ஞாயிறு, 12 செப்டம்பர், 2021

கதம்பம் - மாப்பிள்ளை - பிறந்த நாள் - பெரியம்மா கார்னர்

அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


நேற்று வெளியிட்ட காஃபி வித் கிட்டு பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 


SOME PEOPLE CAN’T BE BLOCKED, DELETED OR FORGOTTEN; BECAUSE THEY HAVE RESERVED A SPECIAL PLACE IN OUR HEART.


******


மாப்பிள்ளை - 21 ஆகஸ்ட் 2021 :


பாப்பா படிப்பெல்லாம் முடிச்சிடுச்சாம்மா! மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிச்சீட்டீங்களா??


நேற்று ஒரு அம்மா இதை என்னிடம் கேட்டார்..:)


பாப்பா சின்னப் பொண்ணு தாம்மா! 11+ தான் படிக்கிறா! பார்க்க உயரமா இருக்கா! என்றேன்..:)


ப்ளே ஸ்கூலில் சேர்ப்பதற்கு முன்பே தான் 1st standard-இல் படிப்பதாகச் சொல்வாள்! கேட்பவர்களுக்கும் சந்தேகம் வராது..:) 


******


பிறந்த நாள் - 21 ஆகஸ்ட் 2021 :




இரண்டு ஆண்டுகளாகவே சேனல் ஆரம்பிக்க நட்புகள் சொல்லிக் கொண்டிருக்க, தயக்கத்துடன் சென்ற ஆண்டு இதே தேதியில் வினாயகரின் துணையுடன் துவக்கினேன். இன்று Adhi's kitchen சேனலுக்கு முதலாம் ஆண்டு பிறந்தநாள். சேனல் துவக்கினால் என்ன பெயர் வைக்கலாம் என்று கேட்ட போது Adhi's kitchen ஐ பரிந்துரை செய்த Mythily Kasthuri Rengan , Jeyavidhya Narasimhan இந்த இரண்டு தோழிகளுக்கு இந்த நேரத்தில் என் அன்பான நன்றிகள்.


போட்டி நிறைந்த யூட்டியூப் உலகில் தட்டுத் தடுமாறி 136 subscribers உடன் பயணம் செல்கிறது. Contentஏ இல்லாதவர்களுக்கு கூட  ஆயிரக்கணக்கிலும், லட்சக்கணக்கிலும் views இருக்க ஆமை வேகத்தில் எனக்குத் தெரிந்த சமையலை செய்து காண்பித்துக் கொண்டிருக்கிறேன்..:)


சேனல் மூலம் நான் கற்றுக் கொண்டது ஏராளம். வீடியோ எடுப்பது முதல் எடிட்டிங், குரல் கொடுப்பது, அப்லோட் செய்வது வரை நானே நான் தான்..:) எங்கள் வீட்டு வேலை, அவ்வப்போது மாமியார் வீட்டிலும் வேலை, வீட்டுப் பெரியவர்களை கவனிக்க, மகளை கவனிக்க,  எழுத்து வேலை, மின்னூல் வேலை  என ரெக்கை கட்டி தான் பறந்து கொண்டிருக்கிறேன்..:) 


தொடர்ந்து ஆதரவு தந்து கொண்டிருக்கும்  நட்புகள் அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்.


வரலஷ்மி நோன்பில் எடுத்த காணொளிகளை தான் சேனலில் பகிர்ந்திருக்கிறேன். இணைப்பு கீழே!


எங்க வீட்டு வரலஷ்மி நோன்பு!/Varalakshmi pooja celebrations! Festival!! - YouTube


******


பெரியம்மா கார்னர் - 26 ஆகஸ்ட் 2021:


இரத்தமா இருக்கா! தோய்ச்சும் போகலையா! ஒரு கிண்ணத்துல உப்பு போட்டுக் குடு! 


காலையில் ஒரு குட்டி தூக்கம் தூங்கி எழுந்து வந்த பெரிம்மா திடீரென்று சொல்லவே...ஒன்றும் புரியலை..:)


என்ன பெரிம்மா சொல்றேள்! கனவு ஏதாவது கண்டேளா! 


வெந்நீர்ல உப்பும், மிளகும் போட்டுக் குடுடி! வாய் கொப்பளிக்கிறேன்!! நீ குடு! தலகாணி உறையெல்லாம் கறையாயிடுத்தா!


நான் ஒண்ணுமே சொல்லலையே பெரிம்மா! இரத்தம்னு ஒரு வார்த்தையே நாங்க பேசிக்கலையே! 


என்னடா இது சோதனை!!!


சற்று நேரம் கழித்து வேலையை செய்து கொண்டே மண்டையை போட்டு குழப்பி யோசித்ததில் தான்  உண்மை தெரிந்தது..:)


ராத்திரி பூரா தூக்கமே இல்லடி! கொட்ட கொட்ட முழிச்சிண்டு தான் இருந்தேன்! என்று சொன்ன பெரியம்மா காலையில் காஃபியுடன் பிஸ்கட்டை சாப்பிட்டு விட்டு மீண்டும் உறங்கச் சென்றார்..:) சற்று நேரத்தில் குறட்டையும் வந்தது...:)


அதன் பின் ஹாலில் மகளுடன் பேசிக் கொண்டிருந்தேன். மகளுக்கு முகத்தில் பருக்கள் நிறைய இருப்பதால் முகமே சிவந்து காணப்படுகிறது. அடிக்கடி முகம் கழுவணும், எண்ணெய் சேராம பார்த்துக்கணும் என்று சொல்லி விட்டு, சமயபுரம் மாரியம்மனுக்கு உப்பும், மிளகும் வாங்கிப் போடறேன்னு பிரார்த்தனை பண்ணிக்கோ கண்ணா! எல்லாம் சரியாயிடும்! என்று சொல்லிக் கொண்டிருந்தேன்.


ஹா..ஹா..ஹா..


எங்களுக்குள்ளே நாங்கள் பேசிக் கொள்வதே குறைந்து விட்டது..:) என்னவரிடமும் 'ஆஃபீஸ்ல இருந்து வந்தாச்சா! எல்லாம் நார்மல் தான்! வேற ஒண்ணும் விஷயமில்லை! அவ்வளவு தான்..:)


ஹா..ஹா..ஹா.


******


பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்



ஆதி வெங்கட்


28 கருத்துகள்:

  1. பெண்கள் இயற்கையாகவே ஆண்களைவிட சீக்கிரம் வளர்வார்கள் என்று சொல்வார்கள்.  உங்கள் மகளுக்கு வாழ்த்துகள்.


    ஆதிஸ் கிச்சன் அவ்வப்போது பார்த்து விடுகிறேன்.  வாழ்த்துகள்.


    பாவம் பெரியம்மா...  

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவின் எல்லாப் பகுதிகளையும் வாசித்து கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி ஸ்ரீராம் சார்.

      நீக்கு
  2. Adhi's kitchen சேனலுக்கு முதலாம் ஆண்டு பிறந்தநாள் வாழ்த்துக்கள்! வாழ்க வளமுடன்

    நிறைய உயரங்களை தொட வாழ்த்துக்கள்.
    குடும்ப பொறுப்புகளுடன் பிடித்த அனைத்தும் செய்வது மனதுக்கு மகிழ்ச்சி அளிக்கும் விஷ்யம.
    முகநூலில் படித்தேன்.


    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவின் எல்லாப் பகுதிகளையும் வாசித்து கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி கோமதிம்மா.

      நீக்கு
  3. அன்பு ஆதி,
    யூடியூப் பரிமாற்றங்களுக்கு வாழ்த்துகள். இன்னும் பல்லாண்டு
    சிறப்பாகப் பதிவேற்ற வேண்டும்.

    அன்பு ரோஷ்ணிக்கு இன்னும் பல உயரங்களை வாழ்வில் எட்ட வேண்டும்.
    எங்கள் மகளும் அவள அண்ணாவை விட உயரமாக
    இருப்பாள்.
    சில பேருக்கு வாய்க்கும் அருமை.

    பெரியம்மா பற்றி முக நூலில் படித்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாழ்த்துகளுக்கு மனம் நிறைந்த நன்றிகள்.

      பதிவின் எல்லாப் பகுதிகளையும் வாசித்து கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி வல்லிம்மா.

      நீக்கு
  4. பதில்கள்
    1. தங்கள் வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி நெல்லைத் தமிழன் சார்.

      நீக்கு
  5. பதில்கள்
    1. தங்களின் வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி தனபாலன் சகோ.

      நீக்கு
  6. பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி நாகேந்திர பாரதி சார்.

      நீக்கு
  7. உங்கள் ய்ட்யூப் இன்னும் வளர வாழ்த்துகள் ஆதி!

    ஆதி சப்ஸ்க்ரைபர்ஸ் பத்தி எல்லாம் கவலைப்படாதீங்க...சப்ஸ்கிரிப்ஷன் பற்றி நீங்கள் சொல்வது புரிகிறது. ஆதி நீங்களே வீடியோ எடுத்து எடிட் செய்து குரல் பதிவு செய்து எல்லா வேலைகளும் செய்து அதற்கிடையில் இவற்றை எல்லாம் செய்து சிங்கப் பெண்ணான உங்கள் வெற்றிதான் நிஜ வெற்றி! Be proud!

    சப்ஸ்கிரிப்ஷன் ல சிலர் சப்ஸ்க்ரைபர்ஸ் வாங்கவும் செய்கிறார்கள்! என்று வாசித்த நினைவு...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவின் எல்லாப் பகுதிகளையும் வாசித்து கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி கீதா சேச்சி.

      நீக்கு
  8. பெரிமாவைக் காணுமே என்று நினைத்தேன்!!! பாவம் அவங்க!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம். தன்னை ஏதாவது சொல்லி விடுவார்களோ என்ற எண்ணம்.

      தங்களின் வருகைக்கும், கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா சேச்சி.

      நீக்கு
  9. வணக்கம் சகோதரி

    நலமா? நீண்ட நாட்கள் கழித்து வருகிறேன். கதம்பம் அருமை. உங்கள் பெண் ரோஷ்ணிக்கு மனமார்ந்த வாழ்த்துகள். அவர் வாழ்வில் பல எட்டாத உயரங்களையும் எட்டிப்பிடித்து சாதிக்க வாழ்த்துக்கள்.

    உங்கள் யூடியூப் சேனலுக்கு முதலாமாண்டு பிறந்த தின வாழ்த்துகள்.வரலக்ஷ்மி விரத காணொளி அருமை.

    பெரியவர்கள் மனம் புண்படாது பக்குவமாய் பார்த்துக் கொள்ளும் தங்கள் நேர்த்திக்கு பாராட்டுக்கள். பகிர்வுக்குமிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நலமே..தாங்களும் நலமாய் இருப்பீர்கள் என நினைக்கிறேன்.

      பதிவின் எல்லாப் பகுதிகளையும் வாசித்து கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி கமலா ஜி.

      நீக்கு
  10. Adhi's kitchen சேனல் முதலாம் ஆண்டு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி ராமசாமி ஜி.

      நீக்கு
  11. தங்கள் யூட்யூப் பயணம் சிறப்பு. நல்வாழ்த்துகள்.

    என் தம்பி மகனும் அவன் வயதினரை விட அதிக உயரம்:).

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவின் எல்லாப் பகுதிகளையும் வாசித்து கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றிங்க ராமலஷ்மி.

      நீக்கு
  12. ஆதீஸ் கிச்சன் வாழ்த்துகள். மேலும் சிறப்புறட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும், வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றிங்க மாதேவி.

      நீக்கு
  13. எங்க குட்டிக் குஞ்சுலுவும் வயதிற்கு மேல் உயரம் என்று பையரும் மாட்டுப் பெண்ணும் சொல்கின்றனர். :) குடும்ப வாகு! நாங்கல்லாம் உயர நினைச்சும் எவ்வகையிலும் உயரலை! :)))) உங்க பெண் எல்லாவகையிலும் உயர்ந்து சிறப்பான வாழ்க்கை வாழ்வாள். மனம் நிறைந்த வாழ்த்துகள். ஆசிகள், முகநூலிலும் படிச்சேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவின் எல்லாப் பகுதிகளையும் வாசித்து கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி கீதா மாமி.

      நீக்கு
  14. Adhi's kitchen சேனல் முதலாம் ஆண்டு நிறைவிற்கு நல் வாழ்த்துக்கள்..

    வாழ்க வளமுடன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும், வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றிங்க துரை செல்வராஜு சார்.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....