வெள்ளி, 18 ஜூன், 2021

குறும்படம் - முதியோர் இல்லத்தில் அப்பா!


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


நேற்று காலை வெளியிட்ட அம்பா பெரியம்மா பதிவையும் மாலையில் வெளியிட்ட மின்னூல் வெளியீடு குறித்த பதிவையும் படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 


உன் அடக்கத்தின் அளவை வைத்தே, உன் அறிவை உலகம் எடை போடும்!


******




முதியோர் இல்லத்தில் கொண்டு விடப்படும் தந்தை. மகன் வெளிநாடு போக வேண்டும் என்பதால் தானாகவே விருப்பப்பட்டு முதியோர் இல்லத்திற்குச் செல்வதாகச் சொல்லப் பட்டாலும், அவருக்குத் தேவையான நேரத்தில் மகன் இல்லை.  மனதைத் தொடும் குறும்படம் - ஹிந்தி மொழியில் என்றாலும் ஆங்கிலத்தில் சப் டைட்டில் உண்டு.  பாருங்களேன்.


மேலே உள்ள காணொளி வழி பார்க்க இயலவில்லை என்றால், கீழே உள்ள சுட்டி வழி பார்க்கலாம்! 


PAPA..! - A heart touching story


******


நண்பர்களே, இந்த வாரம் பகிர்ந்து கொண்ட குறும்படம் குறித்த உங்கள் கருத்துரைகளை பின்னூட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்.  மீண்டும் வேறொரு பதிவு வழி உங்களைச் சந்திக்கும் வரை…


நட்புடன்



வெங்கட் நாகராஜ்

திருவரங்கத்திலிருந்து...


22 கருத்துகள்:

  1. நியாயமே இல்லாத குறும்படம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நியாயமே இல்லாத குறும்படம் - தங்கள் கருத்திற்கு நன்றி ஸ்ரீராம். ஏன் என்பதையும் நீங்கள் சொல்லி இருக்கலாம்! :)

      நீக்கு
  2. குறும்படம் கண்ணீரை வரவழைத்தாலும் இவை தவிர்க்க முடியாது போய் விட்டது இந்த காலத்தில்.
    அப்பாவை இறுதி காலத்தில் பார்க்க வர முடியாத சூழ்நிலை ஆகி விட்டது சிலருக்கு, இந்த தீநுண்மியால்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்தத் தீநுண்மி காலத்தில் பலரால் தங்களது பெற்றோர்கள்/உறவினர்கள் இறுதிச் சடங்கில் பங்கெடுக்க முடியாத சூழல் தான் கோமதிம்மா. இப்படி பலர் அனுபவித்த வேதனை என்ன சொல்ல?

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  3. விடுங்க ஜி... பெண் பிள்ளை இருந்தால் இந்தப் பிரச்சனையே இல்லை... என்ன ஒன்று : தன் தந்தையை எக்காலத்திலும் முதியோர் இல்லத்திற்கு அனுப்பாத, அனுப்ப முடியாத சூழ்நிலை அமைந்த, நல்லதொரு (மரு)மகன் அமைந்து விட்டால் போதும்...!

    ஒரு வேளை சூழ்நிலை மாறி விட்டால்...? சம்மந்தியோடு முதியோர் இல்லத்தில் சேர்ந்து விட வேண்டியது தான்...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பெண் எனில் பிரச்னை இல்லைனு சொல்றோம். எல்லாப் பெண்களாலும் தாய், தந்தையரைப் பார்த்துக்கொள்ள முடியாது. புக்ககத்தினர் ஒத்துக்கணும். முக்கியமாய்க் கணவனுக்கு ஒத்து வரணும். இப்போல்லாம் பெண்ணின் பெற்றோரானாலும் சரி, பையரின் பெற்றோரானாலும் சரி தனியாக இருக்கவே விரும்புகிறார்கள். எல்லோருக்கும் முதியோர் இல்லம் சரியாக வருவதில்லை.

      நீக்கு
    2. ஆண் குழந்தையோ, பெண் குழந்தையோ, எதுவாக இருந்தாலும், இன்றைய சூழலில் பல பெற்றோர்கள்/முதியவர்கள் முதியோர் இல்லத்தில் இருக்க வேண்டியதாகி விட்டது. எனக்குத் தெரிந்த பலர் பிள்ளைகள்/பெண்கள் இருந்தும் முதியோர் இல்லத்தில் இருக்கிறார்கள் - லட்சங்களில் சம்பாதிக்கும் குழந்தைகள் இருந்தும் - அவர்கள் வெளிநாடுகளில் இருப்பதால், அங்கே போகாமல் இந்தியாவில் இப்படி இருக்கிறார்கள் தனபாலன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
    3. உண்மை தான் கீதாம்மா. எல்லோருக்கும் முதியோர் இல்லம் சரிவராது - அவர்களால் அங்கே நிம்மதியாக இருக்க முடியாது. நிறைய Compromises செய்து கொள்ள வேண்டியிருக்கும் என்பதால் அது அவர்களுக்குப் பிடிப்பதில்லை.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  4. பலரது முதியோர்களின் இன்றையநிலை இதுதான் ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நிதர்சனம் கில்லர்ஜி. இன்றைக்கே இப்படி என்றால், இனி வருங்காலத்தில்... ஒன்றும் சொல்வதற்கில்லை. எதற்கும் தயாராக இருக்க வேண்டும்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  5. வருங்காலத்தில் முதியோர்களின் நிலை என்னவெல்லாம் ஆகுமோ?..

    நினைக்கவே பயமாக இருக்கின்றது..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருங்காலத்தில் முதியோர்களின் நிலை - பயமாகத் தான் இருக்கிறது துரை செல்வராஜூ ஐயா. நடப்பது நல்லதாகவே நடக்கட்டும் என்று பிரார்த்தனை செய்வதைத் தவிர வேறொன்றும் செய்வதற்கில்லை!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  6. பார்த்தேன். இந்தக் கால நடப்பு. யதார்த்தம் இது தான்! அதிலும் இப்போது இந்தக் கொரோனா வந்ததும் ஒருவருக்கொருவர் முகாலோபனமே இல்லாமல் போய்விடுகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்தக் கால நடப்பு - யதார்த்தம் - உண்மை கீதாம்மா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  7. பல குடும்பங்களிலும் தனிமை நிலைதான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பல குடும்பங்களிலும் தனிமை நிலை - உண்மை தான் மாதேவி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  8. நல்ல குறும்படம், யதார்த்தம் பாசிட்டிவாக முடித்திருக்கலாம்.

    இதில் மகன் மீதும் தவறு இருப்பதாகத் தெரியவில்லையே. அவர்கூடத்தான் இருக்கிறார் தந்தை. மகன் வேண்டுமென்று வெளிநாடுவேலை காரணமாக வெளிநாடு. தந்தையும் மகிழ்வாகத்தான் இருக்கிறார். வந்ததும் மகன் தந்தையை அழைத்துப் போக விரும்புகிறாரே. தந்தை அப்ப்டி நினைத்துப் பார்க்கிறாரா?

    எனக்குத்தான் புரியவில்லையோ?

    சில குடும்பங்களில் யாரும் வேண்டும் என்று செய்யாவிட்டாலும் சூழல் அப்படியானதாகிவிடுகிறது. மகன் வேறு ஊரிலும் பெற்றோர் ஓரிடத்திலும் என்று

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குறும்படம் குறித்த உங்கள் கருத்துரை கண்டு மகிழ்ச்சி. பாசிட்டிவாக முடித்திருக்கலாம் - லாம்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி.

      நீக்கு
  9. அன்பு வெங்கட்,
    குறும்படம் மிக யதார்த்தம்.
    நல்ல மகன், மருமகள்களும் இருக்கிறார்கள்.

    காலங்கள் மாறி வரும் போது,
    முற்காலத்தில் இருந்த நிலை இல்லை.
    தந்தை எப்படி திடீரென்று இறந்து விடுகிறார்.
    கோவிடாக இருந்தால் மகன்
    கூட பக்கத்தில் போக முடியாது.

    நன்றி மா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குறும்படம் குறித்த தங்களது கருத்துரை கண்டு மகிழ்ச்சி வல்லிம்மா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....