வெள்ளி, 3 செப்டம்பர், 2021

Living on Thin Ice - Pபுக்தர் மொனாஸ்ட்ரி, லடாக் - இரு காணொளிகள்



அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


நேற்று வெளியிட்ட கல்லூரி நாட்கள் பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 


A PERSON BECOMES 10 TIMES ATTRACTIVE, NOT BY THEIR ACTS OF KINDNESS, LOVE, RESPECT, HONEST AND LOYALTY THEY SHOW.


******



குறும்படங்களைத் தேடித் தேடிப் பார்ப்பது போலவே பயணம் குறித்த காணொளிகள், ஆவணப் படங்கள் போன்றவற்றையும் பார்ப்பது எனது வழக்கம்.  சமீப நாட்களாக யூட்யூபில் ஒரு குறிப்பிட்ட தளத்தினை தொடர்ந்து பார்த்துக் கொண்டிருக்கிறேன்.   சரவணகுமார் என்பவரின் யூட்யூப் தளம் இது. தளத்தின் பெயர் India in Motion என்பதாகும்.  இவரது யூட்யூப் தளத்தில் நிறைய காணொளிகள் உண்டு - ஒவ்வொன்றும் அற்புதமான காணொளிகள் - பார்த்தவரை அனைத்து காணொளிகளுமே எனக்குப் பிடித்திருந்தது.  உங்களுக்கும் பிடிக்கலாம்!  பல இடங்களுக்குப் பயணித்து, அங்கே உள்ள வாழ்க்கை முறை, இயற்கை, மனிதர்கள் என அனைத்தையும் காணொளியாக எடுத்து பகிர்ந்து கொள்கிறார்.  எல்லோராலும் பயணிக்க முடியாத இடங்கள் இந்தியாவில் நிறைய உண்டு.  அப்படியான இடங்களுக்குக் கூட இவர் பயணித்து அதனை சேமித்து இருக்கிறார்.  அப்படி இரண்டு இடங்கள் குறித்த காணொளிகளை இங்கே இணைத்திருக்கிறேன்.  ஆங்கிலத்தில் தான் காணொளி என்பதால் கவலை இல்லை. பின்னணியில் அந்தப் பிரதேசத்தின் இசையும், ஒலிகளும் இருப்பது கூடுதல் சுவை. காணொளிகளின் தரமும் மிகவும் சிறப்பாக இருக்கிறது என்பதை நீங்கள் பார்த்தால் நிச்சயம் புரிந்து கொள்வீர்கள்.


முதல் காணொளி - LIVING ON THIN ICE: 

மேலே உள்ள காணொளி பார்க்க இயலவில்லை எனில் கீழே உள்ள சுட்டி வழி யூட்யூப் தளத்திலும் பார்க்கலாம். 


Living on Thin Ice | Challenges of Winter Life at the Phukthar Monastery


இரண்டாம் காணொளி - THE STORY OF A VILLAGE WITHOUT WATER:


மேலே உள்ள காணொளி பார்க்க இயலவில்லை எனில் கீழே உள்ள சுட்டி வழி யூட்யூப் தளத்திலும் பார்க்கலாம். 


Winter Life in Pishu, Zanskar | The Story of a Village without Water - YouTube


இந்த இரண்டு காணொளிகளும் உங்களுக்கு லடாக் பகுதிகள் குறித்த தகவல்களையும், அங்கே இருக்கும் வாழ்க்கை முறை, குளிர்காலத்தில் அங்கே இருப்பவர்களுக்கான பிரச்சனைகள் என பல விஷயங்கள் சொல்லும்.  இரண்டு காணொளிகளும் பத்து, பன்னிரெண்டு நிமிடங்கள் ஓடக்கூடியவையே.  அதனால் நிச்சயம் பார்த்து ரசிக்கலாம்! நேரம் எடுத்து பார்த்து விடுங்களேன்! அவரது யூட்யூப் தளத்திற்கு சப்ஸ்க்ரைப் செய்து கொண்டால் அவரது புதிய பதிவுகளும் உங்களுக்கு வந்து சேரும் - நீங்களும் பார்த்து ரசிக்கலாம்!


நண்பர்களே, இந்த நாளின் பதிவு குறித்த தங்கள் கருத்துகளை பின்னூட்டத்தில் சொல்லலாமே! நாளை மீண்டும் ஒரு பதிவு வழி உங்களைச் சந்திக்கும் வரை…


நட்புடன்



வெங்கட் நாகராஜ்

புது தில்லியிலிருந்து...


14 கருத்துகள்:

  1. சில்லிட வைக்கும் காணொளிகள். பார்க்கும்போதே குளிருகிறது, சளி பிடிக்கிறது. இது மாதிரி இடங்களிலும் எவ்வளவு உற்சாகமாக வாழ்கிறார்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காணொளிகள் குறித்த தங்களது கருத்துரை கண்டு மகிழ்ச்சி ஸ்ரீராம். உற்சாகமான வாழ்க்கை - கடினமான சூழலிலும் - அது தான் ஸ்ரீராம். சின்னச் சின்ன கஷ்டங்களுக்கே சிலர் துவண்டு விடுகிறார்கள் என்பதை நினைக்கும் போது இது போன்ற இடங்களில் வாழ்பவர்கள் பற்றி தான் எனக்குத் தோன்றும்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  2. ஒரு காணொளிகளும் பார்த்தேன். அவர்கள் வாழ்க்கை எவ்வளவு கடினம்! அதிலும் அவர்கள் எப்படி மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். அவர்களிடம் கற்றுக் கொள்ள வேண்டியது மிக அதிகம்.
    கட்டுமான பணிக்கு கற்கள் எப்படி தூக்கி போகிறார்கள்!
    மலையில் பாதை அமைப்பது எவ்வளவு கஷ்டம் அதை ஆண், பெண் எல்லோரும் செய்வது அவர்கள் கடின உழைப்பாளிகள் என்பதை சொல்கிறது.
    தட்ப வெட்ப நிலைக்கு ஏற்ப பொருட்கள் சேமிப்பு வேறு செய்ய வேண்டும் அவர்கள்.
    நாங்கள் கைலாயம் போன போது திபத்தியர்களை பார்த்தோம் இப்படித்தான் இருப்பார்கள். அருவி எல்லா இடமும் கொட்டிக் கொண்டு இருக்கும் ஆனால் தண்ணீருக்கு கஷ்டபடுவார்கள். வெகு தூரம் போய் தண்ணீர் கொண்டு வருவார்கள். கேதார்நாத், பத்ரி நாத்தில் பார்த்த பனி உறைந்து இருப்பதை விட இங்கு அதிகம். அந்த பனியே உதடு முஞ்சி எல்லாம் ஒரே எரிச்சல்.

    அவர் பாதம் எப்படி புண்ணாகி இருக்கிறது.

    ஆடு , மாடு எல்லாம் வளர்க்க எவ்வளவு சிரம படுகிறார்கள்! குழந்தைகள் பள்ளி செல்ல வாகனம் நன்றாக இருக்கிறது. அதையும் அவர்கள் ஓட்ட திறமை வேண்டும் இல்லையா?

    வாழ்க்கை நிறைய கடினமானது அதில் அவர்கள் காணும் மன நிறைவு. பெரியவர் சொல்லும் கதையும் சிலிர்ப்பாக இருக்கிறது.

    இரண்டு காணொளிகளும் மிக அருமையாக எடுத்து இருக்கிறார் சரவணகுமார் பாராட்டுக்கள், உங்களுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு குறித்த தங்கள் கருத்துரை கண்டு மகிழ்ச்சி கோமதிம்மா. எத்தனை கடினமான சூழல் என்பதை பார்க்கும்போதே உணர்ந்து கொள்ள முடிகிறது. இவரது காணொளிகள் மிகவும் நன்றாக இருக்கிறதும்மா. முடிந்த போது பாருங்கள்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  3. இரு காணொளிகளும் அருமை... நல்லதொரு 'யூ'-வை அறிமுகப்படுத்தி உள்ளீர்கள்... நன்றி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காணொளிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி தனபாலன். நல்லதொரு யூ-ட்யூப் சேனல் தான். தொடர்ந்து வந்தால் பல காணொளிகளை நீங்கள் காண முடியும்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  4. காணொளிகள் மிகஅருமை சார்.
    சேனலில் இனைந்துவிட்டேன்.
    முழு பதிவுகளையும் விரைவில் பார்ப்பேன்.
    தங்களது ஏழு சகோதரிகள் கட்டுறைகள் படித்த நினைவு வருகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சேனலில் இணைந்து கொண்டதில் மகிழ்ச்சி அரவிந்த். சிறப்பான ஒன்று தான்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  5. // லடாக் பகுதிகள் குறித்த தகவல்களையும், அங்கே இருக்கும் வாழ்க்கை முறை, குளிர்காலத்தில் அங்கே இருப்பவர்களுக்கான பிரச்சனைகள் என பல விஷயங்கள் சொல்லும்... //

    நாம் நமது ஊரில் எத்தனை நலமுட்ன் வாழ்கின்றோம் என்பதை நினைக்கும் போது நாம் எத்தனை பாக்கியசாலிகள் என்பது புரிகின்றது!..

    எல்லாம் வல்ல இறைவனுக்கு மங்கலம்...

    வாழ்க வையகம்.
    வாழ்க நலமுடன்!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நாம் எத்தனை பாக்கியசாலிகள் - உண்மை தான் துரை செல்வராஜூ ஐயா. ஆனால் நம்மில் பலருக்கு இது புரிவதில்லை.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  6. நான் பொதுவா காணொளிகள் பார்ப்பதில்லை.

    இன்றைய காணொளியை மிகவும் ரசித்தேன். மலையில் குருவிக் கூடுகளாக வீடுகள், ஆறுமாத்த்திற்கான ணவுச் சேகரிப்பு... Very nice.

    பொதுவா வடவர்களின் குறைந்தபட்ச உணவு ரோடி(தடி சப்பாத்தி), ஆலுல ஒரு சப்ஜி என நினைக்கிறேன். வேற காய்கறிலாம் இவங்களுக்குக் கிடைக்குமா (மலையில் வசிப்பவர்களுக்கு)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சில காணொளிகள் நன்றாகவே இருக்கின்றன நெல்லைத் தமிழன். பல தேவையற்றவை என்றாலும் நிறைய நல்ல காணொளிகளும் இங்கே உண்டு. பார்க்கலாம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  7. பனிப்பிரதேசங்களை சுற்றிப் பார்த்துவிட்டு நாங்கள் எல்லாம் மகிழலாம் அவர்கள் வாழ்க்கை சிரமங்களை காணும் போதுதான் மனம் கனக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சுற்றிப் பார்க்க நல்ல இடமே - அங்கேயே தங்குவது என்பது சிரமம் தான் - பழகும்வரை!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....