வெள்ளி, 11 ஜூன், 2021

குறும்படம் - BEING BALD


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மேலும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


நேற்று வெளியிட்ட யூட்யூப் காணொளிகள் பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 


SOMETIMES THE BEST THING THAT YOU CAN DO IS - NOT THINK, NOT WONDER, NOT STRESS, NOT OBSESS, JUST BREATHE AND HAVE FAITH…  EVERYTHING WILL WORK OUT JUST FINE.


******




நண்பர்களே, நாம் இந்த வாரம் பார்க்கப் போகும் குறும்படம் ஒரு ஆங்கிலக் குறும்படம்.  ஒரு பெண், தன் தலையில் விக்(g) வைத்துக் கொண்டிருக்கிறார்.  மற்றவர்களுக்கும் விக்(g) பயன்பாடு குறித்த தகவல்களையும் தருகிறார்.  அவரை, அவரது தோற்றத்திற்காக மற்றொரு பெண் கிண்டல் செய்கிறார்.  முதல் பெண் விக்(g) பயன்படுத்துவதற்கான காரணம் என்ன, கிண்டல் செய்த பெண் தனது தவற்றினை உணர்ந்தாரா போன்ற விஷயங்களை குறும்படம் (08.49 நிமிடங்கள் மட்டுமே) பார்த்து தெரிந்து கொள்ளலாமே! குறும்படத்திற்கான சுட்டி கீழே!


மேலே உள்ள காணொளி வழி பார்க்க இயலவில்லை என்றால், நேரடியாக யூட்யூப் தளத்தில் பார்க்கலாம்.  அதற்கான இணைப்பு இங்கே!


*****


நண்பர்களே, இன்றைய பதிவு/குறும்படம் குறித்த உங்கள் எண்ணங்களை, பின்னூட்டம் வாயிலாக பகிர்ந்து கொள்ளுங்கள்.  மீண்டும் வேறு ஒரு பதிவுடன் சந்திக்கலாம்.  அது வரை…


நட்புடன்



வெங்கட் நாகராஜ்

திருவரங்கத்திலிருந்து...


22 கருத்துகள்:

  1. ஓரளவு எதிர்பார்த்ததுதான் என்றாலும் நெகிழ்ச்சிக்குக் குறைவில்லை.  அந்தக் கறுப்புப்பெண் உணர்ச்சிகளே இல்லாமல் நடித்திருக்கிறார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எதிர்பார்த்த முடிவு - சில சமயங்களில் அப்படித்தான். ஆனாலும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி ஸ்ரீராம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  2. அருமையாக டைரக்ட் செய்திருக்கிறார்கள் . யாரையும் புண்படுத்துதல் கூடாது , மீண்டு வரலாம் கவலை வேண்டாம் என்பதே மெசேஜ்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்ல மெசேஜ் சொன்ன இந்தக் குறும்படம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி அபயா அருணா ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  3. எதிர்பார்த்தவிதத்தில்தான் படம் செல்கிறது என்றாலும் இறுதியில் அழுகை வந்துவிட்டது. அருமையான படம். விக் அணியும் பெண் நடிப்பு நன்றாக இருக்கிறது...

    நம்மளவு மேலைநாட்டினர் இப்படியான உணர்ச்சிகளுக்கு ஆளாக மாட்டார்கள் என்ற கருத்து எனக்கு பலவருடங்களுக்கு முன் இருந்தது. ஆனால் அப்படி இல்லை என்பது அப்புறம் புரிந்தது.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குறும்படம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கீதாஜி. உணர்ச்சிகளுக்கு ஆளாகாமல் இருப்பது கடினம் - எல்லோராலும் அப்படி இருக்க முடிவதில்லை - அது எந்த நாட்டினராக இருந்தாலும்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  4. படத்தை இயக்கியவிதமும் அருமை. யார் மனதையும் புண்படுத்தக் கூடாது எதற்கும் ஒரு தீர்வு இருக்கிறது என்பது நல்ல மெசேஜ்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படம் சொல்ல வரும் மெசேஜ் - அது தான் சிறப்பு கீதா ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  5. பதில்கள்
    1. குறும்படம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி நாகேந்திர பாரதி.

      நீக்கு
  6. பதில்கள்
    1. குறும்படம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  7. பதில்கள்
    1. குறும்படம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி தனபாலன்.

      நீக்கு
  8. கடைசி காட்சிக்கு முன் காட்சியே கண் கலங்கவைக்க கடைசி காட்சி உள்ளத்தை உருக்கியது. அருமையான ப (பா)டம். பகிர்விற்கு நன்றி வெங்கட்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அருமையான ப(பா)டம் - உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கோயில்பிள்ளை.

      நீக்கு
  9. குறும்படம் மனதை நெகிழ வைத்து விட்டது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குறும்படம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  10. தலைமுடி இழக்கும் கொடுமை மிகக் கடினம். அதை இத்தனை அருமையாகப் படம் எடுத்திருப்பது. சிறப்பு. பகிரந்தததறகு. மிக மிக நன்றி மா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குறும்படம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி வல்லிம்மா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....