அறிமுகம் செய்து கொண்டே இருக்கிறார்கள். அலைபேசி அலப்பறைகள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் என பலவும் வந்து புத்தகம் வாசிப்பவர்கள் எண்ணிக்கையைக் கணிசமாக குறைத்திருக்கிறது என்று தோன்றினாலும், இன்னமும் நிறைய பேர் வாசிப்பை மட்டுமே ஸ்வாசிக்கிறார்கள் என்று பார்க்கும்போது மனது மகிழ்ச்சி அடைகிறது. “வாசிப்பை நேசிப்போம்” குழுவினர் தற்போது நடத்திக் கொண்டிருக்கும் #Reading_Marathon2020 என்ற தொடர் வாசிப்பு போட்டியில் பங்கு பெறும் விதமாக எனது “அந்தமானின் அழகு” மின்னூலை திரு கருணா மூர்த்தி அவர்கள் அறிமுகம் செய்திருக்கிறார். அவருக்கு எனது மனம் நிறைந்த நன்றி. திரு கருணா மூர்த்தி அவர்கள் செய்த அறிமுகம் கீழே! 

பயணங்கள் அல்லது கடிதங்கள் 
குழுமத்தின் மூன்றாம் ஆண்டு வாசிப்புத் திருவிழா – பதிவு -6 
வாரம் ஆறு. 
"அந்தமானின் அழகு". வெங்கட் நாகராஜ் எழுதியது கிண்டிலில் படித்தது. 


ஆசிரியர் பயணம் செய்துகொண்டே இருக்கிறார். பல பயணங்களில் பெற்ற எல்லாவற்றையும், அந்த அனுபவங்களை எல்லாம் தொகுத்து மின்னஞ்சலில் வலைப்பூவில் பதிவிட்டு கொண்டே இருக்கிறார். இருபதுக்கும் அதிகமான பயண நூல்களை எழுதியிருக்கிறார். 30 ஆண்டுகளாக தில்லி வாசம் செய்கிறார். கடந்த 2009ஆம் ஆண்டிலிருந்து சந்தித்ததும் சிந்தித்ததும் எனும் வலைப்பூவில் கடந்த 10 வருடங்களுக்கு மேலாக எழுதி வருகிறார். இவையெல்லாம் பயண அனுபவங்கள் பல்சுவைப் பதிவுகள் அவர் எடுத்த படங்களின் தொகுப்பு கதைமாந்தர்கள் என்று வலைப்பூவில் தொடர்ந்து எழுதி வருகிறார். இந்தியாவிலுள்ள எல்லா மாநிலங்களுக்கும் பயணம் செய்திருக்கிறார். 

ஏழு நாள் பயணமாக செல்லும்போது விமானத்திலும் திரும்பும்போது கப்பலிலுமாக பயணம் செய்திருக்கிறேன். இந்த ஆசிரியர் குறிப்பிட்டுள்ள இடங்களில் எழுபது சதத்துக்கு குறையாமல் பார்த்து வந்திருக்கிறோம். சுதந்திரப் போராட்டம் செய்தவர்களை அடைத்து வைத்திருந்த சிறைச்சாலை, அந்தமான் நிக்கோபார் தீவுகள் இந்தியாவின் ஒன்றிய பகுதிகளில் ஒன்றான இந்த பகுதி பற்றி, அழகான கடற்கரை பற்றி அங்கே இருக்கும் பவளப்பாறைகள் பற்றி நிறைய பார்த்து படித்து திரும்பி வந்தோம். இனி இந்த புத்தகத்தை பார்ப்போம்: 

தில்லியிலிருந்து நண்பருடன் அந்தமான் நிக்கோபார் தீவுகளின் தலைநகர் போர்ட் பிளேயர் வரை விமானத்தில் வந்து 5 பகல் ஆறு இரவு நவம்பர் மாதம் பயணம் செய்து அனுபவிப்பது என்ற முடிவோடு வந்தோம். நவம்பர் டிசம்பர் அந்தமான் அழகு பார்க்கக்கூடிய சீசன். 2019 நவம்பர் 7ஆம் தேதி 5:30 மணிக்கு புறப்பட்டு 9 மணி அளவில் போர்ட் பிளேயர் வீர் சவார்க்கர் விமானநிலையத்தை வந்தடைந்தோம். தங்கும் விடுதி வந்து தங்கி ஓய்வெடுத்துக் கொண்டு சுற்றிப்பார்க்க தயாரானோம் *ஹோட்டல் கவிதா ரிசன்ட்*. 

காலாபாணி சிறைச்சாலை: சுதந்திரம், அந்தமான் என்றதும் நினைவுக்கு வரக்கூடிய இடம் அந்தமானில் சிறைச்சாலை செல்லுளர் ஜெயில் காலாபாணி என்ற பெயர்களால் அழைக்கப்படும். இன்றைய காலகட்டத்தில் சுற்றுலாத் தலமாக இருந்தாலும் இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்னர் சுதந்திர போராட்ட வீரர்களை அடைத்து வைத்து கொடுமைப் படுத்திய இடமாக இருந்த இடம். இன்றைக்கும் இந்த இடங்களில் சுதந்திரத்திற்காக அடி வாங்கிய போது வலியை தாங்கிக் கொண்டு வந்தே மாதரம் பாரத் மாதா கி ஜெய் போன்ற கோஷங்கள் எங்கள் காதுகளில் எதிரொலித்துக் கொண்டுதான் இருந்தது என்கிறார் ஆசிரியர். அந்தமான் சிறைச்சாலை முழுதுமாக சுற்றி பார்த்தோம். 

கார்பின்ஸ் கோவ் கடற்கரை: போர்ட் பிளேயர் நகரின் மையத்தில் இருந்து சுமார் எட்டு கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் ஒரு கடற்கரை தான் இந்த கார்பின் குகை.அந்தமான் தீவு என்பதால் எங்கே பார்த்தாலும் கடற்கரை தானே .ஆனால் ஒரு ஒவ்வொரு பகுதிக்கும் ஒவ்வொரு பெயர் வைத்து ஆங்காங்கே சில விஷயங்களை பயணிகளை ஈர்க்கும் வண்ணம் அமைத்துக் அமைத்திருக்கிறார்கள். இந்த கடற்கரையை சுற்றி பார்த்து மகிழ்ந்தோம். சிறைச்சாலையில் ஒளியும் ஒளியும் நிகழ்ச்சி பற்றியும் பார்த்தோம். 

வீர ஹனுமான் கோயில் சென்று திவ்ய தரிசனம் செய்தோம். இரண்டாம் நாள் திட்டத்தில் இரண்டு தீவுகளுக்கு நாங்கள் பயணிக்க இருந்தோம். போர்ட் பிளேயர் இருந்து சிறு படகுகள் மூலம் தீவுகளுக்கு பயணிக்க வேண்டும். ஜெட்டி என்ற படகுத்துறைக்கு வந்து அங்கிருந்து புறப்பட்டோம். புயல் வீசும் என்று எச்சரிக்கை விடப்பட்டு இருந்த காரணத்தினால் சற்று மெதுவாகவே சென்ற செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. 

கடல் வாழ் உயிரினங்கள் காட்சியகம்: நீர்வாழ் காட்சியகம் மீன்வளத்துறை அமைந்திருக்கும் இந்த காட்சியகத்திற்கு சென்றோம். ஆமைகள் ஸ்லாப்ஸ்டார், சுறா மீன்கள், நண்டுகள் விதவிதமான மீன்கள் உள்ளிட்ட 350க்கும் அதிகமான கடல்வாழ் உயிரினங்கள், பவளப்பாறைகள், நத்தை ஓடுகள் உயிருள்ள சங்குகள் என பலவும் இங்கே காட்சிக்கு வைத்திருக்கிறார்கள். சதுப்புநில நண்டுகள் கூட காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு உயிரினமும் உயிருடன் பார்க்க கிடைக்கின்ற இந்தக் காட்சியகத்தில் நின்று நிதானித்து பார்க்கும் போது மனம் குதூகலம் அடைகிறது என்கிறார் ஆசிரியர். 

ஸ்கூபா, ஸ்னார்க்லிங்: மேற்படி இரண்டு விதமான விளையாட்டுக்களை நாங்கள் விளையாடி மகிழ்ந்தோம் கட்டணம் செலுத்தி. 

Bபோஸ் தீவான ராஸ் தீவு.: இந்தத் தீவுக்கு சென்று சுபாஷ் சந்திரபோஸ் அவர்களின் நினைவில் இந்த தீவின் பெயர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தீவு என இந்திய அரசாங்கத்தினால் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பாறைகளில் மோதும் கடல் அலைகள் வேர்கள் மூடிய இடங்களில் எல்லாம் கண்டு களித்தோம். கண்ணாடி படகில் பயணம் செய்து கண்டு களித்தோம். பார்க்க பார்க்க பரவசம். பவளப்பாறைகள் இருக்கும் இடங்களில் இருக்கும் வண்ண வண்ண மீன்கள் அழகுக்கு அழகு சேர்க்கின்றன .ஒவ்வொரு பவளப்பாறைகள் பெயர் அதன் தன்மை எல்லாம் நமக்கு சொல்லி விளக்கப்படுகிறது. 

ஐந்து பகலையும் 6 இரவையும் முடித்து திருப்திகரமாக தில்லி திரும்பியதாக ஆசிரியர் கூறுகிறார். நமக்கும் சென்று பார்த்து வந்த திருப்தி இதைப் படிக்கும்போது ஏற்படுத்தத்தான் செய்கிறது. 

-     கருணா மூர்த்தி 

***** 

வாசிப்பை நேசிப்போம் முகநூல் குழுவில் எனது மின்னூலை அறிமுகம் செய்திருக்கும் திரு கருணா முர்த்தி அவர்களுக்கு மீண்டும் ஒரு முறை எனது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். ”அந்தமானின் அழகு” மின்னூலை அமேசான் தளத்திலிருந்து தரவிறக்கம் செய்து கொள்ள முடியும் – கிண்டில் அன்லிமிட்டட் கணக்கு இருப்பவர்கள் இலவசமாக தரவிறக்கம் செய்து கொள்ளலாம். மற்றவர்கள் ரூபாய் 100/- செலுத்தி தரவிறக்கம் செய்து கொள்ளலாம். தரவிறக்கம் செய்து கொள்ள இங்கே செல்லலாம்! 

இன்றைய பதிவு வழி உங்களுடன் சில தகவல்களை பகிர்ந்து கொள்ள முடிந்ததில் மகிழ்ச்சி. பதிவு பற்றிய உங்களுடைய கருத்துகளை பின்னூட்டத்தில் சொல்லுங்கள்! நாளை மீண்டும் வேறோரு பதிவுடன் சந்திக்கும் வரை… 

நட்புடன், 



வெங்கட் நாகராஜ் 
புது தில்லி.

20 கருத்துகள்:

  1. அழகாக விமர்சித்து இருக்கிறார் திரு. கருணாமூர்த்தி.
    வாழ்த்துகள் ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாழ்த்தியமைக்கு நன்றி கில்லர்ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  2. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அரவிந்த்.

      நீக்கு
  3. அந்தமானைப் பாருங்கள் அழகு . நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நாகேந்திர பாரதி.

      நீக்கு
  4. திரு கருணா முர்த்தி அவர்களுக்கு வாழ்த்துகள்... விமர்சனம் அருமை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

      நீக்கு
  5. பயண அனுபவ கட்டுரைகள் மற்றும் நூல்களை படிப்பதில் தணியாத ஆர்வம் உண்டு.அவ்வாறு நிறைய நூல்களை படித்துள்ளேன்.விரைவில் தங்களின் நூல்களையும் தரவிறக்கம் செய்து படிக்க இருக்கிறேன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சிவா.

      நீக்கு
  6. திரு, கருணாமூர்த்தி அவர்கள் நன்றாக விமர்சனம் செய்து இருக்கிறார் உங்கள் நூலை.
    வாழ்த்துக்கள் உங்கள் இருவருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.

      நீக்கு
  7. அருமையான விமர்சனம். நானும் முகநூலில் ஒரு குழு உருவாக்கியிருக்கிறேன். அங்கு வந்து தங்களது படைப்புக்களைப் பற்றிய விபரங்களைப் பதிவிடலாம் நண்பரே.இணைப்பை கீழே கொடுத்திருக்கிறேன்.
    https://www.facebook.com/groups/619037648732572

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முகநூல் குழு - பாராட்டுகளும் வாழ்த்துகளும். நானும் இணைந்து கொண்டேன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஞானசேகரன் ஜி.

      நீக்கு
  8. திரு கருணாமூர்த்தி ஆர்வமாகப் படித்திருப்பது தெரிகிறது.  வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாழ்த்தியமைக்கு நன்றி ஸ்ரீராம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  9. ரீடிங் மராத்தான் 2020இல் உங்கள் அந்தமானின் அழகு புத்தகம் இடம் பெற்றது குறித்து மிக்க மகிழ்ச்சி. வாழ்த்துகள். 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாழ்த்தியமைக்கு நன்றி பானும்மா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  10. வணக்கம் சகோதரரே

    வாசகம் அருமை. நூல் விமர்சனம் திரு. கருணாமூர்த்தி மிக அழகாக தந்திருக்கிறார். விமர்சித்த அவருக்கும்,அருமையான இந்த பயண அனுபவ நூலை உருவாக்கிய உங்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள். பாராட்டுக்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா ஹரிஹரன் ஜி.

      வாசகமும் பதிவும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....