வியாழன், 8 ஜூலை, 2021

தொலைதொடர்பு - குறும்படம்



அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


நேற்று காலை வெளியிட்ட கடந்து வந்த பாதை பதிவையும் மற்றும்  மாலையில் வெளியிட்ட எழுத்துத் திருட்டு பதிவையும் படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.


”சாப்பிட்டயாப்பா” என்பது அம்மாவின் பாசம் என்றால், “சாப்பிட்டானான்னு கேளு” என்பது அப்பாவின் பாசம்.


******







என்னதான் தொலைதொடர்பு வசதிகள் பெருகிவிட்டாலும், நாம் நினைக்காத வரை யாரையுமே தொடர்பு கொள்ள வாய்ப்பில்லை.  ஒருவரைத் தொடர்பு கொள்ள வேண்டும் என நாம் நினைத்தாலே ஒழிய வேறு வழியில்லை - தொடர்பு கொள்ள நினைப்பவர் தொடர்பு கொண்டால் நல்லது தான். ஆனால் தொடர்பு கொள்ளவில்லை எனில்…  நாம் செய்ய முடிந்தது, அவரை தொடர்பு கொள்ள முயலவது மட்டுமே.  மகன் தன்னை தொடர்பு கொள்வதே இல்லை என தனது அலைபேசியில் ஏதோ பிரச்சனை என கடைக்குச் செல்லும் ஒரு முதியவர். அவரிடம் அந்தக் கடைக்காரர் நடந்து கொள்ளும் முறை, என்ன செய்தார் என்பதை அழகாகச் சொல்லி இருக்கிறார்கள்.  பாருங்களேன்.



மேலே உள்ள காணொளி வழி பார்க்க இயலவில்லை என்றால், கீழே உள்ள சுட்டி வழி பார்க்கலாம். 


Tholaithodarbu - A Heart Touching Award Winning Tamil Short Film | Directed By R.M. Karthi - YouTube


நண்பர்களே, இந்த நாளில் பகிர்ந்து கொண்ட குறும்படம் குறித்த உங்கள் கருத்துகளை பின்னூட்டம் வாயிலாக பகிர்ந்து கொள்ளலாமே!  மீண்டும் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்



வெங்கட் நாகராஜ்

புது தில்லியிலிருந்து…


14 கருத்துகள்:

  1. அவர் என்ன செய்தார்? தனது எண்ணைக் கொடுத்திருப்பார் என்று நினைத்தேன். அப்படி இல்லையா? ஆனால் நெகிழ்ச்சியான கரு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தனது எண்ணைக் கொடுத்திருப்பார் - எனக்கும் முதலில் அப்படித் தோன்றியது. ஆனால் அப்படியல்ல ஸ்ரீராம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  2. காணொளி கண்டேன் ஜி
    கடைக்காரன் எத்தனை நம்பரை மாற்ற முடியும் ?

    அவரது மகனின் மனது மாறாதவரை...........

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கடைக்காரன் எத்தனை நம்பரை மாற்ற முடியும்? - ஆமாம் ஜி. எனக்கும் தோன்றியது கில்லர்ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  3. மகனிடம் பேசிய அந்த ஒரு நிமிட மகிழ்ச்சி அருமை...

    ஆனால்...

    தொடரவில்லை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தொடராத மகிழ்ச்சி - வேதனை தான் தனபாலன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  4. அடிக்கடி பார்த்து மனம் வருந்தும் நிகழ்வு தான்! ஆனாலும் மகனின் அலட்சியத்தைப் புரிந்து கொள்ளாத வெள்ள‌ந்தியான அந்த பெரியவரின் தவிப்பு மனதை உருக்குகிறது!எல்லாவற்றையும் புரிந்து கொண்ட அந்தக் கடைக்காரரின் ஆதரவான புன்னகை மனதை நெகிழ்த்துகிறது!
    அடிக்கடி இப்படி மனதின் அடிவேர்களில் கசியும் மெல்லிய உணர்வுகளை காணொளியாக‌ பதிவிட்டு எங்களையும் நெகிழ வைக்கிறீர்கள் வெங்கட்! உங்களுக்குத்தான் மனதார நன்றி சொல்ல வேண்டும் !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நெகிழ வைக்கும் குறும்படம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி மனோம்மா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  5. வணக்கம் சகோதரரே

    வாசகம் அருமை. குறும்படம் மனதை நெகிழ வைக்கிறது. தந்தையிடம் பேசுவதை குறைத்து அவர் உறவே வேண்டாமென ஒதுங்கியிருக்கும் மகனை தொலைப்பேசியில் எப்படி பிடிக்க முடியும்? கடைக்காரர் அவரிடம் எப்படிச் சொல்லி விளக்கப் போகிறாரோ என கவலையாக உள்ளது.. அதற்குள் அந்த மகனின் மனது மாறி தன் தந்தையிடம் பாசமாக இருக்க ஆண்டவன் வழி செய்ய வேண்டும். குறும்படத்தின் பாதிப்பு இப்படி என்னென்வோ நினைக்கத் தோன்றுகிறது. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா ஹரிஹரன் ஜி.

      வாசகமும் குறும்படமும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  6. மிகவும் நெகிழ்ச்சியான குறும்படம். எங்கல் அப்பா இருந்த பொழுது அவரொடு தினமும் பேச வேண்டும் என்று நினைத்துக் கொள்வேன்,ஆனால் நானாக அவரை கூப்பிட்டதை விட, அவர் என்னை கூப்பிட்டதுதான் அதிகம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குறும்படம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி பானும்மா.

      அப்பா-அம்மாவிடமும் தினமும் ஒரு முறையாவது பேசிவிடுகிறேன்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  7. குறும்படம் கண்ணீரை வரவழைத்து விட்டது.

    புது நம்பர் போட்டு கொடுத்து இருக்கிறார் அதற்கு பதிலாக உங்கள் அப்பாவிடம் சில நிமிடங்கள் பேசுங்கள்
    அவர் போனில் ஏதோ கோளாறு என்று நினைக்கிறார் என்று சொல்லி இருக்கலாமோ! அப்படியாவது உணர்ந்து அந்த மகன் பேசி இருப்பானோ என்று நினைக்க தோன்றுகிறது.
    வேறு நம்பரை எடுக்கும் மகன் அப்பாவின் ந்மபரை மட்டும் எடுக்காமல் இருக்கிறானே அதனால் இப்படி நினைத்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. புதிய நம்பர் மாற்றிய பிறகும் தெரிந்து கொண்டு மகன் அழைப்பை எடுப்பதே இல்லை. மகனுக்கு தந்தையிடம் பேச விருப்பம் இல்லை என்றே தோன்றுகிறது. அப்படி இருக்கும் மகன் கடைக்காரர் சொல்லியா பேசப் போகிறான் என்று தோன்றியது எனக்கு.

      தங்களது வ்ருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....