செவ்வாய், 29 ஜூன், 2021

கதம்பம் - பெரியம்மா - கோலம் - மாம்பழ கேக் - மண்பாண்டம் - அப்பா - தடுப்பூசி


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


நேற்று வெளியிட்ட வாசிப்பனுபவம் பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 


MOTIVATION IS WHAT GETS YOU STARTED, HABIT IS WHAT KEEPS YOU GOING!


******




அம்பா பெரியம்மா At Her Best - 15 ஜூன் 2021:


7up: இதுல பழங்கள்லாம் போட்டிருக்குடா..சுகருக்கு தாராளமா குடிக்கலாம். உடம்புக்கு நல்லது 🙂 எப்போதும் ஸ்டாக் இருக்கணும்..:))


லென்ஸ் உருகிடும்: கண்ணுல தூசு விழுந்தா கண்ணு மேல ஐஸ்கட்டி தான் வெச்சுக்கணும். துணில சூடா ஒத்தி வெச்சா ஆபரேஷன் பண்ணி லென்ஸ் வெச்சிருக்கிறானே அது உருகிடும் :) 


காது ஓட்டை: என்னவோ தெரியல! காதுல ஓட்டை சின்னதா போயிடுத்து போலிருக்கு :) காது கொடையவே முடிய மாட்டேங்கறது 🙂


******


மகளின் கைவண்ணம் - 15 ஜூன் 2021:





இன்று மகள் வாசலில் போட்ட கோலம். 


******


மாம்பழ கேக் - காணொளி - 19 ஜூன் 2021:





வலைப்பூவில்(ப்ளாகில்) அவ்வப்போது தோன்றும் விஷயங்களை பகிர்ந்து கொள்வதைப் போல், எங்கள் வீட்டில் அவ்வப்போது செய்து பார்க்கும் பதார்த்தங்களை வீடியோவாக எடுத்து எனக்கு தெரிந்த விதத்தில் என் சேனலில் பகிர்ந்து கொள்கிறேன். இது ஒரு முயற்சி மட்டுமே..:) அப்படி ஒரு முயற்சி - மாம்பழ கேக் - காணொளியாக!


இது மாம்பழ சீசன் என்பதால் இந்த வருடம் இருமுறை ஜாம், ஸ்ரீகண்ட் என்று செய்தது போக இணையத்தில் தேடி கேக்கும் செய்து பார்த்தேன். அதையே இந்த வாரக் காணொளியாக எடுத்து பகிர்ந்திருக்கிறேன்.


Mango cake by Adhi Venkat/No oven/No Egg/Mango recipes/Cake recipes!!


******


மண்பாண்ட அலங்காரம் - காணொளி - 19 ஜூன் 2021: 





மகளின் சேனலில் இந்த வாரக் காணொளியாக வீட்டில் உபயோகமில்லாத மண்பானையை அலங்கரித்து பகிர்ந்திருக்கிறாள்.


Revamping mud pot | Pot painting | Roshni's Creative Corner


******


அப்பா - தந்தையர் தினம் - 20 ஜூன் 2021:






தன்னலம் பாராமல் தன் குழந்தைகளுக்காகவும் குடும்பத்துக்காகவும் உழைக்கின்ற மனிதர் தான் அப்பா.. இவர் தான்  குழந்தைகளின் முதல் ஹீரோ. 


என்றும் நான் அப்பாவின் செல்ல மகள் தான். நேர்மை, உண்மை, சுத்தம், பணிவு, ஒழுக்கம் என்று அப்பாவை உதாரணமாக எடுத்துக் கொண்டு கற்றுக் கொண்டது ஏராளம். 


ஒவ்வொரு விஷயத்திலும் என்னை திருத்தம் செய்து என்னை வழிநடத்தும் என் கணவரையும் நான் அப்பா போல் தான் பார்க்கின்றேன். சிறுபிள்ளைத்தனமாக நான் நடந்து கொண்டாலும் பொறுத்துப் போகும் மனிதர்..:)


அனைத்து தந்தையருக்கும் இனிய தந்தையர் தின வாழ்த்துகள்.


******


தடுப்பூசி - டோக்கன் நம்பர் 478 - 24 ஜூன் 2021:


மே மாதம் 18 to 45 துவங்கியது முதல் ஆன்லைனில் ரெஜிஸ்டர் செய்து விட்டு காத்திருந்தேன்...அதன் பிறகு தகவல் இல்லை. எங்கள் பகுதியில் ஒவ்வொரு கேம்ப் போடும் போதும் வீட்டுச் சூழலை எண்ணி போட்டது போட்டபடி கிளம்ப முடியலை..!


சென்ற வாரம் கூட மகளின் பள்ளியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சென்று பார்த்து 500 டோக்கன் என்றதும் திரும்பி விட்டேன். எப்போ வருவது! பெரியம்மாவை குளிப்பாட்டணும்! சமைக்கணும்! வீட்டு வேலைகள் இருக்கே! நேரமாகிவிடுமே!!


இன்று காலை Hello fmல் மகளின் பள்ளியில் தடுப்பூசி போடப்படுவதாக தகவல் சொல்ல, போய்ப் பார்க்கலாமா?? என்று ஒரு எண்ணம். மகளுக்கு மதியம் வரை ஆன்லைன் வகுப்புகள் உண்டு. சரி! முயற்சி செய்வோமே! மகளின் பள்ளிக்குச் சென்று வரிசையில் நின்றேன். எனக்குக் கிடைத்த டோக்கன் எண் 478!! 


காலை 9:30 மணிக்கு வரிசையில் நிற்கத் துவங்கி மதியம் 12:00 மணிக்கு கோவிஷீல்ட் முதல் டோஸ் வெற்றிகரமாக செலுத்திக் கொண்டாச்சு..:) 


கால் கடுக்க வரிசையில் நிற்போர் இருக்க...டோக்கன் கொடுக்கும் இடத்தில் நோகாமல் இடையில் கையை நுழைத்து சாப்பிட போயிட்டேன்! என்று சொல்வோர்! 


சிவாஜி செத்துட்டாரா!! என்கிற ரீதியாக..ஏங்க! ஊசியில இரண்டு விதம்னு சொல்றாங்களே! உண்மையாங்க!! என்று கேட்போர்!


அம்மா! அந்த பெஞ்சுல போய் உட்காரும்மா! உனக்காக தான் நான் நிக்கறேனே! உனக்காக நான் ஊசியெல்லாம் போட்டுக்க முடியாதும்மா! படுத்தாதம்மா! என்ற மகனும் அம்மாவும்..


மைதானத்தின் மூலையில் கண்ணுக்கு குளிர்ச்சியாக குல்மொஹர் மரமும் என்று காட்சிகளுக்கும், தகவலுக்கும் பஞ்சமில்லை..:)


வாய்ப்பு கிடைப்பவர்கள் கட்டாயம் தடுப்பூசி போட்டுக் கொள்ளவும்.


******

நண்பர்களே, இந்த நாளின் கதம்பம் பதிவு குறித்த உங்கள் கருத்துகளை பின்னூட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள். மீண்டும் வேறொரு பதிவின் வழி சந்திக்கும் வரை...


நட்புடன்



ஆதி வெங்கட்


18 கருத்துகள்:

  1. பெரியம்மாவின்பேச்சுகள் ரசிக்க வைக்கின்றன..  அனைத்தையும் ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி ஸ்ரீராம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  2. ரசிக்கும்படியான கதம்பம்.
    தடுப்பூசி போட்டதற்கு வாழ்த்துக்கள் மேடம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கதம்பம் பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி அரவிந்த்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  3. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி.

      நீக்கு
  4. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  5. ரோஷிணியின் கோலம் மிக அழகு! கோலத்தில் ஒரு தேர்ந்த ஓவியரின் லாவகமும் நேர்த்தியும் தெரிகின்றன!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மகள் போட்ட கோலம் குறித்த தங்கள் கருத்துரை கண்டு மகிழ்ச்சி மனோம்மா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  6. வணக்கம் சகோதரி

    இன்றைய கதம்பம் நன்றாக உள்ளது. பெரியம்மாவின் பேச்சுக்கள் சுவாரஸ்யமாக இருக்கிறது. பொதுவாகவே அந்தக்கால பேச்சு வழக்குகளில் ஒரு உண்மைகள் மறைந்திருக்கும்.

    மாம்பழ கேக் செய்முறை நன்றாக உள்ளது.
    ரோஷ்ணியின் கோலம் அழகாக உள்ளது. அழகாக ஓவியம் வரைபவர்களுக்கு கோலமும் எப்போதும் தெளிவாக சிறப்பாக வரும். அவருக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள்.

    அப்பாக்கள் பகிர்வு நன்றாக இருக்கிறது. இத்தனை பணிகளுக்கு இடையிலும் தடுப்பூசி போட்டு வந்ததற்கு வாழ்த்துகள். தொற்று விரைவில் நம்மை விட்டு நீங்கிட பிரார்த்தித்து கொண்டேயிருக்கிறோம். அனைத்துப் பகிர்வுகளுக்கும் நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா ஹரிஹரன் ஜி.

      பதிவின் பகுதிகள் குறித்த தங்கள் கருத்துரை கண்டு மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  7. கதம்பம் மிகவும் அருமை... ரசித்தேன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கதம்பம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி தனபாலன்.

      நீக்கு
  8. பெரியம்மாவின் பேச்சு - ரசிக்கும்படி இருக்கு.

    தடுப்பூசி செலுத்திக்கொள்ள முடிந்ததில் மகிழ்ச்சி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கதம்பம் பதிவின் பகுதிகளை ரசித்ததில் மகிழ்ச்சி நெல்லைத் தமிழன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  9. முகநூலில் ரசித்து படித்தேன்.
    இங்கும் ரசித்து படித்தேன்.
    கதம்பம் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முகநூலிலும் இங்கேயும் கதம்பம் பதிவின் பகுதிகளை ரசித்துப் படித்தமைக்க்கு நன்றி கோமதிம்மா.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....